Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவத் தயங்கும் ஆலயங்கள்

Featured Replies

சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவத் தயங்கும் ஆலயங்கள் -  கா.அற்புதன்:-


இயற்கையினை வழிபட்ட மனிதன் பின்னர் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபட்டு பின்னாளில் தற்பொழுது வழிபடுகின்ற தெய்வங்களை வழிபடலானான். இவற்றினூடாக ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனூடாக சமூகத்தினை நல்வழிப்படுத்துவதற்காக தமக்குள்ளே சமூக ஒன்றியங்களையும், சமூக நிறுவனங்களையும், சமூக மன்றங்களையும் நிறுவி அதனூடாக தங்களைக் கட்டுப்படுத்தி உயர்ந்த சிறந்த மனிதனாக வாழ வழியமைத்துக் கொண்டான். சமூகத்தினை நல் வழிப்படுத்தும், சமூகத்தோடு இணைந்த சங்கங்கள், சபைகள் போன்ற பல இந்நிலையில் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் சாதிப்பாகுபாடு எனும் பயங்கர நோய் உருவாக ஆலயங்கள் காரணமாக அமைந்தமை என்பது மறுபக்கம்.


ஆலயங்களின் ஊடாக அறக்கருத்துக்கள், நல்வழிச் சிந்தனைகள், போன்றவற்றினைப் போதித்ததோடு அமைதி, மன ஒருமைப்பாடு, சந்தோசம் என்பவற்றினையும் தரும் புனித இடமாகவும் கண்டனர். இன்றும் மக்களை நல் வழிப்படுத்துவதாகக் கூறப்படும் ஆலயங்கள் நல்வழிப்படுத்துவதோடு மட்டும் நின்று விடுகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது தொடர்ந்து சமூகத்தின் பொருளாதர வளர்ச்சிக்கு உதவத் தயங்குகின்றன.


கடந்த காலத்தில் பல துன்பங்களுக்கு முகங்கொடுத்த மக்கள் தற்போதைய நிலையில் பொருளாதாரத்தில் சிதறுண்டு அதனை ஈடு செய்ய முடியாமல் தத்தளித்துக்கொண்டு வாழ வழி தெரியாமல் பரிதவிக்கும் குடும்பங்கள் பல. இவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது அக்கிராமங்களின் சங்கங்கள், சபைகளின் கடமை. இவ்வாறு பலப்படுத்தினால் அவர்களின் கசப்பான வாழ்கைக்கு மருந்தாகவும், வறுமையிலிருந்து மீண்டெழ வாய்ப்பாகவும் அமையும்.


எந்தவொரு சமயத்தினை எடுத்துக்கொண்டாலும் வறியவர்களுக்கு உதவுதல் வேண்டும், கஸ்டப்படுபவர்களுக்கு உதவுதல் வேண்டும் என்ற நற்சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் அன்றாட வாழ்வுக்காக கஸ்டப்படுகின்ற குடும்பங்களும் இருந்து கொண்டேயிருக்கின்றன. பணம் என்ற  மாயைக்குள் விழுந்த பல மனிதர்கள் கஸ்டப்படுபவர்களுக்கு உதவத் தயங்குகின்றமை உண்மை. இருந்தும் அனைவருக்கும் பொதுவானதாகக் கொள்வதாகக் கூறப்படும் பல  ஆலயங்கள் கூடுதலான வருமானங்களைப் பெறும் இடமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் பல ஆலயங்கள் அக்கிராமங்களின் கூடிய பொருளாதாரத்தை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலயங்களுக்கு பல வழிகளில் வருமானங்கள் வருகின்றன. அவற்றினை ஆலய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் ஆலய சபையினர். அதில் வரும் ஒரு குறிப்பிட்ட வருமானத்தினூடாக ஏன் அடிமட்டத்தில் கஸ்டப் படுபவர்களுக்கு உதவக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆலயங்களைத் தலைமை ஸ்தானமாக கொண்டுள்ள மக்களின் கஸ்டத்தில் ஆலயங்கள் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவுவது குறைவு என்பது மனவருத்தத்திற்கு உரியது. ஒரு ஆலயம் சிறப்பாக இருந்தால் அங்குள்ள மக்கள் சிறப்பாக உள்ளனர் என்று கருத்து. ஆனால் ஆலயம் சிறப்பாக இருந்து அங்கு வாழும் மக்கள் சிலர் ஒழுங்கான உணவின்றி ஒழுங்கான உறைவிடம் இன்றி வாடினால் ஆலயம் சிறப்பாக உள்ளதில் பயன் ஏதும் உள்ளதா என வினா எழுகிறது.


ஆலயங்களுடாக அறக்கருத்துக்கள், நல்வழிச்சிந்தனைகள், போன்றவற்றினைப் போதித்ததோடு நின்று விடாமல் கஸ்டப்படுபவர்களுக்கு பொருளாதார ரீதியிலும் எதாவது உதவிகளைப் புரிய வேண்டும். இதனை ஆலய சபையினர் முன்னெடுக்கும் போது பின்னோக்கிய சமூகத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பது உண்மை.


சில ஆலயங்களின் பரிபாலன சபைகள் சமூக மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இது தீவிரம் அடைய வேண்டும் என்பதோடு ஏனைய ஆலயங்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது தற்போது அவசியமாகின்றது 


ஓலை, ஓட்டைக்குடிசையின் அருகிலுள்ள ஆலயக் கோபுரங்கள் உயர்வதால் மட்டும் அந்தக் கிராமங்கள் உயர்ந்து செல்கின்றது எனக் கூற முடியமா? அனைவரும் கஸ்டமின்றி வாழ்கின்றனர் என்று அர்த்தமா?  எனவே ஆலய வருமானத்தின் சில குறிப்பிட்ட பகுதியையாவது ஏழைகளுக்கு உதவ ஆலயங்கள் முன்வர வேண்டும்.

ஏனைய சகோதர சமய வழிபாட்டு தலங்கள் சமூக மேம்பாட்டிற்காக சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றமை சிறப்புக்குரியதும் வரவேற்கத்தக்கதுமாகும் ஆனால் இதில் இந்து ஆலயங்கள் சமூகத்திற்கு செய்யும் பங்கு எந்தளவு என்பதை இந்து ஆலய சபையினர் சிந்திக்க வேண்டும் என்பதுடன் இதன் பங்கு மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.


இந்து ஆலயங்கள் இது பற்றி சிந்திக்கின்றனவா? அல்லது இனியாவது சிந்திப்பார்களா? அல்லது சிந்தித்தும் செயற்பட தயங்குகின்றார்களா?  சமூகத்திற்கு ஆலயங்களின் பங்கும் ஆலயத்திற்கு சமூகத்தின் பங்கும் அவசியம் என்று தமது முன்னோர் கூறியமையை மறந்துவிட்டார்களா? மக்களே ஆலயங்களை உருவாக்கினர் மக்களுக்காகவே ஆலயங்கள் உருவாக்கப்பட்டன எனவே ஆலயத்திற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு நீண்டதாகும். எனவே ஆலயத்தினர் சமயப் பணியினை மாத்திரமின்றி சமூக பொருளாதாரப் பணியினையும் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்பது எதிர் பார்ப்பாகும்.


ஆலயங்களைக் கருவாக வைத்து சாதிப்பாகுபாடும், வேறுபாடும், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாட்டினையும் தற்காலத்தில் விட்டெறிந்து அதனைச் சுட்டெரித்து மனிதனை மனிதனாக ஆலயங்கள் பார்க்க வேண்டும். அனைவரும் சமம் என்ற நிலையினை ஆலயங்கள் கொண்டு வரவேண்டும். இன்று ஒரு கிராமத்தில் சில பிரச்சினைகள் உருவாக ஆலயங்களும் காரணமாக அமைகின்றன. எனவே இவற்றையெல்லாம் விட்டு சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவ  ஆலயங்கள் முன்வர வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்...
 

 கா.அற்புதன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130080/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.