Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலை! 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்!

Featured Replies

வித்தியா படுகொலை! 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்!
 
வித்தியா படுகொலை! 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்!
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று தெரிவித்தனர்.
 
குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது சந்தேகநபரையும் எதிர்வரும் நாட்களில் கைது செய்யவுள்ளோம்' என குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 
12 சந்தேகநபர்களில் இறுதியாக கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
நீதிமன்றத்துக்கு வெளியில் கருத்துத் தெரிவிக்கத் தடை!
 
நீதிமன்றத்துக்கு வெளியில் கருத்துத் தெரிவிக்கத் தடை!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும். அதனைவிடுத்து, வெளியே கருத்து தெரிவிக்க முடியாது. அவ்வாறு கருத்துத் தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்' என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் சந்தேக நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். 
 
புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். 
 
சந்தேகநபர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கான பிரச்சினைகளையும் அசௌகரியங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதனைவிடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். 
 
2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி, படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 10 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் 2 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.