Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க! - சபையில் கூட்டமைப்பு வலியுறுத்து; புகைப்படங்களை சமர்ப்பித்தார் சுமந்திரன் 

Featured Replies

வீட்டுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க! - சபையில் கூட்டமைப்பு வலியுறுத்து; புகைப்படங்களை சமர்ப்பித்தார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் அரசால் நிர்மாணிக்கப்படுகின்ற 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் நீண்டகால பாவனைக்குப் பொருத்தமற்றது என சபையில் சுட்டிக்காட்டிய பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இந்தத் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள இருப்பு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த அவர் அது தொடர்பான புகைப்படங்களையும் சபா பீடத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை, இந்த வீட்டுத்திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், குறைபாடுகளை எடுத்துக் கூறாமல் இருக்கமுடியாது என்றும், வீடுகளின் பெறுமதி குறித்துப் பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற பிரதமரின் பொருளாதார உரைமீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"வடக்கு, கிழக்கில் 65,000 வீடுகளை அரசு நிர்மாணிக்கின்றது. ஆனால், இங்கு 1,37,000 வீடுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்திய அரசு 50,000 வீடுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசின் பங்கு என்ன என்று நாம் கேட்டோம். அதற்கமைய 65,000 வீடுகளைக் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்திய வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற வீடொன்றுக்காக 5,50,000 ரூபா செலவிடப்படுகிறது. ஆனால், அரசின் 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் ஒரு வீட்டை நிர்மாணிக்க 21 இலட்ச ரூபா செலவிடப்படுகிறது. இது இந்திய வீட்டின் மதிப்பீட்டைவிட 3 மடங்கு தொகையாகும். வடக்கு, கிழக்குக்கு 1,37,000 வீடுகள் தேவையாக உள்ளன. இந்நிலையில், ஒரு வீட்டை அமைக்கும் செலவில் 2 வீடுகளை அமைக்க முடியும். கல் வீடுகள் 2,3 சந்ததிக்கு நிலைத்திருக்கும். யாழ்ப்பாணத்தில் எனது பாட்டனார் காலத்தில் கட்டப்பட்ட எமது கல் வீடு இன்றும் உள்ளது. நான் அந்த வீட்டில்தான் தற்போதும் வசிக்கின்றேன். இந்நிலையில், நிர்மாணிக்கப்படுகின்ற இருப்பு வீடுகள் குறித்து நாம் பார்க்கவேண்டும். இது தொடர்பில் பலர் கருத்துகளை வெளியிட்டிருந்தனர். இதனால் அந்த வீடுகளை நான் நேற்று (நேற்றுமுன்தினம்) நேரில் சென்று பார்வையிட்டேன். அந்த வீடுகளை புகைப்படமும் எடுத்துள்ளேன்.

இந்த வீடுகளில் இடைவெளிகள் காணப்படுகின்றன. உடையும் நிலையும் இருக்கின்றது. அது தொடர்பான புகைப்படங்களை நான் இந்தச் சபையில் சமர்ப்பிக்கின்றேன். இதில் பயன்படுத்தியுள்ள சில பொருட்களை அசைத்துப் பார்க்கும்போது அசைகின்றன. சூட்டைத் தணிப்பதாகக் கூறப்படுகின்றபோதும், அவை முழுமையாக இடியக்கூடும். எமது மக்களுக்கு அரசு 65,000 வீடுகளை இலவசமாக வழங்குகின்றதற்கு நாம் நன்றி கூறுகின்றோம். அதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், வீடுகள் வழங்கப்படுகின்றது என்பதற்காக அதிலுள்ள குறைபாடுகளைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. வீடுகள் பெற்றுக்கொண்டவர்கள் சந்தோசமடைகின்றனர். தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வீட்டை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருளை இங்கு வாங்க முடியாது. இதேவேளை, வீடுகளின் பெறுமதி தகுதியானதா என்பதைப் பார்க்கவேண்டும். இந்த வீடுகள் 5 ஆண்டுகள்கூட நிலைக்குமா என்று தெரியவில்லை என பொறியியலாளர்கள் கூறுகின்றனர். 65,000 வீடுகள் கட்டப்படுகின்றன என்றால், அவை நீண்டகால பாவனைக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். எனவே, அரசு இதனை மீள்பரிசீலனை செய்யவேண்டும். இந்த வீட்டுத் திட்டத்திற்கான கேள்வி மனுக் கோரலிலும் பிரச்சினை இருக்கின்றது. அது தெரிந்த விடயம். அதனால் அதை நான் பதிவுசெய்ய விரும்பவில்லை. பல உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் தமது கழிவுகளை வெளியேற்ற இடங்களைத்தேடிக்கொண்டிருக்கின்றன. அதற்கு நீங்கள் இடமளிக்கப் போகின்றீர்களா? நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுக்கு தளபாடங்களும் வழங்கப்படுகின்றன. எமது தேவை அதுவல்ல. ஒரு வீடுதான் எமக்குத் தேவை. அது நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். எனவே, நீங்கள் உங்கள் நிலை குறித்து மீளாய்வு செய்யவேண்டும்'' - என்றார்.

http://malarum.com/article/tam/2016/03/25/14102/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.