Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது

Featured Replies

நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது
 

பாகிஸ்தான் மத்­தி­யஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக ஸ்கொட்­லாந்து பிர­ஜைகள் எனப் பொய் கூறி­யுள்­ளதை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என அலிம் தார் தெரி­வித்­துள்ளார்.

 

16357_aleem-dar.jpg

 

அலிம் தாரின் மகன்­மா­ரான 18 வய­து­டைய அலி என்­ப­வரும் 16 வய­து­டைய ஹசன் என்­ப­வரும் தாங்கள் ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்­த­வர்கள் என பொய் கூறி கில்­மானொக் கிரிக்கெட் கழ­கத்­திற்­காக விளை­யா­டி­யமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து முதலாம் பிரி­வி­லி­ருந்து அக் கழ­கத்தை மேற்கு மாவட்ட கிரிக்கெட் ஒன்­றியம் வெளி­யேற்­றி­யுள்­ளது.

 

கில்­மானொக் கழ­கத்­திற்­காக 2015 பருவ ­கா­லத்தில் விளை­யாடும் பொருட்டு இவர்கள் இரு­வரும் உமர் முஷ்­தபா, சாலே முஸ்­தபா என்ற புனைப்­பெ­யர்­களில் தங்­களைப் பதிவு செய்­துள்­ளனர்.

 

ஸ்டென்­ஹ­வுஸ்­மயர் கழ­கத்­திற்­காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற போட்­டியில் இவர்கள் இரு­வரும் விளை­யா­டி­யதை அலிம் தார் தனது மனை­வி­யுடன் கண்­டு­க­ளித்­துள்ளார்.

 

ஆனால், அவர்கள் வேறு பெயர்­களில் தனது மகன்மார் விளை­யா­டி­யதை அறிந்­தி­ருக்­க­வில்லை என அலிம் தார் தெரி­வித்­துள்ளார். ‘‘தங்­க­ளது சுய விப­ரங்­களை மோச­டி­யாக மாற்­றக்­கூ­டி­ய­வர்­க­ளல்லர்.

 

அவர்­க­ளுக்கு வயது போதாது. அவர்கள் இரு­வ­ருக்கும் பாகிஸ்தான் கடவுச் சீட்­டுகள் இருக்­கின்­றன. அத்­துடன் அவர்கள் பாகிஸ்­தா­னி­யர்கள் என்­பதில் பெரு­மை­கொள்ள வேண்டும். அதில் எங்­க­ளுக்கு எவ்­வித சந்­தே­கமும் இல்லை. இது அனைத்தும் தப்­பெண்­ண­மாக எனக்குத் தெரி­கின்­றது’’ என் றார் அலிம் தார்.

 

‘‘லீக் சட்ட விதிகள் மீறப்­பட்­டுள்­ள­தாக எமக்கு தகவல் கிடைத்­ததை அடுத்து எமது விசா­ர­ணைகள் அதனை உறு­தி­செய்­தது. இரண்டு வீரர்கள் தவ­றான விப­ரங்­க­ளுடன் பதிவு செய்­துள்­ளனர். 

 

அவர்­களில் ஒருவர் அல்­லது இரு­வரும் 2015 கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் பல போட்­டி­களில் விளை­யா­டி­யுள்­ளனர். இதன் கார­ண­மாக அவர்கள் விளை­யா­டிய போட்­டி­க­ளுக்­கு­ரிய 49 புள்­ளிகள் கழிக்­கப்­பட்­டுள்­ளது.

 

அத்­துடன் கில்­மானொக் கழகத்தை முதலாம் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவுக்கு தரமிறக்க கிரிக்கெட் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது’’ என மெற்கு கிரிக்கெட் ஒன்றிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16357#sthash.yzE5DGGr.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.