Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணை வழங்கமுடியாத குற்றங்களை சிராந்தியும் அவரது இரு மகன்களும் இழைத்துள்ளனர் மைத்திரிபால சிறிசேன-

Featured Replies

பிணை வழங்கமுடியாத குற்றங்களை சிராந்தியும் அவரது இரு மகன்களும் இழைத்துள்ளனர் மைத்திரிபால சிறிசேன-

 
பிணை வழங்கமுடியாத குற்றங்களை சிராந்தியும் அவரது இரு மகன்களும் இழைத்துள்ளனர் மைத்திரிபால   சிறிசேன-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் கைது இன்னமும் பல வட்டாரங்களில் அதிர்வுகளை உண்டாக்கிவருகின்றது.கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது.யோசிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஓருவர் தெரிவித்த கருத்து குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


செவ்வாய்கிழமை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டிருந்தார், குறிப்பிட்ட பிரிவை கலைக்கவேண்டும் என்பதே ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டிருந்தார். யோசிதவிற்கு எதிரான விசாரணைகள் நாட்டின் சாதாரண சட்டங்களின் கீழ் இடம்பெறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஊழல்கள் குறித்தோ அல்லது மோசடிகள் குறித்தோ பொலிஸாரோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ  விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசாங்க தகவல்திணைக்களத்திலேயே அமைச்சர்pன் கருத்துக்கள் வெளியானது முக்கிய விடயம்.அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிதிமோசடிகள் தொடர்பிலான விசேட பொலிஸ்பிரிவை விரும்பவில்லை என அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.இதன் மூலம் அக்கட்சியினர் குறிப்பிட்ட பொலிஸ்பிரிவு மேற் கொண்டுவரும் விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என தெரிவிக்கும் அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர்.


போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்ட விடயம் குறித்து ஜனாதிபதியுடன் ஆலோசிக்காமல் பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை ஐக்கிய தேசிய கட்சியினரை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.சட்டஓழுங்கு அமைச்சர் சாகல ரத்தினநாயக்க  அமைச்சர் நிமாலின் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினார், அமைச்சரவையின் உறுப்பினர் என்ற வகையில் நிமால் சில்வாவிற்கு கூட்டுபொறுப்புள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்,ராஜபக்சாக்களை காப்பாற்றவா அவர் இவ்வாறு கருத்துகூறினார் எனவும் அமைச்சர் சாகல கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா செவ்வாய்கிழமை தான் வெளியிட்ட கருத்துக்களையே மீண்டும் வெளியிட்டார்.இதனால் சீற்றமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரான அமைச்சர் மலிக்சமரவிக்கிரம  அமைச்சர் அரசாங்க முடிவுகளை பகிரங்கமாக விமர்சிக்க கூடாது என தெரிவித்தார்.


இந்த வாக்குவாதத்தை தடுப்பதற்காக தலையிட்ட பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிரிட்;டனில் அமைச்சரவையின் கூட்டுபொறுப்பு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதை நினைவுபடுத்தினார்,அமைச்சரவை ஓரு விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுத்ததும் அதனை கடைப்பிடிக்கவேண்டிய து அமைச்சர்களின் கடமை, அதற்கு மாறான கருத்தை அவர்கள் தெரிவிக்கவிரும்பினால் அவர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெரிவிக்கலாம் என்றார் பிரதமர்.


இதன்பின்னர் நிதியமைச்சரிற்கும் அமைச்சர் எஸ்பி திசநாயக்கவிற்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது,நீங்கள் இரண்டு வருடத்தில் அரசாங்கத்தை அமைக்கப் போவதாக தெரிவிக்கின்றீர்கள், ராஜபக்சாக்களையும் அரசாங்க தலைவர்களையும் ஐக்கியப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றீர்கள், அரசாங்கத்தின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு எதிர்கட்சியை பாதுகாக்க முயல்கிறீர்களா என நிதியமைச்சர் அமைச்சர் ரவிகருணாநாயக்க எஸ்பி திசநாயக்காவை பார்த்து கேள்வி எழுப்பினார்.


புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன நிதிக்குற்றங்கள் தொடர்பிலான பொலிஸ்பிரிவின் விசாரணைகளில் ஆழமும் உண்மையும் உள்ளதாக தெரிவித்தார்.சிராந்தி ராஜபக்ச மற்றும் அவரத இரு மகன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாராதூரமான விடயங்கள் தெரியவந்துள்ளன. அந்த குற்றங்களிற்கு பிணைகூட வழங்க முடியாது  என தெரிவித்தார்.

இந்தப் பதிவை மீள் பதிவு செய்வோர் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் என மொழிபெயர்ப்பின் மூலத்தை குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128708/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.