Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

மரணதண்டனை ரத்து

மாடுகளும் சந்தோசம்

மாட்டிறைச்சிக்கு தடை

 

^

 

குழந்தை தொழில் சட்டவிரோதம்

மூடை சுமக்குறது குழந்தை

புத்தகப்பை

 

^

பழையன கழிதல்

புதியன புகுதல்

இலையுதிர்காலம்

 

^

ஹைக்கூ கவிதை

♥♥கவிப்புயல் இனியவன்♥♥ 

  • Replies 70
  • Views 17.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை தொழில் சட்டவிரோதம்

மூடை சுமக்குறது குழந்தை

புத்தகப்பை

 

சுமை தீரவில்லை குழந்தைகளுக்கு ....! tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் 
டாக்டர் அறிவுரை 
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது 

^

நேர அட்டவனனைப்படி 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள் 

^

உயிரை கொன்று 
அலங்கரிக்கப்படுகிறது 
பட்டுப்புடவை 

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம் 
கட்டணமின்றி தூங்கலாம் 
நடைபாதை 

^

பகலிரவு ஆட்டம் 
இரவு சூதாட்டம் 
பகல் கிரிகட் ஆட்டம் 
 

  • தொடங்கியவர்

-----------------------
கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
-----------------------

மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் மாறவில்லை
கிழிந்த ஆடை

@@@

-----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா 
தேர்தல் திருவிழா 
திருடர்கள் ஜாக்கிரதை

^^^

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார் 
கட்சி தலைவர்

^^^

தேர்தலுக்குமுன் நியதி 
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^^^

திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள் 
வேட்பாளர்

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள் 
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள் 
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை 

^^^

வயிற்றில் சுமந்தவளால் 
கைகளால் சுமக்க முடியவில்லை 
புத்தகப்பை 

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் 
டாக்டர் அறிவுரை 
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது 

^

நேர அட்டவனனைப்படி 
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள் 

^

உயிரை கொன்று 
அலங்கரிக்கப்படுகிறது 
பட்டுப்புடவை 

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம் 
கட்டணமின்றி தூங்கலாம் 
நடைபாதை 

^

பகலிரவு ஆட்டம் 
இரவு சூதாட்டம் 
பகல் கிரிகட் ஆட்டம் 
 

  • தொடங்கியவர்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ
---------------
நண்பர்கள் கடும் சண்டை 
காயம் ஏற்படவில்லை 
முகநூல் நட்பு 
----------------
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம் 
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி 
----------------
சுவாமி தரிசனம் 
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் 
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு 
----------------
பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்
--------------
கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கியது நாய்

^^^
கவிப்புயல் இனியவன்

  • 2 months later...
  • தொடங்கியவர்

----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை

^^^

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^^^

தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^^^

திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

  • தொடங்கியவர்

மனதில் இருள்
ஆடையில்  வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்  

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள் 
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது 
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் 
ஏக்கத்தோடு பார்த்தது கோழி 

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.

^^^^^

குடும்ப தலைவர் மரணம் 
ஒன்பது பிள்ளைகளும் ஓலம் 
கருத்தடை செய்த நாய் சாபம் 


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................

  • தொடங்கியவர்

இதோ சில விதிகள்.
------------------------------
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

நன்றி : களஞ்சியம் தளம்

  • தொடங்கியவர்

சடலத்துக்கு தீ மூட்ட 
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான் 
சிகரட் 



ஆறு அங்குல உயரம் 
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட் 

  • தொடங்கியவர்

பட்டாசு வெடித்தது
துர்நாற்றம் வயிற்றை குமட்டியது
தீ விபத்தில் கருகிய உடல்
^
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூக்கள்

  • தொடங்கியவர்

பட்டுப்போன எலும்போடு.....
தெருத்தெருவாய் சுற்றுகிறது 
செத்துப்போன கைப்பிடி

@@@

மனிதன் கால்தான் வைத்தான்
நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம்
குளத்துமீன்கள்

@@@
அழுகுரல் சத்தம்
துடிப்பார் யாருமில்லை
பொம்மைகுழந்தை

@@@

மின்சார கம்பத்தில்
சந்தோசமாய் வாழுகின்றன
குருவிகூடு

@@@

ஆசைகள் நிறைவேறுகிறது
எல்லோருடைய வாழ்க்கையிலும்
கனவு

@
ஹைக்கூ கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள் 
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்
 

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை
 

நன்னீர்
விஷக்கிருமியாகியது
டெங்கு
 

அறுவடை செழித்தும்
வாழ்க்கை செழிக்கவில்லை
விவசாயக்கடன்

காட்டுக்கு ராஜா
என்ன தவறு செய்தாரோ
மிருக்ககாட்சி கூடத்தில் சிறை

  • தொடங்கியவர்

நாம் பிரிந்து வாழ்கிறோம் 
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் 
தண்டவாளம் 
@
இனியவன் ஹைக்கூகள்

  • தொடங்கியவர்

கற்றுதந்த விலங்குகள் 
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே 
நம்பிக்கையையும் வளர் 
யானை 

காப்பவனை காப்பாற்று 
கற்றுதந்தது 
நாய் 

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே 
புலி 

வாழ்க்கை ஒரு சுமை 
அழாமல் சுமந்துகொள் 
கழுதை 

உழைக்காமல் சாப்பாடு 
மெத்தையில் தூக்கம் 
பூனை 


இனப்பெருக்கம் 
கற்றுத்தந்தது 
பன்றி

  • தொடங்கியவர்

இனித்த சர்க்கரை

கசக்கிறது

விலையேற்றம்

 

$

ஹைக்கூ 

கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

சர்க்கரை விலையேற்றம்
சந்தோசப்படுகிறார்
சர்க்கரை நோயாளி
&
சென்ரியூ

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்து விட்டேன் 

இன்று ஐந்து மணிக்கே, வெற்றி 

நேரமாற்றம்.....!

நல்ல ஹைக்கூக்கள் , அதன் விதிகளைப் படித்தபின் படிக்க இன்னும் நல்லாய் இருக்கு.....!  tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 10/29/2017 at 2:23 PM, suvy said:

எழுந்து விட்டேன் 

இன்று ஐந்து மணிக்கே, வெற்றி 

நேரமாற்றம்.....!

நல்ல ஹைக்கூக்கள் , அதன் விதிகளைப் படித்தபின் படிக்க இன்னும் நல்லாய் இருக்கு.....!  tw_blush:

மிக்க நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

சென்ரியூ
-------------
கவிஞனை
காவாளியாக்கியது
கமல்
&
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.