Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மௌனித்தும் ஏழு ஆண்டுகள்..! – ஜெரா

Featured Replies

புலிகள் மௌனித்தும் ஏழு ஆண்டுகள்..! - ஜெரா

இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாள். மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்தும் ஏழாண்டுகள் கடக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் இதுபோன்றதொரு நாளில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம், தம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தது. பெரும் போர். பல நாடுகள் நேரடியாகக் களமிறங்கி நடத்திக்காட்டிய போர். பிணக்குவியலுக்கு மேல் நின்று சமராடிய போர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் மரணமும், ஆற்றவே முடியாத காயங்களும் வந்து கொண்டிருக்கையில்தான் புலிகள் இயக்கம், “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என்றார்கள்.

முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர்க்களத்தில் இப்படியொரு அறிவார்ந்த சொற்றொடரை யாராலும் பயன்படுத்த முடியுமா? சாவதையும், சரணடைதலையும் தவிர வேறெந்த வாசலுமற்ற ரவைகளின வெளியில இப்படி   யோசிக்கத்தான் முடியுமா? புலிகள் யோசித்தனர். விடுதலைப் புலிகள் என்றால், பாதி உலகத்தினர் புருவம் உயர்த்திப் பார்ப்பதற்கு, கடந்த காலத்தில் அவர்கள் இதுபோன்று செய்த நடவடிக்கைகள்தான் காரணம். அந்த புருவமுயத்தல்களும், உலகமே இணைந்து அவர்களை மௌனிக்க செய்தமைக்கு ஒரு காரணம் என்பதை புலிகளும் அறிவார்கள்.

இந்த ஏழு ஆண்டுகளில் புலிகளை தமிழர்கள் மறந்தார்களா? இலங்கையின் அரசாங்கமும், அதன் இராணுவமும் புலிகள் தொடர்பான நினைவிலிருந்து தமிழர்களைக் கட்டவிழ்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எவையும் வெற்றி பெற்றனவா?

இல்லை. இந்தக் கேள்விக்கு உண்மையாகப் பதில் எழுதுவதாக இருந்தால், இல்லையென்றுதான் குறிப்பட வேண்டும். 7 வருடங்கள். ஒவ்வொரு மாவீரர் தினத்துக்கும் எத்தனை அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டன? ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 இல் தமிழர்கள் புலிகளின் தியாகங்களுக்காக அஞ்சலித்தார்கள். அதனைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை. புலிகளுக்கு எதிரான மனோபாவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் வளர்க்க முடிந்ததே தவிர, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களிடம் வளர்க்க முடியவில்லை. தமிழ் தேசிய அரசியல் உளவியலில் இது பெரும் முரணாகவே இருக்கின்றது.

pulikal (5)                 pulikal (4)
 

கடந்த 7 ஆண்டுகளுக்குள் இலங்கையின் நீதிசார் பொறிமுறைகளில் தமிழர்கள் பல்வேறு கட்டங்களிலும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக, தமிழ் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வேளைகளில் இலங்கையின் நீதித்துறை குறித்து பலமான கேள்வியை தமிழர்கள் எழுப்பினார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என புலிகளைப் பற்றி கதையாகவே அறிந்த அடுத்தடுத்த தலைமுறையினர் கூட கேள்வியெழுப்பினர். இந்தக் கேள்வி சாதாரணமானதல்ல. இலங்கையின் நீதித்துறையை விட, புலிகளின் நீதித்துறை பலமானது. அங்கு இதுபோன்ற தவறுகளுக்கு வாய்ப்பேயில்லை என்பதை தமிழர்கள் ஆழமாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். வன்முறைகளும், நீதிக்குப் புறம்பான சம்பவங்களும் அதிகரிக்கும்போதெல்லாம், புலிகளின் ஆட்சி குறித்த நினைவுகள் அவரவருக்குள் சுயமாகவே வந்துபோயின. இதில் இந்நாள் இலங்கயின் நீதிபதிகள் கூட உள்ளடக்கம்.

வடக்கு, கிழக்கில் பெண்களுக்கு உருவாகியிருக்கும் பாதுகாப்பற்ற சூழல் பற்றி உரையாடல்கள் அனைத்திலும், “அவங்கள் இருக்கேக்க எந்த சாமம் எண்டாலும், எங்கையெண்டாலும் பொம்பிளயள் தனிய போய் வரலாம்” என்ற வசனம் கட்டாயமாக இடம்பெறும். புலிகள் பெண்களின் சுதந்திரத்துக்கு உருவாக்கியிருந்த வெளி, எப்போதும் சுதந்திரமாகவே இருந்தது. அதில் ஆண் மகனோ, ஆயுததாரிகளோ தலையிடாதபடி பார்த்துக்கொண்டனர்.

pulikal (3)         pulikal (2)       pulikal (1)

போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுக்கப்பட்டார்கள். அதன் பின்னர் முன்னாள் போராளிகள் என்ற பெயருடன் சமூகத்துக்குள் வாழத்தொடங்கியவர்களுக்கு பலவகையான கஷ்ரங்கள் இருந்தன. வறுமை பிரதானமானது. காயப்பட்டு, உடல் அவையங்களை இழந்த போராளிகளின் இன்றைய நிலை பற்றி அறிந்த போதெல்லாம் தமிழர்கள் கூட்டாகவே கவலையடைந்தனர். பல்வேறு வகையிலும் அவர்களின் கஸ்ரங்களில் பங்கெடுத்துக்கொண்டனர். அவர்களின் வாழ்வில் ஒளிபிறக்க ஆதரவாயிருந்தனர். பலர் ஆதரவாய் இருக்கின்றனர்.

புலிகளின் இறுதிக் காலம் குறித்து தமிழர் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும், ஒரு புள்ளியில் அதையெல்லாம் மறந்துவிடுகின்றனர். “என்ன இருந்தாலும் அவங்கள் எங்களுக்காக உயிர் குடுத்தவங்கள். குடும்பங்களோட செத்தவங்கள்” இவ்வாறு புலிகளின் எல்லா தவறுகளையும் மறந்து , அவர்களை தமிழர்கள் தம்மோடு இணைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் இலக்கிய சூழல்தான் புலிகளை விடுவதாய் இல்லை. புலிகளின் தவறுகளை மட்டுமே மீளமீள எழுத்தாக்குகின்றனர். சுயவிமர்சனம் என்ற பெயரில் பின்னணியுடன் கூடிய புலியெதிர்ப்பரசியலை பரப்புகின்றனர். ஆயினும் இந்த ஏழாண்டு காலவெளியில், எதிர்ப்போ – ஆதரவோ பேசுவதற்கு விடுதலைப் புலிகள் தேவைப்பட்டிருக்கின்றனர். அவர்களின் நினைவுகள் மீளவலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் புலிகளின் மௌனம் கலையவில்லை. மர்மமாகவே மறைந்த ஆச்சரியங்களின் பட்டியிலில் அவர்கள் இருக்கின்றனர்.

– ஜெரா –

http://thuliyam.com/?p=27013

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஆனால் இலக்கிய சூழல்தான் புலிகளை விடுவதாய் இல்லை. புலிகளின் தவறுகளை மட்டுமே மீளமீள எழுத்தாக்குகின்றனர். சுயவிமர்சனம் என்ற பெயரில் பின்னணியுடன் கூடிய புலியெதிர்ப்பரசியலை பரப்புகின்றனர். ஆயினும் இந்த ஏழாண்டு காலவெளியில், எதிர்ப்போ – ஆதரவோ பேசுவதற்கு விடுதலைப் புலிகள் தேவைப்பட்டிருக்கின்றனர். அவர்களின் நினைவுகள் மீளவலியுறுத்தப்பட்டிருக்கின்றன"

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.