Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியின் விக் கழன்றது ....! வடக்கு மாணவனை ரயிலில் தள்ளியது வாசுவின் மைத்துனர் விக்னேஸ்வரனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா ஈநியூஸ் இணையத்தளம் இப்படி கேள்வியை எழுப்புகிறது - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் சீலா ஜெயா:-

விக்கியின் விக் கழன்றது..! வடக்கு மாணவனை ரயிலில் தள்ளியது வாசுவின் மைத்துனர் விக்னேஸ்வரனா?


வடக்கில் ரயிலில் மோதுண்டு நேற்று உயிரிழந்த 18 வயது மாணவனை, ரயிலில் தள்ளியது வாசுதேவ நாணயக்காரவின் மைத்துனர், வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவன் நேற்று ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய காவல்துறையினர் தகவல் வெளியிடுவதற்கு முன்னதாகவே, வடக்கு அரசியல்வாதிகள் மாணவர் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தனர்.


வடக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடிதமொன்றை எழுதி வைத்து மாணவன் உயிரிழந்துள்ளதாக வடக்கு அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இவ்வாறு தகவல் வெளியிட்ட போது மாணவன் எழுதிய கடிதம் காவல் துறையினருக்கு கிடைத்திருக்கவில்லை.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு இறந்த மாணவரின் கோரிக்கையை நிறை வேற்றுமாறு கோரி போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.


இன்று காலை மாணவன் ரயிலில் பாய்ந்து உயிரிழந்தமைக்கு இரங்கல் வெளியிடும் வகையில் வடக்கின் சகல பாடசாலைகளும் மூடப்படும் என மாகாண கல்வி திணைக்களம் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


இன்று (நவம்பர் 27ம் திகதி) சாதாரண நாள் அன்று. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் தின அனுட்டானங்கள் இன்றே நடைபெறும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனால் இவ்வாறு மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.


அவ்வாறானால், மாவீரர் தின நிகழ்வுகளை வேறும் வழியில் திட்டமிட்டும் நடாத்தும் முயற்சியாக இதனை புரிந்து கொள்ள முடியாதவன் அடி முட்டாளாகவே இருக்க வேண்டும்.


பிரச்சினை அதுவல்ல. விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசராக கடயைமாற்றிவர். தற்கொலை செய்துகொண்ட மாணவரின் மரண சாசனக் கடிதம் அவரினாலேயே எழுதப்பட்டது என்பதனை விக்னேஸ்வரன் எவ்வாறு முன்கூட்டியே தீர்மானித்தார்? அவருக்கு தீர்க்கதரிசன ஞானமுண்டா? இந்த கடிதத்தை பார்த்த உடனேயே எந்த முட்டாளுக்கும் இந்த கடிதத்தின் சந்தேகத் தன்மை புரிந்து விடும்.


எனினும், மாணவரினாலேயே இந்த கடிதம் எழுதப்பட்டது என்பது குறித்து கையெழுத்து பரிசோதகர் ஒருவரின் ஊடாக உறுதி செய்துகொள்ளாது மாகாணத்தின் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது? வி;த்தியா என்ற மாணவி தமிழ் காடையர்களினால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போது வட மாகாணசபை இவ்வாறான தீர்மானம் எடுத்ததா?


நல்லாட்சிவாதிகளான தெற்கின் பெரும்பான்மையானவர்கள் இனவாதிகள் அல்ல. அதேபோன்று கோழைகள் (பொன்னயோ) அல்ல என்பதனை சிங்கள சந்தர்ப்பவாதிகளும் வடக்கின் தமிழ் சந்தர்ப்பாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126357/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.