Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களை கண்டிக்க முடியாது!

Featured Replies

ஊடகங்களை கண்டிக்க முடியாது!
 
ஊடகங்களை கண்டிக்க முடியாது!
மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் உறுப்பினர்ளால் பேசப்படும் எந்தவொரு விடயமும் நீதிமன்ற நியாதிக்கத்துக்கு உட்படுத்தப்பட முடியாதவை. பேரவைச் செயலகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களைப் பிரசுரிக்கும் எந்தவொரு ஊடகத்தையும் கண்டிக்கமுடியாது.
 
பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏதாவது குறைபாடுகள், கருத்துத் தெளிவூட்டல் இருந்தால் அது தொடர்பில் பேரவைச் செயலகத்துக்கே அறிவிக்க முடியும். 
 
இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 
 
வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வின்போது, ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் எழுப்பிய சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 
ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன், "கடந்த அமர்வில் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை தெரிவித்தேன். இதற்காக மாகாணசபை அங்கத்தவர்களுக்குக் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில், சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சங்கத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி, வடமாகாண சபைக்கு எதிராகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 
 
இந்தப் போராட்டம் உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் செயலாகும். இங்கு பேசிய விடயத்தை, செய்தியாகப் பிரசுரித்தமைக்காக ஒரு ஊடகத்தின் மீது வழக்குத் தொடர முடியுமா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பதில் வழங்கிய அவைத் தலைவர், மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் உறுப்பினர்களால் பேசப்படும் எந்தவொரு விடயமும் நீதிமன்ற நியாதிக்கத்துக்கு உட்படுத்தப்பட முடியாதவை. 
 
பேரவையில் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு உரித்துடையவை. மாகாண சபையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட கருத்தக்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ளலாம். 
 
மாகாணசபையில் பேசப்பட்ட விடயங்களால் தாம் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் மற்றும் இவை கருத்து வேறுபாடுடைய விடயங்கள் என்றும் எண்ணுபவர்கள், மாகாண சபைக்கு இந்த விடயம் தொடர்பான அறிவித்தலை வழங்க முடியும். சபை அதனை பரிசீலினை செய்து திருத்துவது தொடர்பில் ஆராயும் என்றார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.