Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய வீடுகள்

Featured Replies

65 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­படும். முதற்­கட்­ட­மாக இவ்­வ­ருடம் 11ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­படும். இத்­திட்­டத்தின் மாதிரி வீடொன்று மார்ச் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்­பாணம் தெல்­லிப்­ப­ழையில் காட்­சிக்கு வைக்­கப்­படும். இந்த வீடு­களை மக்கள் சென்று பார்­வை­யிட முடியும். இந்த வீடு­க­ளுக்கு சோலார் மின்­சாரம், தள­பா­டங்கள், தொலைக்­காட்­சிப்­பெட்டி மற்றும் காஸ் அடுப்­பு­களும் வழங்­கப்­படும். பய­னா­ளி­க­ளுக்கு இவ்­வீ­டுகள் முற்­றிலும் இல­வ­ச­மா­கவே வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

2017 ஆம் ஆண்டு 18ஆயிரம் வீடுகள் என்ற ரீதியில் தொடர்ந்து மூன்று வரு­டங்­களில் 54ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிக்­கவும் நாங்கள் திட்­ட­மிட்­டுள்ளோம் என்று புனர் வாழ்வு மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு மற்றும் இந்­து­ச­மய விவ­கார அமைச்சர் டி. எம்.சுவா­மி­நாதன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: யுத்தம் கார­ண­மாக இந்­தி­யா­வுக்கு சென்று பல வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இலங்­கைக்கு திரும்­பிய அக­திகள் எத்­தனை பேர்?

பதில்: 2015ஆம் ஆண்டு முதல் இந்­தி­யா­வி­லி­ருந்து 530 பேர் மாத்­தி­ரமே இலங்கை திரும்­பி­யுள்­ளனர். அவர்கள் அனை­வரும் திரும்ப வேண்டும். அவர்கள் மீள வரும் போது வீடுகள் கொடுக்­கப்­பட்டால் தானே இங்கு வந்து தங்க முடியும். அவர்­க­ளுக்­கான சலு­கைகள், நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். வாழ்­வா­தா­ரங்­களும் செய்­து­கொ­டுக்­கப்­பட வேண்டும்.

கேள்வி: இந்­தி­யாவில் உள்ள இலங் கை அக­திகள் இலங்கை பிர­த­ம­ருக்கு சென்­னை­யி­லுள்ள பிரதி உயர் ஸ்தானி­­க­ரா­ல­யத்தின் மூலம் மக­ஜ­ரொன்று அனுப்­பி­யுள்­ளார்கள். அந்த மகஜர் உங்­

க­ளுக்கு கிடைத்­ததா?

பதில்: இல்லை. அப்­படி எந்த மனுவும் எனக்கு கிடைக்­க­வில்லை. அது பற்றி பிர­த­மரும் என்­னிடம் எதுவும் கூற­வில்லை.

கேள்வி: 1996 ஆம் மற்றும் 1997 ஆம் ஆண்டு அக­தி­க­ளாக சென்­ற­வர்­க ளில் இந்­தி­யா­விலேயே பிறந்து அங்­கேயே வளர்ந்­த­வர்கள் தற்­போது சிறந்த கல்

வித் தகை­மை­க­ளுடன் காணப்­ப­டுகின் ­றார்கள். அவர்கள் இலங்­கைக்கு திரும்பி வரும் போது அவர்­க­ளது கல் வித் தகை­மை­க­ளுக்கு ஏற்ற வகையில் வேலை வாய்ப்­புகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­டுமா? என்று கேட்­கின்­றனர். இங் கும் நாட­ளா­விய ரீதியில் விஞ்­ஞானம் தொடர்­பி­லான வேலை வாய்ப்­புக்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. இந்த வெற்­றி­டங்­களில் அவர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புகள் வழங்­கலாம் அல்­லவா?

பதில்: ஆம். வேலை வெற்­றி­டங்­க­ளுக்­கேற்ற தகை­மைகள் காணப்­படின் நிச்­ச­ய­மாக வேலை­வாய்ப்­புகள் வழங்­கப்­படும். இது தொடர்பில் பிர­த­ம­ரி­டமும் கல்வி அமைச்­சி­டமும் பேசத் தயா­ரா­க­வுள்ளேன்.

கேள்வி: இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்கை வரு­ப­வர்­க­ளுக்கு அடை­யாள அட்­டைகள் வழங்­கு­வ­திலும் சிக்கல் நிலை இருக்­கின்­றது. இந்­தி­யாவில் பிறந்­த­வர்­க­ளுக்கும் அடை­யாள அட்டை இல்­லா­த­வர்­க­ளுக்கும் இங்கு அடை­யாள அட்டை பெற கிராம சேவை­யா­ள­ரி­ட­மி­ருந்து கடி­த­மொன்றை பெற ஒரு வருடம் இலங்­கையில் தங்­கி­யி­ருக்க வேண்டும். இந்­நாட்டில் அடை­யாள அட்டை இல்­லாமல் சாதா­ரண தொழி­லொன்­றைக்­கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாது. இது குறித்து நட­வ­டிக்­கைகள் ஏதும் எடுக்­கப்­ப­டுமா?

பதில்: இதற்கு ஒரு தற்­கா­லிக நட­வ­டிக்­கை­யொன்று எடுக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும்.

கேள்வி: இவ்­வி­டயம் தொடர்பில் அடை­யாள அட்டை திணைக்­க­ளத்தில் அவர்கள் இலங்­கைக்கு வந்த கட­வுச்­சீட்டின் மூலம் அடை­யாள அட்­டையை வழங்­கும்­படி ஆட்­களைப் பதிவு செய் யும் திணைக்­க­ளத்­திடம் கோரிக்கை விடுக்­கப்­பட்டால் இல­கு­வாக இருக்­கு­மல்­லவா?

பதில்: அதா­வது இலங்­கையில் அடை­யாள அட்­டையை பெற்­றுக்­கொள்ள ஒரு வருடம் கிராம சேவகர் பிரிவில் வசித்­தி­ருக்க வேண்டும். குறித்த விடயம் தொடர்­பாக ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.

கேள்வி: கடந்த அர­சாங்கம் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­னர்­க­ளுக்கு சுய­தொழில் கடன் வழங்­கவும் 3000 ரூபா மாதா மாதம் வழங்­கவும் உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டன. இது­வ­ரையில் ஒரு­ச­த­மேனும் வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் பெரும் இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் வாழ்க்­கையை நடத்தி வரு­கின்­றனர். இதற்கு புனர்­வாழ்வு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் நட­வ­டிக்­கை­யேதும் மேற்­கொள்­வீர்­களா?

பதில்: இவ்­வி­டயம் தொடர்பில் அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்று மூன்று மாதங்­க­ளுக்கு முன் சமர்ப்­பித்­தி­ருந்தோம். எனினும் சமூ­க­சேவை திணைக்­க­ளத்­தினால் நாட­ளா­விய ரீதியில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டோ­ருக்­கான உத­விகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. முன்னர் கொடுக்­கப்­பட்ட 3000ரூபா வங்கிக் கணக்­கு­களில் வைப்­புச்­செய்யும் உலக வங் கிச் செயற்­றிட்­ட­மொன்று காணப்­பட்­டது. தற்­போது அந்த செயற்­றிட்டம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மாவட்ட செய­லாளர் மூலம் 3000ரூபா வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இது குறித்து யாரும் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. சமூக சேவை திணைக்­களம் மாவட்ட செய­லாளர் மூலம் மாதாந்தம் 3000 ரூபா அனுப்பி வைக்­கின்­றது.

கேள்வி: மீள்­கு­டி­யேற்ற அமைச்சு முன்னர் வாக்­கு­று­தி­ய­ளித்த வகையில் புனர் வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக திட்­ட­மேதும் வகுக்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்: ஆம். தற்­போது இரண்டு திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. சுய­தொழில் திட்­ட­மொன்று ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தியில் வகுக்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்டம் தற்­போது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: புனர்­வாழ்வு பெற்ற முன் னாள் புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள் 35 பேருக்கு தொழில்­வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்: ஏற்­க­னவே யுத்­தத்தில் ஈடு­பட்ட இளைஞர், யுவ­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கப் ­பட்­டுள்­ளது. இவர்­களில் 35 பட்­ட­தா­ரிகள் இருக்­கின்­றனர். இந்த பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கு­வ­தற்கு பொது நிர்

வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இப்­பட்­ட­தா­ரிகள் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக வெகு விரைவில் உள்­வாங்­கப்­ப­டுவர். இவ்­வி­டயம் தொடர்பில் அமைச்­ச­ர­வையும் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

கேள்வி: காணி­வி­டு­விப்பு தொடர்பில் தற்­போ­தைய நிலை­வரம் என்ன?

பதில்: தற்­போது 3000ஹேக்­டெயர் காணி மக்­க­ளிடம் மீண்டும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. படை­யினர் வச­முள்ள ஏனைய காணிகள் தொடர்­பிலும் பாது­காப்பு அமைச்சு செய­லா­ள­ரி­டமும் கேட்­டுள்ளோம். இவ்­வி­டயம் தொடர்பில் நாம் முழு­மூச்­சாக இயங்கி வரு­கிறோம். நான் மாத்­தி­ர­மின்றி ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் காணி­வி­டு­விப்­பதில் அதிக அக்­கறை காட்டி வரு­கின்­றனர்.

கேள்வி: ஜனா­தி­பதி யாழ்ப்­பாண அகதி முகா­மிற்கு சென்­றி­ருந்த வேளை அங்­கி ­ருந்த அக­தி­க­ளிடம் ஆறு மாதத்தில் நீங் கள் சொந்த இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வீர்கள் என்று வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். இந்த வாக்­கு­றுதி குறிப்­பிட்ட காலத்தில் நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில்: ஆம். உண்மை தான். இது­தொ­டர்பில் கூட்­ட­மொன்­றையும் ஒழுங்கு செய்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தியும் அவரால் முடிந்­த­ளவு முயற்­சித்து வரு­கின்றார். இவ்­வி­ட­யத்தில் பாது­காப்பு அமைச்சும் ஒத்­து­ழைக்க வேண் டும். காணி­வி­டு­விப்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வரு­கின்­றன. இன்னும் சில நாட்­களில் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­மென்று நான் உறு­தி­யாகக் கூறு­கின்றேன். அதி­க­ள­வான காணிகள் எமக்கு தேவைப்­ப­டு­கின்­றன. நாளை திங்­கட்­கி­ழமை மாலை வடக்கு அபி­வி­ருத்தி தொடர்பில் கூட்­ட­மொன்றை பிர­தமர் ஒழுங்கு செய்­துள்ளார்.

கேள்வி: வீட­மைப்புத் திட்டம் எப்­போது ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது இத்­திட்டம் தொடர் பில் நிதி வழங்க எந்த நாடு முன்­வந்­துள்­ ளது?

பதில்: இந்த வீட­மைப்பு திட்­டத்­திற்கு பிரான்ஸ் நிறு­வ­ன­மொன்று நிதி­யு­தவி வழங்­க­வுள்­ளது. நாம் எமது கட­மை­களை ஆகஸ்ட் மாதம் ஆரம்­பித்து ஆறு மாத காலத்தில் விலை­ம­னுக்­களை கோரி அதை நிறைவு செய்­துள்ளோம். இந்த வீட­மைப்பு திட்­டத்­திற்­காக பெற்­றுக்­கொண்ட பணத்தை பத்து அல்­லது பதி­னைந்து ஆண்­டு­களில் திருப்பிச் செலுத்­த­வுள்ளோம்.

அடுத்த மாதம் 22 ஆம் திகதி இரண்டு மாதிரி வீடுகள் யாழ்ப்­பாணம் தெல்­லிப்­ப­ழையில் காட்­சிக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதை மக்கள் சென்று பார்­வை­யிட முடியும். இதன் மூலம் இத்­திட்டம் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தனை மக்கள் உணர வேண்டும்.

கேள்வி: இத்­திட்டம் எப்­போது ஆரம்­பிக்­கப்­படும் எல்­லா­மாக எத்­தனை வீடு கள் கட்­டிக்­கொ­டுக்­கப்­ப­டு­கின்­றது?

பதில்: இன்னும் இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. மொத்­த­மாக 65,000வீடுகள் முதல் வரு­டத்தில் 11,000வீடுகள், அதற்கு பிறகு வரு­டத்­திற்கு 18,000 வீடுகள் என்ற ரீதியில் மூன்று வரு­டங்­களில் 54,000 வீடுகள் நிர்­மா­ணித்து வழங்­கப்­படும். இந்த வீடு­க­ளுக்கு தள­பா­டங் கள் உட்­பட சோலார் மின்­வி­ளக்­குகள் மற்றும் தண்ணீர் வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டு­கின்­றன. மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய கட­மை­களை நான் செய்­கின்றேன்.

கேள்வி: கட்­டிக்­கொ­டுக்­கப்­ப­டு­கின்ற வீடு­களில் ஒரு வீட்டின் பெறு­மதி என்ன? இவை­ய­னைத்தும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றதா?

பதில்: ஒரு வீட்டின் பெறு­மதி சுமார் இரண்டு மில்­லியன் வரையில் இருக்கும். இவை­ய­னைத்தும் இல­வ­ச­மா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றன. சோலார் முறை­மையில் மின்­சாரம் வழங்­கப்­ப­டு­கின்­றது.

மின் விசி­றிகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. தொலைக்­காட்­சிப்­பெட்­டிகள், காஸ் அடுப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வீ­டுகள் அனைத்தும் உல­கத்­தரம் வாய்ந்த விதத்தில் அமைக்கப்படும். உதாரணத்திற்கு வெளியே

30 டிகிரியில் வெப்பம் இருக்கும் போது வீட்டுக்குள் 28 டிகிரி வெப்பம் தான் காணப்படும். இவ்வீட்டில் இரண்டு அறை களையும் ஒரு சமயலறையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே மலசலக்கூடமும் நீர்த்தாங்கியும் அமைக்கப்படும்.

கேள்வி: வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் கருதி நீங்கள் முன்னெ டுக்கும் விசேட திட்டங்கள் ஏதேனும் குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றனவா?

பதில்: வடக்கு கிழக்கில் விவசாயிகளின் நன்மை கருதி நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்குவதன் முதற்கட்டமாக அங்குள்ள குளங்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து அங்குள்ள குளங்களின் விபரங்கள், உடனடியாக புனரமைக்கப்பட வேண்டிய குளங்கள் தொடர் பான விபரங்களும் எமக்கு கிடைத்துள்ளன. விரைவில் குளங்களை புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படும். இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசா யத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதுடன் மக்களின் பொருளாதாரமும் மேம்படும்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=14/02/2016

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தப் பேரழிவில் இன அழிப்பில்.. தன் பங்கை மறைக்க... இந்தா 50 ஆயிரம் வீடு அமைக்கிறம் என்று புறப்பட்ட ஹிந்தியா இன்னும் 500 கூட அமைச்சதா தெரியல்ல...??!

இது எப்ப நடக்கப் போகுது.. அடுத்த நூற்றாண்டிலா..?! tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.