Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளப் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என்கிறது அரசாங்கம்

Featured Replies

வெள்ளப் பாதிப்பு அதி­க­ரிக்கும் அபாயம் : மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­ல­வேண்டும் என்­கி­றது அர­சாங்கம் 

 

 

வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்ள வீடு­களில் தங்­கி­ யுள்ளோர் அவற்றை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்­லு­மாறும் எதிர்­வரும் நாட்­களில் நீரின் மட்டம் மேலும் அதி­க­ரிக்­கலாம் என்றும் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

13231123_10154122001903290_197604736_n.j

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு போது­மான அளவு நிதியை வழங்க நிதி­ய­மைச்சு உறு­தி­ய­ளித்­துள்­ளது என்றும் அரசு குறிப்­பிட்­டது.

பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ளவில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது.

இதன்­போது கேள்வி, பதில் நேரத்தின் பின்னர் இடர் முகா­மைத்­துவ அமைச்சின் விசேட அறிக்­கைகள் விடுத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் அனு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா இதனைத் தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கடந்த சில நாட்­க­ளாக நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லையால் மழை­வெள்ளம், மண்­ச­ரி­வு­களால் பாரிய பாதிப்­புக்­க­ளுக்கு மக்கள் உள்­ளா­கி­யுள்­ளனர்.

இதனால் 219 பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 4,14, 677 நபர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 98, 0750 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 43 மர­ணங்கள் ஏற்­பட்­டுள்­ளன. 28 பேர் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். 286 வீடுகள் முற்­றாகச் சேத­ம­டைந்­துள்­ளன. 3057 வீடுகள் பகு­தி­யாக சேத­ம­டைந்­துள்­ளன. 594 பாது­காப்­பான இடங்­களில் மக்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். 61, 382 குடும்­பங்கள் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத்­த­ர­வுகள் இன்­று­வ­ரை­யா­ன­தாகும்(நேற்று) எதிர்­வ­ரும நாட்­களில் இதில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். அர­நா­யக்க மண்­ச­ரி­வினால் பாரிய பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன .

களனி கங்­கையின் நீர்­மட்டம் உயர்ந்து வரு­கி­றது. எதிர்­வரும் 3 நாட்­க­ளுக்கு மழை தொடர்ந்து பெய்யும். எனவே மழை­வெள்­ளத்தில் சிக்­கிக்­கொண்டு இன்­னமும் வீடு­களில் தங்­கி­யி­ருப்போர் தத்­த­மது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறி பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்ல வேண்டும்.

எதிர்­வரும் நாட்­களில் நீரின் மட்டம் மேலும் உயரும் ஆபத்து உள்­ளது. இவ்­வாறு மக்கள் வெளி­யேறும் வீடு­க­ளுக்கு படை­யினர் பாது­காப்பை வழங்­கு­வார்கள். அது தொடர்பில் அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை.

முப்­ப­டை­யி­னரும் மீட்புப் பணி­களில் அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்றி வரு­கின்­றார்கள். தற்­போது கடற்­ப­டை­யி­னரின் 150 பட­குகள் மீட்புப் பணியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட போதும் போது­மா­ன­தா­க­வில்லை. எனவே எதிர்­வரும் நாட்­களில் பட­கு­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு தேவை­யான நிதியை பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஜனா­தி­ப­தியும்இ பிர­த­மரும் பணிப்­புரை விடுத்­துள்­ளனர்.

அத்­தோடு நிதி­ய­மைச்சும் இதனை வழங்க அனு­ம­தித்­துள்­ளது. நேற்று நானும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்­தவும் கொழும்பு நகரில் பாதிக்­கப்­பட்ட இடங்­களைப் பார்­வை­யிட்டோம்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு குறுகிய காலஇ நீண்ட காலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மரணமானவர்கள் தொடர்பில் 1 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வீடுகளை திருத்திக் கொள்வதற்கு ரூபா 1 இலட்சம் தொடக்கம் ரூபா 25 இலட்சம் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காப்புறுதி பொறுப்பு நிதியமொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesari.lk/article/6672

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.