Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருட்டு தேங்காயினைக் கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை : பிரதமர்

Featured Replies

திருட்டு தேங்காயினைக் கொண்டு இறைவனை நாடுவதில் பயனில்லை : பிரதமர்  

 

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தேங்காய் உடைப்­ப­தாயின் நாடு­பூ­ரா­கவும் உள்ள அரச தோட்­டங்­களில் விலைக்கு வாங்கி பத்து இலட்சம் தேங்­காய்­க­ளா­வது உடை­யுங்கள். அதன் ஊடாக தென்னை பயிர்­ச்செய்­கை­யா­ளர்­களின் வரு­மானம் அதி­க­ரிக்கும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாம் பூரண ஆத­ர­வினை நல்­குவோம். அதற்கு மாறாக அரச தோட்­டங்­களில் தேங்காய் திருட வேண்டாம். திருட்டு தேங்­கா­யினை கொண்டு இறை­வனை நாடு­வதில் பய­னில்லை. தேசிய அர­சாங்­கத்தினூடாக நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­தினை முடக்­கு­வ­தற்கு நாம் எவ­ருக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.ranil-wickremesinghe-coconut.jpg

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு, கட்­சியின் தலை­மை­யகம் உள்­ளிட்ட அனைத்து துறைகளை­யும் மறு­சீ­ர­மைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து கொண்டு எமது கட்­சியை நாம் பாது­காக்க வேண்டும். இதன்­படி கட்­சியில் புதிய வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­க­வுள்ளோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

குரு­நாகல், குளி­யாப்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­ன­ருடன் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கையின் 68 ஆவது சுதந்­திர தின விழா மிகவும் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­பட்­டது. இது போன்றே எமது வேலைத்­திட்­டங்கள் முன்­னோக்கி பய­ணிக்கும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் பிறந்­தது, சுதந்­தி­ர­ம­டைந்த இலங்­கை­யி­லாகும். இதற்கு முன்னர் நாட்டை ஆட்­சி­பு­ரிந்த ஜனா­தி­ப­தி­களும் பிர­த­மர்­களும் பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சியின் போதே பிறந்­தனர். ஆகவே நாம் இரு­வரும் சுதந்­திர இலங்­கையில் பிறந்து இல­வசக் கல்­வியைப் பயின்­றுள்ளோம். பிரித்­தா­னிய ஆட்­சியின் அனு­ப­வத்தை நாம் இரு­வரும் கண்­ட­தில்லை.

நவீன தொழில்­நுட்ப குழந்­தை­க­ளுக்கு ஏற்ற வகை­யி­லான நாட்டை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். அர­சியல் ரீதி­யாக இலங்­கையில் மூன்று புரட்­சிகள் நடந்­தே­றி­யுள்­ளன. முத­லா­வது புரட்­சி­யா­னது தேச­பிதா டீ.எஸ். சேனா­நா­யக்­க­வினால் பிரித்­தா­னி­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கைக்கு சுதந்­திரம் பெற்­றுக்­கொ­டுத்­த­மை­யாகும். அடுத்த புரட்­சி­யா­னது, எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் சமூகப் புரட்சி செய்­யப்­பட்­டது. மூன்­றா­வது புரட்­சியை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­தன நிகழ்த்­தி­யி­ருந்தார். அதா­வது, நவீன யுகத்தை இலங்­கைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இத­னூ­டாக முத­லா­வது புரட்­சியில் சுதந்­தி­ரமும், இரண்­டா­வது புரட்­சியில் கலா­சார விழு­மியம் சார்ந்த குழந்தை பிறப்பும், மூன்­றா­வது புரட்­சியில் தொழில்நுட்ப யுகம் சார்ந்த குழந்தை பிறப்பும் இடம்­பெற்­றுள்­ளன.

நெருக்­க­டி­மி­குந்த உலக பொரு­ளா­தார மற்றும் அர­சியல் சூழலில் பூகோள பொரு­ளா­தா­ரத்தை நோக்கி உலகம் பய­ணிக்­கின்­றது. இதன்­போது இலங்கை தொழில்­நுட்­பத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­நோக்கி நகரும் போது தேசிய அர­சாங்கம் இலங்­கையின் நான்­கா­வது புரட்­சியை முன்­னெ­டுத்த பெரு­மையைப் பெற்­றுக்­கொள்ளும். இத­னூ­டாக வறு­மையை முழு­மை­யாக ஒழித்து, மிகவும் தர­மான 10 இலட்சம் தொழில் வாய்ப்­புகள் வழங்கி, 2030 ஆம் ஆண்­ட­ளவில் அதி­க­ளவு வரு­மானம் பெறும் நாடாக இலங்­கையை மாற்றும் தேசிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டமே நான்­கா­வது புரட்­சி­யாகும்.

இலங்­கையின் நான்­கா­வது புரட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு தனி­யொரு கட்­சி­யினால் முடி­யாது. கட்சி பேதங்கள் பாராமல் அனை­வரும் ஒன்றிைணய வேண்டும். எதிர்­கால சந்­த­தி­யி­னர்­களின் பிரச்­சி­னை­களை நாம் அவ­தா­னிக்க வேண்டும். எப்­போதும் ஒரு இடத்­தி­லேயே எம்மால் நிலைத்து நிற்க முடி­யாது. எமது வளர்ச்­சிக்கு ஏத­ாவாது செய்­யுங்கள் என்றே எமது இளை­ஞர்கள் கோரு­கின்­றனர். எமது நாட்டு இளை­ஞர்­களின் எதிர்­பார்ப்­பு­களை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த வரு­டத்தில் அர­சியல் ரீதி­யான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இந்த ஆண்டில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை ஆரம்­பிக்க உள்ளோம். இதன்­பி­ர­காரம் மேல் மாகாண மாந­கர வேலைத்­திட்­டத்தை தற்­போது ஆரம்­பித்­துள்ளோம். இன்னும் சில நாட்­களில் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­படி மத்­திய அதி­வேக பாதை நிர்­மா­ணிக்­கப்­பட உள்­ளது. இத­னூ­டாக குரு­நாகல் மாவட்டம் பாரிய வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்கும். அத்­துடன் பொரு­ளா­தார ரீதி­யாக பல்­வேறு வல­யங்­களை குரு­நாகல் , மிரி­கமை பிர­தே­சங்­களை மைய­மாக கொண்டு ஆரம்­பிக்க உள்ளோம். இது போன்று பொரு­ளா­தார ரீதி­யாக சிறந்த நிலை­மைக்கு நாட்டை நாம் கொண்டு செல்­ல­வுள்ளோம்.

இருந்­த­போ­திலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலரின் அர­சியல் நட­வ­டிக்­கைகள் படு­பா­தா­ளத்தை நோக்கி பய­ணிக்­கின்­றது. தேசிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களும் பெரும் இடை­யூறு விளை­வித்த வண்­ண­முள்­ளனர். அர­சாங்­கத்தினூ டாக நாம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டத்­தினை முடக்­கு­வ­தற்கு நாம் எவ­ருக்கும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/2866

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.