Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெல்ஜியம்

Featured Replies

பெல்ஜியம் - 1

 

பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை.
பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை.

பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம் பர்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டிருக்கிறது பெல்ஜியம்.

ஐரோப்பிய யூனியனின் தலைநகரம் பெல்ஜியத்தில்தான் உள்ளது. நேட்டோ அமைப்பின் தலைமையிடமும் இந்த நாட்டில் தான் இருக்கிறது. டச்சு, பிரெஞ்ச் ஆகிய இரண்டு மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளனர்.

தீவிரவாதம் உச்சத்தை அடையும் பல நிகழ்வுகளில் ஏதோ ஒருவிதத்தில் பெல்ஜியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது பலருக்கும் வியப்பளித்திருக் கலாம். எதனால் இப்படி?

அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு - அதாவது 2001 செப்டம்பர் 9 அன்று வேறொரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் அகமது மசூத் என்ற தளபதி-தலைவர் இரண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். மசூத் தலிபா னுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.

சரி. இதில் எங்கே பெல்ஜியம் வந்தது? கொலையாளிகளான அந்த இரு தீவிரவாதிகளும் பெல்ஜியம் நாட்டு பாஸ்போர்ட் களை வைத்துக் கொண்டுதான் ஆப்கானிஸ்தானில் நுழைந்திருக் கிறார்கள்.

மே 2004-ல் பெல்ஜியத்தின் தலைநகரமான ப்ரஸல்ஸில் யூத அருங்காட்சியகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொன்ற தீவிரவாதி சமீபத்தில் பெல்ஜியம் தலைநகரில் பிடிபட்டிருக்கிறான்.

இருபது வருடங்களுக்கு முன்பே பெல்ஜியத்துடன் தீவிர வாதம் இணைத்து பேசப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் ஒரு வீட்டை திடீரென்று சோதனை யிட்டது பெல்ஜிய காவல் துறை. அவர்களது நோக்கம் அல்ஜிரியா விலுள்ள GIA என்ற தீவிரவாத அமைப்பு தொடர்பானது.

அந்த வீட்டில் இருந்த ஒரு பெரிய நூலின் முதல் பக்கத்தில் “இது அல்-காய்தாவுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் சமர்ப்பணம்” என்று எழுதியிருந்தது!. ஐரோப்பா வில் கைப்பற்றப்பட்ட முதல் ஜிகாத் ஆவணம் என்று இதைக் கூறுவார்கள். தீவிரவாதிகள் பெல்ஜியத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அப்படி என்ன சாதகமான அம்சங்கள் பெல்ஜியத்தில் உள்ளன.

தலைநகர் ப்ரஸல்ஸில் 19 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மேலென்பீக். இது அடிக்கடி தீவிரவாதிகளின் செயல்பாடு தொடர்பான செய்தி களில் அடிபடுகிறது. இந்த மாவட் டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு வேலையில் லாத் திண்டாட்டம் மிக அதிக மாகவே இருக்கிறது. கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்த வர்கள்.

இங்கு வசிக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு தங்களுக்கு சமமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும், மதத்தின் காரணமாக ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் தீவிரவாதிகளுக்கு இரையாகும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் (பெல்ஜி யத்தில்) இப்படி தீவிரவாதத்துக்கு அனுதாப அலை வீசுவது தீவிரவாதிகளுக்கு ஒரு சாதகமான அம்சம். தவிர பெல்ஜியம் இருக்கும் இடம் அவர்களைக் கவர்கிறது. பெல்ஜியத்தை சாலைகள் வழியாகவே இரண்டு மணி நேரத்தில் கடந்து விடலாம்.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது பெல்ஜியம். இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் நாசவேலையைச் செய்துவிட்டு பெல்ஜியத்துக்கு மீண்டும் வந்து விடலாம். ஷெங்கன் விசா என்ற வசதியின் மூலம் பெல்ஜியத்துக்குள் நுழைந்து விட்டால் அங்கிருந்து பெரும் பாலான பிற ஐரோப்பிய நாடு களுக்குள் விசா இல்லாமலேயே நுழைய முடியும்.

இன்னொரு காரணமும் உண்டு. அதுபற்றி பின்னர் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1/article8034027.ece

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம்- 2

 
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலால் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலால் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

பெல்ஜியத்தைத் தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க வேறொரு காரணமும் இருக்க வாய்ப்பு உண்டு.

பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள இஸ்லாமியப் பின்னணிக் கும் பெல்ஜியத்தில் உள்ள இஸ் லாமியப் பின்னணிக்கும் ஒரு வேறு பாடு இருக்கிறது. இங்கு உள்ளூர் மதத்தலைவர்கள் (இமாம்) குறை வாகவே உள்ளனர். பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வருகிறார்கள் இவர்கள். ஐரோப்பியப் பின்ன ணியோடு ஒன்றுவதைவிட சவுதி அரேபியா போன்ற நாடுகளிலுள்ள மதச்சார்பு எண்ணங்களை பெல்ஜிய இளைஞர்களிடையே விதைக்கிறார்கள்.

மேலும் பெல்ஜியத்தில் பாது காப்பு ஏற்பாடுகள் அவ்வளவு பலமாக இல்லை என்கிறார்கள். நேட்டோ உட்பட பலவித சர்வதேச அமைப்புகளின் தலைமையகமாக விளங்கும் பெல்ஜியத்துக்கு அதற் குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு கள் இல்லை. சமீபத்திய புள்ளி விவ ரத்தின்படி சிரியா மற்றும் இராக்கில் உள்ள ஜிகாதிகளுக்கு ஆதரவாகப் போரிட பெல்ஜியத்திலிருந்து 250 பேர் சென்றிருக்கிறார்கள்.

பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டவர் களில் மூன்று பேராவது பெல்ஜியத் தில் வசித்தவர்கள் என்று செய்தி கிடைத்தது.

பாரீஸ் தாக்குதல் நடைபெறு வதற்கு மூன்று நாட்களுக்கு முன் பெல்ஜியத்தின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஜென் ஜம்போன் இது குறித்துப் பேசினார். அரசின் சவால்களில் ஒன்றாக உருவாகியுள்ளது பெல்ஜியத்தில் இன ரீதியாகப் பிரிந்திருப்பது என்றார்.

காவல்துறையினரும் மாவட்ட மேயர்களும் ஒருவருக்கொருவர் சரியான தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதில்லை என்றார். தவிர தீவிரவாதக் குழுக்களில் சேரும் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல உள்நாட்டுக்காரர்கள். அவர் களது குடும்பங்கள் தலைமுறைக ளாக பெல்ஜியத்தில் வாழ்ந்தவை. எனவே அவர்களின் பாஸ்போர்ட் களை முடக்கி வைப்பதில் அதிகாரி களுக்குத் தயக்கம் இருக்கிறது.

பாரீஸ் தாக்குதல்களுக்கு மூல காரணமாகச் செயல்பட்ட அப்தெல் அகமது அபவட் என்ற 27 வயது இளைஞன் பெல்ஜிய நாட்டுக் குடிமகன் என்று அறிவித்துள்ளனர் பிரான்ஸ் அதிகாரிகள்.

பாரீஸ் காவல்துறை பதில் தாக்கு தல் நடத்தியதில் இப்ராஹிம் அப்டெஸ்லாம் என்பவர் இறந்திருக் கிறார். முகமது என்ற மற்றொருவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். சலா என்ற மூன்றாவது நபரை பிடிக்க பொது மக்களின் உதவியை நாடியுள்ளது காவல்துறை. ‘’அவன் மிகவும் அபாயகரமானவன். எந்தச் சூழலிலும் நீங்கள் அவனை நேரடியாகக் கையாள வேண்டாம். காட்டிக் கொடுங்கள் போதும்’’ என்று பொது அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

ஜிகாதிகளுடன் பெல்ஜியத் துக்கு உள்ள தொடர்பு முன்பு வேறொரு விதத்திலும் வெளியா னது உண்டு. முறியல் என்ற பெண்மணி (அதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்லாமுக்கு மாறியவர்) மனித வெடிகுண்டாக மாறி பலரை இறக்க வைத்தார்.

தீவிரவாதத்துக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிக்கல்கள் இருப்பதை அந் நாட்டின் பிரதமர் சார்லஸ் மிஷேல் ஒத்துக் கொண்டிருக்கிறார். ‘’நாங் கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரா கப் பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒத்துக் கொள்கிறோம்’’ என்றார்.

பல வருடங்களாகவே நீதித் துறைக்கும், காவல்துறைக்கும் அதிக பட்ஜெட்டை பெல்ஜியம் ஒதுக்க வேண்டும் என்ற குரல்கள் எழும்பி வருகின்றன. என்றாலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அதற்கெல்லாம் பெல்ஜியம் செவி சாய்க்காமல் இருந்து வந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய சிக்கலும் இதில் இருக்கிறது. அந்த நாட்டின் காவல் துறையினர் தேசத்தின் எல் லைகளைத் தாண்டிச் செல்ல முடியாது. அப்படி எந்த ஒப்பந்தமும் அவர்களை அனுமதிப்பதாக இல்லை. ஆனால் தீவிரவாதிகளால் பெல்ஜிய எல்லையை எளிதில் தாண்டிச் செல்ல முடிகிறது. காரணம் ஷெங்கன் விசா. பாரீஸ் தாக்குதலுக்கு முக்கிய காரண கர்த்தா என்று கருதப்படும் அப்தெல் ஹமீத் அபவ்டு சுட்டுக் கொல்லப்பட் டார். இந்தத் தாக்குதலில் முக் கியப் பங்காற்றி இருக்கலாம் என்று சந்தேக வளையத்தில் இருக்கும் ஸலா அப்தெஸ்லாம் என்பவரை பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அரசு கள் தீவிரமாகத் தேடிக் கொண் டிருக்கின்றன. இவர் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நீண்ட காலமாக வசித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. தீவிரவாதிகள் சிலரை பிரான்ஸ் அரசு கைது செய்திருந் தாலும் அவர்களில் ஸலாவும் ஒரு வரா என்பது உறுதியாகவில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/article8041179.ece

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம்- 3

பிரஸல்ஸில் உள்ள ஓர் ஆயுத விற்பனைக் கடை.
பிரஸல்ஸில் உள்ள ஓர் ஆயுத விற்பனைக் கடை.

பாரீஸ், தீவிரவாதிகளால் சமீபத்தில் தாக்கப்பட்ட தைப் போலவே பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸ் தாக்கப்பட இருக்கிறது என்றுகூட ஒரு செய்தி அதற்குச் சில நாட்கள் கழித்துப் பரவியது. சுரங்கப் பாலங்கள் மூடப்பட்டன. கவசங்கள் அணிந்த காவல் துறையினர் தெருவெங்கும் நிறுத்தப்பட்டனர். கடைகள் மூடப்பட்டன. ‘கூட்டமாக எங்கும் காணப்படாதீர்கள்’ என்று அரசு அறிவிக்க, பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நல்லவேளையாக விபரீதம் எதுவும் எதிர்பார்த்தபடி நடந்து விடவில்லை.

‘பிரஸல்ஸ் நகரில் பலவித துப்பாக்கிகளை லைசன்ஸ் இல்லாமலேயே கள்ள மார்கெட்டில் எளிதில் வாங்கலாம்’ என்று பலரும் கூறுகிறார்கள்.

காவல்துறையினர் முழுமை யாகச் செயல்படாததால் பல வருடங்களாகவே இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் அங்கு சுறுசுறுப்படைந்து வருகின்றன.

பெல்ஜியத்தில் ஆறரை லட்சம் முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள். தங்கள் நாட்டிலுள்ள மசூதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதைத் தடுத்து நிறுத்தப் போவதாக பிரதமர் கூறியி ருக்கிறார். காரணம் பெல்ஜியத் தில் உள்ள சில பெரிய மசூதிகள் வழிபாட்டுத் தலங்களாக விளங்கு வதைவிட தீவிரவாதிகள் சந்தித்து திட்டமிடும் இடங்களாக விளங்கு கின்றன. இந்த மசூதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து) நிதி உதவி தடையில்லாமல் மிக அதிக அளவில் கிடைக்கிறதாம்.

வரலாற்றில் ‘கீழ் நாடுகள்’ என்றே அறியப்பட்டன பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகியன. பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

1813ல் நெப்போலியனின் ஆட்சியைத் தூக்கி எறிந்தனர் டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து எனப்படும் ஹாலாந்தைச் சேர்ந்த வர்கள் டச்சு இனத்தவர்). தங்கள் நாட்டுக்கு ‘ஐக்கிய நெதர்லாந்து’ என்று பெயர் வைத்துக் கொண் டனர்.

இதன் ஒரு பகுதியாக இருந்த பெல்ஜியம் விரைவில் தன் புரட்சியைத் தொடங்கியது. கூட்ட மைப்பாக இருந்தாலும், டச்சுக் காரர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. அரசியலோ, பொருளாதாரமோ எல்லாத் துறைகளிலும் டச்சுக்காரர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. சொல்லப்போனால் அப்போது டச்சுக்கரர்களின் மக்கள் தொகை யைவிட பெல்ஜியக்காரர்களின் மக்கள் தொகை அதிகம்.

தவிர மதத்துக்கும் இந்தப் புரட்சியில் ஓரளவு பங்கு இருந்தது. கூட்டமைப்பின் தெற்குப் பகுதியில் (பெல்ஜியமும் இங்குதான் இருக்கிறது) இருந்த கத்தோலிக்க மதகுருமார்கள், வடக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் இருந்த ப்ராடெஸ்டென்ட் மக்களை சந்தேகத்துடன் பார்த்தார்கள். புதிய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்றும் செய்தி பரப்பினார்கள்.

இதை அரசு உணர்ந்தது. இதைத் தொடர்ந்து அரசு அமைப்பிலும், ராணுவத்திலும் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மக்கள் தொகையில் 62 சதவிகிதம் தெற்கில் வாழ்ந்தனர். ஆனால் இவர்களுக்கு அரசில் 50 சதவீதம்தான் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

கசப்புகள் பரவ, நிலைமை பொருளாதாரக் கோணத்திலும் இனம் பிரிக்கப்பட்டது. ஆம்ஸ்டர்டா மிலுள்ள மிகப் பெரும் துறை முகத்தைக் கொண்ட வடக்குப் பகுதி ‘தடையற்ற வணிகப் பகுதி யாக’ அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ரொட்டியிலி ருந்து பல பொருள்களுக்கான விலை குறைந்தது (வரியில்லாத துறைமுகம் என்பதால்). ஆனால் தெற்குப் பகுதியில் வரிகளின் காரணமாக பொருட்களின் விலை கூடிக் கொண்டு வந்தது. அப்போது இணைந்த நெதர்லாந்தின் மன்ன ராக இருந்தவர் முதலாம் வில்லி யம். அவர் தற்போதைய நெதர் லாந்தில் (அப்போதைய கூட்டமைப் பின் வடக்குப் பகுதி) வசித்தார். தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று கேட்ட தெற்குப் பகுதியினரை அலட்சியம் செய்தார்.

அப்போது ஆம்ஸ்டர்டாம் மட்டுமல்ல பிரஸல்ஸும் ஒரு தலைநகரமாகவே கருதப்பட்டது (இப்போதைய நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம்). இப்போதைய பெல்ஜியத்தின் தலைநகரம் பிரஸல்ஸ்.

1823ல் டச்சு மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக ஆக்கலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரெஞ்ச் மொழி பேசும் மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த யோசனை கைவிடப்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3/article8048379.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 4

 

 
பெல்ஜிய புரட்சியை நினைவுகூரும் வகையில் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண். (கோப்புப் படம்)
பெல்ஜிய புரட்சியை நினைவுகூரும் வகையில் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண். (கோப்புப் படம்)

பெல்ஜியத்தில் இரு முக்கிய இனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஃப்ளெ மிஷ் இனம் என்று அழைக்கப் படுகிறது. இவர்களை ஃப்ளெமிங் என்றும் அழைப்பார்கள். இவர்கள் பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தப் பகுதி ஃப்ளான்டெர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் டச் இனத்தவருடன் (நெதர்லாந்துக் காரர்கள்) நெருங்கிய உறவு கொண்டவர்கள். ஃப்ளெமிஷ் மொழி கூட டச்சு மொழியோடு ஒத்து இருக்கும். இவர்களை ஜெர்மானிய இனத்தின் ஒரு பகுதி என்று கூறலாம்.

பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் அதிகம் (கிட்டத்தட்ட முழுவதுமாகவே) வசிப்பது வாலூம் இன மக்கள். இவர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.

இந்த இரு இனங்களுக்கிடையே அடிக்கடி ‘‘நீயா நானா’’ நடந்த துண்டு. ஆனால் பெல்ஜிய புரட் சிக்கு (இது பற்றி பிறகு பார்ப்போம்) இருவருமே ஒத்துழைத்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் களத்திலும் பொருளா தாரத்திலும் வாலூன்கள்தான் அதிக சக்தி படைத்தவர்களாக இருந் தார்கள். வடக்குப்பகுதி பெரும் பாலும் விவசாயப் பகுதியாகவே இருந்து வந்தது. என்றாலும் 1930-க்களில் ஃப்ளெமிங் இனத்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். ஃப்ளெமிஷ் மொழியை அதிகார பூர்வமாக்கினர். அதற்கு முன்னால் ஏதோ போனால் போகிறது என்று சில பள்ளிகளில் மட்டுமே ஃப்ளெமிஷ் மொழி மூலம் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் கல்விக் கூடங்களில் ஃப்ளெமிஷ் மொழிக் கும் சம அந்தஸ்து கிடைத்தது. நீதிமன்றங்களிலும் ஃப்ளெமிஷ் மொழி பேசலாம் என்பது நடை முறைக்கு வந்தது. அரசின் தகவல் பரிமாற்றங்களில்கூட ஃப்ளெமிஷ் மொழி செல்லுபடியானது.

1960-க்களில் ஃப்ளெமிங், வாலூன் ஆகிய இரு இனங்களுமே அவரவர் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் பெற்றனர். அரசியல், சமூகம், கலாச்சாரம் ஆகிய அத்தனை தளங்களிலுமே இரு இனத்தவரும் தங்களின் பங்கை அதிகரித்தனர்.

என்றாலும் உலக வணிகம் என்கிற அளவில் ஃப்ளான்டெர்ஸ் ஒரு முக்கிய வணிக மையமானது. நவீன தொழில்நுட்பங்கள் அங்கு அதிகம் அறிமுகப்படுத்தப்பட்டன. சுற்றுலாப் பயணிகளும் அங்கு அதிகமாக வந்து சென்றனர்.

1993-ல் பெல்ஜிய அரசியலமைப் புச் சட்டம் திருத்தப்பட்டது. இதன்படி ஃப்ளான்டெர்ஸ், வலோ னியா ஆகிய இரு பகுதிகளுமே அதிகாரபூர்வமாக சுயாட்சி பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் ஜூலை புரட்சி நடைபெற்றது. இது தொடர் பான விவரங்கள் செய்தித் தாள் களில் வெளியாயின. இதைத் தொடர்ந்து பெல்ஜியத்திலும் புரட்சிக்கான விதைகள் தூவப் பட்டன. 1830 ஆகஸ்ட் 25 அன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள பெரும் அரங்கம் ஒன்றில் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இது மன்னர் முதலாம் வில்லியமின் பிறந்த நாள் கொண்டாட்டமாக அரங்கேறியது. அதே சமயம் அரங்குக்கு வெளியே புரட்சியாளர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டி ருந்தனர். பாதி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே பெரும் பாலான பார்வையாளர்கள் அரங்கைவிட்டு வெளியேறி னார்கள். புரட்சியாளர்களோடு சேர்ந்து அவர்களும் கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அந்த நகரிலிருந்த அரசுக் கட்டிடங்களை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். புரட்சிக் கொடி ஒன்றும் உரு வானது.

மன்னர் முதலாம் வில்லியம் தனது இரண்டு மகன்களை, கலகங்களை அடக்குவதற்காக அனுப்பினார். ‘‘மன்னர் வில்லியம் இந்த நகருக்கு வர வேண்டும். ராணு வத்தினரை அழைத்துக் கொண்டு வரக் கூடாது. எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’’என்று புரட்சியாளர்கள் அறிவித்தனர். ரிஸ்க்தான் என்றாலும் அங்கு மன்னர் வில்லியம் வந்தார். பேச்சு வார்த்தையின் முடிவில் வடக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியை யும் நிர்வாக ரீதியில் பிரிப்பதுதான் தீர்வு என்பதை இளவரசர்களில் ஒருவரான வில்லியம் ஒத்துக் கொண்டார்.

ஆனால் மன்னர் இதை ஏற்க வில்லை. சட்டம் ஒழுங்கை சீராக்க வும் இழந்த அரசுக் கட்டடங்களை மீட்கவும் 8000 ராணுவத்தினரை பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பினார். இதற்குத் தலைமை தாங்கியவர் மற்றொரு இளவரசரான ஃபிரெடரிக். கடுமையான எதிர்ப்பு காத்திருந்தது. எதிர்ப்பு தரப்பில் நிர்வாகப் பிரிவினையையும் தாண்டி, சுயாட்சியையும் தாண்டி சுதந்திரம் தேவை என்று கேட்கத் தொடங்கினர். தனியாக அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றையும் தாற்காலிகமாக அரசு ஒன்றையும் கூட உருவாக்கிக் கொண்டனர். 1830 அக்டோபர் 4 அன்று தங்களை சுதந்திர நாடாக பிரகடனப் படுத்திக் கொண்டது பெல்ஜியம்.

அதே ஆண்டு டிசம்பர் 20 அன்று லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐந்து பெரும் ஐரோப்பிய நாடு களான ஆஸ்திரியா, பிரிட்டன், ப்ரஷ்யா, பிரான்ஸ் மற்றம் ரஷ்யா ஆகியவை பெல்ஜியத்தின் தனித் தன்மையை ஏற்றனர். ஆக பெல்ஜியத்துக்கு சர்வதேச அங்கீ காரம் கிடைத்துவிட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/article8057744.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 5

இரண்டாம் உலகப்போரின்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸை ஆக்கிரமித்த ஜெர்மனி ராணுவம். (கோப்புப் படம்)
இரண்டாம் உலகப்போரின்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸை ஆக்கிரமித்த ஜெர்மனி ராணுவம். (கோப்புப் படம்)

முதலாம் உலகப் போர் தொடங்கியது. ஜெர்மனி, பெல்ஜியத்தை ஆக்கிர மித்தது. இத்தனைக்கும் பெல்ஜியம் இந்தப் போரில் எந்த சார்பு நிலையும் எடுக்கவில்லை. பிறகு ஏன் ஜெர்மனி அந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும்?

ஒரு நடுநிலைமை நாட்டை ஜெர்மனி ஆக்கிரமிக்கும் என்பதை எதிரணி எதிர்பார்த்திருக்காது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பெல்ஜியம் வழியாக பிரான்ஸின் தலைநகரான பாரீஸை கைப்பற்றி விடலாம் என்பதுதான் ஜெர்மனி யின் திட்டம். இதனால்தான் அது பெல்ஜியத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

ஆனால் இதுவே ஜெர்மனிக்கு வேறொரு விதத்தில் பாதக மாக அமைந்தது. அந்த பாதகத் துக்கு காரணம் 1839ல் கையெழுத் திடப்பட்டிருந்த லண்டன் உடன் படிக்கை.

ஐரோப்பிய கூட்டமைப்பு (Concert of Europe), நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இது. இதன் ஒரு பகுதியாக பெல்ஜியத்தின் சுதந்திரத்தையும் நடுநிலைத் தன்மையையும் பிற ஐரோப்பிய சக்திகள் அங்கீகரிப்ப தோடு அவற்றிற்கான உத்தரவாதத் தையும் அளித்திருந்தன. பெல் ஜியம் நடுநிலை வகிக்கும் நிலையில் யாராவது அதை ஆக்கிரமித்தால் அந்த உடன்படிக்கையில் கையெ ழுத்திடும் பிற நாடுகள் பெல்ஜியத் தின் உதவிக்கு வரும் என்றது அந்த உடன்படிக்கை.

இதன்படி பெல்ஜியத்துக்கு ஆதரவாக பிரிட்டன் களத்தில் குதித்தது. அதற்குமுன் நடந்த வற்றை இப்போது பார்ப்பது அவசியம்.

1914 ஆகஸ்ட் 2-ம் தேதி ஜெர்மன் அரசு பெல்ஜியத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது. ‘’பெல்ஜிய எல்லைக்குள் எங்கள் ராணுவம் நுழைந்து செல்வதற்கு உங்கள் அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்றது. பெல்ஜியம் அரசு இதற்கு அழுத்தமாக மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்பார்த்திருந்த ஜெர்மன் ராணுவம், பெல்ஜியத்தின் மறுப்பு பற்றிக் கவலைப்படாமல் அதற்கு அடுத்தநாளே பெல்ஜி யத்துக்குள் நுழைந்தது.

அளவில் ஒப்பிடும்போது ஜெர்மானிய ராணுவத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை பெல்ஜிய ராணுவம். என்றாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பெல்ஜியத்தால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த காலகட்டத்துக்குள் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ராணுவங்கள் பெல்ஜியத்துக்கு ஆதரவாக அங்கு வந்து சேர்ந்து விட்டன.

ஜெர்மன் ராணுவம் தங்கள் எல்லைக்குள் முன்னேறாதபடி தடுப்பதற்காக பாலங்களையும் ரயில்வே தடங்களையும் இடித்துத் தள்ளினர் பெல்ஜியம் தரப்பினர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஜெர்மன் ராணுவம் கண்ணில் கிடைத்த பெல்ஜியக்காரர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தியது. வழியில் தென்பட்ட பெரும் கட்டிடங்களை தீக்கு இரையாக்கியது.

காலப்போக்கில் பெல்ஜியத்தின் 95 சதவீத பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. பெல்ஜியத்தைச் சேர்ந்த பலரும் நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

பெல்ஜியம் அரசு நாட்டுக்கு வெளியில் .இருந்து கொண்டே அரசாளத் தொடங்கியது. இந்தப் போரின்போது பெரும்பாலான பெல்ஜிய அரசு அதிகாரிகள் தங்கள் நாட்டிலேயே தங்கிவிட்டனர். இவர்கள் வெளிநாட்டிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த அரசின் ஆணைகளைக் கேட்டுக் கேட்டு அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் நாடாளு மன்றத்தையே முடக்கியது ஜெர்மனி. பல்கலைக்கழகங்களை இழுத்து மூடியது. இதற்கு மாற்றாக டச்சு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்கியது.

எனினும் கலவரமான சூழலால் நாட்டின் பல பெரும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஜெர்மனி தன் நாட்டிலிருந்து நிர்வாகிகளை அனுப்பி பெல்ஜியத் தொழிற்சாலைகளை மேம்படுத்த முயற்சித்தது. ஆனால் பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர். அவர்கள் அரைகுறையாகத்தான் தங்கள் பணிகளை நிறை வேற்றினர். ஜெர்மனி அடுத்த அடாவடித்தனத்தில் இறங்கியது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெல்ஜியத் தொழிலாளிகளை ஜெர்மனிக்கு அனுப்பியது.

தங்கள் நாட்டுக்குள் நுழைந்த ஜெர்மன் ராணுவ வீரர்களை பெல்ஜிய மக்கள் மதிக்கவில்லை. அதுமட்டுமல்ல ராணுவ வீரர்கள் குறைந்த எண்ணிக்கையில் எதிர் படும்போதெல்லாம் அவர்களைத் தாக்கவும் செய்தார்கள்.

கொதித்து போன ஜெர்மானிய ராணுவம் 6,000 பெல்ஜிய மக்களை தூக்கில் ஏற்றியது. அப்போது பெல்ஜியத்தில் பிரபலமாக விளங்கிய அடோல்ப்ஸ் மாக்ஸ் என்ற அரசியல்வாதியையும் ஹென்றி பிரெனே என்ற சரித்திர ஆய்வாளரையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்று அவர்களை பிணைக் கைதிகளாக்கியது.

‘எங்கள் ராணுவத்துக்கு முறை யாக அனுமதி கொடுத்திருந்தால் நாங்களாகவே பெல்ஜியத்தைத் தாண்டிச் சென்றிருப்போம். மாறாக எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட தால் பெல்ஜியம் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறது’ என்று நியாயம் பேசினார்கள் ஜெர்மன் ராணுவத் தினர்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜெர்மன் ராணுவத்தினரின் அடாவடிச் செயல்களை பிரிட்டன் உலகுக்குத் தெரியப்படுத்தியது. பெல்ஜியத்தைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உண்டு என்று கருதிய பிரிட்டன், ஒரு விசாரணைக் குழுவை பெல்ஜியத்துக்கு அனுப் பியது. அந்தக் குழு ‘ப்ரைஸ் அறிக்கை’ என்று பின்னால் அறியப் பட்ட ஒன்றை வெளியிட்டனர். ஜெர் மனியின் அராஜகங்களை விரிவா கவே வெளிக் கொண்டு வந்தது அந்த அறிக்கை. பல ஜெர்மன் ராணுவ வீரர்களின் டைரிகளிலி ருந்து சில பக்கங்களை ஆதாரமா கவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி யிருந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5/article8067838.ece

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 6

 

 
மகன் பாடோவினுடன் மன்னர் லியோபோல்டு. (கோப்புப் படம்)
மகன் பாடோவினுடன் மன்னர் லியோபோல்டு. (கோப்புப் படம்)

பிரிட்டன் வெளியிட்ட விசாரணைக் குழு வின் அறிக்கை வேறு எதற்குப் பயன் பட்டதோ இல்லையோ அமெரிக்காவின் போக்கைத் தீர்மானிக்க உதவியது. ஒரு நடுநிலையான நாட்டில் ஜெர்மனியின் செயல்பாடுகளை அறிந்த அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே ஜெர்மனிக்கு எதிராகச் செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லாமல் போனது.

இந்தக் காலகட்டத்தில் மதமும் முக்கியத்துவம் பெற்றது. பெல்ஜியத்தைச் சேர்ந்த கார்டினல் மெரிசியர் என்பவர் அப்போது பிரபலமானவர். அவர் அமெரிக்காவுக்குச் சென்று கத்தோலிக்க நெறிகளைப் பரப்பியதில் அமெரிக்கா மகிழ்ந்தது.

பெல்ஜியத்தின் பெரும் பகுதியை ஜெர்மன் ராணுவம் ஆக்கிரமித்திருக்க வெளிநாட்டில் இருந்தபடியே பெல்ஜிய அரசு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததைக் குறிப்பிட்டோம். இதன் காரணமாக பல குழப்பங்களும், தகவல் பரிமாற்றச் சிக்கல்களும் நேரத் தொடங்கின.

முதலாம் உலகப் போரில் கூட்டு நாடுகள் அணியில் பெல்ஜியம் அதிகாரபூர்வமாக உறுப்பினராகவில்லை. எனவே முக்கிய முடிவுகள் தொடர்பாக பெல்ஜியம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. எனினும் 1916-ல் பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை இணைந்து ஓர் உறுதிமொழியை எடுத்தன. போரில் வெற்றிக்குப் பிறகு சமாதானப் பேச்சு வார்த்தைகள் நிகழும்போது பெல்ஜியமும் அதில் கலந்து கொள்ள அழைக்கப்படும். பெல்ஜியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும்.

பெல்ஜியத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஜெர்மனி கடைபிடிக்கத் தொடங்கியது. டச்சு இன மக்கள் பெல்ஜியத்திலும் வசித்துக் கொண்டிருந்தனர். ‘அவர்கள் பாவம். அவர்களுக்குதான் அரசு சலுகைகள் செல்ல வேண்டும்’ என்றது ஜெர்மனி. ஒருகட்டத்தில் அவர்களுக்குத் தனி பகுதியை சுதந்திர நாடாக அறிவித்து விடலாம் என்ற முடிவுக்கும் ஜெர்மனி வந்தது.

ஆனால் இதற்குள் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது.

உலகப் போரின்போது பெல்ஜிய ராணுவம் அவ்வளவு முழுமை அடைந்ததாக இல்லை. பின்னர் அது மெல்ல மெல்லத் தன்னை செழுமைப் படுத்திக் கொண்டது.

மன்னர் முதலாம் ஆல்பர்ட் 1919 ஏப்ரல் மாதத்தில் நடந்த பாரீஸ் சமாதானக் கூட்ட மைப்புக்குச் சென்றிருந்தார். அங்கு பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசித்தார். தனது நான்கு எதிர்பார்ப்புகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒன்று, பெல்ஜியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும். இதற்கான நஷ்டஈடுகளை ஜெர்மனியிடமிருந்து பெற்றுத்தர வேண்டும். இரண்டு, பெல்ஜியத்தின் பாதுகாப்பு மேம்பட வேண்டும். இதற்கு அதைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அரண் போன்ற நிலப்பரப்பு (Buffer State) உருவாக்கப்பட வேண்டும். மூன்று, 1839-ல் உருவான உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும். நான்கு, லக்சம்பர்க் நாட்டுடன் உண்டாகியிருந்த கசப்புகள் சரி செய்யப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஜெர்மனியை அதிகம் மிரட்டாமலேயே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும் மன்னர் கூறினார். வருங்காலத்தில் ஜெர்மனி பழிவாங்குமோ என்ற அச்சம்!.

கோரிக்கைகளின் விளைவு என்ன? ஜெர்மனியிடமிருந்து தான் எதிர்பார்த்த தைவிட குறைவான நஷ்டஈட்டைத்தான் பெல்ஜியத்தால் பெற முடிந்தது. பெல்ஜியத்தின் பொருளாதாரத்தை இது அப்படியொன்றும் உயர்த்திவிடவில்லை.

பெல்ஜியத்தின் கிழக்குப் பக்கமாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சிறு துண்டுப் பகுதி பெல்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.

நெதர்லாந்தின் ஒரு சிறு பகுதியாக இருந்த ஜீலாந்து தங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற பெல்ஜியத்தின் கோரிக்கை மறுக்கப்பட்டது. தவிர இதன் காரணமாக நெதர்லாந்து பெல்ஜியத்திடம் கொஞ்சம் விரோதம் கொண்டது. 1940-ல் ஜெர்மனி மீண்டும் பெல்ஜியத்தையும், நெதர்லாந் தையும் ஆக்கிரமித்தது. மன்னர் லியோபோல்டு ஜெர்மன் ராணுவத்திடம் சரணடைந்தார். அடுத்த நான்கு வருடங்களில் கூட்டு நாடுகள் பெல்ஜியத்தை விடுவித்தன.

1950-ல் நடைபெற்ற தேர்தலில் மன்னர் லியோபோல்டுவே மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்றனர் மெஜாரிட்டி மக்கள். என்றாலும் இதை ஏற்காத பலரும் வேலை நிறுத்தம், சாலை மறியல் என்றெல்லாம் ஈடுபட, லியோபோல்டு தன் மகனான இளவரசன் பாடோவின் என்பவரை ஆட்சிப் பொறுப்பேற்க வைத்தார்.

ஆனால் மன்னர் லியோபோல்டுவின் காலத்தில் நடைபெற்ற சில அக்கிரமங்கள் வேறொரு நாட்டை நேரடியாகவே பாதித்தன. அது ஆப்ரிக்காவிலுள்ள காங்கோ தேசம்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6/article8096847.ece

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 7

 

பெல்ஜியம் மன்னர் லியோபோல்டின் படையால் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட காங்கோ மக்கள். (கோப்புப் படம்)
பெல்ஜியம் மன்னர் லியோபோல்டின் படையால் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட காங்கோ மக்கள். (கோப்புப் படம்)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய சக்திகள் தங்களுக்குள் பலவிதங்களில் கடுமையாகப் போட்டியிட்டன. அவற்றில் முக்கி யமான ஒன்று ஆப்ரிக்காவில் இருக்கும் பகுதிகளையும் வளங் களையும் யார் தன்வசமாக்கிக் கொள்வது என்பது.

தொடக்கத்தில் ஆப்பிரிக்க தேசமான காங்கோவை போர்ச்சுகீசியர்கள் சுரண்டத் தொடங்கினர். அவர்கள் வணிகம் என்ற போர்வையில் அங்கு தங்கினர். பிற ஐரோப்பிய சக்திகளும் வல்லூறுகளாக காங்கோவை வலம் வரத் தொடங்கின.

புதிய தடங்களில் பயணம் மேற்கொண்டவர்களில் முக்கிய மான ஒருவர் ஹென்றி மார்ட்டன் என்பவர். அவர் பல ஆப்பிரிக்கப் பகுதிகளில் பயணம் செய்து ஐரோப்பாவுக்குத் திரும்பினார். ஆப்ரிக்காவில் வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதை அவர் தெரியப்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் ஹாலந்து, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுக்கல் ஆகியவை புதிய காலனிகளை தங்கள் வசமாக்கு வதில் ஓரளவு வெற்றி கண்டிருந் தன. ஆனால் பலமுறை முயற்சித் தும் பெல்ஜியத்தினால் எந்தப் பகுதியையும் தன் வசம் கொண்டு வர முடியவில்லை. இது அப்போது பெல்ஜியத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் லியோபோல்டுவுக்கு பெரும் எரிச்சலை அளித்தது.

தனிப்பட்ட முறையில் ஸ்டான்லி என்பவரை அனுப்பி காங்கோவில் உள்ள இயற்கை வளங்களை அறிந்துகொண்டார். வன்முறையின் மூலம் அங்குள்ள இயற்கை வளங்களில் ஒரு பகுதியை பெல்ஜியத்துக்குக் கொண்டு வந்தார். அப்படியே காங்கோவை ஆக்கிரமிக்கவும் தொடங்கினார். “நான் இதை நல்ல நோக்கத்தில்தான் செய்கிறேன். இப்படிச் செய்யவில்லை என்றால் அரபு நாட்டவர் காங்கோவை ஆக்கிரமித்துக் கொள்வார்கள். தவிர என் செயல்பாடு காரணமாக கிறிஸ்தவ மதகுருமார்கள் தாராள மாக காங்கோவுக்குள் நுழைய முடியும்’’ என்றார்.

ஒரு நிறுவனத்தை காங்கோ வில் உருவாக்கினார். மனிதாபி மான உதவிகளை பலருக்கும் செய்வோம் என்ற போர்வையில் அது செயல்பட்டது. அதன் உண்மை யான நோக்கம் காங்கோவின் இயற்கைச் செல்வங்களை மன்னருக்குச் சேர்ப்பதுதான்.

லியோபோல்டின் நிர்வாகத்தில் காங்கோ மக்கள் மிகுந்த துயரங் களை அனுபவித்தார்கள். அடர்ந்த காடுகளுக்குள் கிடைக்கும் இயற் கையான ரப்பரை சேகரி

த்து வருவதற்காக பலரும் நியமிக்கப் பட்டனர். அந்தத் தொழிலாளிகள், அவர்களுக்கென்று குறிப்பிட்ட அளவைவிட குறைவான அளவில் ரப்பர் கொண்டு வந்தால் அவர்கள் கைகள் வெட்டப்பட்டன.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். காங்கோவை நிர்வகித்தது பெல்ஜியம் அல்ல. மன்னர்தான் தனிப்பட்ட முறையில் காங்கோவைக் கைப்பற்றி அதை நிர்வகித்தார். பெல்ஜியம் அரசு இதை அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை. என்றாலும் மெளனத்தின் மூலமாக இதை அனுமதித்துக் கொண்டி ருந்தது.

ஒரு கட்டத்தில் பெல்ஜிய அரசிடமிருந்து பெரும் கடன் தொகைக்கு மன்னர் விண்ணப்பித் தார். காங்கோவை நிர்வகிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டது. இந்தத் தொகையைக் கொடுத்தால் சில வருடங்களுக்குப் பிறகு பெல்ஜியம் அதிகாரபூர்வமாகவே காங்கோவைத் தன் வசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆசை காட்டினார். அதற்குள் முடிந்தவரை காங்கோவின் வளங்களை கொள்ளையடித்துவிடலாம் என்பது தான் அவரது எண்ணம்.

காங்கோ பெரும் லாபத்தை மன்னருக்கு அள்ளித் தந்து கொண்டி ருந்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று அங்கு எக்கச்சக்கமாக விளைந்திருந்த ரப்பர் மரங்கள். மற்றொன்று அங்குள்ள யானைகளிடமிருந்து கிடைத்த தந்தங்கள். இரண்டுக் குமே சர்வதேச அளவில் நிறைய கிராக்கி இருந்தது. காங்கோவின் ஏற்றுமதி மிக அதிகமாக இருந்தது.

இப்படிக் கிடைத்த பெரும் தொகையில் ஒரு பகுதியை மன்னர் பெல்ஜியத்தில் சில பொது திட்டங்களுக்கும் பயன் படுத்தி னார். பெல்ஜிய மக்களையும் சந்தோஷப்படுத்திய மாதிரி இருக்குமே.

என்றாலும் நாளுக்கு நாள் காங்கோ மக்களுக்கு மன்னர் செய்த அநீதிகள் அதிகமாகிக் கொண்டிருந்தன. இதைப் பற்றி அறிவதற்காக காங்கோவுக்கான பிரிட்டிஷ் தூதருக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘‘உண்மையில் காங்கோ மக்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை அனுப்புங்கள்’ என்றது அந்த உத்தரவு.

ஒரு சிறிய நீராவிக் கப்பல் மூலம் காங்கோ முழுவதும் பயணம் ஆனார் ரோஜர் கேஸ்மென்ட் என்ற அந்த தூதர். அவர் கண்ட காட்சிகள் அவருக்குப் பேரதிர்ச்சியைத் தந்தன.

 

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7/article8123340.ece

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 8

 

காங்கோவில் விடுதலைப் போராட்டத்துக்கு வித்தி்ட்ட பாட்ரிஸ் லுமும்பா. (கோப்புப் படம்)
காங்கோவில் விடுதலைப் போராட்டத்துக்கு வித்தி்ட்ட பாட்ரிஸ் லுமும்பா. (கோப்புப் படம்)

காங்கோ முழுவதும் பயணம் செய்த ரோஜர் கேஸ்மென்ட் என்ற பிரிட்டிஷ் தூதர் கண்ட காட்சிகள் அதிர்ச்சிகரமானவை.

அங்கு காணப்பட்ட பல ஆண்களின் கைகள் வெட்டப்பட்டிருந்தன. விசாரித்தார். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு கண்ணீர்க் கதை. குறிப்பிட்ட அளவைவிட குறைவான அளவில் ரப்பர் கொண்டு வந்ததால் வெட்டப்பட்ட கைகள்.

அத்தனை மக்களின் மனதிலும் பய உணர்ச்சி அப்பி இருந்தது. ‘‘துப்பாக்கி குண்டுகளை வீணாக்கக் கூடாது. அவை போரின்போது பயன்படும். அதனால்தான் பெரிய வாள்களால் உங்கள் கைகளை வெட்டுகிறோம்’’ என்று ஆட்சியாளர்கள் கூறியதும் தெரியவந்தது.

இந்த அறிக்கை பிரிட்டனை அடைந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கோவுக்குச் சென்று வந்த கிறிஸ்தவ மத குருமார்கள் ஏன் இதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

சர்வதேச அளவில் பெல்ஜியத் துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

காங்கோவிலும் பெல்ஜியத்திலும் மன்னருக்கு எதிர்ப்பு அதிகமாகத் தொடங்கியது. 1908-ல் அவரை பெல்ஜிய அரசு பதவியிலிருந்து நீக்கியது. அதே வருடம் காங்கோ பகுதியை அதிகாரபூர்வ மாகவே பெல்ஜியம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அந்தப் பகுதியின் பெயரை ‘பெல்ஜியம் காங்கோ’ என்று மாற்றி அமைத் தது.

அதற்குப் பிறகு காங்கோ விவசாயிகளின் துயரம் ஓரளவு (மட்டும்) குறைந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிர மித்த ஐரோப்பிய சக்திகளில் மன்னர் இரண்டாம் லியோபோல்டுக்குத் தனி இடம் கிடைத்தது மிகக் குரூரமாக ஆப்பிரிக்க மக்களை நடத்தியவர் என்ற அளவில்.

பிற ஐரோப்பிய நாடுகளின் காலனிகளுக்கும் காங்கோவுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவுடன் தனது கவர்னர் ஒருவரை ஐரோப்பிய நாடு அங்கு நியமிக்கும். மற்றபடி உள்ளூர் தலைவர் ஒருவர்தான் அதை ஆட்சி செய்வார். ஆனால் பிரெசல்ஸில் (பெல்ஜியத் தலைநகர்) இருந்து தான் காங்கோ ஆளப்பட்டது.

கத்தோலிக்க மதகுருமார்களின் நோக்கம் மதம் சார்ந்ததுதான் என்றாலும் அவர்களால் காங்கோ மக்களின் கல்வி அறிவு மேம்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

போகப் போக காங்கோவில் ரப்பர் ஏற்றுமதி பல்வேறு காரணங் களால் குறையத் தொடங்கியது. புதிய வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தது பெல்ஜிய நிர்வாகம். காங்கோவில் தாமிரம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று அறியப்பட்டது. தாமிர இருப்பிடங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. சுரங்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டன, வெட்டப்பட்டன.

அதிக அளவில் தாமிரம் கிடைக்க 1928-ல் உலகின் மொத்த தாமிரத்தில் ஏழு சதவீத உற்பத்தி கொண்டது என்ற பெருமையை காங்கோ அடைந்தது. (பின்னர் அங்கு வைரம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு வைரச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. ஒரு கட்டத்தில் வைர உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்தது காங்கோ - முதலிடம் தென்னாப்ரிக்காவுக்கு).

இரண்டாம் உலகப் போரின் போது பெல்ஜியத்தை ஜெர்மன் ராணுவம் ஆக்கிரமித்ததைக் குறிப்பிட்டோம். அந்தக் காலகட் டத்தில் லண்டனிலிருந்து ஆட்சி செய்தது பெல்ஜிய அரசு. அப்போது கூட காங்கோ பெல்ஜிய அரசுடன் ஒத்துப் போனதைத் தவிர இதை ஒரு வாய்ப்பாகக் கருதி புரட்சியில் ஈடுபடவில்லை. எப்படியும் ஏதோ ஓர் ஐரோப்பிய சக்தியிடம் அடிமைகளாக இருப்பதுதான் நம் தலையெழுத்து என்ற எண்ணம் பல காங்கோவாசிகளிடம் இருந்தது.

போருக்குப் பிறகு வந்த காலகட்டத்தில் காங்கோவின் வளம் சிறப்படைந்தது. பெல்ஜியத்தி லிருந்து இங்கு வந்து குடியேறுபவர் களின் எண்ணிக்கை அதிகமானது. போரின் முடிவில் 34000 ஆக இருந்த வெள்ளையர்களின் (பெல்ஜியக் காரர்களின்) எண்ணிக்கை, 1958-ல் (சுமார் 13 வருடங்களில்) 1,13,000 ஆக அதிகரித்தது.

ஆப்பிரிக்கக் காலனிகள் அனைத்தும் சந்தித்த அதே பிரச்சினைகளை காங்கோவின் மண்ணின் மைந்தர்களும் சந்தித் தனர். காங்கோவில் வெள்ளையர் களுக்கான வாழ்க்கைத்தரம் கறுப்பர்களைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது. வேலை வாய்ப்புகளும் வெள்ளையர் களுக்குதான் அதிகம் வழங்கப் பட்டன.

ஆனால் பிற ஆப்பிரிக்க காலனிகளிடமிருந்து ஒருவிதத்தில் மேலும் வேறுபட்டது. காங்கோவில் எந்தவொரு அரசியலமைப்பும் துளிர்விடவில்லை. சொல்லப் போனால் 1957 வரை காங்கோ வில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. அதாவது வெள்ளை யர்கள், கறுப்பர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே வாக்குரிமை இல்லை. காரணம் அவர்களது பிரதிநிதியாக எந்த அமைப்புமே விளங்கவில்லை. பிறகு எப்படி தேர்தலும் வாக்குரிமையும் முளைக் கும்?

ஆனால் 1950-க்களில் ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலுமே சுதந்திரம் கோரும் குரல்கள் பலமாகவே ஒலித்தன. ஒருவழியாக காங்கோவிலும் அதுபோன்ற குரல்கள் கேட்கத் தொடங்கின. உள்ளூர் இனத்தைச் சேர்ந்த பாட்ரிஸ் லுமும்பா என்பவர் உரிமைக்குரல் எழுப்பினார். அவர் குரலுக்கு வலிமை இருந்தது. மக்கள் அவர் பின் திரண்டார்கள். 1958-ல் அவர் காங்கோவின் முதல் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அது MNC என்று அழைக்கப்பட்டது. (இதன் பொருள் தேசிய இயக்க காங்கிரஸ் என்பதாகும்).

இந்தக் கட்சி ஜனவரி 1959ல் ஒரு பிரம்மாண்டமான அரசியல் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அதற்கு பெல்ஜிய அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்தது. ஏற்கெனவே தாங்கள் சரியாக நடத்தப்படாததால் கொதித்துக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் கலவரங்களில் ஈடுபட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் சூறை யாடப்பட்டன. ஐரோப்பியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு காவல்துறை ஏவி விடப்பட, பல ஆப்பிரிக்கர்களும் கொலை செய்யப்பட்டனர்.

இதைக் கண்டு பெல்ஜியம் அதிர்ச்சி அடைந்தது. அப்போது அதன் மன்னராக இருந்தவர் பாடோவின். இவர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அறிவித்திருந் தார். உரிய காலகட்டத்தில் காங் கோவுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் எண்ணம் பெல்ஜியத் துக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

காங்கோவில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தேசிய அளவில் தேர்தலில் நிற்கக்கூடிய அரசியல் கட்சியாக லுமும்பாவின் MNC கட்சி மட்டுமே இருந்தது.

‘‘நான்கு வருடங்களில் உங்களுக்குச் சுதந்திரம் அளித்து விடுவோம்’’ என்றது பெல்ஜியம். காங்கோ பிரதிநிதிகள் இதற்குத் தீவிரமாக மறுப்புக் கூறினார்கள். ‘‘மிகச் சீக்கிரமே சுதந்திரம் அளித்து விடுகிறோம்’’ என்று வாக்குறுதி அளித்தது பெல்ஜியம். என்றாலும் அடுத்த 6 மாதங்களிலேயே அந்தச் சுதந்திரம்

கிடைத்துவிடுமென்று காங்கோ வாசிகள் கூட எதிர்பார்க்கவில்லை. 1960 ஜூன் 30 அன்று பெல்ஜியம்-காங்கோ சுதந்திரம் பெற்றது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-8/article8128122.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 9

 
கடந்த 2012-ம் ஆண்டு கருணைக் கொலை செய்யப்பட்ட 64 வயதான காடலீவா டி டிராயர். இவரது மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு கருணைக் கொலை செய்யப்பட்ட 64 வயதான காடலீவா டி டிராயர். இவரது மகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெல்ஜிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக வெளியானபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

34 வயதான பெல்ஜியப் பெண்மணி ஈவா தன் வீட்டுக் கதவைத் திறக்கிறார். அவர் பார்ப்பதற்கு இயல்பாகவே தோற்றம் அளித்தாலும், பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றவர். இப்போது தன்னை கருணைக் கொலை செய்ய டாக்டர்கள் உதவ வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுக்கிறார். இதுவே ஈவாவின் அந்தக் குரல் ‘உங்களுக்கு இது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நான் நிரந்தரமாக ஓய்வெடுக்க விரும்புகிறேன். நான் தீர்மானித்து விட்டேன். பல காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கும் ஓய்வு எனக்கு அவசியம் தேவை’. இப்போது மீண்டும் தொகுப்பாளரின் குரல் கேட்கிறது.

அதிர்ச்சியடையாதீர்கள். பெல்ஜியத்தில் கருணைக் கொலை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இறப்பின் விளிம்பில் இருப்பவர் களுக்கு மட்டுமல்ல, ஈவாவைப் போல நீண்ட நாட்களாக மன இறுக்கமடைந்த நோயாளிகள்கூட இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தானாகவே தேர்ந்தெடுத்த ஒரு நாளில் ஈவா தன் குடும்பத்தினரிடம் விடை பெறும் காட்சிதான் அது.

நீங்கள் தயாரா என்று டாக்டர் கேட்க, தயார் என்கிறார் ஈவா. இப்படிக் கூறிவிட்டு தன் படுக்கையில் படுத்துக் கொள்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக ஈவாவின் டாக்டராக விளங்கும் மேகன் தாம்ஸன் என்பவர் தன் ஊசியில் விஷ மருந்தை நிரப்பிக் கொள்கிறார். அப்போது தொலைக்காட்சி நிருபருக்கும், அந்த டாக்டருக்குமிடையே ஒரு சிறு கேள்வி பதில் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

நிருபர்: டாக்டர், நீங்கள் இதுவரை எவ்வளவு கருணைக் கொலைகள் செய்திருக்கிறீர்கள்?

டாக்டர்: கடந்த 12 வருடங்களில் நூறுக்கும் அதிகமான கருணைக் கொலைகளைச் செய்திருக்கிறேன். இதற்குத் தேவைப்படுவதெல்லாம் தன் பெயர், தேதி ஆகியவற்றுடன் ‘‘எனக்கு கருணைக் கொலை தேவை’’ என்ற வாக்கியமும், அதற்குக் கீழ் நோயாளியின் கையெழுத்தும்தான். சில அமெரிக்க மாநிலங்களில் கருணைக் கொலையை அனுமதிக்கிறார்கள். இப்படிச் செய்து கொள்வதற்காகவே வேறொரு அமெரிக்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஒரேகான் மாநிலத்துக்குச் சென்றார். அங்குதான் இது சட்டபூர்வமாக இருக்கிறது.

ஆனால் அங்கும்கூட நோயாளிதான் அந்த நஞ்சை சாப்பிட வேண்டும். பெல்ஜியத்தில் ஊசி மருந்தின் மூலம் கருணைக் கொலை செய்யலாம். இதோ இந்த போதை மருந்தை மிக அதிக அளவில் ஈவாவின் உடலுக்குள் ஊசியின் மூலம் செலுத்தப் போகிறேன். இதன் மூலம் அவருக்கு ஆழ்ந்த தூக்கம் உண்டாகும். அதற்குப் பிறகு வேறொரு மருந்தைச் செலுத்தினால், ஓரிரண்டு நிமிடங்களிலேயே அவர் இறந்து விடுவார். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு முன் மீண்டும் மீண்டும் இதுபற்றி நோயாளியிடம் கேட்டு உறுதி செய்து கொள்வேன். ஏனென்றால் இது ஒருவழிப்பாதை. மீண்டுவர முடியாது.

இந்த இடத்தில் நிருபர் வியப் புடன் ஒரு கருத்தை உதிர்க்கிறார். ‘‘டாக்டர், எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் இதையல்லாம் சொல்கிறீர்கள்!’’.

‘‘இது ஒரு மருத்துவரின் பணிகளில் ஒன்று. 2002லிருந்தே பெல்ஜியத்தில் கருணைக் கொலை சட்டபூர்வமாகிவிட்டதே’’ என்கிறார் டாக்டர்.

இந்த இடத்தில் இன்னொரு வியப்பையும் நாம் குறிப்பிட வேண்டும். பெல்ஜியத்தில் அதிகம் இருப்பது ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவின் தலைமையகமான வாடிகன் கருணைக் கொலையை ஏற்கவில்லை. என்றாலும் பெல்ஜி யத்தில் நடந்த கணக்கெடுப்பில் மிகப் பெரும்பாலானவர்கள் கருணைக் கொலையை ஆதரித்த தால் அங்கு சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. 2013ல் 1,800 பேர் இப்படி இறந்தனர். 2014ல் அடுத்த திருப்புமுனை. உலகிலேயே முதல் முறையாக சிறுவர், சிறுமிகளுக்கும் (எந்த வயதிலும்) கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதிக்கிறது பெல்ஜியம்.

பெல்ஜியத்தின் பார்வை இதுதான். யாருமே சுயமரியாதை யுடன் வாழத்தான் விரும்புவார்கள். மிகுந்த வலியுடன், இனி பிழைக்க முடியாது என்ற நிலையில் நாட் களைக் கடத்துவது மிகவும் மனத் துன்பத்தை ஏற்படுத்தக் கூடியது. அதேபோல் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இது மிக அதிக காலத்துக்கு நீளும்போது கருணைக் கொலைக்கு சம்மதிக் கலாம்.

பெல்ஜிய சட்டப்படி கருணைக் கொலை செய்தபிறகு டாக்டர்கள் இதற்கான விசாரணைக் குழுவிடம் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அந்த கருணைக் கொலையை எப்படி, எதற்காகச் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். நோயாளியின் சம்மதமின்றி கருணைக் கொலை நடந்தது என்று தெரிய வந்தால், டாக்டர்மீது கொலைப் பழி விழும். மனநிலை பாதிப்பினால் கருணைக் கொலை கோரப்பட்டால், மூன்று டாக்டர்கள் முன்னிலையில் அது நடைபெற வேண்டும்.

கருணைக் கொலை என்பது மனிதாபிமானமில்லாத செயல் என்று ஒரு சாரார் கருதினாலும், அதுதான் மனிதாபிமானம் என்றும் பலரும் கூறத் தொடங்கி விட்டார்கள். கருணைக் கொலைக் கான ஊசி மருந்தை டாக்டர் செலுத்தி யவுடன் ‘மிகவும் நன்றி டாக்டர்’ என்று கூறிவிட்டு அமைதியுடன் இறக்கும் நோயாளிகளும் உண்டு.

சில சமயம் கருணைக் கொலை தொடர்பாக புது சிக்கல்களும் எழுவதுண்டு. ஒரு பெண்மணியின் விருப்பத்தின் பேரில் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார். ஆனால் அடுத்த நாள் தொலைபேசியில் அவர் மகனுக்கு இத்தகவல் தெரிவிக்கப் பட்டபோது, கடுமையாக கோபம் கொண்டார். ’’என் அம்மாவின் மன இறுக்கத்திற்குக் காரணமே நாங் களெல்லாம் தொலைதூரத்தில் இருப்பதுதான். நான் இங்கு இன்று வரப்போகிறேன் என்பது தெரிந்திருந்தாலே அவர் கருணைக் கொலைக்கு உடன்பட்டிருக்க மாட்டார்’’ என்றார். தவிர கருணைக் கொலைக்கு உடன்பட்டபோது அவர் மனநிலை சரியாக இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார். வழக்கு தொடுத்திருக் கிறார். முடிவை பெல்ஜியம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-9/article8133178.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 10

 
 
சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்த மார்க் ட்யூட்ரக்ஸ். (கோப்புப் படம்)
சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்த மார்க் ட்யூட்ரக்ஸ். (கோப்புப் படம்)

பெல்ஜியம் நாட்டை ஒரு சூறாவளிபோல ஆட்டிப் படைத்த ஒரு வழக்கைப் பார்ப்போம்.

மார்க் ட்யூட்ரக்ஸ் என்பவன் தொடர் கொலைகளைச் செய்தவன். குழந்தைகளிடம்கூட பாலியல் கொடுமைகளைச் செய்தவன். 1995, 1996 ஆகிய வருடங்களில் 6 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தான். இந்தச் சிறுமிகளின் வயது 8-ல் இருந்து 19 வரை. இவர்களில் நான்கு பேரை கொலையும் செய் தான். தன்னுடைய கூட்டாளியாக இருந்த ஒருவனையும் கொலை செய்தான்.

சிறுமிகள் மாயமாகிப் பல மாதங்களாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது பெல்ஜியம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. சிறுமிகள் காணாமல்போன நான்கு வருடங்களுக்குப் பிறகு 1996-ல் மார்க் கைது செய்யபபட்டான். 2004-ல் நடைபெற்ற இந்த வழக்கு மிகவும் பரவலாகி, பிற நாடுகளின் கவனத்தைக் கூட கவர்ந்தது.

காவல் துறையினரின் மீது கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. காவல் துறையைச் சேர்ந்த ஒருவருக்கே ட்யூட்ரக்ஸ் பணம் கொடுத்து சில சிறுமிகளைக் கடத்த உதவ வைத்தான் என்ற செய்தியும் வலம் வந்தது. இரு சிறுமிகள் கடத்தப்பட்ட பகுதியில் காவல் துறையின் கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தன. ஆனால் அவை காலையிலிருந்து, மாலைவரைதான் செயல்படும்படி வைக்கப்பட்டன என்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

கடத்தல் நடந்தது இரவுகளில். டிசம்பர் 1995-ல் ஒரு நாள் காவல் துறையினர் அவனது வீட்டை சோதனை செய்தனர். ஆனால் இந்தச் சோதனை முழுமையான தாக இல்லை. சோதனையின்போது அந்த வீட்டின் அடித்தளத்தில் இரு சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டி ருந்தனர். இதைக் காவல் துறை உணரவில்லை. ‘’நாங்கள் கார் திருட்டு வழக்கு தொடர்பாகத்தான் அப்போது சோதனை செய்தோம்’’ என்று சமாளித்தது காவல் துறை. ஆனால் அப்போது துப்பறியும் நாய்கள் அழைத்துச் செல்லப்பட வில்லை என்பது சுட்டிக் காட்டப் பட்டது. காவல் துறையினரோடு இருந்தபொது மக்களில் ஒருவர் ‘‘சோதனையின்போது வீட்டுக்குள் இருந்து மிக மெலிதாக அழுகை குரல்கள் கேட்டன’’ என்றார். அந்தக் குரல் தெருவிலிருந்து வந்ததாக நினைத்தோம் என்றது காவல்துறை.

பின்னர் மேற்படி வீட்டிலிருந்து வீடியோ டேப்கள் கைப்பற்றப் பட்டன. அவற்றை காவல் துறை போட்டுப் பார்க்கவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. ‘‘எங்களிடம் அப்போது வீடியோ டேப் ப்ளேயர் இல்லை’’ என்றது காவல் துறை. காவல் துறை திறமை யின்றிச் செயல்பட்டது என்பதை யும் தாண்டி சந்தேக விதைகள் அழுத்தமாகவே விழுந்தன. பணத் தைப் பெற்றுக் கொண்டு காவல் துறையினர் கண்டு கொள்ளாம லேயே இருந்து விட்டனரோ?

பொது மக்கள் மற்றும் ஊடகங் களின் தொடர் விமர்சனங்களைத் தொடர்ந்து நாடாளுமன்றக் குழு ஒன்று விசாரணைக்கு அமர்த்தப் பட்டது. பின்னர் அந்தக் குழு அளித்த அறிக்கையில் காவல் மற்றும் நீதித் துறைகளில் எந்த உயர் அதிகாரியுடனும் ட்யூட்ரக் ஸுக்கு தொடர்பில்லை என்றது.

போதாக்குறைக்கு சிறையி லிருந்து நீதிமன்றத்துக்கு அழைத் துச் செல்லப்பட்டபோது ட்யூட் ரக்ஸ் தப்பி விட்டான் (சில மணி நேரங்களில் பிடிபட்டான்). அவன் தப்பித்த சமயத்தில் கைகளில் விலங்கு பூட்டப்படாமல் இருந்தது ஏன் என்று கேள்வி பெரிதாக எழுந்தது.

மார்ச் 1, 2004-ல் தொடங்கியது வழக்கு. ட்யூட்ரக்ஸ் கைது செய்யப் பட்டு ஏழரை வருடங்களுக்குப் பிறகுதான் இது தொடங்கியது. 450 பேர் சாட்சிகளாக வாக்கு மூலம் கொடுத்தனர். சிறுமிகள் கடத்தியதை ஒத்துக் கொண்டான் ட்யூட்ரக்ஸ். தான் யாரையும் கொல்லவில்லை என்றான்.

ட்யூட்ரக்ஸின் அம்மாகூட வழக்கின்போது ‘‘அவனைச் சிறை யிலேயே வைத்திருங்கள். வெளி யேவிட்டால் மீண்டும் கொடூரச் செயல்களை ஆரம்பித்து விடுவான்’’ என்று கூறியது பரபரப்புச் செய்தியானது. ‘’பொதுச் சிறையில் வைக்காமல் என்னை வீட்டுச் சிறையில் வையுங்கள்’’ என்ற ட்யூட்ரக்ஸின் வேண்டு கோளை நீதிமன்றம் நிராகரித்தது. 2004-ல் அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-10/article8139022.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 11

 

 
பெல்ஜியத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் புளூ பெல் இன காளைகள்.
பெல்ஜியத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் புளூ பெல் இன காளைகள்.

கடந்த 1999-ல் பெல்ஜியத்தை உலுக்கிப்போட்ட ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது பொரு ளாதாரம் தொடர்பானது. பெல்ஜி யத்திலிருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பொருள்களை பல நாடுகள் ஏற்க மறுத்தன, தடை விதித்தன. முக்கியமாக கால் நடைகள் தொடர்பான உணவுப் பொருள்களுக்கு நீண்டகாலத் தடை விதிக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனேகூட பெல்ஜியத் திலிருந்து ஏற்றுமதியாகும் முட்டை, மாட்டுக் கறி, கோழிகள், பன்றிக் கறி போன்றவற்றிற்கு முழுமையாகத் தடை விதித்தது. காரணம் இந்த விலங்குகளுக்கு அளிக்கப்பட்ட தீவனத்தில் டயாக்ஸின் எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பதாக உறுதியானதுதான். இந்த ரசாயனப் பொருள் புற்று நோய் உள்பட பல தீவிரமான நோய்களை உண்டாக்கும் தன்மை கொண்டது.

பெல்ஜியம் கொஞ்சம் தாம தமாகத்தான் விழித்துக் கொண்டது. பண்ணைகளை உடனடியாகத் தொடர்பு கொண்டது. டயாக்ஸின் கலந்த தீவனங்கள் அளிக்கப்பட்ட விலங்குகளை அழித்துவிடச் சொல்லி உத்தரவிட்டது. பல்லா யிரக்கணக்கில் விலங்குகள் அழிக்கப்பட்டன.

எதனால் இந்த விபரீதம் தொடங் கியது? இப்படித்தான். பல்வேறு தீவனங்கள் தயாரிப்பில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. தீவனத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தக் கொழுப்புகளை பிரம்மாண்ட மான தொட்டிகளில் நிரப்பி எடுத்து வருவது வழக்கம். இந்தத் தொட்டிகளில்தான் அந்த விபரீதம் தொடங்கியது. மினரல் எண் ணெயை நிரப்பி வரப் பயன்படுத் தப்படும் தொட்டிகளை முட்டாள் தனமாக தீவனங்களுக்கான மிருகக் கொழுப்பை நிரப்பிவர பயன்படுத்திவிட்டார்கள். இந்தத் தொட்டிகளை தேவைப்படும் அளவுக்குச் சரியாகக் கழுவ வில்லை. எனவே எஞ்சியிருந்த டயாக்ஸின் நச்சுகள் இதில் கலந்து விட்டன.

பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு பெல்ஜியம் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது. இதெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டதும் பெல்ஜியம் பொருளாதாரத்தில் பெரும் அடி வாங்கியது.

அரசின் உத்தரவைத் தொடர்ந்து பல பெரும் பண்ணைகள் மூடப் பட்டன. பெல்ஜியம் அரசேகூட சந்தேகத்துக்குரிய ஆயிரம் பண்ணைகளை சீல் செய்தது. பூங்காக்களில் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டன. சந்தேகப்படும் உணவுப் பொருள்களை அந்த குப்பைத் தொட்டிகளில் போட்டு விடுங்கள் என்று அறிவித்தது அரசு.

உணவுப் பொருள்கள் விற்கப் படவில்லை என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளில் பல பகுதிகள் காலியாக இருந்தன. வெளிநாடுகளுக்குச் சென்று உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முட்டை, கோழிக்கறி, மாட்டுக் கறி மற்றும் பன்றிக் கறி இல்லாத உணவை பெரும்பாலான பெல்ஜி யர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது.

பொருளாதாரத் தாக்கம் அரசியலிலும் பிரதிபலித்தது. அந்த நேரம் பார்த்து நாட்டின் பொதுத் தேர்தல்களும் அறிவிக்கப்பட்டன. பெல்ஜியத்தின் உடல்நலத்துறை அமைச்சரும் விவசாயத்துறை அமைச்சரும் ஜூன் 1, 1999 அன்று ராஜினாமா செய்தனர். பலப்பல மாதங்களாகவே உணவுப் பொருள் களில் டயாக்ஸின் கலந்திருப்பது இவர்களுக்குத் தெரியும் என்றும், சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் மற்றும் பண்ணை முதலாளிகளிடம் இவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாயைமூடிக் கொண்டிருந்து விட்டார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.

ஐரோப்பிய யூனியன் நெதர் லாந்திலுள்ள 300 பன்றிப் பண்ணை களையும்கூட மூடியது. காரணம் இவை தங்களுக்கான தீவனங் களை பெல்ஜியத்திலிருந்துதான் பெறுகின்றன என்பதுதான்.

2001 மார்ச்சில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதின. இது அந்த விபத்து நடைபெற்ற இடத்தின் பெயரை அடிப்படை யாகக் கொண்டு பெக்ரோட் ரயில் விபத்து என்று அழைக்கப்பட்டது. இதில் எட்டு பேர் இறந்தனர். பலருக்கும் பெரும் காயம். இதில் ஒரு ஓட்டுனருக்குப் போதிய அனுபவம் இல்லை என்பது வெளியானது.

ஆனால் இதைவிட அதிகமாக மற்றொரு விஷயம் பேசப்பட்டது. பெல்ஜிய நாட்டு ரயில்வே துறையில் ஊழியம் செய்வதற்கு பிரெஞ்ச் அல்லது டச் ஆகிய இரு மொழிகளில் ஒன்று தெரிந்திருந்தால் போதும். காரணம் இவை இரண்டும் அந்த நாட்டின் தேசிய மொழிகள்.

மேற்படி ரயில் விபத்தில் ரயில் ஓட்டுனருக்கும், ரயில் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்குமிடையே தகவல் பரிமாற்றம் சரிவர நடைபெற வில்லை. காரணம் ஆளாளுக்கு ஒரு மொழியைப் பேசியதுதான் (பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் இதை மிக நிச்சயமாக உணர்த் தின). நாட்டின் இந்த மொழிக் கொள்கை குறித்தும் பரவலான பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

(உலகம் உருளும்) #

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11/article8143783.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

தீவிரவாத பிடியில் பெல்ஜியம் - 12

 

 
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் களைகட்டும். ஆனால் இம்முறை தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கும் என்று அஞ்சப் பட்டதால் புத்தாண்டுக் கொண்டாட் டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பிரஸ்ஸல்ஸ் நகர மேயர் அரசு அதிகாரி களிடம் பேசி இந்த முடிவுக்கு வந்ததாகக் குறிப் பிட்டார்.

சென்ற வருட ஆங்கிலப் புத்தாண்டின் போது ஒரு லட்சம் பேர் பிரஸ்ஸல்ஸில் உள்ள கிராண்ட் சதுக்கத்தில் கூடி நின்று கொண்டாட்டங்களில் பங்கு பெற்றனர். இம்முறையும் அப்படி வந்தால் ஒவ்வொரு வரையும் பரிசோதனை செய்வது இயலாத காரியம் என்பதால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் தலைநகரின் முக்கியப் பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டதாக இருவரை காவல்துறை கைது செய்தது. மேலும் பாரீஸ் நகரை சமீபத்தில் தாக்கி 130 பேரைக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரஸ்ஸல்ஸில் இருந்து பாரீஸுக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தெரிவித்தது.

அதே ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரஸ்ஸல்ஸ் நகரின் மத்திய சதுக்கமாக விளங்கும் ‘தி கிராண்ட் பிளேஸ்’ என்ற இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் அருகிலுள்ள மாகாணங்களிலுள்ள வீடுகளையெல்லாம் சோதனையிட்டது காவல்துறை. 6 பேர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் பின்னர் விடுவிக்கப்பட, 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது பாரீஸ் படுகொலை தொடர்பானது அல்ல என்றும், பெல்ஜியத் தலைநகரைத் தாக்க திட்டமிட்டது தொடர்பானது மட்டுமே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் நீதி வாக்கியம் (MOTTO) ‘‘ஒற்றுமையின் மூலம் வலிமை’’ என்பதுதான். அதன் மன்னராக ஃபிலிப் இருக்கிறார். 2013 ஜூலை 21 அன்று இவர் அரியணை ஏறினார். இவர் மன்னர் மூன்றாம் லியோபோல்டின் பேரன். மன்னர் இரண்டாவது ஆல்பர்ட்டின் மூத்த மகன்.

பதவியிறங்கும்போது மன்னர் ஆல்பர்ட் ‘‘பெல்ஜியம் மொத்த ஐரோப்பா வுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும்’’ என்றார். இருபது வருடம் மன்ன ராகப் பதவி வகித்த இவர் உடல் நலமின்மை என்ற காரணம் காட்டி பதவியைத் துறந்திருக்கிறார். அவர் பதவியைத் துறந்த நாள் பெல்ஜியத்தின் தேசிய தினமும்கூட.

பெல்ஜியத்தின் தற்போதைய பிரதமர் சார்லஸ் மிஷல். இவர் அப்பா லூயி மிஷலும் பெல்ஜியத்தின் பிரபல அரசியல் வாதிதான். அவர் மேயராக இருந்தவர்.

சார்லஸ் மிஷல் தனது 18-வது வயதில் நகராட்சியின் உறுப்பினராகிவிட்டார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். இதனால் தாய் மொழி பிரெஞ்சுடன், டச்சு மொழியையும் நன்றாகத் தெரிந்தவர். இவர் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர். விமான ஓட்டியாக பயிற்சி பெற்றவர். பெல்ஜியம் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த முடியாட்சி (Constitutional Monarchy). பிரதமர் அளவுக்கு மன்னருக்கு அதிகாரமில்லை என்றாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் விளக்கங்களில் சிக்கல் ஏற்பட்டால், அதைத் தீர்ப்பது மன்னரின் கடமை.

புதிய மன்னர் டச், பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளிலுமே உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பெல்ஜியத்திலுள்ள இந்தப் பிரிவினரை இணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருப்பதையும் அது உணர்த்தியது.

டச்சு மொழி பேசுவோர் மிக அதிகமாக உள்ள ஃப்ளாண்டேர்ஸ் பகுதி பெல்ஜியத்திலிருந்து பிரியத் துடிக்கிறது. இந்தப் பகுதியின் தலைவர்கள் மன்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளின் கசப்பையும் பெல்ஜியம் சமீபத்தில் சம்பாதித்திருக்கிறது.

பெல்ஜியம் தனது அணுசக்தி நிலையங் களை ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு வந்தது. மின்சாரத்துக்கு அணுசக்தி வேண்டாம் என்ற எண்ணம் அங்கு பரவி இருப்பதே காரணம்.

சென்ற (2015) பிப்ரவரி மாதத்தில் பெல்ஜியத்தின் மிகப் பழைய அணுசக்தி மேக்டோவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனால் டிசம்பர் 30 அன்று அது மீண்டும் திறக்கப்பட்டது. அதில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது மீண்டும் மூடப்பட்டது. இது நெதர்லாந்தைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது. காரணம் மேற்படி அணுசக்தி நிலையங்களின் அருகிலேயே அண்டை நாடான நெதர்லாந்தின் சில பகுதிகள் உள்ளன. ‘‘எந்தவித பாதுகாப்பு ரிஸ்கும் இல்லை’’ என்று பெல்ஜியம் கூறுவதை அண்டை நாடுகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. கவலைப்படத்தக்க வேறு சில காரணங்களால்தான் பெல்ஜிய அணுசக்தி நிலையங்கள் அவ்வப்போது மூடப்படுகின்றன என்றும், இதை பெல்ஜியம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறது என்றும் அண்டை நாடுகள் சந்தேகப்படுகின்றன.

ஜெர்மனி அரசு தனது அணுசக்தி நிலை யங்களைப் படிப்படியாக நிறுத்திக் கொள்வதென்று முடிவெடுத்திருக்கிறது. பெல்ஜியத்தில் உள்ள அணுசக்தி நிலை யங்கள் மிகப் பழமையானவை என்றும் அவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பானவை அல்ல என்றும் ஜெர்மனி கருதுகிறது. ஆனால் மூடப்பட்ட அணு சக்தி நிலையங்களை கொஞ்சம் கொஞ்ச மாக மறுபடியும் இயக்கத் தொடங்கி யிருக்கிறது பெல்ஜியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.