Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் புலம்பெயர் தழிழர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் ஜயம்பதி விக்கிரமரட்ண

Featured Replies

பிரிட்டனில் புலம்பெயர் தழிழர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் ஜயம்பதி விக்கிரமரட்ண

 
 

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் பலரது கருத்துக்களையும் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்வதற்காக லண்டன் வந்திருந்தார்.

150319182139_jayampathy_wickramaratne_51
Jayampathy Wickramaratne  `புலம்பெயர் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்'

பிரிட்டனில் உள்ள இலங்கைக்கான புலம்பெயர் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர் கேட்டறிந்து கொண்டார்.

`போர் காரணமாக அல்லது போருடன் தொடர்புடைய காரணங்களால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எம்மவர்கள் என்பதை உணர்ந்துள்ளோம். அரசியல் ரீதியாக தீவிரமாக செயற்பட்டு வரும் அவர்களிடமும் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்படுவது தொடர்பில் அவர்களது கருத்துக்களை கேட்பது சரியானது. புலம்பெயர் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்' என பிபிசி தமிழோசைக்கு அவர் தெரிவித்தார்.

''இந்த சந்திப்பில் முன்னர் பிரிவினைக்கு ஆதரவாக இருந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர். அது அவர்களிடையே ஏற்பட்ட மனமாற்றத்தை காட்டுகிறது. அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லாமல் சட்டரீதியான பிரிவினையே வேண்டும் என கோரியவர்களும் வந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்'' என தெரிவித்த சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ண, சூழல் மாறியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

''சராசரி மக்களின் பார்வையில் ஒற்றையாட்சி என்பது பிரிக்கப்படாத ஒரு நாடு என்பதுவே, வடக்கு மக்கள் கூட்டாட்சி குறித்து சொல்வது என்னவென்றால் சில அம்சங்களில் தமது விடயங்களை தாமே கையாளும் அதிகாரத்தை பெறுவதே ஆகும்'', எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசனத்தில் ஒற்றையாட்சி என்பதற்கான விளக்கம் வேறுமாதிரியாக இருக்கலாம் ஆனால் மக்கள் வேண்டுவது பிரிக்கப்படாத ஒரு நாடு என்றார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/05/160510_jayampathi_wickramarathna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.