Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரோடு இருப்பவர்களுக்கு மரணச்சான்றிதழா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோடு இருப்பவர்களுக்கு மரணச்சான்றிதழா?:

காணாமல் போனோரின் உறவுகளில் 48 பேர் மாத்திரமே இறப்புப் பதிவு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

உயிரோடு இருப்பவர்களுக்கு மரணச்சான்றிதழா?:
 
கடந்த ஆண்டில் 48பேர் மாத்திரமே காணாமல் போன தமது உறவுகளுக்காக இறப்புப் பத்திரத்தை கோரி பதிசு செய்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
இறுதி யுத்தத்தில் காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 
 
இதனால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரம் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது.
 
யுத்தத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். பல நூற்றுக்கணக்கான சரணடைந்த போராளிகள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். 
 
அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றது. உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடாதிருக்கிறது. 
 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்த முக்கிய ஆதாரங்களாக காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரம் காணப்பட்டதுடன் அவர்களது உறவுகளின் சாட்சியங்கள் முக்கிய சாட்சியங்களாகவும் பதிவாகிறன.
 
இந்த நிலையில் கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் மற்றும் உதவு தொகை வழங்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
 
இதனை பெரும்பாலான மக்கள் நிராகரித்ததுடன் காணாமல்போன தமது உறவுகளை மீட்க வேண்டும் என்றும் இதற்கு தமக்கு நீதி வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர். காணமல் போன தமது உறவுகள் இன்னமும் உயிருடன் உள்ளனர் என்றும் அதற்கான சாட்சியங்களையும் பலர் வைத்திருந்திருந்தனர். 
 
இந்த நிலையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு மரணச்சான்றிகழ்களை பெற்று இழப்பீடு பெறுமாறு வலியுறுத்தியது. 
 
உயிருடன் இருப்பவர்களுக்காய் மரணச்சான்றிதழ் பெறுவது எப்படி என கேள்வி எழுப்பிய மக்களில் பெரும்பாலானவர்கள் மரணச்சான்றிதழ் பெறுமாறு விடுத்த அழைப்பை நிராகரித்து கண்டித்தனர்.
 
புதிய அரசின் பிரசார நடவடிக்கைகளினால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் வரையான காலப் பகுதியில் 48ப்பேர் மரணச்சான்றிதழ்களுக்காக பதிவு செய்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.