Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம் ஏன்? ஜெ., களையெடுப்பின் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jayalong1aa.jpg 


கடந்த தேர்தலில் 150 தொகுதிகளை அள்ளியிருந்த அ.தி.மு.கழகம்,  நடந்து முடிந்த தேர்தலில் 134 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆனாலும் கூட, ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், இந்த முறை தேர்தல் ரிசல்ட் தனக்கு இறங்குமுகம் என்றேதான் கருதுகிறார். இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய ரகசிய விசாரணை நடத்தினார். கடந்த சில நாட்களாக நடந்த இந்த விசாரணையின் ரிப்போர்ட்,  ஜெயலலிதாவின் கைகளுக்குப் போனதும், கடுங்கோபமானாராம். அதிரடியாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் 15 பேர்களை மாற்றியிருக்கிறார். அவர்களில் சிலரின் வண்டவாளங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்!

தென் சென்னை- வடசென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஆறில் அ.தி.மு.கழகம் ஜெயித்தது. ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.கழகம் தோற்றுப்போனதோடு, ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ்கார்டன் 118-வது வார்டில் தி.மு.கழகமே சில நூறு வாக்குகளை கூடுதலாக பெற்றது. இதே ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் கோபாலபுரத்தில் குடியிருக்கும் கருணாநிதி ஏரியாவில் தி.மு.கழகம் கூடுதலான வாக்குகளை பெற்றது. இந்த புள்ளிவிவரம்தான் ஜெயலலிதாவின் டென்ஷனை கூட்டியது. இதனால்தான், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்ளடக்கிய தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ. மாற்றப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.சீனிவாசன் மாற்றப்பட்டு,  முன்னாள் வாரியத் தலைவர் நா.பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. தென்சென்னை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, வடசென்னை, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரியாக பணியாற்றவில்லை என்று மேலிடத்துக்கு புகார்கள் பறந்தன. இதனாலேயே சத்தியா, சீனிவாசன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ADMKMurugaiyapandian.jpg

முருகையா பாண்டியன்

திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஆர்.முருகையா பாண்டியன். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் நாங்குநேரி தொகுதியில் வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது. இந்த இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் நாங்குநேரி தொகுதியில் வேறு சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் சுயேச்சையாக நின்றார். அவர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்த பிரமுகரை அழைத்து சமாதானப்படுத்தவில்லை என்பது முருகையா பாண்டியன் மீதான குற்றச்சாட்டு. அதிக ஓட்டை பிரிக்கக்கூடியவர் என்பதை ஏனோ மேலிடத்துக்கு தகவலாக முருகையாபாண்டியன்  தெரிவிக்கவில்லை. அந்த பிரமுகரால் வாக்கு பிரிந்ததே விஜயகுமார் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனாலேயே முருகையா பாண்டியன் பந்தாடப்பட்டுள்ளார்.

ADMKMuthukaruppan.jpg

முத்துக்கருப்பன்- ஹரிகர சிவசங்கர் 

நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் முத்துக்கருப்பன் எம்.பி. தற்போது அந்த பதவிக்கு 'பாப்புலர்' முத்தையா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த முத்துக்கருப்பன் மகன் ஹரிகர சிவசங்கர்,  அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தந்தை- மகன் இருவரும் கட்சியினரை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. இவர்களின் பெயரைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் 'சீட்' பேரம் ஆங்காங்கே நடந்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் பறந்தன. மேலும், நெல்லையில் விவசாயத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் இவர்களது பெயர்களும் அடிபட்டது தனிக்கதை. ' பெரிய புகார் பட்டியலே இவர்களைப் பற்றி கட்சி மேலிடத்துக்குப் போனதுதான், இவர்கள் மாற்றத்துக்கு காரணம்' என்கிறார்கள் கட்சி விசுவாசிகள்.

நாராயணபெருமாள்

திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணபெருமாள்,  கட்சியின் நீண்ட கால விசுவாசி. தற்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். பி.எச்.பாண்டியன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் குறைந்தைத் தொடர்ந்து, அதே சமூகத்தை சேர்ந்த நாராயணபெருமாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் பேசிக் கொள்கிறார்கள்.

'பாப்புலர்' முத்தையா

'பாப்புலர்' முத்தையா நெல்லை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது, ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தொடர்ச்சியாக கட்சிக்கூட்டம்  போட்டு சாதனை படைத்துள்ளார். கட்சிக்காக வேகமாக வேலை செய்யக் கூடியவர். இதனாலேயே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தளவாய் சுந்தரம்

சிலநாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் பனங்கொட்டான் விளையை சேர்ந்த பத்மநாபன் என்பவர்,  கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை சந்திக்க,  தனது நண்பர்களுடன் தளவாய்சுந்தரத்தின் ஊரான தோவாளைக்கு சென்றுள்ளார். அப்போது தளவாய் சுந்தரம் வீட்டுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி நடந்த சண்டையில், பத்பநாபனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஹோமோ நிலையில் இருந்த பத்பநாபனை, உறவினர்கள் தேடி அலைந்து, கடைசியில் மருத்துவமனையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் பத்மநாபன் இறந்துவிட்டார். இந்த பிரச்னை தளவாய்சுந்தரத்தை சுழன்று கொண்டிருந்தது.

thalavaisundharam-pachaimal.jpg

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே,  கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச்  செயலாளருமான தளவாய்சுந்தரம்தான் என அவரது விசுவாசிகள் மார்தட்டி வந்தனர். தளவாய்சுந்தரமும் அறிவிக்கப்பட்டார். கட்சியில் தளவாய் சுந்தரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்துவதில் இறங்கினர்.  சிவகாசி ஜெயலட்சுமி, டாக்டர் கோமதி இன்னும் பல பெண்களின் விவகாரங்களில ஆரம்பித்து, 2011-ம் ஆண்டு,  தளவாய் சுந்தரத்திற்கு கன்னியாகுமரி தொகுதிக்கு 'சீட்' கொடுக்காததால் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க கொடி கம்பங்களை வெட்டி சாய்த்தது வரை ஆதாரங்களுடன் அவரின் எதிர்க்கோஷ்டியினர் தகவல்களை சேகரிததனர். அவை மட்டுமா? கடந்த காலங்களில் தளவாய் சுந்தரத்தை பற்றி வந்த தினசரி செய்திகளின் தொகுப்புகளை, சமூக வலைதளங்களில் குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் வைரலாக்கினர். இப்போது பத்பநாபன் இறந்த விகாரமும் தளவாய்சுந்தரத்தின் பயோடேட்டாவில் ஏறியுள்ளது.

தேர்தலின் போது,  தென்மாவட்டங்களில் அ.தி.மு.கழகம் மீது அதிருப்தியில் உள்ள சமுதாய தலைவர்களை சந்தித்து சமாதானப்படுத்த,  ஜெயலலிதா ஒரு குழுவை நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் நேரடியாக விசிட் செய்யாத ஒரே மாவட்டம்... குமரிதான்! அதன் காரணமாகவோ என்னவோ?... நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் குமரியில் உள்ள ஆறு தொகுதியிலும் அ.தி.மு.க தோற்றது. இதனாலேயே தளவாய்சுந்தரம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப்  பதிலாக, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், எம்.பி.யுமான விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADMKVenkadasalam.jpgசேலம் செல்வராஜ்

சேலம் மாநகர் மாவட்டச்  செயலாளராக இருந்தவர் செல்வராஜ். இவர் 2011 முதல் 2016 வரை சேலம் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இதே தொகுதியில் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொடுக்காமல் மாணவரணி செயலாளர் சக்திவேலுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த செல்வராஜ்,  தேர்தல் பணியை சரியாக செய்யவில்லை. அதனால், அவர் வகித்து வந்த மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மேயர் சவுண்டப்பன் எம்.பி., பன்னீர்செல்வம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், சேலம் அ.தி.மு.க மாநகர் மாவட்டச்  செயலாளராக சேலம் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

opsson1.jpg

தேனி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் என நிர்வாகிகளை கூண்டோடு அ.தி.மு.க தலைமை மாற்றியிருப்பது ஓ.பன்னீர் செல்வத்தின் மீது கொண்டுள்ள கோபம் இன்னும் தீரவில்லை என்பதை காட்டியிருக்கிறது. இதில் ஹைலைட்,  பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வகித்து வந்த இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்துவிட்ட சம்பவம் பன்னீரின் குடும்பத்தில் பெரும் இடியை இறக்கி இருக்கிறது.
   
என்ன காரணம் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ் எடுத்த பல்வேறு முடிவுகள் அ.தி.மு.க தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. அதுவும் ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த காலத்தில் பன்னீரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் என்று ஓ.பி.எஸ்.க்கு வேண்டியவர்கள் கட்சியில் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். அதற்கெடுத்து, பல்வேறு அரசு டெண்டர்களில் ஓ.பி.எஸ் மகன் ரவியின் தலையீடுகள் அதிகமாக இருந்து வந்தன. அதோடு ரவியின் தலையீடு தென்மாவட்டங்களில் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டச் செயலாளர் நியமனங்களில் ரவி சொன்ன நபர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியல்கள்,  அவ்வப்போது கட்சி மேலிடத்துக்கு புகாராக கட்சி பிரமுகர்களால் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், முதல்வர் அருகில் இருந்த ஒருவரால், அந்த புகார்கள் மறைக்கப்பட்டதாக கட்சி மேலிடத்துக்கு தெரியவரவே... உளவுத்துறையினர் மூலம் விசாரித்து தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

அந்த வகையில், ரவியின் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மாவட்டச் செயலாளர் சிவக்குமார், பன்னீரின் அடிமையாக வலம் வந்ததோடு,  பன்னீரின் மகன் ரவிக்கு அ முதல் ஃ வரையிலான வேலைகளை செய்ததோடு, நடந்து முடிந்த தேர்தலில் கம்பம் ஜக்கையனுக்கும், ஆண்டிப்பட்டி தங்க தமிழ்செல்வனுக்கும் உள்குத்து வேலைகள் பார்த்து,  இருவரையும் தோற்கடிக்கும் வேலைகள் பார்த்ததாக ஆதராமான தகவல்கள் வந்ததால் அவரை நீக்கிவிட்டது. அவர் இடத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்க் கோஷ்டியை சேர்ந்த தங்க தமிழ்செல்வத்தை புதியதாக தேனி  மாவட்டச்  செயலாளராக நியமித்திருக்கிறார்" என்றார்கள்.

காஞ்சிபுரம் கனிதா சம்பத்- ஆறுமுகம்

kanithasampath.jpg

மதுராந்தகம் தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் போட்டியிட்டார். சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான கனிதா சம்பத், மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலிட பொறுப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி மரகதம் குமரவேல் நியமிக்கப்பட்டிருந்தார். பல இடங்களில் கிராமப் பெண்கள்,  அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவில்லை என்று சொல்லி  'கெரோ' செய்தார்கள். தேர்தல் பொறுப்பாளர்கள் இருவரும் கிராமப் பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையெல்லாம் தலைமைக் கழகத்திற்கு புகார் அனுப்பி விட்டார் செ.கு.தமிழரசன். இதுவே கனிதா சம்பத் பதவி பறிப்பிற்கு காரணம்.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நான்கு மாவட்டச் செயலாளர்களை சந்தித்துள்ளது காஞ்சிபுரம் மத்திய மாவட்டம். காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக திருக்கழுக்குன்றம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2006-ல் சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் நின்று தோற்றவர், இந்த முறை திருப்போரூர் தொகுதிக்காக நேர்காணல் சென்று வந்தார். ஆறுமுகம் மீது திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் மண் திருட்டு வழக்கு உள்ளதாகவும், திருக்கழுக்குன்றம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் தமிழ்மணிக்கு நெருக்கமானவர் என்றும், அவரின் எதிர்க் கோஷ்டியினர் போயஸ்கார்டனுக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, ஆறுமுகத்துக்குப் பதிலாக கோதண்டபாணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிப் பெற்றார். இந்த நிலையில்தான் மாவட்டச் செயலாளர் பதவி ஆறுமுகத்திற்கு கிட்டியுள்ளது.

முன்னாள் வனத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசின் மனைவி மைதிலி திருநாவுக்கரசு. இந்த முறை காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டார். கழக உள்குத்து, இவரை கரை சேர்க்கவில்லை. காஞ்சிபுரம் நகராட்சித் தலைவர் பதவி ராஜினாமா, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி என பதவிகளை இழந்த நிலையில்,  தற்போது கழக அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் மைதிலி திருநாவுக்கரசு. தோல்விக்கான காரணங்களை வேட்பாளர்கள் அடுக்கடுக்காய் கார்டனுக்கு அனுப்பியுள்ளனர். தேர்தலில் மைதிலி தோற்ற தகவல் எட்டியதும், 'ஊழல் ராணி' என்றெல்லாம் காஞ்சிபுரம் நகரில் கடுமையான வாசங்களுடன் போஸ்டர் ஒட்டினார் புல்லட் பரிமளம் என்கிற கட்சி பிரமுகர். அவரை தற்போது ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இவரைப்போலவே, மைதிலிக்கு மறைமுகமாக தேர்தலில் கவிழ்ப்பு வேலை செய்த வேறு சிலர் மீதும் களையெடுப்பு நடவடிக்கை தொடரும் என்கிறார்கள் காஞ்சிபுரம் அதிமுகவினர்.

வேலூர் கிழக்கு மாவட்டம்

velloradmk.jpg

வேலூர் கிழக்கு மாவட்டச்  செயலாளாராக இருந்த ராமு என்பவரை தூக்கிவிட்டு அவருக்கு முன் மாவட்டச்  செயலாளராக இருந்த சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ என்.ஜி.பார்த்திபனுக்கே அந்த பொறுப்பு மீண்டும் வந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு போன்ற தொகுதிகளில் டபுள் கேம் ஆடியதாக ராமு மீது வேட்பாளர்கள் கார்டனுக்கு புகார் அனுப்பி வந்தனர். அது மட்டும் இல்லாமல் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான வீரமணியின் தீவிர ஆதரவாளராக செயல்படுவதால் இவரை கட்சியினர் பெரிதாக மதிப்பளிப்பதில்லை. இவரை மாற்றவில்லை என்றால் கிழக்கு மாவட்டம் காலியாகிவிடும் என்று புகார்கள் குவியவே,  தூக்கி அடிக்கப்பட்டுள்ளார் ராமு. இருந்தாலும் மாவட்டச்  செயலாளர் ரேஸில் பலர் காய் நகர்த்த, பார்த்திபன் மீண்டும் பதவியைப் பிடித்துள்ளார். இதற்கு அவருக்கு உதவியாக இருந்தவர் இப்போது மாற்றப்பட்டிருக்கும் உளவுத்துறை எஸ்.பி பாண்டியன் என்கிறார்கள். எம்.எல்.ஏ சீட் வாங்கி கொடுத்தவர், இப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கும் உதவி செய்துள்ளார். எஸ்.பி பாண்டியன், பார்த்திபனுக்கு உறவினர் என்பதால் லிஃப்ட் பெற்றுள்ளார். 'இவர் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து கைது செய்து வைத்திருந்த இவரின் கார் டிரைவரை, ரீலீஸ் செய்து கூட்டி வந்தார்' என்ற புகார் உள்ளது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக தூசி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியிடமிருந்து இந்தப் பதவி மோகன் கைக்கு மாறியுள்ளது. இவர் 2011ல் ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தார். இவரை அந்தப் பதவியிலிருந்து தூக்கியவர் முக்கூர் சுப்ரமணியன் என்று அப்போது கட்சிக்குள் கிசுகிசுத்தார்கள். இருந்தாலும் அமைச்சராக இருந்த
சுப்ரமணியிடம் மோகன் விசுவாசம் காட்டியதால்,  தனக்கு சீட் கிடைக்கவில்லை என்றபோதிலும்,  தான் நின்ற தொகுதிக்கு மோகனை பரிந்துரைத்தார். வன்னியர் பிரதிநிதித்துவத்திற்காக மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது. மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதவி இல்லாவிட்டாலும் ஆரணி எம்.எல்.ஏ  சேவூர் ராமசந்திரனுக்கு அமைச்சர் பதவி, தூசி மோகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் படி பார்த்துக்கொண்டார் சுப்ரமணி.

ராமநாதபுரம் தர்மர்

Ramnadadmksec01.jpg

ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த தர்மர் மாற்றப்பட்டு,  அவருக்குப் பதில் புதியவரும், கட்சிக்கு இளையவருமான அமைச்சர் மணிகண்டனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளராக இருந்து வந்த தர்மரின் தலை வீழ்த்தப்பட்டதற்கு முக்கிய காரணம் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவரும், தற்போது மாநில மகளிர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான  கீர்த்திகா முனியசாமி தலைமையில் செய்த புகாரையே சொல்கிறார்கள்.

கடும் போட்டியில் இருந்த ராமநாதபுரம், திருவாடானை மற்றும் பரமக்குடி ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், முதுகுளத்தூர் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் பாண்டியிடம் பறிபோனது. அ.தி.மு.க வேட்பாளருக்கு இணையாக காங்கிரஸ்,  களத்தில் பணத்தை தண்ணீராக செலவழித்ததும், மாவட்டச் செயலாளர் உட்பட ஆளும் கட்சி தலைகள் பலவும் கீர்த்திகாவுக்கு எதிராக வேலை பார்த்ததாலும் அவரது வெற்றி பறிபோனது. இது குறித்து தலைமையிடம் கீர்த்திகா விரிவாக புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையிலேயே மாவட்டச் செயலாளர் தர்மரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்காக உழைத்த சீனியர்கள் பலர் இன்றும் பெயர் சொல்ல கூடிய அளவில் உள்ள பதவி எதிலும் இல்லாத நிலையில்,  கட்சியின் ஜூனியரான மணிகண்டனுக்கு எம்.எல்.ஏ., அமைச்சர், இப்போது மாவட்டச் செயலாளர் என அடுத்தடுத்து பதவி கொடுக்கப்பட்டிருப்பது கட்சிகாரர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/65023-reason-behind-change-of-district-secretaries.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.