Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாராயம் கொடுக்காததால் வீட்டின் வாசல் கதவினை அடித்து உடைத்து சாவகச்சேரி பொலிசார் அட்டகாசம்..

Featured Replies

குளோபல் தமிழ் விசேட செய்தியாளா்

சாராயம் கொடுக்காததால் வீட்டின் வாசல் கதவினை அடித்து உடைத்து சாவகச்சேரி பொலிசார் அட்டகாசம்.

 

 
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  பொலிசார் சென்று வீட்டின் உரிமையாளரிடம் சாராய போத்தல்கள் கேட்டுள்ளனர்.  உரிமையாளர் சாராய போத்தல் கொடுக்காததால் வீட்டின் கேற்றினை அடித்து உடைத்ததுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுப்பிரமணியம் நிதிகேசன் என்பவர் தெரிவிக்கையில், 
 
சாவகச்சேரியில் ரெஸ்ரோறன் ஒன்றினை நடத்தி வந்தேன். கடந்த 2014 ம் ஆண்டு 7ம் மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பூசாவில் தடுத்து வைக்கப்பட்டு விசராணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது கடந்த 3 மாத காலமாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வருகின்றேன்.
 
கடந்த சில தினங்களாக எனது இளைய மகள் சுகவீனம் உற்று இருந்தால் புணர்வாழ் முகாமில் இருந்து 5 நாள் விடுமுறையில் மகளை பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
 
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் எனது வீட்டுக்கு வெள்ளை வாகனத்தில் சிவில் உடையில் வந்த சிலர் தமக்கு சாராய போத்தல் தேவை என வெளியில் நின்று கத்தினார்கள்.
 
பயத்தின் காரணமாக வெளியில் செல்லவில்லை வீட்டினுள் இருந்த வாறு பார்த்தேன். அதில் ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிசார் என அடையாளம் கண்டு கொண்டேன்.
 
அதன் பின்னர் வந்து இருப்பவர்கள் பொலிசார் என அடையாளம் கண்டு கொண்டு வெளியில் வந்து வீட்டில் சாராயம் இல்லை. அதனை ரெஸ்ரோறன் ல கேளுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் ரெஸ்ரோறன் பூட்டு நீ வந்து திறந்து எடுத்து தா என கூறினார்கள்.
 
நான் அதற்கு மறுப்பு தெரிவிக்க வீட்டு கேற்றினை அடித்து உடைத்தார்கள். அதனால் நான் பயத்தில் வீட்டினுள் சென்று விட்டேன்.
 
வீட்டு கேற்றினை உடைத்துக்கொண்டு வீட்டு வளவுக்குள் வந்தவர்கள் எனது மனைவியின் மோட்டார் சைக்கிளில் ஏறி இருந்து கொண்டு இதில வா வந்து எடுத்து தா என கூறினார்கள். 
 
நான் பயத்தின் காரணமாக வெளியில் வரவில்லை. கொஞ்ச நேரம் கத்தியவர்கள் பின்னர் எனது மனைவியின் மோட்டார் சைக்கிளை தம்முடன் எடுத்து சென்றனர்.
 
மோட்டார் சைக்கிளுனுள் 35 ஆயிரம் ரூபாய் பணமும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களும் மகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் உள்ளது.
 
பொலிசாரின் இந்த அடாவடித்தனம் குறித்து யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன். அத்துடன் பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளேன் என தெரிவித்தார்.
 
அதேவேளை குறித்த வீட்டு உரிமையாளரின் வீடினை சுற்றி காலை முதல் அதிகளவான புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
கடந்த மாதம் மானிப்பாய் பகுதியில் தாடி வளர்த்து இருந்தார்கள் என கூறி இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிசார் கைது செய்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு இருந்தனர்.
 
குறித்த இரு இளைஞர்களில் ஒருவர் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126494/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா பொலிஸ் சேவை நன்கு வளர்ச்சி கண்டுவிட்டது.. இப்படிச் சொல்லவும் ஆக்கள் இருக்கினம்.. எம்மத்தியில். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.