Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் சுதந்திர தினம்! தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம்! : சிறிதரன் எம்.பி

Featured Replies

இலங்கையின் சுதந்திர தினம்! தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம்! : சிறிதரன் எம்.பி
 
 
இலங்கையின் சுதந்திர தினம்! தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம்! : சிறிதரன் எம்.பி
இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். 
 
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்த்தினால் இன்று காலை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 
 
இன்று காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமனற் உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 
 
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இவ்வாறு கூறியுள்ளார். 
 
இலங்கைத் தீவு சமாதானம் இருப்பது போன்று தென்பட்டாலும் மனத்தாலும் மக்களின் செயற்பாடுகளாலும் இரண்டுபட்டே காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார். 
 
இதேவேளை இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
 
கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 
 
போரின் போது இராணுவத்திடம் கையளி்க்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர். 
 
அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர். 
 
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
 
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.