Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை வதை முகாம் இரகசியங்கள்...

Featured Replies

திருமலை வதை முகாம் இரகசியங்கள்...

 
 
 

"அது சிறை­யல்ல வதை முகாம். நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்­தி­யி­லேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன.

secret%20underground%20tunnel_0_0.jpg

உள்ளே செல்ல முடி­ய­வில்லை. ஒரு வகை­யான வாயு வெளி­வந்து கொண்­டி­ருந்­தது. எல்­லோ­ருக்கும் இருப்­பது ஒரே ஒரு மல­ச­ல­கூடம். அது வர்த்­த­மா­னிப்­ப­டுத்­தப்­பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒரு­வனை தடுத்து வைக்க எந்த வகை­யிலும் பொருத்­த­மற்­றது.!"

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் தொடர்­பான ஆட்­கொ­ணர்வு மனுவில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பான விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா, கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் அளித்த சாட்­சி­யத்தின் ஒரு பகு­தியே அது.

அந்த சாட்­சி­ய­மா­னது திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் இர­க­சி­ய­மாக இயங்­கி­வந்த ' கன்சைட்' என்ற பெயர் கொண்ட வதை முகாம் பற்­றி­ய­தாகும். கடந்த இரு வாரங்­க­ளுக்குள் ஐ.நா.வின் குழு­வொன்று இங்கு வந்து இந்த வதை முகாம் தொடர்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்த முன்­ன­ரேயே கடந்த ஜுலை மாதம் "கேசரி" 29 சாட்­சி­யங்­களை பெய­ரிட்டு அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்­க­கோனின் உத்­த­ரவில், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில், புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழுவின் பிரத்­தி­யேக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த வதை முகாம் கண்­ட­றி­யப்­பட்­டது.
சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா, சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன ஆகியோர் இந்த விட­யங்­களை வெளிக்­கொண்டு வரு­வதில் முக்­கிய பங்­காற்­றி­ய­வர்கள் என்ற வகையில் மறக்­கப்­பட முடி­யா­த­வர்கள்.

உண்­மையில் திரு­கோ­ண­மலை வதை முகா­முக்கு மேல­தி­க­மாக கொழும்பு கோட்டை சைத்­திய வீதியில் ' பிட்டு பம்பு' என்ற இரக­சிய தடுப்பு முகாம் இயங்­கி­யமை தொடர்­பான தக­வல்­க­ளையும் நாம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தோம்.

2009.05.28 அன்று அப்­போ­தைய கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா­நா­யக்­க­விடம் அப்­போ­தைய கடற்­படை தள­பதி கர­ணா­கொட, தனது பிரத்­தி­யேக பாது­காப்பு பொறுப்­பா­ள­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக செய்த முறைப்­பாட்டின் விசா­ர­ணை­களே தற்­போது பல கடத்­தல்கள், சித்­தி­ர­வதை கூடங்கள், இர­க­சிய முகாம்கள் தொடர்­பான தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்தி வரு­கின்­றது என்றால் அது மிகை­யா­காது.

ஆரம்­பத்தில் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த விசா­ர­ணை­களின் பின்னர் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டது. பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்­கவின் மேற்­பார்­வையில் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா உள்­ளிட்­டோரே இந்த விசா­ர­ணையை முதலில் ஆரம்­பித்து, சம்பத் முன­சிங்­கவை கைது செய்­தனர்.

இத­னி­டையே குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அப்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்­டி­ஸிடம், அப்­போ­தைய கடற்­படை உளவுப் பிரிவின் மேஜர் நெவில் பிரி­யந்த அத்­த­நா­யக்­கவும் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக முறைப்­பா­டொன்றை பதிவு செய்தார்.

இத­னையும் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா உள்­ளிட்ட குழு விசா­ரணை செய்த போது வசந்த கர­ணா­கொ­ட­வினால் சம்பத் முன­சிங்­கவின் உயி­ருக்கு ஆபத்து இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

அந்த உயி­ரச்­சு­றுத்­த­லுக்­கான காரணம் தொடர்பில் மேஜர் அத்­த­நா­யக்­கவை நிஸாந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு விசா­ரித்த போது தற்­போ­தைய ரியல் அட்­மிரல் உதய கீர்த்தி விஜய பண்­டார தற்­போ­தைய அமைச்­ச­ரான அர்­ஜுன ரண­துங்­கவை கொலை செய்ய சம்பத் முன­சிங்­க­விடம் கூறி­யுள்­ளதும் அதற்கு அவர் மறுத்­ததே கடற்­ப­டை­யூ­டாக அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்கும் உயி­ரா­பத்து என மேஜர் அத்­த­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு தொடர்ந்த விசா­ர­ணை­களில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் அப்­பாவி தமி­ழர்கள் பலர் கடத்­தப்­பட்­டமை தொடர்­பான தக­வல்கள் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­துள்­ளன.

அப்­போ­தைய கடற்­படை தள­பதி கரணா­கொ­டவின் பாது­காப்பு அதி­கா­ரி­யாக இருந்த சம்பத் முன­சிங்­கவின் அறையில் இருந்து அடை­யாள அட்­டைகள் 4, கைத்­துப்­பாக்கி தோட்­டாக்கள், வங்கிப் புத்­த­கங்கள் என 21 பொருட்கள் கடற்­ப­டையால் கைப்­பற்­றப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவற்றை ஆய்வு செய்த போது கொச்­சிக்­கடை பிர­தே­சத்தில் வைத்து கடத்­தப்­பட்ட என்டன் ஜோன்ரீன், சூசைப்­பிள்ளை அமலன் லியோன், நாக­ராஜா ஜகன் உள்­ளிட்­டோரின் அடை­யாள அட்­டை­களும் கட­வுச்­சீட்­டுக்­களும் இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளன.

2009.06.15 அன்று தற்­போ­தைய ரியல் அட்­மிரல் உத­ய­கீர்த்தி விஜய பண்­டார, ரியல் அட்­மிரல் ஜகத் ஜய­சிங்க ஆகியோர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக 5 மாண­வர்கள் கடத்தலில் கப்பம் கோரப்­பட்­டுள்­ள­தாக முறை­யிட்­டி­ருந்­தனர்.

உண்­மை யில் இந்த 5 மாண­வர்­களும் 2008.09.17 அன்று தெஹி­வளை கவு­டான பகு­தியில் வைத்து அவர்கள் பய­ணித்த கே.சி. 5559 என்ற கறுப்பு நிற­கா­ருடன் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
எவ்­வா­றா­யினும் கடந்த ஜன­வரி 21 ஆம் திக­தி­வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் கடற்­ப­டை­யி­னரால், கொட்­டாஞ்­சேனை, கொச்­சிக்­கடை, செட்­டி­யார்­தெரு, ஹெந்­தல, நாய­க­கந்த, தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் வைத்து 11 பேர் கடத்­தப்­பட்­டுள்­ளமை அம்­ப­ல­மா­னது.

இந்த 11 பேரும் கடற்­ப­டையின் லெப்­டினன்ட் கொமாண்­டர்­க­ளான சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆரச்சி ஆகியோர் தலை­மை­யி­லான குழு­வி­னரால் கடத்­தப்­பட்டு, கோட்டை சைத்­திய வீதியில் உள்ள ' பிட்டு பம்பு' எனும் இர­க­சிய தடுப்பு அறை­யிலும் பின்னர் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமின் 'கன்சைட்' என்ற இர­க­சிய நிலத்­தடி வதை முகா­மிலும் தடுத்து வைக்­கப்­பட்­ட­மைக்­கான வெளிப்­ப­டுத்­தல்­களை புல­னாய்வுப் பிரி­வினர் கண்­ட­றிந்­தனர்.

கடத்­தப்­பட்ட 11 பேரில் தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் விவ­காரம் மிக்க அவ­தா­னத்தை பெற்­ற­தாகும். கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம் தெமட்டகொடையைச் சேர்ந்த மொஹம்மட் சாஜித், மரு­தா­னையைச் சேர்ந்த ஜமாலின் டிலான் ஆகியோரே கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­க­ளுமாவர்.

இந்த 5 மாண­வர்­க­ளுடன் 2008.05.17 அன்று இரவு யூனுஸ், சப்ராஸ் என மேலும் இரு­வரும் கொட்­டாஞ்­சே­னையில் உள்ள ரஜீவ் நாக­நாதன் வீட்டில் இரவு உணவை உட்­கொண்­டுள்­ளனர்.அதன் பின்னர் யூனுஸும் சப்­ராஸும் மோட்டார் சைக்­கிளில் வீட்­டுக்குச் செல்­லவே ஏனைய ஐவரும் காரில் வெள்­ள­வத்தை பகு­தியில் உள்ள ஒரு சலூ­னுக்கு முடி­வெட்ட சென்­றுள்­ளனர்.

இதன் போது சாஜித் என்ற மாண­வ­னுக்கு தெஹி­வளை, கவு­டானவைச் சேர்ந்த மொஹம்­மட்­ அலி என்பர் பணம் கொடுக்க இருப்­ப­தாக அதனை பெற்றுக் கொள்ள அனை­வரும் காரில் அங்கு சென்­றுள்­ளனர்.

கடற்­ப­டையின் கடத்தல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து சம்பத் முன­சிங்க உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு உளவு வேலை பார்த்துத் திரிந்­துள்ள மொஹம்மட் அலி இந்த ஐவ­ரையும் திட்டம் தீட்டி தனது இல்­லத்­துக்கு இவ்­வாறு வர­வழைத்­துள்­ள­துடன் பின்னர் சம்பத் முன­சிங்­க­வுக்கு அறி­வித்­துள்ளார்.

இந்­நி­லை­யி­லேயே கடற்­ப­டையின் லெப்­டினன்ட் கொமாண்­டர்­க­ளான சம்பத் முன­சிங்­கவும் ஹெட்டி ஆரச்­சியும் நேர­டி­யாக சென்று 5 மாண­வர்­க­ளையும் கடத்­தி­யுள்ளனர். கடத்தும் போது மாண­வர்கள் பய­ணித்த காரில் 1 1 /2 இலட்சம் ரூபா பணமும் இரு கைய­டக்கத் தொலை­பே­சி­களும் இருந்­துள்­ளன.

மாண­வர்­களின் கடத்தல் குறித்து பெற்றோர் கொட்­டாஞ்­சேனை, மரு­தானை, தெமட்­ட­கொடை ஆகிய பொலிஸ் நிலை­யங்­களில் முறைப்­பா­டு­க­ளையும் பதிவு செய்­துள்­ளனர்.
கடத்­தப்­பட்ட 5 மாண­வர்­களும் கோட்டை ' பிட்டு பம்பு' தடுப்­ப­கத்தில் இருந்­ததை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக முதலில் ஆதா­ரங்கள் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­தன.
குறிப்­பாக ரஜீவ் நாக­நாதன் தனது தந்­தைக்கு எடுத்த தொலை­பேசி அழைப்­பொன்றில் கோட்டை சைத்­திய வீதியில், ஏபல் சீமன் சேன­நா­யக்க, ஏபல் சீமன் கித்­சிறி ஆகி­யோரின் பாது­காப்பின் கீழ் இருந்­த­தை உறுதி செய்­துள்ளார்.

ரஜீவ் நாக­நாதன், லண்­ட­னுக்கு மருத்­துவ படிப்பை மேற்­கொள்ளச் செல்ல தயா­ரான போதே அவரும் அவரின் நண்­பர்­களும் இவ்­வாறு கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் ரஜீவ் குடும்­பத்­துக்கும் அப்­போ­தைய மீன்­பி­டித்­துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குடும்­பத்­துக்கும் தொடர்­பி­ருந்த நிலையில் தனிப்­பட்ட ரீதியில் பீலிக்ஸ் பெரேரா கடற்­ப­டை­யிடம் விசா­ரித்­துள்ளார்.

இதனால் ரஜீவ் நாக­நாதன் மீதும் அவன் கூட்­டா­ளிகள் மீதும் கடற்­படை மிகக் கவ­ன­மா­கவே காய் நகர்த்­தி­யுள்­ளது.2008 டிசம்பர் முதல் 2009ஆம் ஆண்டு மார்ச் வரை அவ்­வப்­போது தொலை­பே­சி­யூ­டாக ரஜீவ் தனது குடும்­பத்­தாரை அழைத்த நிலையில் அத­னூ­டாக பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ரஜீவை கடத்­தல்­கா­ரர்­க­ளான கடற்­ப­டை­யினர் 'டொக்டர் புத்தா' என்றே அழைத்­துள்­ள­துடன் அவ­னிடம் ஆங்­கி­லமும் கற்­றுள்­ளனர். ஒரு சமயம் கடற்­ப­டையின் சீரு­டை­யையும் ரஜீ­வுக்கு அவர்கள் அணி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு தொடரும் போதே ரஜீவ் உள்­ளிட்­டோரை விடு­தலை செய்ய, மொஹம்மட் அலி ஊடாக ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்­பட்­டுள்­ளது. எனினும் அதற்கு முன்­ன­ரேயே மரு­தானை பொலி­ஸா­ரினால் மெஹம்மட் அலி கைது செய்­யப்­பட்ட போதும் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்டார்.

இதனைத் தொடர்ந்து மொஹம்மட் அலியை கடத்­திய ஹெட்டி ஆரச்சி தலை­மை­யி­லான கடத்தல் குழு, அவரை தலைகீழாக தொங்­க­விட்டு தாக்­கி­யமை தொடர்பில் ரஜீவ் தொலை­பே­சியில் வழங்­கிய தக­வல்கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னி­டையே நாரம்­மல கட­ஹ­பொல எனும் இடத்தில் வைத்து 'அண்­ணாச்சி' என்ற புனைப்­பெ­யரைக் கொண்டு சமிந்த என்­ப­வரால் 5 மாண­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக ஹெந்­தல பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்ட ஜோன் ரீன் தொடர்பில் அவன் தாயிடம் 5 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்­ட­மையும் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் கடத்­தப்­பட்ட மாண­வர்­களின் நிலை­மை­யினை அவ்­வப்­போது பதிவு செய்­து­வந்த ராஜீவ்வின் தொலை­பேசி அழைப்­புக்கள் 2009.03.24 ஆம் திக­தி­யுடன் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 'அண்­ணாச்சி' என்ற பெயரைக் கூறி மாண­வர்­களை விடு­விக்க சமிந்த என்­பவர் 0776530482 என்ற தொலை­பேசி இலக்­கத்தை பயன்­ப­டுத்­தி­ய­மையும் விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளாகும்.

இந்­நி­லையில் தான் 2009.03.24 உடன் நின்று போன தொலை­பேசி அழைப்பு மீண்டும் 2009 ஏப்ரல் மாதத்தில் தொடர ஆரம்­பித்­துள்­ளது.இதன்­போது ‘ஹேஷான்’ என்ற பெயரில் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யவர் மாண­வர்­களை ஹெட்டி ஆரச்சி தற்­போது தனது பொறுப்பில் விட்­டுள்­ள­தா­கவும் அவர்­களை தான் நன்­றாக பார்த்துக் கொள்­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ள­துடன் தனது தொலை­பேசி இலக்­கத்­துக்கு மீள்­நி­ரப்பு பணத்­தி­னையும் பெற்றுக் கொண்­டுள்ளார். 0778925790 என்ற தொலை­பேசி இலக்­கத்தினூடாக பல­முறை ரஜீவின் பெற்­றோரை இந்த நபர் தொடர்பு கொண்­டுள்­ள­துடன் இவை பந்­து­குமார் என அறி­யப்­படும் கடற்­படை சிப்­பாயின் தொலை­பேசி இலக்கம் என்­பதும் அத­னுடன் தொடர்­பு­டைய மேல­திக தக­வல்­களும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அந்த சிப்­பாயை புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்த நிலையில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 7 பேர் திரு­மலை நிலத்­தடி வதை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

புல­னாய்வுப் பிரி­வுக்கு தனது உத்­தி­யோக பூர்வ சீரு­டை­யி­லேயே வந்து வாக்­கு­மூ­ல­ம­ளித்­தி­ருந்த அவர் 'நான் லெப்­டினன்ட் கொமாண்டர் ரண­சிங்­கவின் கீழ் அப்­போது வேலை­பார்த்தேன். அவர் விசேட புல­னாய்வுப் பிரிவின் தலைவர். அவரின் கீழேயே திரு­கோ­ண­மலை 'டொட்­கெயார்ட்' எனும் முகாமில் நிலத்­தடி இர­க­சிய சிறைக் கூடங்கள் இருந்­தன. நான் அவற்றை மேற்­பார்வை செய்­ப­வ­னாக இருந்தேன். அங்கு பாரிய நிலத்­தடி ஆயுத களஞ்­சி­ய­சாலை ஒன்று உள்­ளது.

அதில் ஒரு பகு­தியே சிறைக் கூட­மாக அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த நிலத்­தடி சிறையில் ரஜீவ் உள்­ளிட்ட 5 மாண­வர்­களும் மேலும் சிலரும் இருந்­தனர். அவர்கள் மல­ச­ல­கூடம் வரும்­போது அவர்­க­ளுக்கு தொலை­பே­சியை கொடுத்து உற­வி­ன­ருடன் பேசச் செய்தேன்' என தெரி­வித்­துள்ளார்.

தமது மகன்மார் திரு­கோ­ண­மலை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ரஜீவின் பெற்றோர் பீலிக்ஸ் பெரே­ராவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரவே அவர் தனது அயல் வீட்டில் வசித்த 10 கடற்­படை தள­ப­தி­களின் செய­லா­ள­ராக பணி­பு­ரிந்து ஓய்வு பெற்ற ரிய அட்­மிரல் சேமால் பெர்னாண்­டோவை அழைத்து தகவல் பெறு­மாறு கூறி­யுள்ளார்.
மாண­வர்­களின் அடை­யாள அட்டை இலக்­கங்­க­ளுடன் சேமால் பெர்­னாண்டோ விசா­ரித்து பார்த்­ததில் மாண­வர்கள் திரு­கோ­ண­ம­லையில் உள்­ளது உறு­தி­யா­கி­யுள்­ளது.
இந்­நி­லையில் சேமாலின் ஆலோ­ச­னைக்கு அமைய அப்­போ­தைய கடற்­படை தள­பதி கருணாகொட­வுக்கு மாண­வர்­களின் விடு­த­லையை கோரி பீலிக்ஸ் பெரேரா கடிதம் எழு­தி­யுள்­ள­துடன் தொலை­நகல் ஊடாக அதனை அனுப்­பி­யுள்ளார்.

அத்­துடன் வசந்த கருணாகொட­வுடன் இது விட­ய­மாக அவர் ஹெலி­கொப்டர் பயணம் ஒன்றின் போதும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இதன்­போதும் மாண­வர்­களை விடு­விப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்ள வசந்த கர­ணா­கொட இறு­தி­வரை அதனை நிறை­வேற்­றி­ய­தாக தெரி­ய­வில்லை.

ஒரு சமயம் மாண­வர்கள் பெற்­றோரை தொடர்பு கொண்­டமை இரக­சிய வதை முகாம் பொறுப்­பாளர் ரண­சிங்­க­வுக்கு தெரி­ய­வ­ரவே சீ.ஐ.டீ. விசா­ரித்தால் தாம் சிக்­குவோம் என அவர் அச்சம் கொண்­டுள்­ள­துடன் அதன் பின்­ன­ரேயே 2009 மே மாதம் 28 ஆம் திக­தி­யுடன் தொலை­பேசி கலந்­து­ரை­யா­டல்கள் முடி­வுக்கு வந்­துள்­ளன.

இந்த கடத்தல் விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்து வரும் புல­னாய்வுப் பிரிவு, அப்­போ­தைய கால­கட்­டத்தில் கடற்­படை புல­னாய்வுப் பிரிவு பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய, தற்­போ­தைய கிழக்கு கட்­டளை தள­பதி குரு­கே­வி­ட­மி­ருந்து பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளது.

இத­னை­விட அப்­போ­தைய கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கெப்டன் டீ.கே.பி தஸ­நா­யக்க மாணவர் கடத்தல் தொடர்பில் நன்கு அறிந்­தி­ருந்­துள்­ள­துடன் தாம் ஐவரை கடத்­தி­ய­தாக வசந்த கருணா கொட­வுக்கும் அறி­வித்­துள்ளார். இது குறித்து சம்பத் முன­சிங்­கவின் புல­னாய்வுப் பிரி­வுக்­கான வாக்கு மூலத்தில் தெளி­வாக குறிப்­பிட்­டப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் 2009.06.17 அன்று திக­தி­யி­டப்­பட்ட அப்­போ­தைய அமைச்சர் பீலிக்ஸ் பெரே­ராவின் கடி­தமும், கர­ணா­கொட மாணவர் கடத்தல் தொடர்பில் அறிந்­தி­ருந்தார் என்­ப­தற்கு பிர­பல சாட்­சி­ய­மா­கும்.

எனினும் இன்று வரை இவ்­வி­வ­காரம் குறித்து எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. வசந்த கரு­ணா­கொட, கெப்டன்ட் டீ.கே.பி. தஸ­நா­யக்க, லெப்­டினன்ட் கொமாண்­டர்­க­ளான சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆரச்சி மற்றும் ரண­சிங்க ஆகியோர் இம்­மா­ணவர் கடத்­த­லுக்கு பொறுப்பு சொல்ல வேண்­டி­ய­வர்கள் என மேலோட்­ட­மாக பார்க்கும் போதே உறு­தி­யாகும் நிலையில் இன்று வரை வசந்த கரு­ணா­கொ­ட­விடம் ஒரு வாக்கு மூல­மேனும் பெறப்­ப­ட­வில்லை என்­பது விசா­ர­ணைகள் மீதான சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­த­வல்­லது.
திரு­மலை முகாமை புல­னாய்வுப் பிரிவு மன்றின் உத்­த­ர­வுக்­க­மைய சோதனை செய்த போது கடத்­தப்­படும் போது மாண­வர்கள் பய­ணித்த கறுப்பு கார் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட நிலையில் அண்­மையில் பிறி­தொரு கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வேனும் மீட்­கப்­பட்­டது.

இவை­யெல்­லா­வற்­றுக்கும் மேலாக இக்­க­டத்­த­லுடன் நேரடி தொடர்பு கொண்ட ரண­சிங்க இன்றும் கடற்­ப­டையில் சேவையில் உள்ளார். ஹெட்டி ஆரச்சி கூட ரவிராஜ் கொலை விவ­கா­ரத்­தி­லேயே கட­மையில் இருந்து இடை நிறுத்­தப்­பட்டார்.

வசந்த கரணா­கொட, தஸ­நா­யக்க, ரண­சிங்க ஹெட்டி ஆரச்சி, சம்பத் முன­சிங்க என இந்த கடற்­படை அதிகாரிகளுக்கு எதிராக கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனைகளை வழங்காது இழுத்தடிப்பதும் வேதனைக்குரியதாகும்.

இந்த மாணவர் கடத்தல் விவகாரத்தில் கடற்படையினரை காப்பாற்ற பலமுறை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி இது விடயத்தில் அவதானம் செலுத்துவது அத்தியாவசியமானதாகும்.

புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை விட நாட்டின் நற்பெயருக்கும் கடற்படையின் ஒழுக்க விதிமுறைகளுக்கும் அப்பால் சென்று பெற்றோரின் வயற்றில் தீ மூட்டும் இத்தகைய மனிதக் கடத்தல்காரர்களின் முகமூடி கழற்றப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
இறுதியாக இந்த வழக்கில் கடற்படையினரை காக்க போராடும் ஒரு குழுவின் கூற்றோடு இரகசியங்களுக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்.

கோட்டை நீதிமன்ற வளாகத்தில் காணாமல் போன மாணவர்களின் பெற்றோர் சார்பில் ஆஜராகி வெளியேறிக் கொண்டிருந்த சட்டத்தரணி அச்சலா செனவிரட்னவுக்கு கடற்படையின் சட்ட ஆலோசகர் குழுவொன்று சொன்ன வார்த்தைகள் இவை.

'விடுதலைப் புலிகளுடன் போரில் கருணா அம்மானை அவ்வியக்கத்தில் இருந்து பிரித்தெடுத்தது மிகப் பெரிய வெற்றி. அதனை செய்ததில் சம்பத் முனசிங்கவின் பங்கு அதிகம். அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு பிரச்சினை ஏற்படாது' என்ற இந்த வார்த்தைகள் நல்லாட்சியில் சட்டம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைத்துவிடக் கூடாது.
8 வருடங்களாக காத்திருக்கும் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை சிதைத்துவிடாமல் சட்டம் தன் கடமையை செய்யும் வரை கேசரி தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும்.

 

http://www.virakesari.lk/articles/2015/11/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.