Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழர் பேரவையின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு  23 ம் திகதி மார்ச் மாதம் 2016 இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செயப்பட்டுள்ளது.  தொடர்ச்சியாக  நடைபெற்று வருகின்ற  தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை சர்வதேச நாட்டுத் தலைவர்களுக்கு  அறியப்படுத்தவும் அவர்களின் அழுத்தங்கள் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினையும் பெற்றுக் கொள்ளும் முகமாகவும் இன் நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 23 ம் திகதி மார்ச் மாதம் 2016 இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செயப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை சர்வதேச நாட்டுத் தலைவர்களுக்கு அறியப்படுத்தவும் அவர்களின் அழுத்தங்கள் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினையும் பெற்றுக் கொள்ளும் முகமாகவும் இன் நிகழ்ச்சி ஒழுங்கு செயப்பட்டுள்ளது.

   

இந் நிகழ்விற்கு அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தலைமை வகிப்பதுடன் பிரதம விருந்தினராக தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டு விவகார அமைச்சர் {ஹகோ ஸ்வைர் (Rt Hon Hugo Swire MP) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மேலும் பிரித்தானிய அரசின் கொள்கைகளிலும் முக்கியமான முடிவுகளிலும் தீர்மானகரமான செல்வாக்கு செலுத்தும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரித்தானியாவிலுள்ள இந்திய சமூகத்தின் செல்வாக்கு மிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கவுள்ளனர். தமிழ் சமூகத்தினை பிரதிபலிக்கும் வௌ;வேறு துறை சார்ந்த தமிழ் மக்களும் கலந்து கொண்டு எம் தாயகத்தில் உள்ள நிலைமைகளை தமிழரல்லாத பிரதிநிதிகளுக்கு விளங்கப்படுத்துவதற்கும் அவர்களை தமிழர்களின் கோரிக்கைளுக்கு ஆதரவாக வென்றெடுக்கவும் இன் நிகழ்வு சந்தர்ப்பம் வழங்கும்.

இதே போன்று கடந்த வருடமும் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அனனத்து கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியமான அமைச்சர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு தமது முழு ஆதரவினை தெரிவித்திருந்தமை முக்கிய அம்சமாகும்.

இன் நிகழ்வில் கலந்து கொள்ள பெருவாரியான தமிழ் மக்கள் அணுகியிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையான இடவசதியே இருப்பதால் அனுமதிச் சிட்டை கிடைக்காதவர்கள் கலந்து கொள்ள முடியாமைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை மனம் வருந்துகின்றது. இது போன்று எம் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் வரவேற்கின்றது.

தாயக மக்களின் உரிமைக்கும் நீதிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் விவேகத்துடனும் செயல்திறனுடனும் பணி புரிந்து ஏனைய மக்களை எம் பக்கம் வென்றெடுக்கும் என்று உறுதியளிக்கின்றது .

http://www.seithy.com/breifNews.php?newsID=154033&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.