Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?

Featured Replies

ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?

 

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி.

160421144600_olympic_torch_greece_rio_64

 

 கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும்.

160421114022_olympic_torch_640x360_ap.jp

 

 ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

160421125503_olympic_flame_512x288_reute

 

 பாரம்பரிய முறையில் ஏற்றப்படும் சுடரை கிரேக்க நடிகை ஒருவர் கையிலேந்தியுள்ளார்

பாரம்பாரிய முறையில் இந்த சுடரை ஏற்றும் தற்போதைய நடைமுறை 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் உயிர்பிக்கப்பட்டது.

சூரிய ஒளியை குழியாடியின் மையத்தில் விழும்படி செய்யப்பட்டு அதனால் உருவாகும் வெப்பத்தைக்கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது.

160421111735_olympic_torch_624x351_getty

 

 பிரேசில் போட்டிகளுக்கான ஜோதி, முதல் ஒலிம்பிக் சுடரில் ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றலும், கிரேகத்தின் தென் பகுதி நகரொன்றில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலையம்சங்கள் நடத்தி ஒவ்வொரு முறையும் இச்சுடர் ஏற்றப்படும்.

160421114149_olympic_torch_640x360_reute

 

 போட்டிகான முதல் சுடர் கிரேக்கத்தைச் சேர்ந்த உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன் எலிஃபெத்தெரியோ பெட்ரௌனியாஸிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சுடர் ஏற்றப்படுவதற்கு முன்னர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நீண்ட உடையணிந்த நடிகை ஒருவர், மிகவும் உளப்பூர்வமாக நிலத்தில் மண்டியிட்டு, குழியாடி ஒன்றில் விழும் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் வெப்பத்தை, ஒலிம்பிக் சுடரை ஏந்திவரும் விளக்கின் மீது பாய்ச்சி அந்த ஜோதியை ஏற்றுவார்.

 

160421114329_olympic_torch_640x360_reute

 சுடர் ஏற்றப்படும் தினத்திலிருந்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றி தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் அது பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் உலகெங்கும் பயணமாகக்கூடிய முதல் ஒலிம்பிக் பந்தத்தில் ஏற்றப்படும்.

அந்த முறையில் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடரே பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, புகழ்பெற்ற உள்நாட்டு விளையாட்டு வீரர்களால், அரங்கைச்சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மிகவும் பிரபலமான வீரர் ஒருவரிடம் கையளிக்கப்படும்.

160421114227_olympic_torch_640x360_reute

 ரியோ போட்டிகளுக்கானச் சுடரின் தொடர் பயணம் தொடங்கியது.

அவர் அந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரை ஒன்றுக்கு அச்சுடரை எடுத்துச் சென்று அங்கு போட்டி காலம் முழுவதும் எரியும் ஜோதியை ஏற்றிவைப்பார்.

150704093331_olympic_torch_640x360_allsp  ரியோ ஒலிம்பிக்ஸுக்கான சுடரை ஏந்தும் பந்தம்

எனினும் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் அந்த ஒலிம்பிக் ஜோதி எவ்வாறு ஏற்றப்படும் என்பது கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

150704130436_dilma_rousseff_olympics_tor

 

 ரியோ ஒலிம்பிக் பந்தத்துடன் பிரேசில் அதிபர் டில்மா ரூஸோவ். ஆனால் போட்டி காலத்தில் அவர் அதிபராக இருப்பாரா என்பது கேள்விக்குறியே

இம்முறை ரியோ டி ஜெனீரோவிலுள்ள மாரக்கானா விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்படும்.

http://www.bbc.com/tamil/sport/2016/04/160421_olympic_flame_rio

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது கிரீஸில்

 

ஒலிம்பிக் போட்­டிக்­கான பாரம்­ப­ரிய தீபம் கிரீஸ் நாட்டின் ஒலிம்­பியா நகரில் நடை­பெற்ற கண்­கவர் நிகழ்ச்­சியில் ஏற்­றப்­பட்­டுள்­ளது.

Olympic3.JPG

இந்த வழக்கம் கடந்த 80 ஆண்­டு­க­ளாக நடை­மு­றையில் இருந்து வரு­கி­றது. சூரிய ஒளி­மூலம் ஏற்­படும் வெப்­பத்தை வைத்து இந்த தீபம் ஏற்றப்பட்டது. நேற்று ஏதென்ஸ் நகரில் நடை­பெற்ற விழாவில் கிரேக்க திரைப்­பட நடிகை முயவநசiயெ டுநாழர தீபத்தை ஏற்­றினார்.

2016 – ரியோ ஒலிம்பிக் போட்­டிகள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆ-ம் திகதி பிரே­சிலில் கோலா­க­ல­மாக தொடங்­கு­கி­றது. 17 நாட்கள் நடை­பெறும் இந்த ஒலிம்பிக் திரு­விழா 21ஆ-ம் திகதி நிறை­வ­டை­கி­றது.

olympic.jpg

இந்­நி­லையில் ஒலிம்பிக் போட்­டிக்­கான கௌன்­டவுன் ஒலிம்பிக் தீபம் ஏற்­றத்­துடன் நேற்று தொட ங்­கி­யது. ஒலிம்பிக் போட்­டிகள் பிறந்த கிரீஸ் நாட்டின் ஒலிம்­பியா நகரில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சியில் ஒலிம்பிக் தீபம் ஏற்­றப்­பட்­டது.

இந்த தீப­மா­னது சூரிய ஒளியை குவி லென்ஸில் குவித்து அதில் இருந்து உரு­வாகும் ஜூவாலை மூலம் ஏற்­றப்­படும். இதற்­கான ஒத்­திகை கடந்த இரு நாட்­க­ளாக நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஒரு­வேளை ஒலிம்­பி­யாவில் வானிலை மாற்றம் இருந்தால் தீபம் ஏற்­று­வ­தற்­கான மாற்று ஏற்­பா­டு­க­ளையும் சர்­வ­தேச ஒலிம்பிக் சங்கம் செய்­தி­ருந்­தது.

Olympic2.jpg

நவீன ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்டி 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்­டர்­டாமில் நடத்­தப்­பட்­டது. இதைத் தொடர்ந்து 1936-ஆம் ஆண்டு பெர்­லினில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டியில் இருந்து தான் ஒலிம்பிக் தீப ஓட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஜெர்­ம­னியை ஆட்சி செய்த நாஜி படைகள் தான் இந்த ஒலிம்பிக் தீப ஓட்­டத்தை நடத்­தின.

2008-ஆம் ஆண்டு பெய்­ஜிங்கில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­யில்தான் ஒலிம்பிக்தீப ஓட்டம் நீண்ட தூரம் நடை­பெற்­றது. எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற ஒலிம் பிக் தீபத்தை 21,800 பேர் கைகளில் ஏந்­தி­யி­ருந்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஒலிம்­பி­யாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்­றப்­பட்­டதும் தீப­மா­னது 329 நக­ரங்கள் வழி­யாக பயணம் செய்து ஒலிம்பிக் திரு­விழா நடை­பெறும் பிரேசில் நாட்டை மே 3ஆ-ம் திகதி சென்­ற­டை­கி­றது.

Olympic1.jpg

இதன் பின்னர் பிரே­சி­லி­யாவில் கொண்­டாட்­டங்கள் தொடங்கும். ஒலிம்பிக் தீப­மா­னது பிரேசில் நாட்டின் 26 மாநில தலை­ந­க­ரங்­க­ளிலும் பயணம் செய்­கி­றது. நாட்டு மக்­ களில் 90 சத­வீதம் பேர் ஒலிம்பிக் தீபத்தை கண்­டு­க­ளிக்கும் வகையில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பிரேசில் நாட்­டுக்குள் நுழையும் தீப­மா­னது அடர்ந்த காடுகள்இ வெற்று நிலம்இ நீர்­சூழ்ந்த அரு­விகள் வழி­யா­கவும் பய­ணிக்­கி­றது. தீப ஓட்­டத்தில் 12 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் பங்­கேற்க உள்­ளனர். ஒவ்­வொ­ரு­வரும் தீபத்தை 200 மீட்டர் வரை எடுத்து செல்­வார்கள்.

இந்த முறை ஒலிம்பிக் தீபத்தை முதன்­மு­றை­யாக கைகளில் ஏந்திச் செல்லும் பெரு­மையை அக­திகள் பெறு­கின்­றனர். ஏதென்ஸ் அருகில் உள்ள இலினோஸ் முகாமை ஒலிம்பிக் தீபம் கடந்து செல்லும் போது அங்கு தங்­கி­யி­ருக்கும் அக­திகள் தீப ஓட்­டத்தில் பங்­கேற்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

olympics-m.jpg

இந்த முகாமில் ஆப்­கா­னிஸ்தான், ஈரானைச் சேர்ந்­த­வர்­களே அதிக அளவில் அக­தி­க­ளாக உள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்தக்­கது. ஒலிம்பிக் தீப­மா­னது சிறப்­பான வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 5 நிறங்கள் இதில் இடம் பெற்­றுள்­ளன. ஒவ்­வொரு நிறமும் பிரேசில் நாட்டின் இயற்கை வளத்தை குறிப்­ப­தாக உள்­ளது.

தீபத்தின் மேல் பகுதி தங்க நிறத்தில் காணப்­ப­டு­கி­றது. இது வானத்­தையும், சூரி­ய­னையும் குறிக்கி­றது. இரண்­டா­வ­தாக பச்சை நிறம். இது ரியோ நகரின் மலை வளத்தை குறிப்­ப­தாக உள்­ளது. மூன்­றா­வது நீல நிறம். இது கடல்­வ­ளத்தை குறிக்­கி­றது. அடுத்­தது கரு­நீலம். இது மைதா­னத்­தையும், ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டின் நிலத்­தையும் குறிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்­து­ப­வர்கள் வெள்ளை நிற சட்­டையும், மஞ்சள் நிற காற்­சட்­டையும் அணிய வேண்டும் எனவும் அவற்றில் ஏதா­வது ஒரு இடத்தில் பச்சை நிறம் இடம் பெற வேண்டும் எனவும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதில் வெள்ளை நிற­மா­னது அமைதி மற்றும் ஒற்­று­மை­யையும், மஞ்சள் நிறம் ஒலிம்பிக் தீபத்­தையும், பச்சை நிறம் பிரேசில் நாட்டின் கொடி­யையும் உணர்த்­து­வ­தாக உள்­ளன.

ஒலிம்பிக் தீபத்தின் அதி­கா­ரப்­பூர்வ பாட­லாக ஒரு பய­ ணியின் வாழ்க்கை (The Life of a Traveler) அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒலிம்பிக் தீபம் ஆகஸ்ட் 5-ஆம் திக­தி­ ஒலிம்பிக் போட்டி நடை­ பெறும் மரக்­கானா மைதா­னத்­துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு உள்ள பெரிய கொப் பரையில் தீபம் ஏற்றப்படும்.இதனை ஏற்றும் வீரர் யார் என்பது வழக்கமாக கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்படும்.

http://www.virakesari.lk/article/5454

  • தொடங்கியவர்
‘ஒலிம்பிக் தீபச் சுடர் மனிதத்துவத்தை உணர்த்துகின்றது’
2016-04-25 11:39:57

பிரேஸில் தேசத்தின் ரியோ டி ஜெனெய்­ரோவில் இவ் வருடம் ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான தீபச் சுடர் ஒலிம்­பி­யாவில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி வைப­வ­ ரீதி­யாக ஏற்­றப்­பட்­டது.

 

162181.jpg

 

பண்­டைய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் பிறப்­பி­ட­மான ஏதென்ஸின் ஒலிம்­பி­யாவில் ஹேரா ஆலய முன்­றலில் நடை­பெற்ற பாரம்­ப­ரிய வைப­வத்­தின்­போது சூரிய கதி­ரைக்­ கொண்டு இயற்­கை­யாக தீபச் சுடரை பற்­ற­வைத்த நடிகை கெத்­த­ரினா லேஹூ, அதனை கிரேக்க உடற்­கலை சாகச வீரர் எலெவ்­தே­ரியஸ் பெட்­ரூ­னி­யா­ஸிடம் கைய­ளித்­ததை அடுத்து ஒலிம்பிக் தீபச்சுடர் ஓட்டம் ஆரம்­ப­மா­னது.

 

162181a.jpg

 

ஒலிம்பிக் தீபச்சுடர் தொடர் ஓட்­டத்தை கிரேக்­கத்தின் உடற்­கலை சாசக வீரரும் உலக சம்­பி­ய­னு­மான இலெவ்­தே­ரியஸ் பெட்­ரூ­னியாஸ் ஆரம்­பித்­து­ வைத்தார்.

 

இவர் 200 மீற்றர் தூரம்­வரை ஓடிய பின்னர் பிரேஸில் கரப்­பந்­தாட்ட வீரர் ஜியோ­வன்னி காவி­யோ­விடம் தீபச்சுடரை கைய­ளித்தார்.

 

ஒலிம்பிக் தீபத்­திற்­கான சுடர் ஏற்றும் நிகழ்வில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றிய சர்­வ­தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச், ‘‘பிரேஸில் எதிர்­கொள்ளும் இந்தச் சிக்­க­லான காலப்­ப­கு­தியில் ரியோ ஒலிம்பிக் தீபத்­திற்­கான சுடர் பற்­ற­வைக்­கப்­பட்­டதன் மூலம் நாம் அனை­வரும் மனி­தத்­து­வத்தைச் சார்ந்­த­வர்கள் என்­பது நினை­வு­ப­டுத்­தப்படுகின்­றது’’ என்று கூறினார்.

 

162185b.jpg

 

இவ் வைப­வத்தில் பிரேஸில் ஜனா­தி­பதி டில்மா ரூசெவ் கலந்­து ­கொள்ளவிருந்த போதிலும் அவருக்கு எதிராக நம்பிக்கை
யில்லாப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதால் அவர் பங்­கு­பற்­ற­வில்லை.

 


இந்த நிகழ்வில் கிரேக்க கலாசாரம், ஒலிம்பிக்கின் மகத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் நடனங்களும் அரங்கேற்றப் பட்டன.

 

162187.jpg

 

162186a.jpg

 

 

16218page-02-23.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16218#sthash.BbsRdOjS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.