Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சியோனிசமும் தமிழிசமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியோனிசமும் தமிழிசமும்

உலகிலுள்ள புராதன இனங்களுள் தமிழனத்தைப் போன்றே யூத இனமுமொன்று.  மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறியவோர் பிரதேசம்தான் அந்த இனத்தின்பூர்வீகத் தாயகம். ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்திNலுயே சொலமன், டேவிட் போன்ற அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அந்த இனம் தன் தாயகத்தைப் பறிகொடுத்து அந்நியரின் ஆளுகைக்குள் வாழப் பழகிக்கொண்டுவிட்டது. இயேசுநாதர் வந்து யூதர்களின் ராஜா நான், என்னைப் பின்தொடருங்கள் என்று கூறியபோதும் அடிமை மனப்பான்மைக்குள் மூழ்கிப் போய்விட்ட யு+த இனம் அவரைக்காட்டிக் கொடுத்து,  ஆக்கினைக்கு உட்படுத்தி, அவருக்கு முட்கிரீடம் சூட்டிச் சிலுவையிலறைந்தது.  19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரை (1896) தாங்கள் இழந்து போன இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் பெறவேண்டுமென்ற வைராக்கிய உணர்வு யு+த இனத்திற்கு இருக்கவில்லை.  தியடோர் ஹேர்சியென்னும் ஒரு யு+தர்தான் தாங்கள் மீண்டும் தங்கள் தாயகமான இஸ்ரேலில் குடியேறித் தங்கள் இராச்சியத்தையமைக்க வேண்டுமென்ற கோஷத்தை முன்வைத்தார்.  

மன்னன் சொலமனால் “சீயோன்” மலையில் கட்டப்பட்ட தேவாலயமே இஸ்ரவேலர்களின் மிகமுக்கிய ஞாபகச் சின்னமென்பதால் தங்களது தாயகத்தை மீட்கும் தங்கள் அசையாத கொள்கைக்கு அந்த மலையின் பெயரையே வைத்தார்கள்.  அதனை “சியோனிஸம்” என்று கூறுகிறார்கள்.  உலகிலுள்ள கம்யு+னிஸம், சோசலிசம், மாவோசிஸம், ட்ரொஸ்கிஸம், லெனினிஸம், ஸ்டாலினிஸம், நாசிசம், பாஸிசம், இஸ்லாமிஸம், செக்கூலரிஸம் போன்ற பல்வேறுபட்ட அரசியற் கொள்கைகளைப் போன்றதே சியோனிஸமும்.  தங்கள் தாயகத்தை மீட்பதற்காகவே சியோனிஸ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.  அவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பத்திரண்டு வருடங்களின் பின்னரே 1948 இல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த தறுவாயில் இஸ்ரவேலென்னும் தேசம் உருவானது. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகத் தங்கள் தாயகத்தையும் அதன் ஆடசியுரிமையையும் இழந்து நாடு நாடாக அலைந்த யு+த இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது மிகக் கொடிய இனப்படுகொலைக்கும் உள்ளாகக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்து தனது விடாப்பிடியான சியோனிஸக் கொள்கையால் தனது தாயகத்தை இறுதியில் வல்லரசு நாடுகளின் உதவியோடு பெற்றுக்கொண்டது.  எத்தனை துன்பங்களை அனுபவித்த போதும் தாங்கள் யு+தர்கள், ஓர் புராதன நாகரீகத்துக்குச் சொந்தக்காரர்கள் என்ற உணர்வே அவர்களை ஒன்றாகக் கட்டி வைத்திருந்தது.  இன்றுவரை அவர்கள் இயேசுவைக் கிறிஸ்துவாக அதாவது மெஸாயா எனப்படும் தேவதூதராக ஏற்றுக்கொள்ளவில்லை.  இருப்பினும் அனேக கிறிஸ்தவ நாடுகள் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை.  அவர்களுக்கான வாழ்விடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் பெரும்பங்காற்றின.  குறிப்பிட்டுச் சொல்வதாயின் சியோனிஸம் மறைமுகமாக மேற்குலகினால் அங்கீகரிக்கப்பட்டே இருக்கின்றது. 

மாறாக இயேசுவை ஓர் தேவதூதராக அதாவது நபியாக ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் அடிப்படை வாதிகளுக்கு மேற்குலகில் வரவேற்பில்லை.  அவர்களைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்திலேயே மேற்குலகு நோக்குகின்றது.  மேலும் கூறுவதாயின் சர்வதேச அரசியல் ராஜதந்திர விளையாட்டில், இஸ்லாமிய நாடுகளின் உலக வல்லாதிக்கப் பரம்பலை ஒடுக்குவதற்கு  இஸ்ரேலென்னும் யு+த தேசமே தடுப்புக் காயாக (செக்) மேற்குலகினால் வைக்கப்பட்டுள்ளது.  மேற்குறித்த விடயங்களை இங்கு நான் கூறுவதற்கான நோக்கம் சியோனிஸத்துடன் எமது நிலையை ஒப்பு நோக்குவதற்காகத்தான்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் அதன் மேற்கிலும் கிழக்கிலுமிருந்த இஸ்லாமியப் பிரதேசங்களை ஒரு நாடாக்கி, முகம்மதலி ஜின்னா பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை முன்வைத்து வெற்றியும் பெற்றார்.  இத்தனைக்கும் அவர் சுதந்திரத்திற்காகப் போராடிய அகில இந்திய காங்கிரஸின் ஓர் முக்கிய தலைவர்.  அவரது வீட்டு வாசலுக்கு வந்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி பிரிவினையைக் கைவிடுமாறு கேட்ட  மகாத்மா காந்தியின் வேண்டுகோளைக் கூடப் பொருட்படுத்தாது அவருக்கு முன்னாலேயே புகைபிடித்தவாறு தனது பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட முடியாது என்று கர்வத்துடன் கூறினார். காலம் நல்ல முறையில் கனிந்திருந்ததால், பிரிட்டிஷாருக்கும் பிரித்தாளும் தந்திரம் பிடித்திருந்ததால் பாகிஸ்த்தான் தனிநாடாகப் பிரிந்தது.  பின்னர் பழிக்குப் பழியாக இந்திரா காந்தியின் தயவோடு கிழக்குப் பாகிஸ்தான் பங்களா தேசமாகப்; பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டது.

தேசிய இனங்களின் சுதந்திர சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான வாழிடங்கள் தனிநாடுகளாக உருவாக்கப்பட்ட இரண்டாம் உலக யுத்த சு+ழ்நிலை இனி வரப் போவதில்லை. சுதந்திரமடைந்த நாடுகளுக்குள் அடிமைப்பட்டுப் போன எம்மைப்போன்ற தேசிய இனங்கள் இன்னுமொரு மூன்றாம் உலக யுத்தத்துக்காகக் காத்திருக்கவும் முடியாது. எமது துரதிஸ்டம் நல்ல சந்தர்ப்பங்களை இழந்து போனோம்.

ஈ வே ரா பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த போது கூட அவரது உள்நோக்கு தனித்திராவிடநாட்டுக்காக இருந்தாலும், திராவிட சமுதாயத்தின் மறுமலர்ச்சியிலேயே தனது கவனத்தைச் செலுத்தியதால், முக்கியமான குறிக்கோளாகிய தனித்திராவிட தேசத்தைக் கருத்திலெடுக்க முடியாது போய்விட்டது.  அவருக்கு முதன்மையானதாக பிராமண ஆதிக்கத்துக்கான எதிர்ப்பே இருந்தது.
மேலும் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய திராவிட தேசங்களில் திராவிட நாட்டுக் கோரிக்கை வலுப்பெறவுமில்லை.  அது பொய்யாய் கனவாய் புனைகதையாய் போய்விட்டது.  பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும், தற்போதுள்ள கிரகஸ்தர் (வீட்டுக்காக உழைப்பவர்) கருணாநிதியும் திராவிட நாட்டுக் கோரிக்கையைச் செல்லாக்காசாக்கி விட்டதால், பெயரளவில் திராவிடப் பெயர் தாங்கிய பலகட்சிகள் காளான்களாக முளைத்தனவே தவிர அக்கட்சிகளின் அடிப்படை அரசியற் கோட்பாடான திராவிடநாட்டுக் கருத்தியல் அக்கட்சியின் தலைவர்களுக்கே தெரியாத அல்லது மறந்து போனவென்றாக ஆகிவிட்டது.

கன்னடரான பெரியார் இ வெ இராமசாமி நாயக்கர் சென்னை வாசியாக இருந்ததால் தமிழர்களுக்குத்தான் அவரால் தலைவராக இருக்க முடிந்ததேயொழிய வேறு மானிலத்தவர்களையும் ஒன்று படுத்திய திராவிட இயக்கத்தை அவரால் வளர்த்தெடுக்க முடியவில்லை.  இன்றைய கருணாநிதியும் ஓர் தெலுங்கு வம்சாவழியினர்.  தமிழைவிடவும் தெலுங்கில் புலமைமிக்வர்.  தெலுங்குப் படங்களுக்கு கதை வசனமெழுதுமளவிற்கு அவரது புலமை சிறந்திருக்கிறது.  உண்மையில் அவரால் தன்னையொரு தூய தமிழனாhக எண்ணவே முடியாது. இதே போன்றே தமிழர் தேசியத்தை உளமார்ந்து நேசிக்க தெலுங்கர்களான வை. கோபாலசாமியவர்களாலோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்), விஜயகாந்த் அழகர்சாமி நாயுடு (தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்) அவர்களாலோ முடியாது.  அம்மா ஜெயலலிதா அவர்களோ ஐயங்கார் பிரரமணி.  அவரின் தலைமையிலியங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஓர் மலையாளியான எம்ஜிஆர் அவர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டது. 

இந்த நிலை தற்போதைக்கு மாறப் போவதில்லை. தமிழர் தேசியத்தின் மீதான உண்மையான பற்றோடு தமிழர் படையொன்று அரசியல் ரீதியில் வளர்ச்சியடைந்து தமிழ்நாட்டில் வேரூன்றி, திராவிட பாரம்பரியத்தை முன்வைத்து செயற்படும் அரசியற் தலைமைளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்தாலன்றி, தமிழர் தேசியம் தமிழ்நாட்டில் பலம்பெறப் போவதில்லை.  தமிழர் தேசியம் தமிழ் நாட்டில் பலம்பெறாவிட்டால் ஈழதேசியமும் தன்னிலையிழந்து சோர்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.

அதனால், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களைப் பீடித்திருக்கும் தற்போதைய அவல நிலையை உணர்ந்து தமிழர் தேசியத்துக்காக யார் போராடுகிறார்களோ, குரல் கொடுக்கிறார்களோ, அத்தோடு யார் தகுதியனவர்களாக அதாவது, திராவிட பாரம்பரியமற்ற தமிழர்களாக மட்டுமே இருக்கிறார்களோ அவர்களுக்கே “நாம் தமிழர்” என்னும் உண்மைப் பாசத்தோடு  ஆதரவை அளித்து அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் பு+ரண ஆதரவு இருந்தால், எமது தமிழினத்தை இன்று பீடித்துள்ள அவல நிலை நீங்கி தமிழ் நாட்டில் தமிழராதிக்கம் வலுப்பெறுவது நிச்சயம்.

தமிழ்நாட்டில் வந்து வாழ்வது யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் ஆள்வது நாமாக அதாவது தமிழனாக இருந்தால் மட்டுமே எதிர்காலம் நமக்காக மலரும். அல்லாவிடில் திராவிடமென்னும் பெயரில் நீர்த்துப்போன கொள்கைகளோடு எம்மீது தங்கள் அரசியலாதிக்கத்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் போலிகள் அல்லது தமிழர் தேசியத்தின்மீது உண்மையான பற்றுக்கொள்ளாத முகமூடிகளிடமே நாம் சிக்குப்பட்டுத் தவிக்க நேரிடும்.

யு+தர்களின் சியோனிஸக் கோட்பாடு முழுவெற்றியடைந்து அவர்களுக்கானவோர் நாடு அவர்களின் தாயகத்திலேயே உருவானது போல, ஜின்னாவின் பாகிஸ்தான் கோட்பாடு வெற்றிடைந்ததுபோல, தமிழர்களின் “தமிழிஸம்” என்னும் கருத்தியலையும் வெற்றியடையச் செய்ய “நாம் தமிழர்” என்னும் கோஷத்தோடும், அதற்கான சிறந்த கொள்கைகளோடும் யார் போராடப் புறப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கே. முற்றான தகுதியுண்டு. 

நாம் பல சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்.  தற்போது தமிழனைத் தமிழனே ஆளவேண்டுமென்னும் உணர்வு வெளிப்பட்டு நிற்கிறது.  தமிழீழ மக்கள் கொத்துக் கொத்தாகக் கொலையுண்டபோது, சொத்துச் சேர்த்த கருணாநிதிபோன்ற தமிழரல்லாதவர்கள் காலையில் நாஸ்தா (காலையுணவு) பண்ணிவிட்டு வந்திருந்து மக்களையேமாற்ற உண்ணாவிரதமிருந்து,  பத்து மணிக்கு குளிர்பானத்தை அருந்திவிட்டு, மத்திய அரசை வற்புறுத்தி யுத்தத்தை நிறுத்தப் பண்ணிவிடடேன் என்று பீலா விட்டார்.  அப்போதெல்லாம் எமது ஈழத்து உறவுகள் தங்கள் தலைகளின்மீது விழுந்து கொண்டிருந்த ஷெல்களுக்கும், விமானக் குண்டு வீச்சுகளுக்கும் தப்புவதற்காக அலறியடித்தபடி குஞ்சு குருமான்களோடு பங்கர் பங்கராக ஓடியொழித்தர்கள். சிதறிச் செத்தார்கள.; அங்கே வெறுங்கையோடு வந்து தமிழகத்தையே தனது வாய்ச் சவடாலால் சுருட்டி, தெற்கு ஆசியாவிலேயே பெரும்பணக்காரனாகியவர் உண்ணாவிரத நாடகமாடினார். சிறிதேனும் தமிழினவுணர்வில்லாது உழுத்துப்போன திராவிடமாயையைக் காட்டித் தமிழர்களை ஏமாற்றிய இத்தகைய கபடர்கள் இனிமேலும் எமக்குத் தேவைதானா என்பதைத் தமிழுலகு சிந்திக்க வேண்டும்.  புலம்பெயர் தமிழர்கள் மனம் வைத்தால் “நாம் தமிழர்” என்று துணிந்து குரல்கொடுக்கும் எமது உறவுகளைக் கைதூக்கி விடுவது நிச்சயம் சாத்தியமாகும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை அளியுங்கள், நிதி குறைந்தவர் காசுகள் அளியுங்கள். அதுவுமற்றவர் தூற்றாது போற்றுங்கள்.   
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.