Jump to content

உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்?


Recommended Posts

உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்?

 

உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது.

150805223925_sp_florida_porn_computer_62
 நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம்

போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன.

பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

150804105032_kerela_police_porn_624x351_ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது

அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.

முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையே இதற்கு செலவிடுகின்றனர் எனவும், எனவே இப்படியான படங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளனர் எனக் கூற முடியாது எனறும் புகழ்பெற்ற உளவியல் மற்றும் பாலியல் சிகிச்சை வல்லுநர் டாக்டர் லாரி பெடீட்டோ தெரிவித்துள்ளார்.

150806161811_porn_thinkstock_640x360_thi பல நாடுகளில் பெண்கள் இப்படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நீலப்படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களே மிகவும் அதிகப்படியாக நாளொன்றுக்கு சுமார் 13 நிமிட நேரம் இதற்காக செலவிடுவதாகவும், கியூபா நாட்டு மக்களே மிகக் குறைவாக ஐந்தரை நிமிடங்கள் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரவு 11 மணி முதல் நள்ளிரவு முடியும் வரையிலான இரண்டு மணிநேரப் பகுதியே அதிகமானவர்கள் நீலப்படங்களை பார்க்கும் நேரமாகவுள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

150805223746_sp_florida_porn_exxxotica_6 அமெரிக்காவில் இப்படங்களுக்கு விளம்பரங்களும் வெளிப்படையாக உள்ளன

பெண்கள் நீலப்படங்களைப் பார்ப்பதை பொருத்தவரை ஜமைக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இப்படங்களைப் பார்ப்பவர்களில் 44 சதவீதம் பெண்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக இப்படங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறும் இந்த ஆய்வு நீலப் படங்களைப் பார்ப்பவர்களின் சராசரி வயது 35 எனவும் கூறுகிறது.

151011163157_porn_phone_624x351_pa_nocre  ஸ்மார்ட் ஃபோன் மூலமே பெரும்பாலானவர்கள் நீலப்படங்களை பார்ப்பதாக ஆய்வு கூறுகிறது

ஸ்மார்ட் ஃபோன் மூலம் 53% பேர் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள் என்றும், அவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் இந்த எண்ணிக்கை 212% அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மொபைல் தொலைபேசி மூலம் இப்படங்களைப் பார்ப்பவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்துள்ளதாவும் இந்த ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

150804104926_porn_kerela_police_1_624x35  இந்தியாவில் எண்ணிக்கை அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன்களின் அதிகரிப்பு, இணையத்தின் வளர்ச்சி ஆகியவற்றாலேயே இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னையிலுள்ள பாலியல் மருத்துவ வல்லுநர் டாக்டர் நாராயண ரெட்டி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது எதிர்பார்க்கப்பட்டதே எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160110_worldporn_figures?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.