Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்கரா விளையாடலாம் 'டக்ரா'!

Featured Replies

டக்கரா விளையாடலாம் 'டக்ரா'!

லகில் அளவில் பிரபலமான விளையாட்டுகள் பட்டியலை சொல்லுங்கள் என்றால் கடகடவென சொல்லிவிடும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு கூட , இந்த விளையாட்டுகள் பற்றி கேட்டால் கொஞ்சம் யோசிக்கதான் செய்வார்கள். ஆனால் சில நாடுகளில் இந்த விளையாட்டுகளை உற்சாகமாக விளையாடுகின்றார்கள். வேடிக்கை, மகிழ்ச்சி, த்ரில் என பல சுவாரஸ்யங்களை கொண்ட இந்த விளையாட்டுகளின் பெயர்களை கூட இந்தியர்கள் அறிந்திருப்பது அரிதுதான்.

அப்படி சில வித்தியாச விளையாட்டுகளின் பட்டியல் இங்கே....

.jpg

டக்ரா- Takraw

வாலிபால் விளையாட்டின் சிறு மாற்றம்தான் டக்ரா. இந்த விளையாட்டு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது பிரபலமாகி வருகிறது. வாலிபால் விளையாட்டில், கையால் மட்டுமே பந்தை தொட்டு அடிக்க வேண்டும். ஆனால் இந்த விளையாட்டில், கைகளுக்குப் பதிலாக கால்களை பயன்படுத்தி  விளையாட வேண்டும். கைகளை மட்டும் பயன்படுத்தாமல் கால், பாதம், முட்டி, நெஞ்சு போன்ற உறுப்புகளை பயன்படுத்தி எதிராளிக்கு பந்தை தள்ள வேண்டும். வாலிபால் விளையாட்டு போல் இந்த விளையாட்டிலும், வலை கட்டப்பட்டு இருக்கும். அந்த வலைக்கு இருபுறமும் வீரர்கள் நின்று விளையாட வேண்டும. மியான்மர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இளைஞர்களை அதிகமாக கவர்ந்து வரும் விளையாட்டாக இது இருந்து வருகிறது.

4.jpg
 

செஸ் பாக்சிங் - chess boxing

பாக்சிங் விளையாட்டை டி.வியில் பார்த்து இருப்போம். செஸ் விளையாட்டை நமது வீடுகளில் விளையாடி இருப்போம். ஆனால் செஸ் பாக்சிங் விளையாட்டை இதுவரை கேள்விபட்டு இருக்கிறோமா?.செஸ் மற்றும் பாக்சிங் இரண்டையும் இணைத்து விளையாடுவதே இந்த விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடும் வீரர்களுக்கு இரண்டு விளையாட்டிலும் நல்ல பயிற்சி அவசியம். உடல் வலுவும் தேவை, மூளை பலமும் தேவை.

பாக்ஸ் ரிங் அருகே செஸ் போர்ட் இருக்கும். போட்டியில் மோதும் இரண்டு வீரர்கள், முதலில் நான்கு நிமிடங்கள் செஸ் விளையாட வேண்டும். அவர்கள் காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொள்ள வேண்டும். செஸ் விளையாடி கொண்டிருக்கும்போதே நடுவர்கள், 'ஸ்டார்ட்...!' என்று மைக் மூலம் சொன்னதும், இவர்கள் செஸ் விளையாட்டை நிறுத்திவிட்டு, ரிங்க்குக்குள் சென்று, முரட்டுத்தனமாக பாக்சிங் விளையாட வேண்டும். நடுவர் அடுத்த உத்தரவை கொடுத்ததும், பாக்சிங் விளையாட்டை நிறுத்திவிட்டு,  செஸ் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும். செஸ்சில் செக் வைத்து, பாக்சிங்கில் யார் அதிக புள்ளி வாங்குகிறார்களோ அவர்தான் இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர். இந்த விளையாட்டிற்கு  தற்போது ஐரோப்பிய நாடுகளில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

5.jpg

போசாபால் --- bossa ball

'பேஸ்பால்' பற்றி நாம் கேள்விபட்டு இருப்போம். அது என்ன போஸாபால் ? பிரேசில், ஜெர்மன்,நெதர்லாந்து போன்ற நாடுகளில் இது போட்டி ஆட்டமாக இல்லாமல், பொழுதுப்போக்கு விளையாட்டாக   விளையாடப்படுகிறது. கடற்கரை பகுதியில்தான் இந்த விளையாட்டு விளையாடப்படும். மேடு பள்ளங்களுடன் கூடிய, காற்று நிரப்பிய விரிப்புதான் இந்த விளையாட்டிற்கான மைதானம். அந்த விரிப்பில் துள்ளிக் குதித்து, பந்தைப் பிடித்து எதிராளிக்கு தள்ள வேண்டும். குதிப்பதற்கு ஏதுவாகவும், தாவிப் பிடிக்கும் வித்திலும், அந்த விரிப்பு அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு ஒரு கண்டிசன் உள்ளது. அது ஒன்றும் இல்லை;  முதலில் உங்களுக்கு ஜிம்னாஸ்டிக் விளையாட்டு தெரிந்து இருக்க வேண்டும் என்பதுதான்.


6.jpg 

ஹார்ஸ் பேக்--- Horseback cheese

நம் நாட்டின் கிராமpபுற விளையாட்டுகள் போல்,  இங்கிலாந்து நாட்டில் 200 ஆண்டுகளாக இந்த விளையாட்டு விளையாடpபடுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தின் பெயர் கூப்பர். அது மைதானம் அல்ல ஒரு மலை. மேடு பள்ளமாக ஒழுங்கற்று காணப்படும் இந்த மலையின் மேலிருந்து கீழாக, ஒரு பெரிய பாலாடைக் கட்டியை உருட்டி விடுவார்கள். அந்த பாலாடைக் கட்டியை விரட்டிக் கொண்டே , போட்டியில் பங்கேற்பவர்கள் மலையின் மேலிருந்து, கீழாக ஓடிவரவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் திரும்பிச் செல்லக் கூடாது. மேலிருந்து ஓடி வந்து கீழே இருக்கும் எல்லைக்கோட்டில் யார் முதலில் பாலாடைக் கட்டியை பிடிக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். அவருக்கு என்ன பரிசு தெரியுமா? எந்த பாலாடைக்கட்டியை துரத்தி வந்தோர்களோ அந்த பாலாடைக் கட்டிதான் பரிசாக தரப்படும்.

விநோதம், வேடிக்கை நிறைந்த இந்த விளையாட்டுகளை இப்போதே விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், பாஸ்போர்ட் முதலில் எடுத்துவிடுங்கள்.

http://www.vikatan.com/news/sports/64827-do-you-know-takraw-game.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.