Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

U 19 உலககிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

அண்டர் 19 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

நோபாலன்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்த இந்திய அண்டர் 19 அணி. இலங்கையை வீழ்த்தியது. | கெட்டி இமேஜஸ்.
உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்த இந்திய அண்டர் 19 அணி. இலங்கையை வீழ்த்தியது. | கெட்டி இமேஜஸ்.

வங்கதேசத்தில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

திராவிட் பயிற்சியாளராக உள்ள இந்திய அண்டர் 19 அணி உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்தது. அதுவும் தோற்காத அணியாக இதுவரை இருந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலங்கா இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைக்க, இந்திய அண்டர் 19 அணி 27/2 என்ற நிலையிலிருந்து மீண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனையடுத்து நாளை மறுநாள், அதாவது பிப்ரவரி 11-ம் தேதி மோதும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை இந்திய அணி இறுதிப் போட்டியில் பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிறன்று மோதுகிறது.

அன்மோல்பிரீத் சிங், சர்பராஸ் கான் அபாரம்:

இந்திய அணி முதலில் பேட் செய்த போது, ரிஷப் பண்ட் (14), கேப்டன் இஷான் கிஷன் (7) ஆகியோர் சடுதியில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து 9.2 ஓவர்களில் 27/2 என்று இந்திய அணி சற்றே தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ன்ஹ்ட அன்மோல்பிரீத் சிங் (72), சர்பராஸ் கான் (59) இணைந்து 21 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக 96 ரன்களைச் சேர்த்து மீட்டனர். ரன் எடுப்பது மிகவும் கடினமாக அமைந்ததால் 15 ஓவர்களில் 44/2 என்றுதான் இருந்தது. இந்நிலையில் 19-வது ஓவரில் சர்பாராஸ் கான், 2 பவுண்டரிகளை அடித்தார். ஆட்டத்தின் 28-வது ஓவரில்தான் முதல் சிக்ஸ் வந்தது. சர்பாராஸ் கான், சில்வாவின் பந்தை மேலேறி வந்து லாங் ஆஃப் மீது சிக்ஸ் அடித்தார். 61 பந்துகளில் அரைசதம் கண்டார் சர்பராஸ் கான்.

ஸ்கோர் 123-ஆக இருந்த போது சர்பராஸ் கான், 71 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து புல் ஷாட்டில் பெர்னாண்டோ பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிறகு அன்மோல்பிரீத் சிங், அசலங்கா பந்து ஒன்றை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்து பிறகு ஒரு பவுண்டரி 69 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கண்டார்.

40-வது ஓவரில் இந்திய அணி 173/3 என்று இருந்தது. 43-வது ஓவரின் முதல் பந்தில் 92 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸ் அடித்த அன்மோல்பிரீத் சிங் 72 ரன்களில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு நிமேஷ் பந்தில் திருப்தியில்லாமல் வெளியேறினார்.

வாஷிங்டன் சுந்தரும், அன்மோல்பிரீத் சிங்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 70 ரன்களைச் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஸ்கோர் 218ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார்.

ஆனால் அர்மான் ஜாஃபர் இறங்கி அதிரடி காட்டினார், அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 29 ரன்கள் விளாசியது மிக முக்கியமான பங்களிப்பாக அமைந்தது. குறிப்பாக ஒரு 11 பந்துகளில் 23 ரன்கள் அப்போது வந்தது. லோமோர் 11 ரன்களையும், தாகர் 17 ரன்களையும் எடுத்து பங்களிக்க இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குமாரா, நிமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அவேஷ் கானின் அபார தொடக்கப் பந்து வீச்சு:

இலக்கைத் துரத்த களமிறங்கிய இலங்கை அணி வலது கை வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானின் கட்டுக்கோப்பான லெந்த் மற்றும் 135 கிமீ வேகம் ஆகியவற்றால் திணறினர். முதல் ஓவரின் கடைசி பந்து அருமையான இன்ஸ்விங்கராக அமைய தொடக்க வீரர் பெர்னாண்டோ 4 ரன்களில் எல்.பி. ஆனார். இதே ஓவரில் ஒரு பிளம்ப் எல்.பி. நடுவரால் தவறாக மறுக்கப்பட்டது, ஆனால் அதே ஓவரில் அவரைக் காலி செய்தார் அவேஷ் கான்.

அதோடு பண்டாரா (2) ரன் அவுட்டிலும் அவேஷ் கானின் பங்கு இருந்தது. இலங்கை 13/2 என்று ஆனது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அகமதுவும் அபாரமாக வீசினார். இலங்கை கேப்டன் அசலங்கா 6 ரன்களில் பாதம் என்பவரிடம் அவுட் ஆக இலங்கை 10-வது ஓவரில் 42/3 என்று சரிவு முகம் காட்டியது.

அப்போது இருகை பவுலிங் வீரர், ஆல்ரவுண்டர் காமிந்து மெண்டிஸ், ஆஷன் ஆகியோர் இணைந்து ஸ்கோரை தட்டுத் தடுமாறி 91 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 67 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த காமிந்து மெண்டிஸ் தாகர் பந்தில் வெளியேறினார்.

அதன் பிறகு இலங்கை அணியில் ஆஷன் மட்டுமே 38 ரன்கள் எடுத்தார். பிவிஆர் டிசில்வா 28 ரன்களையும், பிஏ டிசில்வா 24 ரன்களையும் எடுத்தாலும் தேவைப்படும் ரன் விகிதம் எகிறிக் கொண்டிருக்க அவேஷ் கான் தனது 2-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கடைசி 4 விக்கெட்டுகள் 21 ரன்களில் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 42.4 ஓவர்களில் 170 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், தாகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடையில் சில ரன் அவுட்கள், மிஸ்பீல்ட்கள், கேட்ச்கள் இந்திய அணியினரால் கோட்டை விடப்பட்டன, ஆனால் இதனை இலங்கை அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை, காரணம் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் எகிறிக் கொண்டேயிருந்ததே.

ஆட்ட நாயகனாக 72 ரன்கள் எடுத்த அன்மோல்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8214161.ece?homepage=true
  • தொடங்கியவர்
இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்
 
11-02-2016 04:43 PM
Comments - 0       Views - 1

article_1455192998-TamilWIfinaU19.jpg19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. இத்தொடரை நடாத்திவரும் பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்தே, இறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெற்றது.

மிர்புரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. 2 ஓட்டங்களுக்கு 27 ஓட்டங்களை இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களுடன் தடுமாறியது. அதன் பின்னர், 6ஆவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், 6ஆவது விக்கெட்டின் பின்னர், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டன. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மெஹேடி ஹசன் மிராஸ் 60 (74), மொஹமட் சாய்புடின் 36 (55), ஜோய்ராஸ் ஷேக் 35 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கீமோ போல் 3, ஷமர் ஸ்பிறிங்கர் 2, சேமர் கே.ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

227 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. அதிரடியான ஆரம்பத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 5 ஓவர்களிலேயே 44 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் சமாளித்து ஆடினாலும், 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது. எனினும், மத்திய வரிசை வீரரான ஷமர் ஸ்பிறிங்கரின் சிறப்பான ஆட்டத்தால், அவ்வணி வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் ஷமர் ஸ்பிறிங்கர் ஆட்டமிழக்காமல் 62 (88), ஷிம்ரொன் ஹெட்மையர் 60 (59), கிட்ரோன் போப் 38 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சாலே அஹ்மட் ஷவோன் 3, மொஹமட் சாய்புடின் 2, மெஹேடி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, ஷமர் ஸ்பிறிங்கர் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/165825/%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-#sthash.pKn1cTh8.dpuf
  • தொடங்கியவர்
19 வயதின் கீழ் உலக கிண்ணம்: 3 ஆம் இடத்துக்கான போட்டியில் இலங்கையை வென்றது பங்களாதேஷ்
2016-02-13 16:34:32

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில்  இலங்கை அணியை பங்களாதேஷ் அணி 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

 

14844_bangaladesh-under-19-600.jpg

 


பங்களாதேஷின் பதுல்லா நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  48.5 ஓவர்களில் 214 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


அணித்தலைவர் சரித் அசலன்க 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து  218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


அணித்தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் 53 ஓட்டங்களையும் நஸ்முல் ஹொஸைன் சான்டோ 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பங்களாதேஷ் அணியின் 3 ஆவது வரிசை வீரர் ஜாகெர் அலி 15 ஆவது ஓவரில் துப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். 19 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவர் மைதானத்திலிருந்து தூக்கிச்செல்லப்பட்டார்.

 

14844_bangaladesh-under-19-2.jpg

 

ஆனால்,  49 ஆவது ஓவரில் அவர் மீண்டும் களமிறங்கி துடுப்பெடுத்தாடினார். 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்ற அவர் தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மெஹ்தி ஹசன் மிராஸ் தெரிவானார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14844#sthash.Nr0UnXCv.dpuf
  • தொடங்கியவர்

அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி: 145 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி

 

 
தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.
தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.

மிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.

மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.

அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.

சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதில் விரட்டும் என்றே எதிர்பாக்கப்படுகிறது, காரணம், பிட்சில் இருந்த ஈரப்பதம் இப்போது காய்ந்து பேட்டிங் சுலபமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் போப் ஒரு அதிரடி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-145-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8236893.ece?homepage=true

  • தொடங்கியவர்

12717310_969570569775039_517358031178960

12715947_1176670372352057_81766027592304

12716246_1176670415685386_90918373335374

12747290_1176670469018714_16395368709533

12716304_1176670542352040_84289829558516

  • தொடங்கியவர்

அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று மே.இ.தீவுகள் வரலாறு படைத்தது

 
 
 
  • அருமையாக ஆடி வெற்றிக்கு இட்டுச் சென்ற அரைசத நாயகன் கீஸி கார்ட்டி. | மிர்பூர், அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட், மே.இ.தீவுகள் உலக சாம்பியன். | கெட்டி இமேஜஸ்.
    அருமையாக ஆடி வெற்றிக்கு இட்டுச் சென்ற அரைசத நாயகன் கீஸி கார்ட்டி. | மிர்பூர், அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட், மே.இ.தீவுகள் உலக சாம்பியன். | கெட்டி இமேஜஸ்.
  • தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.
    தனிநபராக போராடிய சர்பராஸ் கான் அரைசதம் எடுத்து 8-வது விக்கெட்டாக வெளியேறுகிறார். | படம்: ஏ.எப்.பி.

மிர்பூரில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதன் முதலாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.

முதலில் பிட்சை சரியாகக் கணித்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்து துல்லியமாக வீசி இந்திய அணியை 145 ரன்களுக்குச் சுருட்டிய பிறகு, இலக்கை விரட்டும் போது இந்திய அணி கொடுத்த கடும் நெருக்கடியை மன உறுதியுடன் எதிர்கொண்டு கடைசி ஓவரின் 3-வது பந்தில் 146/5 என்று வெற்றி பெற்று அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக கோப்பையை வென்று உலக சாம்பியன்களாகி வரலாறு படைத்தது மே.இ.தீவுகள்.

67/2 என்று நிதானமாக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மே.இ.தீவுகள் அணியை இந்திய இடது கை ஸ்பின்னர் டாகர் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி கடும் சிக்கலுக்குள்ளாக்கினார்.

அதாவது டாகர், முதலில் கேப்டன் ஹெட்மயரை அவரது சொந்த எண்ணிக்கையான 23 ரன்களில் வீழ்த்தினார். பிறகு ஸ்பிரிங்கர், கூலி ஆகியோரையும் வீழ்த்த 77/5 என்று தோல்வி முகம் கண்டது மே.இ.தீவுகள்.

ஆனால், அதன் பிறகு இந்திய அணியின் கடும் நெருக்குதலை நிதானத்துடனும், சாதுரியத்துடனும் எதிர்கொண்ட கார்ட்டி (52 நாட் அவுட்), பால் (40 நாட் அவுட்) ஆகியோர் மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று மிகவும் அழுத்தம் தரும் சூழ்நிலையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்று முதன் முதலாக கோப்பையை வென்றனர்.

கடைசியில் 49-வது ஓவரில் பால் என்ற வீரருக்கு அவேஷ் கான் டீப் கவரில் கேட்ச் ஒன்றை விட்டார், அது கடினமான கேட்ச். ஓடி வந்து முன்னால் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயன்று நழுவ விட்டார். அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் மே.இ.தீவுகள் இன்னமும் கூடுதல் நெருக்கடிக்குள்ளாகி ஆட்டம் என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம், ஆனால், கார்ட்டி, பால் இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 20.3 ஓவர்கள் கடும் நெருக்கடியில் நின்று 69 ரன்களைச் சேர்த்தனர்.

இந்திய தரப்பில் திருப்பு முனை ஏற்படுத்திய டாகர் 10 ஓவர்களில் 1 மெய்டனுடன் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவேஷ் கான் வழக்கம் போல் அருமையாக வீசி 29 ரன்களுக்கு 1 விக்கெட்டையும், அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்திய அணி கடைசியில் போராடி தோல்வி தழுவியது, ஆனாலும் குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு கடைசி ஓவர் வரை ஆட்டத்தை இழுக்கும் திறமையை, இந்த அணியினரிடத்தில் ஒரு கடினமான போராட்ட மனநிலையை ஏற்படுத்திய விதத்தில் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிற்கு இது ஒரு திருப்திகரமான தொடரே.

ஆட்ட நாயகனாக கார்ட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்பராஸ் கானின் தனிமனிதப் போராட்டமும் மே.இ.தீவுகளின் அபாரப் பந்துவீச்சும்!

மிர்பூரில் நடைபெறும் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அபாரமாக பந்து வீச இந்திய அணி முதலில் பேட் செய்து 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மயர் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோசப் மற்றும் ஹோல்டர் வெறியுடன் வீசினர். பந்தின் தையல் பகுதியை தரையில் படுமாறு வீசி எழும்பச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை திணறச் செய்தனர்.

தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியை அவர்கள் கடைபிடித்தனர். சர்பராஸ் கான் மட்டுமே சிறப்பாக ஆடி இந்த உலகக்கோப்பையில் தனது 7-வது அரைசதத்தை எடுத்தார். அவர் 89 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஒரு முனையில் போராடி 8-வது விக்கெட்டாக ஜான் பந்தில் எல்.பி.ஆனார். லோம்ரோர் 19 ரன்களையும், ஆர்.ஆர்.பாதம் 21 ரன்களையும் எடுக்க மொத்தம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எக்ஸ்ட்ரா வகையில் 16 வைடுகளுடன் 23 ரன்கள் வந்ததால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து சுருண்டது.

மேற்கிந்திய அணியில் ஜோசப் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜான் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, பால் 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர், ஸ்பிரிங்கர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பண்ட், ஜோசப் வீசிய பந்தை முன்னால் வந்து, அதாவது கிரீசிற்கு சற்றே வெளியே வந்து பந்தை ஆடாமல் விட்டார், ஆனால் கிரீசிற்குள் காலை வைக்கத் தவறியதால் விக்கெட் கீப்பர் இம்லாக் சாதுரியமாக பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார் இதனால் விசித்திரமான முறையில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேரினார் பண்ட்.

அன்மல்பிரீத் சிங் 3 ரன்களில் ஜோசப்பின் எழும்பிய, ஸ்விங் ஆன பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷன் 4 ரன்களில், உள்ளே வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று பந்தை கோட்டை விட்டார், நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் ஜான் பந்து ஒன்று சற்றே நின்று வர இவரது டிரைவ் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ஸ்பிர்ங்கர் பந்தில் அர்மான் ஜாஃபர் 5 ரன்களில் கவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 50/5 என்று ஆனது.

சர்பராஸ் கான் 29 ரன்களில் ஆடிவர லோம்ரோர் 19 ரன்களில் ஹோல்டரின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்திய அணி 87/6 என்று ஆனது. இதன் பிறகு தனது ஏழாவது அரைசதம் கண்ட சர்பராஸ் கான், ஜான் பந்தை பிளிக் செய்ய முயன்று பந்து சிக்கவில்லை, கால்காப்பில் பட எல்.பி.ஆனார். அதன் பிறகு மற்ற விக்கெட்டுகள் சோபிக்கவில்லை இந்திய அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

காலிறுதி, அரையிறுதிகளில் கடினமான சூழலில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்ற மே.இ.தீவுகள், இந்த ரன் எண்ணிக்கையை எளிதாக விரட்ட முடியவில்லை, கார்ட்டி, பால் ஆகிய வீரர்கள் 77/5 என்ற நிலையிலிருந்து 19 வயதுக்குட்பட்ட வீர்ர்களிடத்தில் மிக அரிதாகவே காணப்படும் மன உறுதியையும், நல்ல உத்தியையும், பொறுமையையும் கொண்டு வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆடி உலக சாம்பியன்களாக்கியது சரிவுறும் மே.தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை நிச்சயமாக அளிக்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article8236893.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.