Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார மையம் அமைவதற்கு தாண்டிக்குளம் விவசாயப்பண்ணை பொருத்தமான இடமா?

Featured Replies

 


புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒதுக்கப்பட்ட வரவு  செலவுத் திட்டத்தில் வடமாகாணத்தில் 2000 மில்லியன் ரூபா  செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. வவுனியா மாவட்டத்திற்கு என கூறப்பட்டு நிறைவேற்றப்பட்ட இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வவுனியா மாவட்டத்தில் 5 ஏக்கர் நிலம் கோரப்பட்டது.

அதனை ஓமந்தைப் பகுதியில் அமைப்பதன் மூலம் அது உபநகரமாக எழுச்சி பெறுவதுடன் வவுனியாவின் நீண்டகால அபிவிருத்திக்கும் உந்து சக்தியாக அமையும் என வவுனியா மாவட்டத்தைப் பிரதிசித்துவப்படுத்தும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தி ஓமந்தைப் பகுதியைத் தெரிவு செய்தனர். ஆனால் மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் நகரில் இருந்து 2 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் இடம் தேவை எனக் கூறி ஒமந்தையை நிராகரித்தார்.

இதனையடுத்து சில மக்கள் பிரதிநிதிகள் வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாய பண்ணைக் காணியை வழங்க தீர்மானித்தனர். இதனால் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இரண்டு பட்டு செயற்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணியை வழங்க வேண்டும் என மாகாண சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து இத் திட்டம் தாண்டிக்குளத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஒரு சிலர் ஒரு நிகழ்ச்சியின் கீழ் செயற்பட்டுள்ளனர். மற்றது உண்மையில் தாண்டிக்குளம் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க பொருத்தமானது தானா என்ற கேள்வியும் உள்ளது. மொத்ததில் இத்திட்டம் தாண்டிக்குளத்தில் திணிக்கப்பட  முயற்சிக்கப்படுகின்றதா?


முதலாவதாக, இந்த திட்டம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்படுமாக இருந்தால் நன்மைகளை காட்டிலும் பாதகமே அதிகம். தாண்டிக்குளம் விவசாயப் பண்ணைக் காணியானது 140 ஏக்கரைக் கொண்டது. 1948 ஆம் ஆண்டு விதை உற்பத்திப் பண்ணைக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு தற்போது வடமாகாண சபையின் கீழ் காணி உரிமம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் மத்திய அரசின் கீழ் காணப்பட்ட போதும் 1989 ஆம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது வடமாகாணசபைக்குரியதாகவுள்ளது.

காணி உரிமம் பெயரளவில் வடமாகாண விவசாய அமைச்சுக்குரியதாக இருந்தாலும் காணிப்பத்திரம் இன்னும் மாற்றிக் கொடுக்கவில்லை என பிரதேச செயலக பதிவுகள் காட்டுகின்றது. ஏ9 வீதியில் நகரில் இருந்து 1  2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இக் காணியில் 35 ஏக்கர் 1989 ஆம் ஆண்டு விவசயாக் கல்லூரிக்கு வழக்கப்பட்டது.

இக் கல்லூரியே வடமாகாணத்தில் உள்ள ஒரே ஒரு விவசõயக் கல்லூரி என்பதுடன் இதனை இன்னும் விஸ்தரிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இங்கு கற்கும் மாணவர்களுக்கான ஒரு பயிற்சிக் களமாகவும் உள்ளது. இப்பகுதியில் அமையப் பெற்ற பண்ணையானது வடமாகாணத்திற்கு தேவையான விதை உற்பத்திப் பொருட்களின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதுடன், விவசாய கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கற்றல் வசதிகளையும் வழங்குகின்றது.

இங்கு பழமரக் கன்றுகளுக்கான தாய்தாவர பராமரிப்பும் இடம்பெறுகிறது. இரு போகத்திலும் பயிர்ச்செய்கை இப்பண்ணையில் மேற்கொள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பேணப்படுவதுடன் இப்பண்ணைக் காணிக்கு அருகில் உள்ள கிணறுகளில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 200 குடிமனைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. 
ஆனால் இத் திட்டம் தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த நிலையில் குழப்பம் ஏற்படும்.

ஏற்கனவே சனச் செறிவு மிக்கதாக காணப்படும் வவுனியா நகரின் பசுமை நிலை பாதிப்படையும். எதிர்கால தேவை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை விஸ்தரிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மாசடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளது. சனத்தொகை கூடிய பகுதியாக உள்ளதால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் இலகுவாக பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன், பொருளாதார வலயக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

பண்ணைக்காணி, வயல்காணி, விவசாயக் கல்லூரி காணி என்பவற்றில் உள்ள பயிர்களுக்கும் விரைவாக நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், நகருக்கான குடிநீர் விநியோகக் கிணறுகளும் மாசடையும் அபாயமுள்ளது. சமூக சீர்கேடுகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதுடன் புகையிரத பாதையை அண்டி வாழும் மக்கள் மற்றும் அயலில் உள்ள குடியிருப்புக்களில் பாதிப்புக்கள் ஏற்படும். ஏ9 வீதியில் கூட வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

729_content_thinakkural_page10_12-05-201

இவ்வாறான பாதிப்புக்களுடன் இத் திட்டம் இப் பகுதிக்கு பொருத்தமானதா...? வவுனியாவின் அபிவிருத்திக்கு இது பொருத்தமா என்று சிந்திப்பதை விடுத்து தமது சுயலாபத்தையும், பிடிவாதத்தையும் இதில் காட்டுவது வவுனியாவின் நீண்டகால அபிவிருத்திக்கு குந்தகமே. நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்தில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி இருந்தால் நல்லது என கூறப்பட்டுள்ளதே தவிர அது தான் சட்டம் என கூற முடியாது.

நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தான் தேவை எனில் வடமத்திய மகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புறநகரான தமுத்தேக்கமவிலும், மத்திய மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புறநகரான தம்புள்ளையிலும் அமைத்திருக்க முடியாது. பொருளாதார மத்திய நிலையம் வந்த பின்னரே அவ்விரு இடங்களும் எழுச்சி பெற்றன.

ஆகவே, தாண்டிக்குளம் தான் தேவை என்பது தீர்மானிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலா என்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமலும் இல்லை. அதன்படி தாண்டிகுளத்தில் இத்  திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முனைவோர் 3 கிலோமீற்றருக்குள் தான் நிறுவ வேண்டும் அது தான் அவர்களின் நிபந்தனை எனக் கூறி தாண்டிக்குளத்தில் நிறுவ முற்படுகிறார்கள். 


ஆனால் தாண்டிக்குளத்தை காட்டிலும் 7 9 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஓமந்தை மாணிக்க வளவு காணி அமைந்துள்ள இடத்திற்கு நகரில் இருந்து 10  15 நிமிடத்திற்குள் சென்று விட முடியும். அந்த 15 நிமிட பயணத்திற்காக வவுனியாவில் அபிவிருத்தி என்ற போர்வையில் நகரின் சூழலை குழப்புவது நியாயமா...? கிராமிய மக்களின் அபிவிருத்திக்காக வந்த திட்டத்தை நகர மக்களின் நலனைக் கொண்டு நிறுவுவது சரியா...? 


ஏ9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தைக்காணி சமதரையாகவுள்ளது. இக்காணியை இலகுவாக சுவீகரிக்க முடியும் என்பதுடன் எதிர்காலத்தில் மேலும் தேவையின் பொருட்டு விஸ்தரிக்கவும் முடியும்.  பொருளாதார மையத்திற்கு தேவையான தொழிலாளர்களை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி மற்றும் பாலமோட்டை ஊடாக மன்னார் மாவட்டத்தை இணைக்கும் போக்குவரத்து வசதிகள் உள்ளது.

இப்பகுதி புதிய நகரம் அல்லது உபநகரம் உருவாகுவதற்கு ஏதுவாக அமைவதுடன், புகையிரதம், தரை வழி என இரு வழிப் போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றது. உள்ளூர் அதிகார சபையின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன் பொருளாதார வலயக்கழிவுகளை அகற்றுவதற்கு போதுமான இடவசதியும் காணப்படுகின்றது. மழைக் காலங்களில் நீர் தேங்கி நீக்காதவாறு வழிந்தோடக்கூடிய மேட்டு நிலமாக அமைந்துள்ளதுடன் மக்கள் செறிவு அற்ற பிரதேசமாகையால் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களும் குறைவாகவுள்ளது.


இது இவ்வாறு இருக்க, ஏற்கனவே தாண்டிக்குளத்தில் 30 ஏக்கர் காணி முதலீட்டு வலயம் என ஒதுக்கப்பட்டும் உள்ளது. ஆனால் அங்கு தற்போது ஒரு தொழிற்சாலை மாத்திரமே இயங்குகின்றது. இத் திட்டத்தை தாண்டிக்குளத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்த காணியை சிலர் பாதுகாக்க முனைகிறார்களா என்ற சந்தேகம் கூட இவ்விடத்தில் எழுகின்றது. அதை மேலும் வலுவூட்டும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண சபை அமர்வு
 நடைபெற்றுக் கொண்டிருந்த போது உறுப்பினர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக காணி தரப்படாவிட்டால் திட்டம் இடமாறப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டு அவசர அவசரமாக தாண்டிக்குளத்தில் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கூட முன்னரே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு செயற்பாடாகவே தோன்றுகின்றது. 
தாண்டிக்குளத்தில் இத் திட்டத்தை அமைக்க வேண்டும் என முனைவோர் இத் திட்டம் வவுனியா நகருக்கான திட்டம் இல்லை என்பதை உணரவேண்டும்.

அதற்கு அப்பால் இது ஒரு பல்பொருள் அங்காடித் தொகுதி அல்ல. இது மரக்கறிகள் விற்னை செய்யும் ஒரு மையம். மரக்கறிச் சந்தை அதிகாலையில் இருந்து எப்படி இருக்கும் என ஒருவர் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அங்கு வரும் வாகனங்கள் மற்றும் அவற்றின் ஓசை என்பன அயலில் உள்ள வீடுகள் மட்டுமல்ல விவசாய கல்லூரிக்கு கூட பாதிப்பே. சனநெரிசல் மிக்க தாண்டிக்குளத்தில் இவ்வாறான ஒரு நெருக்கடி நிலை ஏற்படுவது சாதகமானதா என்பதை சிந்திக்க வேண்டும். மக்களின் வாழ்வுக்காக திட்டங்களே தவிர அவற்றின் அழிவுக்கும், பாதிக்குமாக இருக்க கூடாது என்பதே உண்மை.


எனவே, இத் திட்டத்தில் நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து இத் திட்டம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் மற்றும் சில மக்கள் பிரதிநிதிகளும் தீர்மானித்து அதற்காக அரசாங்கத்துடன் பேசி வந்த நிலையில் மத்திய அரசில் உள்ள சிலரும் மாகாண அரசில் உள்ள சிலரும் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறார்கள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

தற்போது இத் திட்டம் குறித்து வடக்கு முதல்வர் அண்மையில் கொழும்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசனுடன் கலந்துரையாடி இருந்ததுடன், கடந்த இரு தினங்களுக்குள் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனுடனும் கலந்துரையாடியுள்ளார். இந்த விடயத்தை முதலமைச்சர் சார்பில் சகவாழ்வு அமைச்சர் மத்திய அரசாங்கத்துடன் பேசியும் வருகிறார். தற்போதும் கூட வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் நகரில் இருந்து 4 6 கிலோமீற்றர் தூரத்தில் 15 ஏக்கர் காணி இத் திட்டத்திற்கு பெற்றுக் கொள்ளத் தக்க வகையில் ஏ9 வீதி ஓரமாகவுள்ளது.

அதேபோல், தேக்கவத்தை பகுதியில் கூட 5 ஏக்கர் காணி உள்ளது. ஆகவே பொருத்தமற்ற தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணியை விடுத்து மாவட்ட அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மாற்றுக் காணி ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்பதே புத்திஜீவிகள் மற்றும் கிராமிய மக்களின் ஆதங்கமாகும்.

www.thinakkural.lk/article.php?article/gomobfp9fq9890dd111a74f420509tvnjtff9cf2cbf198cef2579800rhxoe#sthash.3dKA2U57.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.