Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபை குழப்பநிலை தொடர்பில் உறுப்பினர்கள் கருத்து!

Featured Replies

வட மாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாணசபையின் அடுத்த அமர்வில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்த ஒருசிலர் தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஆளும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த முயற்சிக்கு தங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் சிலர், பேரினவாதிகளுக்கு தீனிபோட நினைக்கும் சில அரசியல்வாதிகளின் எடுபிடிகளாகச் செயற்பட்டு வருகின்றனர்.

இத்தகைய கும்பல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்தபோதும் அந்த முயற்சி இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மீறி அவ்வாறான தீர்மானம் சபைக்கு வந்தால் அதனை நிச்சயம் தோற்கடிப்போம் என ஆழுங்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

வட மாகாண சபை ஆளுங்கட்சியில் உள்ள 4 உறுப்பினர்கள் சிலரின் பின்னணில் சபையில் குழப்பத்தை ஏற்படுத்த மிகத் தீவிரமாக குழப்பங்களை உருவாக்க முயன்று வருகின்றனர்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக செயற்பட்டு அவதூறு பரப்பும் செயற்பாடுகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அவர்களின் திரைமறைவுச் சதிகளை அம்பலப்படுத்திய ஊடகங்கள் மீதும் இழிவான விமர்சனங்களையும் இவர்கள் முன்வைத்து வருகின்றனர் எனவும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பெரும்பான்ண்யானோர் கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, வட மாகாண சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டுவரும் ஒரு சிலர் குறித்து ஊடகங்கள் சுட்டிக்காட்டிய நிலையில், அவ்வாறானவர்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் அவ்வாறான முயற்சியில் தாங்கள ஈடுபடவில்லை. ஊடகங்களும் சில அரசியல்வாதிகளுமே இதனைப் பெரிதுபடுத்தி வருவதாக குழப்ப முயற்சியில் ஈடுபட்டுவரும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பலரைச் சந்தித்து இவர்கள் ஆதரவு கேட்டமை மற்றும் சலுகைகள் பெற்றுத் தருவதாக பேரம் பேசியமை தொடர்பான தகவல்களை பல உறுப்பினர்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகின்றனர்.

 

பசுபதிப்பிள்ளை
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நினைப்பவர்கள் சுயநல அரசியல்வாதிகள். தங்களுடைய அடுத்தகட்ட அரசியலுக்காக சில அரசியல்வாதிகளின் வாலை பிடித்துக் கொண்டு நின்று ஆடுகிறார்கள் என குழப்பவாதிகளை நேரடியாகச் சாடுகிறார் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை.

அரசியல் உரிமை பெறவும் நீண்டகால அழிவுகளுக்கான நிவாரணத்தை யும், தம் அரசியல் உரிமைகளுக்கான தீர்விi னயும் எதிர்பார்த்தே உருவாக்கினார்கள்.இதனை மறந்து சுயலாப நோக்கில் செயற்படுபவர்கள் புத்தி பேதலித்தவர்கள். அவர்களுடைய முயற்சியை நாம் எதிர்ப்போம் எனவும் அவர் கூறினார்.

 

விந்தன் கனகரட்ணம்
தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சாட்டுகிறார்.

முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக சில குழப்பங்களை செய்ய நினைக்கிறார்கள். மாகாண சபையைக் குழப்பும் திட்டத்தின் ஒரு அங்கமே இது.

இதற்கு ஆதரவு கேட்டு எம்மை தொடர்பு கொள்ளும்போது முதலமைச்சரின் கையை உடைக்கவேண்டும். அதற்கு முதலில் அமைச்சர் ஐங்கரநேசனின் கையை உடைக்க வேண்டும். என ஒரு மாகாணசபை உறுப்பினர் எனக்கு கூறினார்.

இந்த விடயத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெளிவான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். நம்பிக்கையில்லாதட தீர்மானம் ஒன்று சபையில் கொண்டு வரப்படுமானால் அதனை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்போம். தோற்கடிப்போம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை எனவும் விந்தன் தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா
தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான பழிவாங்கும் களமாக வட மாகாண சபையைப் பாவிக்க சிலர் முற்படுவதாக மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டுகிறார்.

ஒரு அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றால் அதற்குத் தெளிவான காரணம் வேண்டும். அந்த இடத்திற்கான மாற்றீடு என்ன? எதற்காக அந்த மாற்றம் தேவை? என்ற கேள்விகளுக்கு பதில் வேண்டும்.ஆனால் சொந்த எதிர்ப்புணர்வு, உட்கட்சி பிரச்சினைகளினால் சபையைக் கேலிக் கூத்தாக்க சிலர் முயல்கிறார்கள்.

எனவே இந்த விடயத்தை நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளும் நிலையிலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

வட மாகாண சபையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை. மாகாணசபை வினைத் திறனாக செயலாற்ற வேண்டும். என நாங்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/107263

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.