Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த 10 சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லுமா ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்?

Featured Replies

இந்த 10 சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லுமா ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்?

 

ஃபேஸ்புக்,  தனது இலவச இணைய சேவையான ஃ ப்ரீ பேசிக்ஸை இந்தியாவில் ஏன் கொண்டு வர வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை அடுக்கியுள்ளது. இது நெட் நியுட்ராலிட்டிக்கு எதிரானது. இதனை இந்தியாவில் தடை செய்ய வெண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,  அதற்கான விளக்கத்தோடு 10 காரணங்களை ஃ பேஸ்புக் வெளியிட்டுள்ளது.

அவை என்ன? அவற்றில் கூறியிருக்கும் விஷயங்களில் உள்ள பின்னணி என்ன என்பதை பார்ப்போம்...

fbbasic1.jpg

1. ஃபேஸ்புக் சொன்னது: 

ஃப்ரீ பேசிக்ஸ் அனைவருக்குமான சேவை, எந்த மொபைல் நிறுவனமும் அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்!

சந்தேகம் 

இதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவரையும் இணைப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே. ஆனால், இதுவரை ரிலையன்ஸ் தவிர எந்த நிறுவனமும் இணைத்துக் கொள்வதாக அறிவிக்கவில்லை. ஏர்டெல் ஜீரோ திட்டமும் நெட் நியுட்ராலிட்டியை  காரணம் காட்டி திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக, இத்திட்டத்தால் தங்களுக்கு என்ன பயன் என்பது தெளிவாக இல்லாததால், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருக்கின்றன. அனைத்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களும் ஃப்ரீபேசிக்ஸ் திட்டத்தில் பங்கு பெறவில்லையென்றால், அது சிலருக்குச் சாதகம்... சிலருக்குப் பாதகம் என்ற நிலையை உண்டாக்கும்!


2. ஃபேஸ்புக் சொன்னது: 

இந்த சேவைக்காக ஃ பேஸ்புக் எந்த கட்டணமும் யாருக்கும் விதிக்காது.

சந்தேகம் 

எத்தனை நாள்/மாதம் அது இலவசம்? அந்த இலவச சேவையைப் பெற எந்தவிதமான பெர்சனல் தகவல்களை நாம் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்?


3. ஃபேஸ்புக் சொன்னது:

மக்கள் பயன்படுத்தும் இணைய சேவைக்கு,  சேவை நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படமாட்டாது. இதன் நோக்கமே இந்தியாவில் அதிக மக்களை இணைய சேவையை பயன்படுத்த வைப்பதுதான். இதன் மூலம் 50 சதவிகித கூடுதல் வேகத்தில் மொபைல் இணைய சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்கிறது ஃபேஸ்புக்.

சந்தேகம்

ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் பங்கேற்காத இணையதள சேவை வழங்கு நிறுவனங்களுக்கும் ஃபேஸ்புக் இந்த சலுகையை அளிக்குமா? ஒருவேளை அளிக்காதென்றால், மக்கள் அந்த நிறுவனங்களை நிராகரிக்க வேண்டுமா?

fbbasic.JPG


4. ஃபேஸ்புக் சொன்னது

தகவல்களை தரும் எந்த டெவலப்பர் மற்றும் பப்ளிஷர்களும்,  ஃப்ரீ  பேசிக்ஸ் மூலம் தங்கள் தகவல்களை இலவசமாக வழங்கலாம். அதற்கான தொழில்நுட்ப விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தகவல்கள், செய்திகள் அமைந்திருக்க வேண்டியது அவசியம் என்கிறது ஃபேஸ்புக்.

சந்தேகம்

இந்த இலவச திட்டத்தின் மூலம் கிடைக்கும் செய்தி/தகவல் மட்டுமே ஃபேஸ்புக்கால் பிரதானப்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. என்னதான் தரமான செய்தி/தகவல் வேறு தளத்தில் இருந்தாலும், அது வெளியுலகப் பார்வையிலிருந்து மறைக்கப்படும்!  

5. ஃபேஸ்புக் சொன்னது

இதுவரை 800 டெவலப்பர்கள் ஃப்ரீ பேசிக்ஸில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

சந்தேகம்

இவர்கள் தரப்புக்கும் சேவை யாருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த டெவலப்பர்கள் எந்த சேவையை இந்தியா போன்ற பெரிய நாட்டில்  எவ்வளவு மக்களுக்கு வழங்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி

6.ஃபேஸ்புக் சொன்னது

இந்தியாவில் ஃ ப்ரீ பேசிக்ஸை  பயன்படுத்தியவர்களில் 40 சதவிகித மக்கள், கட்டணம் செலுத்தியும் சில இணைய சேவைகளைப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்களைக் காட்டிலும் 8 மடங்கு அதிக மக்கள் ஃப்ரீ பேசிக்ஸ்  சேவையை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

சந்தேகம்

இந்தியாவில் மிகக் குறைந்த மக்களின் பயன்பாட்டை மட்டுமே கொண்டு ஃபேஸ்புக் இதைச் சொல்கிறது. ஆனால், இந்தியா போன்ற கலாசார/பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய நாட்டில் இந்த சாம்பிளை கொண்டு ஒட்டுமொத்த மக்களின் நிலைப்பாட்டைக் கணிக்க முடியாது. கணிக்கக் கூடாது!

7. ஃபேஸ்புக் சொன்னது


இது 36 நாடுகளில் பிரபலமாக உள்ளது.

சந்தேகம்

அந்த 36 நாடுகளில் இத்திட்டத்துக்குக் கிளம்பிய விமர்சனங்கள், அதற்கான தீர்வுகள் பற்றிய விளக்கம் எதுவும் இல்லை.
       

12394287_913326155390000_1834086351_o.jp

8. ஃபேஸ்புக் சொன்னது

 இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயில் 86 சதவிகிதம் பேர் ஃப்ரீபேசிக்ஸ்  சேவையை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர் என்று கூறியுள்ளது.

சந்தேகம்

அது ஃபேஸ்புக்கே நிரப்பிய படிவத்தில் வெறுமனே ’send email' பட்டனை மட்டுமே அழுத்தச் சொன்ன ரெடிமேட் சர்வே. அதை பெரும்பாலானோர் புரிந்து கொள்ளாமலும் அனுப்பியிருக்கலாம்!
 

9.ஃபேஸ்புக் சொன்னது

இது தொடர்பாக 32 லட்சம் பேர் டிராய்க்கு மின்னஞ்ச்சல் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் ஃ ப்ரீ  பேசிக்ஸ்  சேவையை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளது.

சந்தேகம்

இந்தியாவில் ஃபேஸ்புக்தான் நம்பர் 1 சமூக வலைதளம். கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தும் நிலையில், 32 லட்சம் என்பது மிகமிக சொற்பம். இதை ஒட்டுமொத்த இந்திய நெட்டிசன்களின் மனநிலையாகக் கருத முடியாது! 
   

10.ஃபேஸ்புக் சொன்னது

இதில் எந்த விதமாக விளம்பரங்களும் இடம் பெறாது. இதன் மூலம் வருமானம் ஈட்ட முடியாது. இதன் நோக்கமே இந்தியாவை இணைப்பதுதான் என கூறியுள்ளது ஃபேஸ்புக்.

சந்தேகம்

விளம்பரங்கள் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், குக்கீஸ் மூலம் நம் பிரத்யேக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படத்தான் செய்யும்.
   
 ஆக, ஃப்ரீ பேசிக்ஸ் தொடர்பாக ஃபேஸ்புக் என்னதான் புள்ளிவிவரங்களாக காரணம் கூறினாலும்,  இதனால் மக்களுக்கு என்ன சேவைகள் கிடைக்கும் என்பதில் இன்னும் பெரிய தெளிவு இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு விவசாயி பயனடைந்தார், கிராமத்து தந்தை தனது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று கற்றுக்கொண்டார் என்றெல்லாம் கூறும் ஃபேஸ்புக்,  அது எப்படி எல்லா இந்தியர்களையும் சென்றடையப் போகிறது என்ற எந்த ஒரு வரைவு அறிக்கையையும் வெளியிடவில்லை.

 

 
 



ஃபேஸ்புக் மாதிரியான நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் இந்தியாவில் ஒரு சேவையை துவங்குகிறது என்றால், அதனை ஏன் மற்றவர்கள் எதிர்க்க வேண்டும்? அப்படிப்பட்ட அந்த சேவையில் என்ன பிரச்னை இருக்கிறது என்றால் இதன்மூலம் மக்களின் இணைய பயன்பாடு ஒரு குறிப்பிட்ட இணையதளங்களுக்குள் சுருங்கிவிட வாய்ப்புள்ளது. இணையமே இல்லாதவர்களுக்கு இது இணையம் பற்றிய விழிப்புணர்வை அளிக்கும். ஆனால், அவர்கள் மூலம் வருமானம் என்பது பன்மடங்கு என்பதை பின்புலமாக கொண்டு இந்த சேவை தொடங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவையை துவங்கும் போது  மக்களுக்கு இலவசமாக தங்கள் தயாரிப்பை கொடுத்து பழக்கி,  பின்னர் அவர்களை அந்த பொருளுக்கான வாடிக்கையாளர் ஆக்குவது நிறுவனங்களின் வர்த்தக உத்திகளில் ஒன்று. ஃபேஸ்புக்கும் அதைத்தான் செய்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

12184200_10102447466683941_2644018235493

இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இணைய வேகம் குறைவாக உள்ள ஊர்களில் மக்களிடம் இணையம் செல்லப் போகிறது என்பது நல்ல விஷயம்தான். இதனைப் பயன்படுத்த தேவையான விழிப்புணர்வை ஃபேஸ்புக் கட்டாயம் வழங்கும் பட்சத்தில்,  பட்டி தொட்டிகளிலும் இணையம் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் உண்மையான பயனாளி யார் என்பதுதான் கேள்வி. குச்சி ஐஸில் குச்சியை மட்டும் பயனாளிகளிடம் கொடுத்துவிட்டு,  மேலே இருப்பவர்கள் ஐஸ் சுவைத்த கதையாகிவிடக்கூடாது!

இலவசங்களால் ஆட்சியாளர்கள் ஆட்சியைப் பிடிக்கும் உத்தியை ஃபேஸ்புக்கும் கையில் எடுத்திருக்கிறதோ என்ற சந்தேகம் ஒரு சராசரி இந்தியனுக்கும் எழும்தானே... அதை ஃபேஸ்புக்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்!

http://www.vikatan.com/news/information-technology/56894-will-facebooks-free-basics-answer-this-10-ques.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.