Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி செய்திகள்

Featured Replies

ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன் முறையாக T 20 போட்டிகள்

 

வங்கதேசத்தில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் விரைவில் களைகட்டவுள்ளது. ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி முடிய நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கிறது.

2016-Asia-cup-qualifier-begin-from-the-19th-February

மேலும், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய அணிகளில் ஒன்று தகுதிப் போட்டியின் மூலம் தெரிவு செய்யப்படும். தகுதிப் போட்டிகள் பெப்ரவரி 19 முதல் 22ம் திகதி வரை நடக்கிறது. இதில் இலங்கை அணி நடப்பு சாம்பியனாக இருக்கிறது. கடந்த தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் இந்தியா, இலங்கை அணிகளே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா தான் இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (1,220) குவித்துள்ளார். சங்கக்காரா (1075), சச்சின் டெண்டுல்கர் (971) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய அணித்தலைவர் டோனி ஆசியக் கிண்ணத் தொடரில் 13 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்டுள்ளார்.மேலும், அர்ஜூன ரணதுங்க, டோனி தான் இந்த தொடரில் அதிக வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். இருவரும் தலா 9 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=9468&cat=1

  • Replies 71
  • Views 2.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
நாளை ஆசியக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்
 

article_1455792825-TamilThakutStAsia-Cupஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்குபெறும்  ஐந்தாவது அணியைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் சுற்று, நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளும் இத்தொடரின் பிரதான சுற்றில் விளையாடவுள்ள நிலையில், ஐந்தாவது அணியாக, துணை அங்கத்துவ நாடொன்று விளையாடவுள்ளது.
அவ்வணியைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகளே நாளை ஆரம்பமாகவுள்ளன. இறுதி ஓர் இடத்தைப் பிடிப்பதற்காக, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஹொங் கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

தரப்படுத்தலினதும் திறமை வெளிப்பாடுகளினதும் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் அணிக்கே அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அவ்வணி, பங்களாதேஷையும் முந்திக்கொண்டு, தரப்படுத்தலில் 9ஆவது இடத்தில் காணப்படுகிறது. எனவே, பிரதான சுற்றுக்கு அவ்வணி தெரிவானால், ஏனைய அணிகளுக்குச் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளில் முதற்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு அமீரக அணியும் பங்கேற்கவுள்ளன. இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஹொங் கொங் அணிக்கும் ஓமான் அணிக்குமிடையிலான போட்டியில், இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ணப் போட்டிகள் இம்முறை, இருபதுக்கு-20 போட்டிகளாக விளையாடப்படவுள்ள நிலையில், விறுவிறுப்பான போட்டிகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் இடம்பெறவுள்ள இப்போட்டிகளின் பிரதான சுற்று, எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

13ஆவது தடவையாக இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளின், நடப்புச் சம்பியனாக, இலங்கை அணி காணப்படுகிறது. அவ்வணி, பாகிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற இறுதிப் போட்டியில், லஹிரு திரிமான்னவின் சதத்தின் உதவியோடும் லசித் மாலிங்கவின் 5 விக்கெட்டுகளின் உதவியோடும் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதன்படி, ஆசியக் கிண்ணத்தை, இந்திய அணியும் இலங்கை அணியும் தலா 5 தடவைகள் இப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/166424/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-#sthash.lxDDf1Qt.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

12745709_971429282904265_511383367180655

  • தொடங்கியவர்
ஆசிய கிண்ண இந்திய குழாமிலிருந்து மொஹம்மத் ஷமி விலகினார்
2016-02-19 22:23:29


ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இந்திய குழாமிலிருந்து    வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் ஷமி விலகியுள்ளார். பின் தொடை தசை நாரில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையாமையே இதற்கான காரணம்.

 

15028Mohammed-Shami-600.jpg


25  வயதான ஷமி இறுதியாக கடந்த உலக கிண்ண அரை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியிருந்தார்.

 

கடந்த மாதம் நடைபெற்ற இந்தியாவுடனான ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான குழாமில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளின்போது அவர் காயமடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பினார்.

 

பின்னர்,ஆசிய கிண்ணப் போட்டிக்கான குழாமில் மொஹம்மத் ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் இன்னும் பூரண குணமடையாததால் அவர் இக்குழாமிலிருந்து விலகியுள்ளார். ஷமிக்குப் பதிலாக புவனேஸ்குமார் ஆசிய கிண்ணப் போட்டிக்கான இந்திய குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஆசிய கிண்ண சுற்றுப்போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15028#sthash.eub7N7IT.dpuf
  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது UAE

February 20, 2016

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில், 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணியிடம், ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இம்மாதம் 24ஆம் திகதி பங்களாதேஷில் ஆசிய கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு இராட்சிய அணிகள் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற யு.ஏ.இ அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

download (1)

அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் ரோகன் முஸ்தபா 77 ஓட்டங்களைப் பெற்றார். கலீம் 25, அன்வர் 11 என்று ஓட்டம் பெற்று ஆட்டமிழந்தனர். உஸ்மான் முஷ்டாக் 23, முகமது ஷாஷத் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.177 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவரில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக கரீம் சாதிக் 72 ஓட்டங்களையும், முகமது நபி 23 ஊட்டங்களையும் பெற்றனர். ஏனையவர்கள் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.

http://www.onlineuthayan.com/sports/?p=9593&cat=1

  • தொடங்கியவர்

12747257_1771630919534774_62519026410001

10688125_1771631029534763_71478574400498

ஆசியகிண்ண போட்டிகளில் பங்குபற்ற புறப்பட்டு சென்ற இலங்கை அணி

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில் மீண்டும் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணி வெற்றி.

Hong Kong 146/7 (20/20 ov)
United Arab Emirates 147/4 (18.3/20 ov)

234861.3.jpg

234859.3.jpg

  • தொடங்கியவர்

பயிற்சியில் தோனி காயம்: முன்னெச்சரிக்கையாக பார்த்திவ் படேல் அணியுடன் இணைகிறார்

 

 
தோனி, பார்த்திவ் படேல். | கோப்புப் படம்.
தோனி, பார்த்திவ் படேல். | கோப்புப் படம்.

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனிக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் எச்சரிக்கை நடவடிக்கையாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் தோனிக்கு பயிற்சியின் போது முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்த்திவ் படேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் டாக்காவில் அணியுடன் விரைவில் இணையவிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டில் இரண்டு டி20 போட்டிகளில் பார்த்திவ் படேல ஆடியுள்ளார். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்து தன்னை நிரூபித்து வருகிறார்.

ஆசியக்கோப்பை டி20-யைத் தொடர்ந்து உலகக்கோப்பை டி20 இருப்பதால் தோனியின் உடற்தகுதி அணிக்கு மிக முக்கியம் என்பதால் பாதுகாப்பாக பார்த்திவ் படேல் அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8267996.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ண ரி-20 போட்டிகளின் தகுதி சுற்றில் இன்று ஆப்கானிஸ்தான் அணி வெற்றி.

ஆப்கானிஸ்தான்  178/7 (20/20 ov)
ஹொங் கொங்    112 (17.1/20 ov)
 
ஆப்கானிஸ்தான் அணி  66 ஓட்டங்களால் வெற்றி
 
 
இன்னுமொரு தகுதி சுற்று போட்டியில் ஐக்கிய அரபு இராட்சிய (UAE) அணி வெற்றி.
 
ஐக்கிய அரபு இராட்சியம்   172/6 (20/20 ov)
ஓமான்    101/8 (20/20 ov)
ஐக்கிய அரபு இராட்சியம்   71 ஓட்டங்களால் வெற்றி
  • தொடங்கியவர்

ஜக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி

 

ஜக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நேற்றைய தினம் ஓமான் அணியுடன் தகுதிகான் போட்டியில் வெற்றியீட்டி இம்முறை ஆசிய கிண்ணப் போட்டியில் பங்கு பற்றுவதற்கு தகுதி பெற்றது.

நேற்றைய தகுதிகான் தேர்வுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

172 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.71 ஓட்டங்களினால் வெற்றியடைந்த ஜக்கிய அராப் எமிரேட்ஸ் அணி, ஆசிய கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று இலங்கை அணியுடன் முதலாவது போட்டியில் மோதவுள்ளது.

http://www.virakesari.lk/article/3511

  • தொடங்கியவர்

12743771_973381746042352_546233970056459

  • தொடங்கியவர்

’இளம் வீரர்கள் இருப்பது எமது பலமே’’ மலிங்க

February 23, 2016

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண டி20 தொடர் பற்றி இலங்கை அணித்தலைவர் மலிங்கா கருத்து தெரித்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி தொடர் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் டாக்காவுக்கு பயணமாகி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Lasith-Malinga1

 

இந்நிலையில் இந்த தொடர் குறித்து இலங்கை அணியின் தலைவர் மலிங்கா கூறுகையில், ”கண்டிப்பாக இந்த தொடர் தனிப்பட்ட நபருக்கானது அல்ல. போட்டிகளின் போது எப்படி அனைவரும் செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். இந்திய தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட துறை சற்று தடுமாற்றத்துடனே காணப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக ஒரு கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கிறோம்.

இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இருப்பது பார்க்கவே சிறப்பாக உள்ளது. அது அணிக்கு புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களின் அனுபவமும் அணிக்கு உதவியாக இருக்கும். அதேபோல் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் அணிக்கு நல்ல நிலைமையை ஏற்படுத்தி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9652&cat=2

  • தொடங்கியவர்

இலங்கையுடன் மோதும் UAE

February 23, 2016

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) டாக்காவில் நடைபெறவுள்ளது.

2016-Asia-cup-qualifier-begin-from-the-19th-February

நாளை (புதன்கிழமை) ஆரம்பித்து பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரானது இதுவரை காலமும் 50 ஓவர் போட்டித் தொடராக நடைபெற்றது. எனினும் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தகுதிச்சுற்று போட்டிகள் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடரின் ஐந்தாவது அணியாக தெரிவாகியுள்ளது.

இதன் பிரகாரம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இத் தொடரின் முதலாவது போட்டி நாளை (புதன்கிழமை) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் டாக்காவில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு இடையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

1984 ஆம் ஆண்டு ஆரம்பித்து இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் ஐந்து தடவை இந்தியாவும் ஐந்து தடவை இலங்கையும் இரு தடவை பாகிஸ்தானும் சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன. எனினும் 2014 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற தொடரில் இலங்கை சம்பியன் கிண்ணத்தை வென்றது. எனவே இந்த வருடமும் தான் பெற்ற சம்பியன் கிண்ணத்தை இலங்கை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி மிர்பூரில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=9681&cat=2

  • தொடங்கியவர்

ஆசியக்கிண்ணத்தில் இந்தியா- வங்கதேசம் நாளை மோதல்

February 23, 2016

முதல்முறையாக 20 ஓவர் ஆட்டமாக நடத்தப்படுப்படும் ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. ஆசியக்கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப்போட்டி ரவுண்டு ராபின் முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

2016-Asia-cup-qualifier-begin-from-the-19th-February

புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். டி20 உலகக்கிண்ணம் நடைபெற இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், இந்த தொடர் ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி தொடரில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகின்றன.

சமீபத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. இருப்பினும் சொந்த மண்ணில் வங்கதேச அணி சவால் கொடுக்கும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கும். ஏற்கனவே அந்த அணியிடம் இந்தியா அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருந்தது. இதனால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.

மேலும், டோனிக்கு திடீரென்று முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் நாளையப் போட்டியில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான பார்த்திவ் படேல் மாற்று வீரராக களமிறங்கலாம். துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, ரெய்னா ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மொர்தாசா தலைமையிலான வங்கதேச அணியில் சகீப்–அல்–ஹசன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, இம்ருல்கய்ஸ், நாசிர் உசேன், சபீர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் வங்கதேச வீரர்களும் இந்திய அணிக்கு சமமாக சவால் கொடுப்பர் என்பதால் நாளைப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா, டோனி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, ஷிக்ர் தவான், விராட் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, ரஹானே, ஹர்பஜன் சிங், பவான் நெகி, புவனேஸ்வர் குமார், பார்த்தீவ் பட்டேல்.

வங்கசேதம், மொர்தாசா (அணித்தலைவர்), இம்ருல் கயூஸ், சவுமியா சர்கார், சகீப்–அல்–ஹசன், முஷ்பிகுர் ரகீம், மகமதுல்லா, அபுஹைதர், அல்–அமீல் உசேன், அராபாத் சன்னி, முஸ்டாபிசுர் ரகீம், நாசிர் உசேன், சபீர் ரகுமான், நூருல் ஹசன், தக்ஷின் அகமது, மிதுன்.

http://www.onlineuthayan.com/sports/?p=9661&cat=2

  • தொடங்கியவர்

இந்தியா  166/6

  • தொடங்கியவர்

 இந்தியா 45 ஓட்டங்களால் வெற்றி

235169.jpg

12745541_975272262538203_843437963357502

  • தொடங்கியவர்

12734152_975320432533386_841644335283933

  • தொடங்கியவர்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு முதல் தெறி வெற்றி

 

5 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 55 பந்தில் 83 ரன்கள் விளாசிய ரோகி சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையை இந்த முறை 20 ஓவர் வடிவில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
 

Rohit-%20Nehra%20long.jpg

இதன்படி இந்த தொடரின் முதல் போட்டி இன்று மிர்பூரில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் மஸ்ரபி மோர்தசா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் கண்டது. ரோகித் சர்மா ஒரு புறம் நங்கூரம் போல் நின்றாலும், மறுமுனையில் தவான் (2), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி (8), சுரேஷ் ரெய்னா (13), யுவராஜ் சிங்(15) ஆகியோர் குறைந்து ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்து இருந்த போது ரோகித் சர்மாவுடன், ஹர்திக் பாண்டையா ஜோடி சேர்ந்தார். அதுவரை ரன்ரேட் ஏறக்குறைய 6 என்ற அளவிலேயே சென்று கொண்டிருந்தது. இதனால், இந்திய அணி 150 அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாண்டயா ருத்ர தாண்டவத்தால் ரன் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமானது. கடைசி 4.2 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா- பாண்டையா ஜோடி பிரிந்தது.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 55 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த பாண்டையாவும் ஒரு பந்து இடைவெளியில் ஆட்டமிழந்தார்.  இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 69 ரன்களை சேர்த்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 166  ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து எடுத்தால் 167 வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்க தேச அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மான் 44 ரன்கள் எடுத்தார். முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது. 55 பந்தில் 83 ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா தரப்பில் நெக்ரா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, பாண்டையா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இலங்கை- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நாளை மோதுகின்றன.

http://www.vikatan.com/news/sports/59587-rohit-nehra-hand-bangladesh-thrashing.art

  • தொடங்கியவர்

இளம் வீரர்களுடன் இலங்கை இன்றைய போட்டியில் எமிரேட்ஸை எதிர்த்தாடுகிறது

 

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் ஆசி­யக்­கிண்ண இரு­ப­துக்கு 20 தொடரில் இளம் வீரர்­களைக் கொண்ட இலங்கை அணி தனது முதல் போட்­டியில் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை இன்று எதிர்த்­தா­டு­கி­றது. டாக்­காவில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்தப் போட்­டியில் மலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி கள­மி­றங்­கு­கி­றது.

இந்தப் போட்டி குறித்து கருத்து வெளியிட்­டுள்ள இலங்கை அணித் தலைவர் மலிங்க, கண்­டிப்­பாக இந்த தொடர் தனிப்­பட்ட நப­ருக்­கா­னது அல்ல. போட்­டி­களின் போது எப்­படி அனை­வரும் செயற்­ப­டு­கிறோம் என்­பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

இந்­திய தொடரில் இலங்கை அணியின் துடுப்­பாட்ட வரிசை சற்று தடு­மாற்­றத்­து­டனேயே காணப்­பட்­டது. ஆனால் தற்­போது புதி­தாக ஒரு கிரிக்கெட் தொடரில் விளை­யா­ட­வி­ருக்­கிறோம்.

இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இருப்­பது பார்க்­கவே சிறப்­பாக உள்­ளது. அது அணிக்கு புத்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­கி­றது. அவர்­களின் அனு­ப­வமும் அணிக்கு உத­வி­யாக இருக்கும்.

அதேபோல் அணியில் உள்ள மூத்த வீரர்கள் அணிக்கு நல்ல நிலைமையை ஏற்படுத்தி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/3571

  • தொடங்கியவர்

இலங்கை முதலில் துடுப்பெடுத்து ஆடுகிறது..

15/0  2.5 ஓவரில்

Looks a very good line up for Sri Lanka tonight. Dilshan and angelo are key. Go Sri Lanka

 
  • தொடங்கியவர்

12741894_975828899149206_371769880441965

  • தொடங்கியவர்

1916100_975890939143002_8315382084507712

  • தொடங்கியவர்
ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஐ.அஎமிரேட்ஸை 14 ஓட்டங்களால் வென்றது இலங்கை
2016-02-25 22:26:15

ஆசிய கிண்ண இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை14 ஓட்டங்களால் வென்றது.

 

15172UAE-vs-SRI-LANKA.jpg

 

 

பங்களாதேஷ் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைக் குவித்தது,


அதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் சந்திமால், திலகரட்ன தில்ஷான் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைக் குவித்தனர்.

 

தினேஷ் சந்திமால், 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களைப் பெற்றார். எனினும், அவர் ஆட்டமிழந்தனபின் இலங்கை அணியின் ஓட்ட வேகம் குறையத் தொடங்கியது. தில்ஷான், 28 பந்துகளில் 27 ஓட்டங்களைப் பெற்றார். மிலிந்த சிறிவர்தன (6), தசுன் ஷானக்க (5), ஏஞ்சலோ மெத்யூஸ் (10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஷெஹான் ஜயசூரிய 7 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணித்தலைவர் அம்ஜாத் ஜாவிட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

15170dinesh.jpg


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியினர் இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளத் திணறினர்.


இலங்கையின் சார்பில் பந்துவீச்சை ஆரம்பித்த லஷித் மாலிங்க முதல் பந்திலேயே ரொஹான் முஸ்தபாவை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் மொஹம்மத் சஹாஹத்தை (1)  மாலிங்க ஆட்டமிழக்கச் செய்தார்.


நுவன் குலசேகர வீசிய 4 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில், 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த மொஹம்மத் கலீம் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5 ஆவது பந்தில் முஹம்மத் உஸ்மான் ஆட்டமிழந்தார்.


பின்னர் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத்தின் விக்கெட் வேட்டை ஆரம்பமாகியது. 8 ஆவது ஓவரில் சைமன் அன்வரை 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்த ரங்கன ஹேரத், 10 ஆவது ஓவரில் சக்லைன் ஹைதரின் விக்கெட்டை வீழ்த்தினார்.


ஸ்வப்னில் பட்டேல் 37 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

19 ஆவது ஓவரில் மொஹம்மத் நவீட்டும் லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

 

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்க 115 ஓட்டங்களை மாத்திரமே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பெற்றது.

 

லசித் மாலிங்க 26 ஓட்டங்களுக்கு விக்கெட்களை வீழ்த்தினார். நுவன் குலசேகர  10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரங்கன ஹேரத்  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15172#sthash.awBo8qK0.dpuf
  • தொடங்கியவர்

பங்களாதேஷ்  133/8

12670935_976446645754098_549993954021403

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ்  வெற்றி

10418396_976497769082319_320861582652101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.