Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றை சிதைத்தவர்கள்! மீண்டும் இனங்களை சிதைக்கப் பார்க்கின்றார்கள்!

Featured Replies

இலங்கையில் சிங்களமும், பௌத்தமுமே முதன்மை என்கிறது மஹாவம்சம். ஆதலால் சிங்களம் ஆட்சிப்பிடம் ஏற வேண்டும் என்றும், பௌத்தம் அரச அங்கீகாரம் பெற்ற மதமாக என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்கிறது அது.

இதனால் தான் இன்றுவரை புத்தத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படுகின்றது இலங்கையில்.

இலங்கைக்கு புத்தர் இரண்டு முறை வந்து சென்றதாகவும் இன்னொரு வரலாற்றைக் கூறுகின்றார்கள் இவர்கள்.

அதாவது, இது இலங்கை என்பது சிங்கள பௌத்த பீடபூமி என்னும் சித்தாந்தத்தை காலாகாலமாக நிலை நிறுத்துவதற்கு, அடுத்த தலைமுறையிடமும், கடும்போக்கான இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி, இலங்கையில் ஏனைய இனங்களையும் மதங்களையும் இல்லாமல் செய்வதற்கான அடிப்படையான திட்டமிட்ட செயற்பாடு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

இலங்கை வரலாற்றை திட்டமிட்டே எழுதிய மகாநாமதேரர் அதனை மிக ஒழுங்குபடுத்தப்பட்ட, நேர்த்தியான முறையில் இனவாதத்தை அள்ளி வீசியிருக்கின்றார்.

மகாநாம தேரரின் கருத்துப்படி, இலங்கை சிங்கள மக்கள், சிங்கத்தில் இருந்து தோன்றிய வம்சாவழி என்கிறார்.

அதாவது, வட இந்தியாவில் சிங்கத்திற்கும் ஒரு பெண்ணிற்கும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள் என்றும், அவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் சிங்கத்திற்கும், சுப்பாதேவி என்னும் லாடா தேசத்து இளவரசிக்குப் பிறந்துள்ளனர்.

ஆனால் சிங்கத்திற்கும், சுப்பாதேவிக்கு பிறந்தவர்களான சிங்கபாகு, சிங்கசீவிலி இருவரும் குகையில் வளர்ந்துள்ளனர். பின்னர் தன் தந்தையான சிங்கத்தை சிங்கபாகு கொன்றுவிட்டு தன்னுடைய சகோதரியை திருமணம் செய்து கொள்கிறான் என்கிறது மகாவம்சம்.

இதுவே இலங்கை சிங்கள மக்களின் தோற்றத்தின் அடிப்படையாக மஹாவம்சம் கூறும் கதை. இதில் பல்வேறு விமர்சனங்கள் உண்டு என்றாலும், அது பற்றி விவாதிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம்.

இந்த சிங்கத்தின் புதல்வர்கள் தான் தாம் என்றும், சிங்கத்தின் இரத்தமே தமது உடம்பில் ஓடுவதாகவும், சிங்கத்தின் வழித் தோன்றல்களே தமது பரம்பரை என்றும் மார்தட்டிக் கொண்டுள்ளார்கள் சிங்களப் பெரும்பான்மை கடும்போக்கு சமூகத்தினர்.

இதுவொருபுறமிருக்க, இலங்கை தேசிய கொடியில் சிங்கம் வரையப்பட்டதற்கான உண்மையான காரணமும், இது தான் என்று கூறுவோரும் உண்டு.

இந்த நிலையில் நாட்டில் கடந்த ஆட்சியின் போது பொதுபல சேனாவின் அட்டூழியங்களை பட்டியல்படுத்தினால் புரியும் மதவாதம் எத்துணை தூரம் இன்னமும் அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கொண்டு விளங்குகிறது என்பதை.

மகிந்த யுகம் முடிய, மைத்திரி யுகத்தில் பொதுபல சேனாவின் நிகழ்ச்சிகளுக்கு சற்றே தடையேற்படவே இப்பொழுது புதிய வடிவத்தில் இன்னொரு குழுவினர் தமது மதவாதத்தினை, இனவாதத்தினை கையில் எடுத்துள்ளனர்.

அது தான் சிங்கலே என்னும் புதிய வடிவம். சிங்க லே என்பது சிங்கத்தின் இரத்தம் என்று சொல்கிறார்கள். அதாவது சிங்களவர்கள் சிங்கத்தின் இரத்தம் கொண்டவர்கள் என்று.

இதன் உண்மை நிலையினை சற்றே விரிவாக பார்க்க வேண்டிய தேவை எமக்குண்டு.

உலகில் முதலில் தோன்றிய மூத்தமொழியாக தமிழ் விளங்குகிறது. அதனால் அது செம்மொழி என்னும் சிறப்பினையும் பெற்றுள்ளது.

தமிழியல் ஆய்வறிஞர்களின் கருத்துப்படி, தமிழ் மொழி பல்வேறு வடிவங்களில் ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை அதன் வடிவம் மாறி தன்னுடைய சிறப்போடு பயணிக்கிறது.

உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து இன்று இருந்த இடமே இல்லாமல் போயிருக்கின்றன. ஆனால் தமிழ் ஆண்டுகள் கடந்தாலும் அது சாகாது. சாகடிக்கவும் முடியாத ஒரு மகா மந்திரம்.

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக தமிழ் விளங்குகின்றது என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். அதைப் போன்றே சிங்களத்தின் தாய் மொழியாகவும் தமிழ் இருக்க வேண்டும்.

அதாவது, எலு என்கின்ற மொழியும், பாளி மொழியும் இணைந்தே சிங்களம் தோன்றியதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றார்கள்.

எலு என்னும் மொழியானது பழங்கால தமிழ் என்கிறார்கள் சில தமிழ் மொழி ஆய்வாளர்கள். இந்த எலு என்கின்ற தமிழ் மொழியையும், பாளிமொழியையும் உள்வாங்கி புதிதாக சிங்களம் என்னும் மொழியை உருவாக்கியிருக்கிறார்கள்.

சிங்களத்தில் பல்வேறு தமிழ்ச் சொற்கள் உண்டு என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

இந்நிலையில், சிங்கலே என்னும் அமைப்பு தனது சிங்க இரத்தத்தின் தோன்றல் தாம் என்று கூறும் அடிப்படைத் தன்மை விளங்காமல் செயற்படுகின்றார்கள்.

எலே என்பது எலு மொழியை குறிக்கின்றது. அது தமிழ் மொழியை சுட்டுகின்றது.

அதாவது இலங்கை முழுவதும் இந்த தமிழ் வழக்கத்தில் இருந்தததைக் கூறுகின்றது.

இதேவேளை, இலங்கைக்கு ஈழம், தம்பபரணி, தப்பிரபேன், லங்காபுரி, தர்மதீபம், லங்காதுவீபம், சின்மோன்டு, சேலான், செரன்டிப், என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இதில் சங்ககாலத்தின் புறத்தினைப் பாடல்களிலும், சோழர் காலத்திலும், பல்வேறு கல்வெட்டுக்களிலும், வரலாற்று நூல்களிலும் இலங்கையை ஈழம் என்று விழித்திருக்கின்றார்கள்.

இந்த ஈழம் என்னும் சொல்லும், இவர்கள் சொல்லும் சிங்க லே என்னும் விடயத்தில் நோக்குகையில், லே என்பது ஈழத்தை சுட்டுகின்றது. இலங்கை முழுவதும் ஈழம் என்றே பேசப்பட்டுள்ளது.

ஆனால் மகாநாம தேரர் திட்டமிட்ட வகையில் ஈழத்தின் வரலாற்றை சிதைத்து, புது வரலாறு படைத்திருக்கின்றார். இதை தூக்கிப் பிடித்துக் கொண்டு இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்றும், சிங்களவர்களுக்கே உரித்தான நாடு என்றும் இன்று சிலர் கங்ஙணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள்.

சிங்கத்தின் இரத்தத்தின் வழித் தோன்றல்கள் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையின் மறுவடிவம் தெரியாமல்…!

எஸ்.பி.தாஸ்

http://www.tamilwin.com/show-RUmuyBRZSWhp4I.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.