Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியின் போதே மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் தீர்வு எட்டப்படும் : மகிந்த அமவீர

Featured Replies

நல்லாட்சியின் போதே மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் தீர்வு எட்டப்படும் : மகிந்த அமவீர
 
நல்லாட்சியின் போதே  மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் தீர்வு எட்டப்படும் : மகிந்த அமவீர
வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மீனவ சங்கப்பிரதிநிதிகள், மற்றும் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர்கள், மற்றும் கடல்வள அமைப்பாளர்களுடான சந்திப்பு இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்களின் உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தலைமையில் நடைபெற்றது. 
 
இதன் போது வடபகுதி மீனவர்களின் தேவைகள், மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி அதன் ஊடாக வடபகுதி மீனவர்களின் பாதிப்புக்கள், புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி இறங்கு துறைமுகங்கள், மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள் பற்றியும் இதில் விரிவாக மீனவ சங்கபிரதி நிதிகள், மற்றும் மாவட்ட கடற்றொழில் சம்மேளத் தலைவர்கள், மற்றும் கடல்வள அமைப்பாளர்களுடன் கலந்துரையாடப்பட்டன. 
 
ஐனாதிபதி அவர்களின் நல்லாட்சியில் வடபகுதி மீனவர்களின் பல்வேறு துறைகளையும், அவர்களின் நலன் சார்ந்த விடயங்களிலும் அவர்கள் எதிர்நோக்கும் மீன்பிடியில் எற்படும் பிரச்சனைகள் என்பன எதிர்காலத்தில் வடபகுதி மீனவர்களுக்கான தீர்வுகளை இந்திய அரசாங்கத்தின் மூலமாக பெற்றுக் கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்வளங்கள் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமவீர தெரிவித்தார்.
 
நிகழ்வில் தொடந்து உரையாற்றுகையில், இந்திய மீனவர்களின் அத்துமீறி மீன்பிடியினை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர்களின் ஒத்துழைப்புடன் புதிய நடைமுறையினை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கில் 21 மீன்பிடி இறங்குதுறை முகங்கள் புரனமைக்கப்பட்டு  அமைக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
அதே போன்று  ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் ஒன்றை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் கடற்பரப்பில் அமைக்கப்பட்டவுள்ளன. இவை அனைத்து எதிர்வரும்  மாதங்களில் ஆரம்பிக்கப்பட்டயிக்கின்றது என அவர் தெரிவித்தார். 
 
மேலும் வல்வெட்டிதுறை, மாதகல், குருநகர், காக்கை தீவு, காரைநகர் ஆகிய துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை இவ்வருடங்களுள் எடுக்கப்படும் எனவும், எமது அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் டைனமோ மூலம் மீன்பிடியில் ஈடுபட்டடோர்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனையும் தடைசெய்துள்ளோம். இவ்வாறாக ஈடுபடுவோர்கள் மீது மீன்பிடியில் கடுமையாக சட்டத்தை நடைமுறை செய்துள்ளோம்.
 
மீனவ உயிரினம் வளர்ப்பு  அமைப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்து அதை இனங்கண்டு அதற்காக நடைவடிக்கையினை முன்னேடுக்கவுள்ளோம். அதேபோன்று வடக்கிலும் மீன்பிடியினை வளர்க்கும் நோக்குடன் பல்துறைகளை முன்னேடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகங்களிலும் அமைக்க எதிர்பார்க்கபடும். இதன் ஊடாக எமது மீனவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்..
 
மேலும் ஐரோப்பிய யூனியன் மீன்பிடி ஏற்றுமதியினையும், தடை செய்யப்பட்ட சட்டத்தினையும் நீக்கியுள்ளனர். இதனால் எமது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் போது மீன்பிடி எற்படுகின்ற சந்தை வாய்ப்பு எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிலைய அபிவிருத்தி நோக்கிய இவ் அபிவிருத்தியை முன்னேடுப்பதே தற்போதை அரசின் நோக்கமும், ஐனாதிபதியின் தூரநோக்க சிந்தனையாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்நிகழ்வில் கடல்வளங்கள் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமவீர, இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரன், மற்றும் மாவட்ட செயலாளர் பா.செந்தில் நந்தனன், கடற்றொழில்வளங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
1452420575_Grrrr.jpg
 
Grrrr-4.jpg
 
Grrrr-8.jpg
 
Grrrr-9.jpg
 

Edited by நவீனன்

சிங்கள மீனவர்களும்( சீன கப்பல்களும்)  தமிழக மீனவர்கள் போண்று தமிழ் மீனவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறார்களே ...   ஏன் அவை செய்யியாக்க படுவதில்லை...? ஒருவேளை கடற்படை அதில் தலையிடுவதில்லை என்பதாலோ...? 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.