Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தொழில் செய்ய இராணுவமே காரணம்! வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு!

Featured Replies

முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தொழில் செய்ய இராணுவமே காரணம்! வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு!
 
 
முல்லைத்தீவில் சிங்கள மீனவர்கள் தொழில் செய்ய இராணுவமே காரணம்! வடக்கு ஆளுநரிடம் முறைப்பாடு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களைக் கொண்டுவந்து மீன்பிடியில் திணித்தவர் 511 படையணியின் தளபதி என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி மரியதாசன் வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார்.
 
வட மாகாண கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தனித்தனியே ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.
 
இதன்போது முல்லைத்தீவு மாவட்டப் பிரதிநிதி மரியதாசன் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களைக் கொண்டுவந்து மீன்பிடியில் திணித்தவர் 511 படையணியின் தளபதிதான்.அதேபோன்று இந்த மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்பினை மீனவர்கள் சுயமாகத் தெரிவு செய்யவிடாது குறுக்கிட்டு முன்பு இந்த சங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் இருக்க முடியாது என எழுதாத சட்டம் விதித்து தனக்கு இசைந்தவர்களைப் புகுத்தி இந்த அத்து மீறிய தென்னிலங்கை மீனவர்களிற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்தார்.
 
இவ்வாறு முதலில் 35 பேருக்கு வழங்கிய அனுமதி பின்பு 72ஆனது. அது தற்போது 2016இல் 100ஐ தாண்டி விட்டது. இவர்களுக்கான அனுமதி வழங்கியது சங்கங்களிற்கும் தெரியாது. மாவட்டப் பணிப்பாளருக்கும் தெரியாது திணைக்களத்தினர் சட்ட விரோதமான முறையில் வழங்குகின்றனர்.
 
திணைக்கள அதிகாரி சட்ட விரோதமான முறையில் அனுமதி வழங்கியதனால் அவ்வாறுவந்தவர்களும் முழுமையாக சட்டவிரோத தடை செய்யப்பட்ட மீன்பிடியில் தான் ஈடுபடுகின்றனர்.
 
இவர்களுக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முன்வரும் அதிகாரிகளுக்கு திணைக்களம் நிர்ப்பந்த அழுத்தம் கொடுக்கின்றது. எமது மாவட்டத்தில் நாம் சிங்கள மீனவர்களிற்கு எதிரானவர்கள் அல்ல என்பதன் அடையாளம் எமது மாவட்த்தின் மொத்தப் பதிவான 1200 படகுகளில் கொக்குத் தொடுவாயில் உள்ள சிங்கள மக்களின் 200 படகுகள் மாவட்டத்தின் பதிவில் உள்ளது.
 
இவ்வாறு எல்லாம் சட்டவிரோத செயல் எமது மாவட்டத்தில் இடம்பெறுகின்றது என அமைச்சருக்கு சுட்டிக் காட்டினால் அமைச்சருக்கு எதுகுமே தெரியாது என்கின்றார். ஆகவே திணைக்கள அதிகாரிகளே இச்செயலில் ஈடுபடுகின்றனர். கொக்குளாயில் வலைப்பாடு செய்த தமிழர்கள் போரின் போது விரட்டப்பட்டனர். இங்கு 8 வலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
 
தற்போது இந்த அனுமதியைப் பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் தொழில் புரிகின்றனர். எனவே முன்பு தொழில் புரிந்தவர்களிற்கு குறித்த அனுமதி பெற்றுத்தரப்படவேண்டும் .
 
கொக்குளாயில் முகத்துவாரம் மீனவர்களின் இறங்குதுறையை கடற்றொழில் பணிப்பாளர் கரைப்பாட்டிற்கு வழங்கியுள்ளார்.எனவே எமது மாவட்டத்திற்கு அரசு உதவி புரியாது விட்டாலும் நாம் வாழ்வோம். ஆனால் சட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்தினாலே எமது மாவட்ட மீனவர்கள் தன்னிறைவோடு வாழ்வார்கள் என்றார்.
 
இங்கு கருத்துரைத்த யாழ்.மாவட்டப் பிரதிநிதி பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில்,
அதிகாரிகள் மட்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்மானங்களை மேற்கொள்ளாது மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் .
 
தற்போது வடபகுதி முழுமையாக உள்ள பாரிய பிரச்சினை இந்திய மீனவர்களின் எல்லை தான்டல் விடயம். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சட்டம் அமுலாக்கப்பட்டால் தீர்வு கிட்டும் என எதிர்பார்த்துள்ளோம்.
 
கடந்த காலங்களில் 30 ஆண்டுகளாக ஆட்சியின் அரசுகள் முழுப்பணத்தையும் யுத்தத்திற்கே செலவு செய்தனர் இதனால் எமக்கு எந்தவித மானியமும் இல்லை. காக்கைதீவில் மாநகரசபையினர் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதனால் அங்குள்ள மீனவர்கள் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதனைத் தடுக்குமாறு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் முறையிட்டால் இது நீதிமன்றத்தில் உள்ள விடயம் தலையிட முடியாது என்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்பானது நாம் இறந்த பின்புதான் வரும் அதுவரை என்ன தீர்வு.
 
அதேபோல் கடற் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இவற்றிற்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்றார். மன்னார் மவட்டப் பிரதிநிதி ஆலம் தெரிவிக்கையில்,
தென்னிலங்கை மீனவர்கள் கொட்டிலாக இருந்த வாடிகளை தற்போது கல்லினால் கட்டுகின்றனர் இதனால் இது ஓர் நில அபகரிப்போ என்ற ஐயம் ஏற்படுகின்றது. மன்னார் மாவட்டத்திற்கு என்று ஓர் இறங்கு துறை இன்றுவரைக்கும் கிடையாது. இங்கு ஓர் இறங்கு துறை உடன் அமைக்கப்பட வேண்டும். காப்புறுதித் திட்டமானது ஆண்டுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனை ஆயுள் காப்புறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
 
கிளிநொச்சி மாவட்டப் பிரதிநிதி பிரான்சிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
கிளாலிக் கடற்பரப்பில் கரையை அண்டி மட்டும் அல்லாது நடுக்கடலிலும் தடிமூலம் வலை வீசப்படுகின்றது. இதேபோன்று இரணைதீவு, பாலைதீவுகளை அண்டிய பிரதேசங்களில் இரும்பு பைப்புகள் ஒட்டப்பட்டு அவற்றினை கொண்டுவந்து கடலில் நட்டு யாழ்ப்பாணம் மீனவர்கள் தொழில் புரிகின்றனர் இவை தடை செய்யப்பட்ட முறமை. இவற்றினை உடன் தடை செய்ய வேண்டும் அல்லது இதற்கான அனுமதியினை எம்க்கும் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் மீனவர்களினால் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டது.
 
                              1458186550_reginold%20kure1.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.