Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2007 ஆம் ஆண்டு எண்கணித பலன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2007 ஆம் ஆண்டு எண்கணித பலன்கள்

நாம் உலகில் பிறந்த பின் தன்னை யார் என்று அறிந்து கொள்வதிலும், தனக்கு வாழ்நாளில் என்ன நடக்கும் என்பதையும், உயர்வான பலன்களை பெறுவதிலும் ஆர்வம் கொண்டாலும் சிலருக்கு மட்டுமே நற்பலன்கள் அதிகம் வந்து சேர்கின்றன. பலர் ஏனோ தன் நிலையிலிருந்து பெரிய மாற்றங்களை அடைய முடிவதில்லை. ஒருவனுக்கு என்ன நோய் உள்ளது என்பதை துல்லியமாக "ஸ்கேன்' மூலம் தெரிந்து அதற்கேற்ப (மருந்தினால்) சிகிச்சையால் உடல் நிலையை உயர்வடையச் செய்ய முடியும் என்பது நாம் காணும் விஞ்ஞான உண்மை. இதுபோல் தன் பிறந்த திகதியின் ஆதிக்கத்திலுள்ள "கோளின்' இயல்பை அறிந்து அதன் ஆற்றலை பெறத்தக்க வகையில் "பெயர் எண்ணை' அமைத்துக் கொண்டால் வாழ்நாளில் உயர்வான பலன்களை அடைய முடியும் என்பதை எண்ணற்றவர்கள் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள். அதற்கமைய உங்களின் அதிபதியின் தன்மைகளையும், இவ்வாண்டு 2007 இல் உங்கள் எண்ண பலன்கøயும் அறிந்து கொள்வோம்.

1 2 3 4 5 6 7 8 9

1 ஆம் எண்:

அ, ஐ, ஒ, கி இல் பெயரின் முதல் எழுத்து அமைந்தாலும் 1, 10, 19, 28 ஆம் திகதிகளில் பிறந்திருந்தாலும் பெயர் எண் 1 ஆம் எண்ணில் அமைந்தாலும் அவர்கள் 1 ஆம் எண்ணுக்குரியவர்கள். நாம் வசிக்கும் பூமியிலிருந்து முதலாம் எண்காரர்கள் உங்களை ஆட்சி செலுத்தி வரும் சூரியன் 149.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது. பூமியிலிருந்து ஒரு ஜெட் விமானத்தில் மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் நிற்காமல் தொடர்ந்து சென்றால் 18 வருடங்கள் பயணம் செய்தால் தான் சூரியனை அடைய முடியும். உஷ்ணத்தை அதிகமாக உருவாக்கும் ஹைட்ரஜனும், ஹீலியமும் நிறைந்த கோளமாகும். எனவேதான் இந்த ஆற்றலில் உள்ள 1, 10, 19, 28 திகதிகளில் பிறந்தவர்களின் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாகவே உள்ளதை அறியலாம்.

2007 இல் வெளியூர் பிரயாணங்களால் நன்மையும், மன உளைச்சலும், குழந்தைகளால் குதூகலமும் உண்டு, பிறரின் உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து அபிவிருத்திக்கு உதவிடும். உடல் நலத்தில் அதிக அக்கறை வேண்டும், உஷ்ணத்தினால் பாதிப்புகள் வரலாம், திடீர் மாற்றங்களால் பணியாளர்கள் சஞ்சலமடையலாம். தொழில் அதிபர்களே கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும் வகையில் இருக்கும். குழந்தைகளால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் கூடும். வியாபாரிகளே அரசு துறையில் எப்öபாழுதும் விழிப்புடன் இருந்தால் வேண்டிய பதவி உயர்வு, பண பலன்கள் பெறலாம். அதிகாரிகளின் அடக்குமுறை சற்று கூடுதலாகும். நீங்களும் சாமான்யரா? பணியாளர்களே, குடும்பத்தில் தேவையற்ற வாதங்கள் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள்தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே, அதனால் விட்டுக் கொடுத்து போவதுதான் நல்லது. பதவிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேரும் அரசியல்வாதிகளே. பெண்களைப் பொறுத்தவரை நினைப்பவைகளை உண்மையாக்கிக் கொள்ளலாம். நிறைந்த பலனை வெகுவாக பெற்று மகிழ்வர் விவசாயிகள். உத்வேகம் கூடுதலாகக் கிடைத்து, ஆற்றலை வளர்த்துக் கொள்வர் மாணவர்கள். பொதுவாக திருப்தியான வருடமாகும்.

2 ஆம் எண் :

2, 11, 20, 29 திகதிகளில் பிறந்திருந்தாலும் கீ, ஓ, ஆ இல் பெயரின் முதல் எழுத்து 6 அமைந்தாலும், 2 ஆம் எண்ணில் பெயர் அமைந்தாலும் அவர்கள் இரண்டாம் எண்ணுக்குரியவர்கள்.

இவ்வாண்டு உங்கள் ஆட்சி செலுத்தி வரும் நாயகன் சந்திரன். நாம் வாழும் பூமியிலிருந்து சுமார் 3, 84,000 கி.மீ. தூரத்தில் உள்ளது. கண்ணாடி மீது பட்ட ஒளியைப் போல யார் எதை சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் தன்மை தானாக வந்து சேரும். அதுவே வெளிப்படையாகவும் அமையும். நல்லவர்களின் பழக்கங்களை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்வது சிறப்பாகும். பொதுவாக நீர் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, இருமல், மனோ வியாதிகள் மற்றும் சர்க்கரை, பிறப்பு உறுப்பு வியாதிகள் வர வாய்ப்புள்ளதால் எப்பொழுதும் சற்று உஷாராகவே இருப்பது நலம். இவ்வாண்டு வெகுவான முற்றேற்றத்தை விரைவாக காண முடியும். மேலும் விட்டுப்போன பணிகள் மீண்டும் தொடரும், கடல் கடந்த வியாபாரம் விறு விறுப்படையும்,. சொல்வது எல்லாம் சிறப்பாக முடியும் தொழில் அதிபர்களே. வங்கி இருப்பை கூட்டுவதுடன் வாங்கிய கடனையும் அடைத்து விடுவர். இந்த எண் கொண்ட வியாபாரிகள் எந்தப் பொருளை விற்பனைக்கு விடுத்தாலும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வர். தலைமை தங்கள் மேல் தனி பிரியம் காட்டும். பெண் ஊழியர்கள் வைத்ததுõன் சட்டம், வேண்டிய உதவிகளை வெகுவாக அடையலாம் பணியாளர்களே. எல்லா சிறப்புகளும் உண்டு. சிற்சில நெருடல்களை அதிகாரிகள் ஏற்படுத்தலாம். ஆதலால் கவனம், மறைமுக எதிர்ப்புகள் விலகிடும். உங்கள் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் செல்வாக்கை தருவர். அரசியல்வாதிகள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கடினமாக இருக்கும். உஷ்ண நோயினால் அவதியுறும் வாய்ப்பு பெண்களுக்கு உள்ளது. அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு நல்லது.

3 ஆம் எண் :

3, 12, 21, 30 ஆம் திகதிகளில் பிறந்தாலும் இ, எ, ஃ, கு இல் பெயரின் முதல் எழுத்து அமைந்தாலும், பெயர் எண் 3 இல் அமைந்தாலும் இவ்வாண்டு உங்களை உயர்வு வழிக்கு கொண்டு வரும் நாயகனான குரு இருக்கிறார்.

நாம் வாழும் பூமியிலிருந்து 768 மில்லியன் கி.மீ. தூரத்தில் குரு உள்ளது. சூரியனுடைய ஒளியைப் பெற்று தங்கம் போன்று நிறம் உண்டாகிறது. அதிக பருமனுடைய இக்கோளில் ஹைட்ரஜனும், ஹீலியமும் மிக அதிகமாக இருப்பதால் 3, 12, 21, 30 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் தோல் ஒவ்வாமையால் தவிக்கிறது. இரத்தம், இனிப்பு, காது சம்பந்தமானவைகளாலும் அல்லலுற வாய்ப்புள்ளதால் உடலை பேணிக் கொள்ளவும்.

இதுவரை ஏற்பட்ட இழுபறி நிலை மாறிவிடும், முடிந்து விட்டது என ஒதுக்கிய வேலைகள் மீண்டும் தொடரும், தொழிலாளர்களின் மனபூர்வ ஒத்துழைப்பு தொழில் அதிபர்களுக்கு உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சுற்றுலா, வாகன வசதி, வீடு கட்டுதல், நகை வாங்குதல் போன்றவைகளுடன் வியாபாரமும் பெரிய வளர்ச்சியை காணலாம் வியாபாரிகளே. பணியின் நிமித்தம் அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம், தேவையான நேரத்தில் அரசு கடன்கள் கிடைக்கப் பெற்று உதவிகரமாக அமையும் பணியாளர்களே. அயல் நாட்டு “பயணங்கள், புதிய பதவிகள், பிரபலங்கள் தொடர்பு, தொண்டர்களின் ஆரவாரம் ஆகியவைகளால் மனம் பூரிப்படையும். அரசியல்வாதிகளுக்கு பல பெருமைகளை பெற்றுத் தரும். கணவருடன் இணக்கமான போக்கு ஏற்படும். பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் சேர்வர். பெண்களின் நிலைகள் உயர்த்தப்படும். புதிய நிலங்கள் வாங்கலாம், வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டு. பூச்சிகளால் பயிர்கள் பாதிக்கப்படலாம் விவசாயிகளுக்கு. படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும், விளையாட்டில் புகழும் மாணவர்களுக்கு கிடைக்கும்.

4 ஆம் எண் :

4, 13, 22, 31 ஆம் திகதிகளில் பிறந்திருந்தாலும் ஈ, கூ, M இல் பெயரின் முதல் எழுத்து அமைந்திருந்தாலும் பெயர் எண் 4 இல் அமைந்திருந்தாலும் இந்த ஆண்டு உங்கள் நாயகனான ராகு பூமியைச் சுற்றியபடியே சந்திரனும், சூரியனும் உள்ளனர். சுற்றி வரும் பொழுது சூரியனுக்கு நேர் கோட்டில் வரும். பொழுது வடக்கு பக்கம் பெரிய அளவில் ஏற்படும் நிழல் கோளம்தான் என்றாலும் ஆற்றல் மிகுந்ததுதான். கரும்புகையாக இருப்பதால் சூரியனின் ஆற்றலை அதிகமாக பெற முடிவதில்லை. எனவே, கழலை, வயிற்று நோய், இருமல், மதிமயக்கம், முதுகு கோளாறு, வாயு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை.

போட்டி, பந்தயம், திடீர் பண வரவுகளால் மனம் மகிழும். துணைவியாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை வேண்டும். அரசாங்க ஆதரவு அதிகமாக உண்டு தொழில் அதிபர்களுக்கு. இன்பகரமான சூழ்நிலைகள் உண்டு, பொறாமைகாரர்களின் சதியையும் முறியடிக்கலாம், அதிக சிரத்தையுடன் புதிய வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் இழுக்கலாம் வியாபாரிகளே. உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கங்களால் உங்கள் செல்வாக்கு உயரும். பதவி உயர்வுகளும், தேவையான இடமாறுதல்களும் சிலருக்கு கிடைத்திடலாம் பணியாளர்களே. பெரிய பதவிகளை நினைத்து செயல்பட்டு தலைமையின் கோபத்திற்கு ஆளாகாமல் இயல்பான நடவடிக்கைகளில் தங்கள் எண்ணங்களை செலுத்துவது அரசியல்வாதிகளுக்கு நல்லது. சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, வெளியூர் பயணங்கள், சொந்தங்களிடம் பாராட்டு பெறுவது நிறைய பெண்களுக்கு உண்டு. சொத்து பிரச்சினைகளால் நீதிமன்றம் செல்ல நேரிடலாம். கால்நடைகளால் ஆதாயம் குறைவு விவசாயிகளே. நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு பழகுவது சிறப்பாகும், அதிக கவனம் படிப்பிலும் தேவை மாணவர்களே.

5 ஆம் எண் :

5, 14, 23 ஆம் திகதிகளில் பிறந்தாலும் உ, ஏ, N, ஙீ இல் பெயரின் முதல் எழுந்து அமைந்திருந்தாலும், பெயர் எண் 5 இல் அமைந்தாலும் இவர்கள் 5 ஆம் எண்ணுக்குரியவர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு ஆற்றலை அள்ளித் தெளிக்கும் புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதாவது நம் பூமியிலிருந்து 208 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது. இதில் அ மிலங்கள் நிறைந்த தண்ணீர் போன்ற ஒரு உருண்டையை போலுள்ளது. சூரியனிடமிருந்து வாங்கிய ஒளியை தன்னகத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு பிரதிபலிப்பதில்லை. எனவேதான் 5, 14, 23 திகதிகளில் பிறந்தவர்கள் அதிக அறிவுடன் செயல்பட முடிகிறது. நரம்பு தளர்ச்சி, மனநோய்கள், சளித்தொல்லை, வாதம் போன்றவைகள் அணுகலாம் உஷார்.

பிரபலங்களால் பாராட்டுக்களும், வயிறு உபாதையும், வழக்கில் இழுபறியும், ஊழியரின் ஒத்துழையாமையும் தொழில் அதிபர்களுக்கு ஏற்படலாம். வியாபாரத்தில் குறுக்கு வழி வேண்டாம். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வது சிறப்பு, பெண் வாடிக்கையாளர்களால் பிரச்சினை ஏற்படலாம் உஷார் வியாபாரிகளே. அரசாங்க ஆதரவு உண்டு, அதிகாரிகளும் இணக்கமாக நடந்து கொள்வர். தங்களின் புதிய யுக்தி பிரபலமாகும். வேண்டிய உதவிகளையும் கேட்டு பெறலாம் பணியாளர்கள். மக்கள் பணியில் ஏற்கனவே சரியாக செயல்பட்டதின் விளைவு தற்பொழுது பெரிய பதவியை பெற்றுத் தர உள்ளது அரசியல்வாதிகளே. எதையும் சாதித்துக் காட்டும் வல்லமை பெண்களுக்கு கிடைத்திடும். உற்றார், உறவுகள் இணக்கமாக நடந்து கொள்வர். உற்பத்தி பொருட்களால் மகிழ்வான சூழ்நிலை தரும். பொருளாதார ஏற்றமும் உண்டு விவசாயிகளுக்கு. எதிலும் வெற்றி, பாராட்டு என மாணவர்களின் நிலை தென்படுகிறது.

6 ஆம் எண் :

6, 15, 24 ஆம் திகதிகளில் பிறந்தாலும் க், ங, ஙி இல் பெயரின் முதல் எழுத்து அமைந்திருந்தாலும் 6 ஆம் எண்ணில் பெயர் எண் அமைந்திருந்தாலும் இவர்கள் 6 ஆம் எண்ணுக்குரியவர். இவ்வாண்டு விண்ணை முட்டி விடும் கலைகளை விறுவிறுவென தரும் உங்கள் அதிபர் நம் பூமியிலிருந்து 257 மில்லின் கி.மீ. தூரத்தில் உள்ளது. ஏறக்குறைய சந்திரனைப் போன்று சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை 80 சதவிகிதம் பிரதிபலித்து விடுகிறது. இதன் பிடியில் 6, 15, 24 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் வருவர், குறிப்பாக கண், இதயம், பால்நோய் போன்றவைகள் அண்டாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பணத் தேவைகள் அதிகமாகலாம். எனவே, கடன்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. மந்தமான நிலையிலிருந்து தொழில்கள் புதிய வாய்ப்புகளுடன் தொடரும் தொழில் அதிபர்களுக்கு. வியாபார நுணுக்கத்தை கையாள்வது நல்லது. பெண் வாடிக்கையாளர்கள் பெருமை தருவர். கவனமாக செயல்பட்டு விற்பனையைக் கூட்டலாம் வியாபாரிகளே. இடம் வாங்கியதில் சிக்கல் ஏற்படலாம். சரியான வழி காட்டிகள் கிடைக்காது. குழப்பமில்லா முடிவுகளை எடுங்கள் வியாபாரிகளே. பணியாளர்கள் பாராட்டுப் பெறுவர். தலைமையும், தனி மதிப்பு தரும். இதனால் சக ஊழியர்களிடம் கௌரவம் கூடும். புதிய பதவிகளும், வீட்டில் மங்கள காரியங்களும், புதிய பொருள் சேர்க்கையும், மன தெளிவும், அரசியல்வாதிகளுக்கு உண்டு. புனிதப் பயணம், குழந்தைகளால் மகிழ்ச்சி, கணவரின் கரிசனம் பொருளாதார ஏற்றம் பெண்களுக்கு கிடைத்திடும். நிலம், கால்நடைகள் வாங்கிடலாம். உற்பத்தியும் பெருகும் வியாபாரிகளுக்கு. பெற்றோர், ஆசிரியர் பாராட்டுக்களும், தெளிவான சிந்தனையும் கிடைத்து தேர்வில் திறமையும் காட்டிடுவர் மாணவர்கள்.

7 ஆம் எண் :

7, 16, 25 ஆம் திகதிகளில் பிறந்தாலும் O, ஙூ இல் பெயரின் முதல் எழுத்து அமைந்தாலும் 7 ஆம் எண்ணில் பெயர் அமைந்திருந்தாலும் அவர்கள் 7 ஆம் எண்ணுக்குரியவர். இவ்வாண்டு சூரியன் தெற்கு நோக்கி செல்லும் பொழுது அதேநேரம் சூரியனின் நேர்கோட்டில் சந்திரன் பயணிக்கும் போது பெரிய திடமான நிழல் தோன்றுகிறது. இதுவே 4, 13, 22 திகதிகளில் பிறந்தவர்களுக்கு ஆற்றலைத் தருகிறது. தோல் நோய், இரத்தம் ஏற்ற, இறக்கம், சிரங்கு, ஆறாத பு“ண் போன்றவைகள் துரத்தும் வாய்ப்பை வரவிடாமல் தடுத்து விடுங்கள். இவ்வாண்டு சூப்பர் நிகழ்வுகள் கிடைத்திடும். வாழ்வின் தரத்தை உயர்த்தி விடும். ஆர்டர்கள் குவிய உள்ளது. ஓரிடத்தில் உட்கார நேரம் கிடைக்காது தொழில் அதிபர்களுக்கு. எந்த பொருளை வாங்கி வைத்தாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் வெகுவான பொருளாதார முன்னேற்றமும் உண்டு வியாபாரிகளுக்கு. உடலும், மணமும், உஷ்ணமாகலாம். அதிகாரிகளின் போக்குகள் மிக மகிழ்வைத் தரும். அனைத்து நன்மைகளும் உண்டு. நண்பர்களும் அதிகமாக உதவிடுவர் பணியாளர்களுக்கு. தங்களின் மென்மையான போக்கை கருத்தில் கொண்டு, முக்கியமான துறையில் ஆலோசகராக நியமிக்க தலைமை பரிந்துரை செய்யும் அரசியல்வாதிகளே, தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து விடும். மழலை இல்லாதவர்க்கு உண்டு, ஜாலி டூரும் இருக்கலாம். பலவித பொருட்களும் கிடைத்து விடும். பெண்களுக்கு புதிதாக நிலம், விவசாய கருவிகள் வாங்கிடலாம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் பல வாய்ப்புகள் உண்டு விவசாயிகளுக்கு. கவனம் அதிகரிக்கும், படித்து முடித்தவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு உண்டு மாணவர்களே.

8 ஆம் எண் :

8, 17, 26 ஆம் திகதிகளில் பிறந்தாலும், ஊ, க இல் பெயரின் முதல் எழுத்து அமைந்து இருந்தாலும் 8 ஆம் எண்ணில் பெயர் எண் அமைந்திருந்தாலும் இவ்வாண்டு உங்களுக்கு இப்படித்தான் . இவ்வாண்டு மாபெரும் சக்திகளை மாறாமல் அளித்து வரும் உங்கள் நாயகரான சனீஸ்வரன் பூமியிலிருந்து சுமார் 1567 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளார். இதன் தாக்கம் மிக மெதுவாக பூமிக்கு வந்து சேர்வதும், செல்வதுமாக இருக்கும். இவரைச் சுற்றி எந்த கோளிலும் இல்லாத பெருமையாக 30 நிலவுகள் சுற்றிக் கொண்டு சூரியனையும் ஒருமுறை சுற்றி வர 84 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் ஆற்றல் 8, 17, 26 திகதிகளில் பிறந்தவர்களுக்கு அதிகம் மேலும் மயக்கம், வாயு, வாதம், எலும்பு நோய்கள், மேகநீர், காய்ச்சல் போன்றவைகளை எதிர்க்க வைத்திய முறையை சரியாக கையாள வேண்டும்.

இவ்வாண்டு எதிர்பார்த்து காத்திருந்த வேலைகளை செவ்வனே முடித்து விடலாம். குழப்பான சூழ்நிலைகளில் இருந்து விடுபடுவீர்கள். மங்களகரமான காரியங்களை நடத்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் வந்து சேரும். வாங்கி வைத்து நம்பிக்கையுடன் இருந்த போது சரிவு நிலைமை ஏற்பட்டதை முழுமையாக சரிக்கட்டி பொருளாதார ஏற்றத்தையும், புதிய இ டத்தில் மேலும் விரிவாக்கமும் வியாபாரிகளுக்கு உண்டு. தங்கள் மேல் பலவித சிரமங்களை திணித்த நிர்வாகம் தன் நிலையை உணர்ந்து வேண்டிய உதவிகளை செய்திடுவதுடன் பணபலன், பாராட்டுகள், தேவையான மாறுதல்கள் தந்து மகிழ்விப்பர். அரசியல்வாதிகளுக்கு மக்களின் பாராட்டுக்களும், தொண்டர்களின் தொய்வில்லா பணிகளும், தங்களை புதிய பாதைக்கு இழுத்துச் செல்வதுடன் பெரிய பதவிகளையும் பெற்றுத் தரும். விவசாயிகளுக்கு புதிய வீடு, இடம், கால்நடைகள், விவசாயக் கருவிகள் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு தாய், தந்தையரின் அதிக பாசமும், அண்டை அயலவரின் பாராட்டும், வேண்டிய பொருட்கள் கிடைப்பது மிக திருப்தியைத் தரும். மாணவர்களுக்கு மகிழ்வாக நிகழ்வுகளும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் மன நிறைவை அளித்திடும்.

9 ஆம் எண் :

9, 18, 27 ஆம் திகதிகளில் பிறந்தாலும் 8 ஆம் எண்ணில் பெயர் எண் அமைந்திருந்தாலும் பின்வருமாறு இவ்வாண்டு அமையும். தனக்குத்தானே இயங்கும் தன்மையும், யாருக்கும் கட்டுப்படாத தன்மையும் எந்த நிலையிலும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காத குணமும் கொண்ட உங்கள் நாயகர் பூமியிலிருந்து 375 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளார். ஒருமுறை நவகோள் நாயகனை சுற்றிவர 687 வருடங்கள் ஆகும். உஷ்ண நோய்கள், காய்ச்சல், வீக்கம் அம்மை போன்றவைகளில் இருந்து காத்துக்கொள்ள உணவு கட்டுப்பாடு வேண்டும்.

கடும் உழைப்பாளியான உங்கள் உத்வேகம் இதுநாள் வரை "விழலுக்கு இறைத்த நீரானது' ஆனால் இவ்வாண்டு எதை துவங்கினாலும் வெற்றியே. புதிய மனிதர்களின் சேர்க்கை, பிரதேசங்களில் இருந்து கிடைத்திடும் வியாபார ஆர்டர்கள், தடைப்பட்டு இருந்தவைகள் அனைத்தும் மீண்டும் களை கட்டுவது. புத்திகூர்மை போன்றவைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் உண்டு. தொழில் அதிபர்களுக்கு, விற்பனை அதிகரிப்பு, புதிய கிளைகள் திறப்பு, உண்மையான வேலையாட்கள், புதுவீடு, நிலம் வாங்குதல், மகன், மகள் திருமணம், குழந்தை இல்லார்க்கு மழலை பிறப்பு, பொருளாதார உயர்வு என அடுக்கிக் கொண்டே சொல்லலாம் வியாபாரிகளுக்கு. சொந்த ஊருக்கு மாறுதல், திடீர் பதவி உயர்வு, சகோதர, சகோதரிகளின் அன்பு, அரசு ஆதரவு, வழக்குகளில் சாதகமான தீர்ப்பு என ஒரே மகிழ்ச்சிதான் பணியாளர்களுக்கு. அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அடங்கிப் போவார், தலைமையிடம் நெருக்கம் அதிகமாகும், மக்களின் பாராட்டு மழை, புதிய திட்டங்கள் நிறைவேறுதல் என அரசியல்வாதிகளின் பாடுமகிழ்வுதான். கணவருடன் இணக்கம், பிரிந்தவர்கள் கூடுதல், குழந்தைகள் குதூகலம், பொருள் சேர்க்கை, பெற்றோரின் அன்பு, குழந்தை பிறப்பு, இப்படி பெண்களின் நிலை உயர்வுதான். உற்பத்தி பொருட்கள் அதிக விலைக்கு விற்பதும், நிலம் வாங்குவதும், கால்நடைகள் சேர்க்கையும், விவசாயிகளுக்கு உயர்வுதான். விளையாட்டின் மூலம் தேச புகழும், படிப்பில் கவனமும், பெற்றோர், ஆசிரியர்களுக்கு கௌரவத்தை பெற்றுத் தருவர் மாணவர்கள்.

டாக்டர் ஜே. என். எஸ். செல்வன், ணீடஈ

எண் கணித நிபுணர்,

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா சாஸ்திர சம்பிரதாயங்களை யாழ் களத்திலை இவ்வளவு காலமும் காணேல்லை எண்டு பாத்தன்.சரி சரி எனி பிறகென்ன.காது குத்த,பல்லுப்புடுங்க,விசாகுத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.