Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி?

Featured Replies

மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி?

மகிந்த ராஜபக்ஸவின் பாதையில் பயணிக்கிறதா இலங்கைத் தமிழரசுக் கட்சி? நடராஜா குருபரன்:-

 
 
இலங்கை அரசியலில் பலமாக இருப்பதாக நினைத்த எவருமே நிலைத்திருக்கவில்லை என்பதுதான் வரலாறு தந்த  பாடங்கள்... இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சி வரை ஆட்சிக்கு வருபவர்கள் அனைவரும் தமது எதேட்சாதிகாரங்கள் மூலம் ஆட்சிக் கதிரையை இறுகப் பற்றிக் கொள்ளவே விரும்பினார்கள்... ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றுப் போனதுததான் வரலாறுகளாக எம் கண்முன்னே விரிகின்றன... தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவரே 3 தசாப்தங்களை தன் பிடிக்குள் வைத்திருந்தார்... அவர் ஜனநாயக அரசியல் வழி வந்தவர் அல்ல.. விடுதலைப் போராட்ட வழியில் ஆயுதங்களால் அரசியலை நகர்த்தியவர்... அவரும் கூட தான் எதிர்பார்த்த காலத்தை விட, சென்றடைய விரும்பிய இலக்கை அடைய முன் முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கப்பட்டார்...
 
கடந்த சில நாட்களின் முன்பு கூட மகிந்த ராஜபக்ஸ கூறினார் 'என்னை 20 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என்றே நினைத்தேன் ஆனால் அசைத்துவிட்டார்கள்;' என்றார்.. ஆனால் அதனைக் கேட்ட பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, அதனை கிறுங்குப் பிடிக்குள் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சியை யாரும் அசைக்க முடியாது, 'தோட்டத்தில் கட்டியிருக்கும் வெருளிக்கும் கூட்டமைப்பு என்றால் மக்கள் கண்ணை மூடி வாக்களிப்பார்கள'; என்று தமிழரசுக் கட்சியும், அதன் உபயக்காரர்களும் நினைத்தால், மகிந்தராஜபக்ஸவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் அதள பாதாளத்திற்கு செல்வார்கள் என்பதில் ஐயம் இல்லை என்பதனை இங்கு சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
 
1985களில்; 'மக்கள் என்னடா மக்கள் பு.... மக்கள்' என யாழ் நகரில் ஒரு விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்;தர் கூறினார். ஜனநாயக வழிவந்த அரசியலாயினும், ஆயுத வழி வந்த அரசியலாயினும் காலம் பூராகவும் மக்களை மாக்களாக நினைத்து அரசியல் செய்ய, விடுதலையை அடைய முனைந்த எவரும் வரலாற்றில் நின்று நிலைத்ததில்லை... அவர்கள் நிலைத்திருந்த  எதாட்சாதிகார காலங்கள் மாறுபடலாம் ஆனால் நிலைத்ததில்லை....
 
இந்த வரலாற்றுப் பாடங்களை கற்றுக் கொள்ளாது மீண்டும் மீண்டும் தம் தலையை மோதுவது மட்டும் அல்லாது மக்களையும் அல்லவா இவர்கள் தெருவுக்கு கொண்டு வருகிறார்கள்...
 
இந்த பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா? ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தமிழசுக் கட்சியில் இணைந்து கொண்டு அங்கத்துவத்தை பெற்றார் என இன்று ஊடகங்களில் தகவல் வந்திருக்கிறது.  அந்த அங்கத்துவப் பத்திரத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது...
 
இது உண்மையானால் அதிகாரத்தில், ஆணவத்தில், மமதையில் இருக்கும் போது பெரிய, சிறிய கட்சிகளை உடைத்து சின்னாபின்னமாக்கி தனது கூட்டுக்குள் அக்கட்சிகளின் உறுப்பினர்களை உதிரிகளாக இணைத்த மகிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. அவர் சிங்களம் பேசும் தலைவர் சிங்களக் கட்சியின் தலைவர். இவர்கள் தமிழ பேசுபவர்கள் மொழி மட்டுமே மாறுபடுகிறது..
 
மகிந்த தனது ஆட்சிக் காலத்தில் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி, கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்தார்.. தன்னோடு இணைந்து இருந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட சலுகைகளை கொடுத்து தலமைக்கு தெரியாமல் தன்னோடு இணைத்திருந்தார். இதனால் மலையகக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், தெற்கின் பெரும்பான்மையினக் கட்சிகள், பிரதான எதிர் கட்சியாக இருந்த ஐக்கியதேசியக் கட்சி என அனைத்து கட்சிகளும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியிருந்தன..
 
 
ஆனால் அதிகாரமும் பலமும் அறுந்து போனால் ஒட்டுண்ணி கழருவதைப் போல் எல்லோரும் கழன்று சென்றுவிடுவார்கள் என்பதனை மகிந்த இப்போது உணர்ந்திருப்பார். பல்வேறு போட்டிகள், எதிர்ப்புகளை தாண்டி ஒரு கட்சி தனது வேட்பாளராக ஒருவரை நியமிக்கும் போது, சரி பிழைகளுக்கு அப்பால், அந்தக் கட்சி அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, தனது சுயலாபத்திற்காகவும், நலனுக்காகவும், இன்னொரு கட்சிக்கு தாவுகின்ற ஒருவர், அதே நலன் பாதிக்கப்படும் போது அடைக்கலம் கொடுத்தவரையும் கட்சியையும் நடுத்தெருவில் விட்டு தனது நலனை அடையவே முற்படுவார் என்பதனை மகிந்த தற்போது உணர்ந்திருப்பார்...
 
அது போலத்தான், மகிந்தவின் மமதை போல்,  தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு, தன்னோடு இருக்கும் சிறு கட்சிகளையும், விழுங்க முற்பட்டால் தானும் விரைவில் ஏனையவர்களால் விழுங்கப்படும் என்பதனை உணரும் காலம் தொலைவில் இல்லை....
 
மாறாக தமிழ் மக்களிற்கான நியாயமான தீர்வை நோக்கிய பயணத்தில், தன்னோடு இருக்கும் சிறு கட்சிகளையும் அனுசரித்து, சொந்த நலன்களை புறந்தள்ளி, மக்கள் நலனை முன்நிறுத்தி, அனைவரையும் அரவணைத்துச் சென்றால், தமிழரசுக் கட்சியும் வரலாறு முழுவதும் தொடரும்... இல்லையேல் மகிந்தவின் சாம்ராட்ஜியமும், ஏனையோர்களின் சாம்ராட்ஜியங்களும் கண்முன்னே வீழ்ந்தது போல் தமிழரசுக் கட்சியின் எதேட்சாதிகாரமும் வீழும் காலம் தொலைவில் இல்லை...

நடராஜா குருபரன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128684/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.