Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மூன்று நூல்" எம்.பிக்கள், திண்டாடும் மட்டக்களப்பு

Featured Replies

1717_1450045171_tna1.jpg

மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என பகல் கனவு கண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார்கள் மைத்திரியும் ரணிலும்... தற்போது யாழ், கிளிநொச்சி,வன்னி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் தமிழர் விஐயகலா தமிழர் அங்கயன் தமிழன் பறவாய் இல்லை.


மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மூன்று அதில் இரண்டு பேர் பிரதி அமைச்சர்கள் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்  ஊருக்கு ஒரு எம்.பி, ஓட்டமாவடிக்கு அமிரலி, ஏறாவூருக்கு மௌலானா, காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா, இவர்களுடன் மாவட்ட இணைத்தலைவராக முதலமைச்சர் ஹாபிர் நஸீர் நான்கு பேர் இஸ்லாமியர்கள் 75 வீதம் தமிழர்கள் நில ஆழுமை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில்  25 வீத இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் நிலம் பறிபோகும் ஆபத்து உள்ளது. இது சம்பந்தர் மாவைக்கு விளங்குமா என்பது தெரியாது.


அமிரலிக்கு லண்டன் கணேச மூர்த்தியும் ஹிஸ்புல்லாவுக்கு பேத்தாழை பிள்ளையானும் தமிழர்களின் வாக்கை  தாரை வார்த்துக்கொடுத்தனர் படித்த ஊர் எனகூறும் பட்டிருப்பு தொகுதி களுதாவளை மக்கள் கணேசமூர்த்தியின் உறவுக்கும் பகட்டுக்கும் ஊர் மடத்துக்கும் ஏமாந்து அமிரலியை ஆசனம் ஏற்றினர். கல்குடா தொகுதி, மட்டக்களப்பு தொகுதி சில தமிழர்கள் பிள்ளையானின்  பித்தலாட்டத்தை நம்பி ஹிஷ்புல்லாவுக்கு தேசியப் பட்டியலுக்கு வாக்கெடுத்து கொடுத்தனர்.


நமது கூட்டமைப்பால் தெரிவான மூன்று எம்.பி களும் ஒருமித்து முடிவு எடுக்க முடியாதவர்களாக திண்டாடுகின்றனர்.அவர்களுக்குள்ளே  நான் தான் கல்விமான் புத்திஜீவி கூடிய விருப்பு நானே பொருத்தமானவன் என ஒருவரும், அவர் இல்லை நானே சீனியர் என மற்றவரும் நான் இளைஞன் என்று யார் கூப்பிட்டாலும் முகம் காட்டி வருபவரும் தமக்குள்ளே மாவட்டக் குழுத் தலைவர் பதவிக்காக சண்டை போட்டனர் தமக்கு பதவி கிடைத்தது போன்று தமது ஆதரவாளர்களைக் கொண்டும் ஆரவாரம் செய்தனர், மூன்று பேரும் இணைந்து ஒருவரை தெரிவு செய்ய முடியாத பண்பு கூட இவர்கள் இடத்தில் காணமுடியவில்லை.


1) ஶ்ரீநேசன் : முகநூல் (Face Book) அரசியல் செய்கிறார்.அறிக்கை அரசியல் செய்யமாட்டேன் என்றுபேசிய இவர் படம் காட்டும் அரசியல் செய்கின்றார்.

2) வியாளேந்திரன் : (Text Book) பாடநூல் அரசியல் செய்கிறார்.

தற்போதும் அரசியல் பாடம் பிரேத்தியேக வகுப்புகள் மாணவர்களிடம் பணம் வாங்கி ரியூசன்அரசியல் செய்கிறார்.

3) யோகேஷ்வரன் : பூநூல் அரசியல் (பூணூல், Strands warn) செய்கின்றார்.

இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை வைத்து அரசியல் மேற்கொள்கிறார்.

மூன்று பேருக்கும் ஒற்றுமை "நூல்"என்ற சொல் மட்டுமே உள்ளது

முகநூல்,பாடநூல்,பூநூல் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிதமாய் காணிஅபகரிப்புகளை சிலு சிலுப்பில்லாமல் எல்லைகளையும் கபளிகரம் செய்யும் அமிரலி மாவட்டக் குழுத்தலைவராக இருந்து தமிழர்களின் காணிகளை எதிர்ப்பு இன்றி அபகரிக்க வாய்ப்புகள்அதிகம் உள்ளது. 


இதை எமது மூன்று நூல்களும் எப்படி முகம் கொடுப்பார்கள் அதைவிட கிழக்கு விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் சோலி இல்லாமல் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு சோரம் போனவர், இதயத்தில் ஒரு அறையில் இஸ்லாம் மக்களை அடைத்து வைத்துள்ளார், இவராலும் எதுவுமே செய்ய முடியாது, எஞ்சிய எமது கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டினாலும் அவர்களை சுயமாக முடிவெடுக்க அமைச்சர் துரைராசசிங்கம் விடமாட்டார், கதைத்துக் கொண்டே தமிழ் அரசியல் மக்கள் பிரதிநிதிகள் இருப்பார்கள்

கதையாமலே காரியத்தை சாதிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இருப்பார்கள் மட்டக்களப்பின் எதிர்காலம் இப்படியே செல்லும் இதுதான் மூன்று நூல் பாராளுமன்ற அரசியலாகும்.

-தூயவன்-

 

1717_1450045171_12310700_134461700255226   

1717_1450045171_12346480_134461213588608   

1717_1450045171_IMG_0527.JPG   

1717_1450045171_IMG_0526.JPG   

1717_1450045171_12248091_905783076180650

http://battinaatham.com/description.php?art=1717

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.