Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவன் நிருராஜ் பற்றை ஒன்றினுள் குற்றுயிருடன் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவன் நிருராஜ் பற்றை ஒன்றினுள் குற்றுயிருடன் மீட்பு

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் இறுயாண்டு மாணவன் அருணகிரிநாதா நிருபராஜ் குற்ருயிருடன் உறவினர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

கடும் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இவர் பற்றை ஒன்றினுள் நேற்றிரவு மீட்கப்பட்டு யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கல்விச் சமூகத்தின் பெரும் அழுத்தம் காரணமாக இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

http://www.pathivu.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் கடும் சித்திரவதையின் பின் விடுதலை

[புதன்கிழமை, 10 சனவரி 2007, 20:02 ஈழம்] [காவலூர் கவிதன்] [புதினம்]

யாழ். கொக்குவில் பகுதியில் கடந்த புதன்கிழமை (03.01.07) சிறிலங்கா இராணுவத்தினரால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு விஞ்ஞானபீட மாணவன், தொடர்ச்சியான கடும் சித்திரவதைக்குப் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் நேரடி உதவியுடன் கொக்குவில் பகுதிக்கு வந்த துணைக்குழு உறுப்பினர்கள், அருணகிரிநாதன் நிருபராஜ் என்ற இந்த மாணவனை, பலாத்காரமாக

இழுத்துச் சென்றிருந்தனர். இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அவரது வீட்டிற்கு முன்னே வந்து நின்ற வாகனத்திலிருந்து வெளியே இவர் இறக்கி விடப்பட்டார்.

மிக மோசமான அடிகாயங்கள் உடல் முழுதும் காணப்படுகின்றன. கடத்தப்பட்ட நாள் முதல், தொடர்ச்சியாக மிகப் பலமான பல்வேறு பொருட்களாலும் உடல் எங்கும் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பேசக்கூட முடியாத நிலையில், மிகக் கொடூரமான உபாதைகளுடன், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரைக் கடத்தி சித்திரவதை செய்தவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட இவர் மறுத்து விட்டதாகவும், ஏனைய மாணவர்களுக்கும் இதுபோன்ற துன்பம் நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்குடன் அல்லது கடும் பயமுறுத்தல் காரணமாக இந்த விபரங்களை இவர் கூறாதிருந்திருக்கலாம் என்று இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தை மீளவும் திறந்து இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதாக இருந்தால், கடத்தப்பட்ட மாணவன் விடுவிக்கப்படுவது உட்பட, மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதே வேண்டுகோளை, பல்கலைக்கழக பொறுப்பாளர்களினால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, யாழ். பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் வரவு முற்றாகக் குறைவடைந்தது. சிறிலங்கா இராணுவத்தினரின் மிரட்டலால் மட்டும் சில மாணவர்கள் சமூகமளிக்க நேர்ந்தது.

கடந்த திங்கட்கிழமை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, பேரூந்து ஒன்று எரிக்கப்பட்டது உட்பட, அனைத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைகளும் தடைப்பட்டிருந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.