Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோசித்த ராஜபக்ச ஒரு அரசியல் கைதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோசித்த ராஜபக்ச ஒரு அரசியல் கைதியா?

ஒரு படை அதிகாரியாக இருந்த போதிலும், தந்தையின் பதிவிக் காலத்தின் பின்னால், ஆட்சி அதிகாரம் தமது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற கனவுடன், இலங்கை சுதந்திரக் கட்சியின், இரு இளைஞர் பிரிவுகளில் (தருன்யட்ட ஹெடக், நில் பலகைய) தனது இரு சகோதரர்களுடன்  சேர்ந்து கலந்து கொண்டார்.  இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை கடற்படை விதிகள் தடுத்தாலும், எந்த ஒரு அதிகாரிக்கும், இது குறித்த கேள்விகள் கேட்கும் துணிவுகள் இருந்ததில்லை.

சகோதரர்களுக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டுகளில் கூட, யோசித்த பங்குகொண்ட கடற்படை அணியே வெல்ல வேண்டும் என்பது எழுதப் படாத விதி. கடற்படையில் இல்லாத இரு சகோதரர்கள் கூட இந்த அணியில் விளையாடினார்கள்.

எதிர் அணி, மத்தியஸ்தர்கள் எல்லோரும் கூட பயம் காரணமாக, கடற்படை அணிக்கு எதராக வாய் திறக்க முடியவில்லை. திறந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது, தனிக்கதை. 

இந்த விளையாட்டில் கிடைத்த 'தொடர் வெற்றி' யோசிதவினை, ஒரு புதிய தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றை அமைப்பது குறித்து குறித்து யோசிக்க வைத்தது.

பிறந்தது carlton sport network (csn). தமது பூர்வீக வீடான கார்ல்டன் ஹவுஸ் பெயரில் இருந்தே csn , க்கு பெயர் கிடைத்தது.

இலங்கை அரசின் ரூபவாஹினி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாக இருந்த, கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையினை, வெறும் 12.5 கோடிக்கு, கண் துடைப்பு டெண்டர் மூலம் அதனிடம் இருந்து CSN அபகரித்துக் கொண்டது.

உண்மையில் 300 கோடி ரூபாய் விளம்பர வருமானத்தினை அரசுக்கு தந்து கொண்டிருந்த ஒரு முக்கியமான சேவையினை, CSN க்கு கொடுக்க வேண்டிய காரணம், யோசிதவின் தந்தை இலங்கை ஜனாதிபதி என்பதால் அன்றி வேறென்ன?

இந்த நிறுவனம் ஆரம்பித்த போது, இதற்கான பணத்தினை, (US 13.5 மில்லியன்) , அரச சம்பளம் எடுத்துக் கொண்டிருந்த  யோசித்த வெளிநாட்டில் இருந்து பெற்றுக் கொண்டார்.

இது யாரால் அனுப்பப் பட்டது என அவரால் இன்று தெளிவான விளக்கம் தர இயலவில்லை.

CSN க்கு இயல்பாகவும், அமுத்தம் மூலமாயும் கிடைத்த பல கோடி விளம்பர வருமானம், நாட்டை விட்டு அனுப்பப் பட்டுள்ளது. இந்த அன்ணிய செலவாணி மோசடிக்கும் விளக்கம் இல்லை. இது ரூபவாகினி மூலம் அரச திறைசேரிக்கு வந்திருக்க வேண்டிய பணமாகும்.

அவர் சார்ந்த படைத் தளபதியே வெளிநாடு செல்வதாயின் அனுமதி கேட்டே செல்ல வேண்டும் என்ற நிலையில் இவர் 30 தடவைகள் வெளி நாடு பய ணம் சென்று இருக்கிறார்,

மேலும் சில பயணங்கள், தனது தந்தையின் தனிப்பட்ட உதவியாளராய் சென்று இருக்கின்றார்.


எந்தப் பயணத்துக்கும் அவரது உயர் அதிகாரியின் அனுமதி பெறப் படவில்லை.

மேலும் தேவையான கல்வித் தகமை இன்றி, இருப்பதாக காட்டி உள்ளே நுழைந்து, 20 கோடி வரை செலவு செய்து, இங்கிலாந்து, உக்கிரேன் ஆகிய இடங்களில் பயிற்சி பெற்று, லியுடிநென்ட் என்னும் அனுபவம் அடைந்தவருக்கான பட்டத்தினையும், அழுத்தம் மூலம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இவரது நடவடிக்கை கொலை வரை போய் உள்ளதாக சொல்லப் படும் நிலையில் இப்போது ஆள் உள்ளே இருப்பதால், இவர் மீது, court marshal நடவடிக்கைக்கு அனுமதி கோரி, comander in cheif ஆனா ஜனாதிபதி இடம் கடற்படை மனு கொடுக்கப் பட்டு உள்ளது.

ரக்பி வீரர் தாஜுடீன் கொலை வழக்கும் தனியே இறுகப் போகின்றது.

இவ்வளவுக்கும் பின்னால், இவரது கைது, அரசியல் கைது, குழந்தையை கைது பண்ணி விட்டார்கள், பெரும் போராட்டம் நடாத்தப் படும் என்று ராஜபக்ச கைக்கூலிகள் கூப்பாடு இடுகின்றனர்.

ஆனால், தனிப் பட்ட முறையில் மகிந்த ராஜபக்சே மிகவும் கவலை படுகிறார், அதை கண்ணீர் நிறைந்த அவரது கண்கள் காட்டின.

பிள்ளைகளை அடக்கி வளர்க்காத, தந்தைகளுக்கு உரிய கவலை தான் அது.

யாழுக்காக...எனது   சிறு முயற்சி

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.