Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் வந்தார் கல்வியமைச்சர்: கோட்டையில் மத்திய கலாசார நிலையம் திறப்பு!

Featured Replies

யாழ்ப்பாணம் வந்தார் கல்வியமைச்சர்: கோட்டையில் மத்திய கலாசார நிலையம் திறப்பு!
 
 
யாழ்ப்பாணம் வந்தார் கல்வியமைச்சர்: கோட்டையில் மத்திய கலாசார நிலையம் திறப்பு!
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று யாழ். மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
 
இன்று காலை பலாலி விமானப்படைத்தளத்தை வந்தடைந்த கல்வியமைச்சர், யாழ். ஒல்லாந்தர் கோட்டையினுள் அமைக்கப்பட்ட நகலுரு மற்றும் நூல் விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார். அத்துடன், மத்திய கலாசார நிலையமும் கல்வியமைச்சின் அனுசரணையுடன் திறந்து வைக்கப்பட்டது.
 
குறித்த மத்திய கலாசார நிலையத்தில், பௌத்த மதச்சின்னங்களே அதிகளவில் காணப்பட்ட போது, அதனை அவதானித்த கல்வியமைச்சர், குறித்த நிலையத்தில் அனைத்து மதங்களைச் சார்ந்த சின்னங்களையும் சரிசமமாக பகிர வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
 
இந்த நிகழ்வுகளில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் மற்றும் கல்வியமைச்சு சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
                                                       akilaviraj1.jpg
 
                                                       akilaviraj2.jpg
 
  • தொடங்கியவர்

யாழில் மத்திய கலாசார நிலையம் திறந்து வைப்பு

யாழில் மத்திய கலாசார நிலையம் திறந்து வைப்பு

March 18, 2016  03:56 pm

Bookmark and Share
 
யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்குள் மத்திய கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடம் அமைப்பதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் இன்று இடம்பெற்றது.

மத்திய கலாசார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் ஆகியனவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னங்களை இங்கு காட்சிப்படுத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

36 வருடங்களுக்கு முன்னைய தொல்பொருள் அகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் செய்யப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர கட்டிடம் அமைத்து, தொல்பொருள் சின்னங்களை காட்சிப்படுத்தவுள்ளன.

இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.