Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண தமிழர்களை புறக்கணித்த சுகாதார அமைச்சு! கூட்டமைப்பு என்ன செய்கிறது?

Featured Replies

4276_1465409070_2%20(Small).jpg

சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

30 வருடகால யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய பல தமிழ் கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகள் கிழக்குமாகாணத்தில் இருக்கின்றபோதும் அது குறித்து கவனம் செலுத்தாத கிழக்குமாகாண சுகாதார அமைச்சு 90 வீதமான நிதி ஒதுக்கீடுகளை முஸ்லீம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில்

மத்திய அரசங்கத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கடந்த மாதம் 1 குழு கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து தமிழ் சிங்கள வைத்தியசாலைகளை புறக்கணித்து நிதி ஒதிக்கீடு செய்துள்ளது .

2016 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசாங்கத்தால் கிழக்கு சுகாதரத்துறைக்கு 10,63,79 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 90 வீதத்துக்கு மேற்பட்ட நிதி முஸ்லிம் வைத்தியசாலைக்கு மட்டும் ஒதுக்கப் பட்டுள்ளது .

முஸ்லிம் வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை ஆனால் தமிழ் சிங்கள வைத்தியசாலைகள் மத்திய அரசினால் புறக்கணிக்க பட்டத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் .
குறிப்பாக நிதி ஒதிக்கிட்டை பொறுத்த வரையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை 607.6 மில்லியன் கிண்ணியா 2.501.00 மில்லியன் ,மூதுர் 1379.78 மில்லியன் தோப்பூர் 430.16 மில்லியன் மொத்தம் 4.927.54 மில்லியன் .

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை 970.77 மில்லியன், பாலமுனை 333.66 மில்லியன் அட்டாளைச்சேனை 110.53 மில்லியன் தெய்யத்தகண்டி1.012.05 மில்லியன் திருக்கோவில் 437.95 மில்லியன் பொத்துவில் 906.62 மில்லியன் ஒலுவில் 130.55 மில்லியன் மருதமுனை 361.39 மில்லியன் மத்திய முகாம் 325.14 மில்லியன் இறக்காமம் 189.06 மில்லியன் மகாஒயா 865.98 மில்லியன் கல்முனை 62.54 மில்லியன் மொத்தமாக 5.706.25 மில்லியன் ஆகும் .

இந்த நிதியை பொறுத்த வரையில் கிழக்கு மாகாண சுகாதார துறையில் கீழுள்ள வைத்தியசாலைகளை தெரிவு செய்வது மாகாண சுகாதார அமைச்சும், திணைக்களமும் ஆகும்.இந்த தெரிவில் தமிழ், சிங்கள வைத்தியசாலைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன .

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பல வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப் படாமல் இருக்கும் போது குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம் பற்று ,மொரவெவ தம்பலகாமம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை ,கிரான் ,வாழைச்சேனை ,செங்கலடி ,வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி மற்றும் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்கள் ,தமிழ் பிரதேசமான ஆலையடி வேம்பு,காரைதீவு , வீரமூனை போன்ற பகுதிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன இந்த ஒரு பக்க சார்பான நிதி ஒதிக்கீடு தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்குள் பிளவை ஏற்ப்படுத்த விரும்பவில்லை .

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பக்க சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப் படுவது மாகாண சபையில் நல் ஆட்சிக்கு களங்கம் ஏற்ப்படும் செயலாகும் .

இப்படி பட்ட ஒரு பக்க சார்பான நிதியை ஒதுக்கி தமிழ் சமுகம் பாதிக்க கூடியவாரு மாகாணசபையின் செயல் வடிவம் இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ,ஆளும் கட்சியாக இருக்க வேண்டுமா? இரண்டு தமிழ் அமைச்சர்களும் அமைச்சரவையில் இருக்கும் போது இவ்வளவு அநீதிகள் தமிழ் சமுகத்துக்கு நடந்தால் இந்த அமைச்சு கதிரை எமக்கு தேவையா ?

மாகாணசபை உறுப்பினர்களை பொறுத்த வரையில் சில அமைச்சு நிதி தொடர்பாக எந்த ஆலோசனைகளையும் கூறுவதில்லை மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் கூட இது விவாதிக்கப் படுவதில்லை .

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் நிதி ஒதிக்கீட்டில் கிழக்கு மாகாணசபை ஆளும் தரப்பிற்குள் ஒரு முரண் பாட்டை ஏற்ப்படுத்துமானால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது .அது மட்டுமின்றி நேரடியாக தமிழ் சிங்கள சமூகம் பாதிப்படையும் செயலாகும்

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அமைச்சின் பாடசாலைகளுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்ற திட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் [வவுணதீவு ] கல்குடா கல்வி வலயம் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகள் இழுத்து மூடப் படும் நிலை ஏற்ப்படுள்ளது .

இதனால் கல்வி சமுகம் மாணவர்கள் ஆசிரியர்களும் இன்று தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கான முழுப்பொறுப்பும் கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டும் .
எனவே இந்த நிதி கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சோ அல்லது அளுனரோ அல்லது அமைச்சரவையோ நிதிப்பிறிவோ ,திட்டமிடல் பிரிவோ மீள்பரிசீலனை செய்யவேண்டும் .

இந்த நிதி ஒதிக்கீடு மீள் பரிசீலனை செய்யப் பட்டு நல்ல முறையில் 3 இனங்களும் எல்லா பிரதேசங்களும் பாதிக்கப் படாமல் இருப்பதற்கு ஏதுவாக நிதி ஒதிக்கீடு செய்யப் பட வேண்டும் .

இந்த நிதி ஒதிக்கீட்டால் தமிழ் சமுகம் பாதிக்கப் படுமானால் நாங்கள் ஆளும் கட்சியில் இருப்பதா அல்லது எதிர் கட்சியில் இருப்பதா என்பதை பரிசீலனை செய்ய வேண்டிவரும் .

எனவே கிழக்கு மாகாணசபை அமைச்சரவையும் ஆளுனரும் இதற்கான நடவடிக்கையை எடுத்து தமிழ் சிங்கள சமுகம் பாதிக்கப் படாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://battinaatham.com/description.php?art=4276

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.