Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோல் நிற அரசியலும்;( Skin Color Politics) இரு ஆவண குறும்படங்களும் – மேமன்கவி

images (3)

தோல் நிற வேறுபாட்டை முன் வைத்து உலகச் சமூங்களிடையே ஒதுக்கும் மனப்பான்மையும் ஒடுக்கு முறையும் இற்றைவரை வளர்த்தெடுக்கப்பட்டமை நாம் அறிந்த ஒன்று. இந்த ஒதுக்கும் மனப்பான்மைக்கும் ஒடுக்கு முறைமைக்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் நவீன யுகத்தில் ஒரு பகுதியாக தெரிந்த வரலாறாக ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்கள் எதிர் கொண்ட அவலமும் துயரமும் அவர்தம் விடுதலை போராட்டமும் மாறிய பொழுதும், உலகளாவிய ரீதியாக, தம்மை வெள்ளையர்கள் என சொல்லிக் கொண்ட மேற்கத்திய காலனியங்கள், தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்களை பின்காலனியச் சூழல் வரை வெள்ளையர் அல்லாத கறுப்பர்கள் என்று ஒதுக்கும் மனோபாவத்துடன் நோக்கத் தொடங்கியப் பொழுது, தோல் நிற அரசியல் (Skin Color Politics)என்பது ஒரு பரவலான அவதானத்திற்கு ஆளாகி இருக்கிறது எனலாம்.

இவ்விடத்தில் ஒரு குறிப்புச் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் என்றுச் சொல்லி கொண்டவர்கள் உண்மையில் அவர்தம் தோல் நிறத்தில், வெள்ளை (white) என்று நமக்குப் பரிச்சயமாகி இருக்கும் நிறத்துடன் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் தோல் நிறத்தில் Brown அல்லது yellow shade வுடன் அதாவது Bleached ஆன தோல் நிறத்துடன் இருத்தார்கள். அப்படியானால் அவர்கள் தம்மை வெள்ளையர்கள் (White People என்று அழைத்துக் கொண்டமைக்கானக் காரணம் என்ன என்று பார்த்தோமானால், அவர்களின் அச்சொல்லாடலின் உருவாக்கத்தில் உடலின் தோல் நிறம் மனங்கொள்ளப்படாமல், வெள்ளையர் அல்லாத அதாவது, இவர் தம் சமூகத்தை (மேற்கத்திய) சாராதவர்களிடமிருந்து, தம்மை உயர்த்தியும் பிரித்தும் காட்டுவதற்காவே அச்சொல்லாடலை அவர்கள் கட்டமைத்திருப்பதாகத் தெரிகிறது. 

அதாவது தாம் தூய்மையானவர்கள்;;(Pure), நாகரிகமடைந்தவர்கள்(Civilized People), சுத்தமானவர்கள்;(Clean)என்றும், அவர்கள்(கீழைத்தேய, மற்றும் ஆப்பிரிக்க சமூகத்தினர்) தூய்மையற்றவர்கள் (Pureness), நாகரிகமடையாதவர்கள் ;; (Uncivilized People) ,அசுத்தமானவர்கள் (Unclean) என்ற மாதிரியான ஒரு கருத்தைக் கட்டடமைக்க, அடையாளப்படுத்தப் பயன்பட்டச் சொல்லாடலே அது என தெரிகிறது.அவர்களின் அந்த ஒதுக்கும் மனோபாவமும் ஒடுக்கு முறையும் பல்வேறு போராட்டங்கள் வழியாக இல்லாதொழிக்கப்பட்டாலும், காலனியங்கள் வழியாக உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட ஒதுக்கும் மனோபாவமும் ஒடுக்கு முறையும் பின்-காலனியச் சூழலில் பல்வேறு வடிவங்களில் நுண்ணிய முறையில் தொடரத்தான் செய்தன. அத்தோடு அவர்கள் காலனியங்களாக அதிகாரம் செலுத்தியக் கீழைத்தேய நாடுகளில் ஏலவே சாதிய கட்டமைப்பு ஊடாக (குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வர்ணாசிரமம், சாதியம் போன்ற வழிகளில்) தோல் நிற அரசியல் செயற்ப்பட்டு கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.

இவ்வாறானப் போராட்டங்களுடனும் எழுச்சிக்களுடனும் இணைந்த ஒன்றாக, கறுப்பு என்பது வெறுக்கதக்க, அருவருக்கதக்க ஒன்று என்ற கருத்து நிலைகளுக்கு எதிராக ஒரு கலகச் செயலாக, கறுப்பு நிறத்தைப் போற்றும் வகையில், தம்மை கறுப்பர்கள் என்று சொல்லிக் கொள்வது பெருமைப்படதக்கது என்ற ஒரு போக்கை வலியுறுத்தும் வகையிலான இயக்கங்கள் 1960 ஆப்பிரிக்க அமெரிக்க சூழலில் தோன்றி வலுப் பெற்றன. இதற்கு உதாரணமாக அங்கு தோற்றம் பெற்ற Black is beautiful என்ற இயக்கத்தைச் சொல்லாம்.

(Black is beautiful என்ற சொற்றொடரை ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்தின் முதல் மருத்துவராக கருதப்படும் துழாn ளுவநறயசவ சுழஉம (John Stewart Rock (Oct 13, 1825 – Dec3, 1866) என்பவர் 1858 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரை ஒன்றின் பொழுது முதல் முதலாகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.) ஆனாலும் அவர்கள் (கீழைத்தேய, மற்றும் ஆப்பிரிக்க சமூகத்தினர்) கறுப்பாக இருப்பது வெறுக்கதக்கது, அசிங்கமானது என்றும், மாறாக வெள்ளையாக இருப்பது அதாவது Light Skin இருப்பது உயர்ந்த சமூக அந்தஸ்தை பெற்றுத் தரக்கூடியது என்ற மனோபாவத்தை, தாம் ஆட்சி செய்த நாட்டு மக்களின் மனதில் ஆழமாக விதைத்துச் சென்று இருக்கிறார்கள். இக்கருத்தானது வெறுமனே தோல் நிறம் சார்ந்ததோடு மட்டுமே மட்டுப்படுத்தப்படாமல், அவர்கள் விட்டுச் சென்ற காலனிய மனோபாவத்தோடு இணைந்த ஒன்றாக(Colonial mentality)பின்காலனியச் சமூகத்தில் செயற்பட்டது. இந்த மனோபாவம் பின்காலனியச் சமூகத்தின் சில வகுப்பினருக்குகு தம்மை மீள் காலனியமயப்பட்டவர்களாக காட்டிக் கொள்வதற்கு துணை புரிந்தது. இதனை தனது நூல் ஒன்றிலே அல்ஜிரிய போராட்டத்துடன் தம்மை இணைந்து கொண்டவரும், பின்காலனியச் சிந்தனையாளர்களில் ஒருவருமான பிரான்ஸ் பனான்;(Frantz Fanon) தனது கறுப்புத்தோல், வெள்ளை முகமூடிகள் ;(Black Skin, White Masks)என்ற நூலில் வெள்ளையர்கள் என்ற தம்மைச் சொல்லி கொண்டவர்கள் விதைத்த காலனிய மனோபாவத்தை முகமூடியாக தரித்துச் செயற்பட்ட கறுப்பர்கள் என்ற நோக்கில் விரிவாக எடுத்துரைப்பார்.

(இவ்விடத்தில் கீழைத்தேய குறிப்பாக இந்தியச் சமூகத்தில் பிராமணர்களாக இல்லதாவர்களும் அவர் தம் தோல் நிறத்தை மாற்றிக் கொள்ளமுடியாவிடினும், தங்களை புதிய பிராமணர்களாக மாற்றிக் கொண்டமையயும் இங்கு நினைவுக்கு வருகிறது) ஏலவே கீழைத்தேயச் சமூகங்களில் சாதியக் கட்டமைப்பின் ஊடாக கட்டமைக்கப்பட்டிருந்த தோல் நிற வேறுபாடு சம்பந்தமான கருத்து நிலையை. தமக்கு சாதமாகப் பயன்படுத்தி கொண்டும், மற்றும் மேற்கத்திய கலை இலக்கியங்கள் ஊடாகவும் அக்கருத்து நிலையை (அதாவது கறுப்பானவர்கள் மோசமானவர்கள வில்லன்கள் என்றும், வெள்ளையர்கள் நல்லவர்கள் நாயகர்கள் என்ற மாதிரியான) அவர்கள் தம் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் காலனியங்களாக செயற்பட்ட காலகட்டத்தில் மேலும் வளர்த்தெடுத்ததன் காரணமாக, காலனிய ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளின் மக்களிடையே அவர்களுக்குள்ளான தோல் நிற வேறுபாடுகளின் காரணமாக, சமூக-உள நிலை மட்டத்தில் ஒரு வகையான சமசீர்யற்றத்தன்மை உருவானது. அதாவது Light Skin கொண்டவர்கள் சமூக மட்டத்தில் பெற்று கொண்ட அந்தஸ்து, வரவேற்பு, செல்வாக்கு போன்றவை காரணமாக, அந்த நாடுகளின் கறுப்பு நிற தோல் கொண்டவர்கள் சமூக ஊடாட்டத்தில் அந்நியமாகி, ஒரு வகையான தாழ்வுச் சிக்கலுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகினர்.

இவ்வாறாக தோல் நிற அரசியல் செயற்பட்ட விதம் பற்றி பல்வேறு நூல்கள், திரைப்படங்கள், ஆய்வுகள், ஆவண படங்கள், மூலம் எடுத்துச் சொல்லப்பட்டது. அத்தோடு அதற்கு எதிரானப் போராட்ட இயக்கங்கள், தோல் நிற அரசியலை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

C.Herring என்ற ஆய்வாளர் தோல் நிற அரசியலானது உலகளாவிய ரீதியாக இரு மட்டங்களில் நிலவுகிறது என குறிப்பிடுவார். ஒன்று intraracially மட்டம்-அதாவது ஒரு சமூக இனக்குழுக்குள்ளேயே கறுப்பாக இருப்பவர்களுக்கும் Light Skin கொண்டவர்களுக்குமிடையே இடையே சமூக-உள நிலை மட்டத்தில் நிலவும் சமசீர்யற்ற தன்மை, அது வழியான தாழ்வுமனச்சிக்கல்.

இரண்டாவது interracially மட்டம்-வெள்ளையர் அல்லாத சமூகத்தினர் (குறிப்பாக கீழைத்தேய ஆப்பிரிக்க) அவர் தம் சமூகச் சூழலுக்கு வெளியே ஊடாடும் பொழுது எதிர் கொள்ளப்படும் நெருக்கடிகள், பிரச்சினைகள்.

இவ்விரு நிலை மட்டங்களிலேயே உலகளாவிய ரீதியாக தோல் நிற அரசியல் செயற்பட்டு கொண்டிருக்கிறது என்பது பல ஆய்வுகள் வழியே அறியப்பட்டுள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் இணைய வழியாக பார்க்க கிடைத்த இரு ஆவண குறும் படங்கள் கவனத்தைக் கவர்ந்தன. ஓன்று Nayani Thiyagarajah வின் Shadeism. அடுத்து கென்ய திரைப்பட இயக்குனர் Ng’endo Mukii இயக்கிய Yellow Fever.

இதில் Nayani Thiyagarajah வின் Shadeism நமது விசேட கவனத்தை பெறுகிறது. Nayani Thiyagarajah இலங்கையிலிருந்து 1985 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருந்த வேளை கனடாவுக்கு புலப்பெயர்ந்த யாழ்ப்பாண தம்பதிகளுக்கு கனடாவில் பிறந்தவர். அங்கு கல்வி கற்றவர். அவரது கல்விச் செயற்பாடுகளில் ஒரு செயற்திட்டத்தின் அடிப்படையில் சக மாணவிகளான Vanessa Rodrigues, Kate Fraser, Khadra Ali, Muna Ali, Jazzmen Lee-Johnson( (இவர்கள் எல்லோரும் ஆசிய, ஆப்பிரக்க மற்றும் காபரின் நாடுகளிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.) ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சித்தான் ளாயனநளைஅ எனும் இந்த ஆவண குறும்படம்.

இவற்றில் Nayani Thiyagarajah வின் shadeism ஆவண குறும்படமானது intraracially and interracially இரண்டு தளங்களிலும் நின்று தோல்நிற அரசியலை பற்றிப் பேச, கென்ய திரைப்பட இயக்குனர் Ng’endo Mukii இயக்கிய Yellow Fever அப்பிரச்சினையை intraracially தளத்தில் நின்று பேசுகிறது.

எந்த காலனியம் மூலம் பின்காலனிய மக்கள் மனதில் உருவாக்கம் பெற்ற அவர்தம் தோல் நிறம் சார்ந்த தாழ்வு மனச்சிக்கலுக்கு பரிகாரம் தேடி தர, அதே காலனியம் இன்று நவகாலனிய வடிவில் பின்காலனிய நாடுகளில் உலகமயமாக்கல், சந்தை பொருளாதாரம், நுகர்வுச் சந்தை என்பன வழியாக, வெள்ளையாக மாறுவதே உயர்ச்சியானது(அதாவது Light Skin ஆக மாறுவதே) என்ற நோக்கில், அதிலும் குறிப்பாக பின்காலனிய நாடுகளின் பெண்கள் மத்தியில், அவர்தம் தோலை வெளுப்பாக்கும் வகையிலான பசைகள்;(Cream) எண்ணெய் வகைகள் சவர்க்கார வகைகள் போன்றவற்றை(உதாரணத்திற்கு Fair and Lovely, Dove போன்ற பசைகள்)பெண்களுக்கான அழகு பொருட் சாதனங்களின் உற்பத்தித் துறை மூலம் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் அத்தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டதோடு, அவர்களின் உற்பத்திப் பொருட்கள் பின்காலனிய நாடுகளில் குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் செல்வாக்கை செலுத்தும் வகையில் அவைக்கான விளம்பரங்களை உருவாக்கம் செய்தன.

Nayani Thiyagarajah வின் shadeism intraracially மட்டத்தில் நின்று பேசுகின்றது எனும் பொழுது அவர் தான் சார்ந்த தமிழ்ச் சமூகமான தன் குடும்ப சூழலில், தோல்நிற சம்பந்தமான கருத்துகளுடன் தன் உடல் நிறத்தைப் பற்றிய அடையாளப்படுத்தலுடன் அந்த ஆவணப்படத்தை தொடக்கம் செய்கிறார்.அதாவது கீழைத்தேய நாடான இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற வகையில் முதலில் தான் சார்ந்த சமூக, குடும்பச் சூழலில் தோல் நிற சம்பத்தமாக நிலவும் மதிப்பீடுகள், மனோபாவம், சம்பந்தமாக பேசும் அவர், அவ்வாறாக போகிற போக்கில் தான் சார்ந்த மற்றும் கீழைத்தேயச் சமூகங்களில் அதாவது வெள்ளையர் அல்லாத சமூகத்தினரிடேயே குறிப்பாக பெண்கள் இடையே தம் தோல் நிறத்தை மேற்குறித்த அழகுச் சாதனப் பொருட்கள் கொண்டு மாற்றி கொள்வதில் கொண்டுவுள்ள ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகிறார்.

அதே மாதிரி Ng’endo Mukii இயக்கிய Yellow Fever Tk; intraracially வும் iவெசயசயஉயைடடல மட்டத்தில் நின்று பேசுகின்றது எனும் பொழுது, ஆப்பிரிக்கச் சமூக அமைப்பில் பெண்கள் தங்கள் தோல் நிறத்தை மேற்குறித்த அழகுச் சாதனப் பொருட்கள் கொண்டு மாற்றி கொள்ளும் தீவிர போக்கை எடுத்துக்காட்டுகிறார். அத்தோடு அவ்வழகுச் சாதனப் பொருட்களின் பாவனையின் பாதுகாப்பு தன்மையற்ற தன்மையும், அதனால் ஏற்படும் சுயவதையையும் இவ்விரு ஆவண குறும்படங்களும் எடுத்துக் காட்ட தவறவில்லை.

அக்குறும்படத்தில் கீழைத்தேய நாடுகளின் சமூகங்களில் தோல் நிற அரசியலை பற்றிய உரையில் Nayani Thiyagarajah பின்காலனிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தோல் நிற வேறுபாடியிட்ட மனோபாவம் என்பது நீண்ட காலமாக ஐதீகங்கள், புராணங்கள் வழியாக நிலவிய ஒன்றாகவும், பிற்காலத்தில் காலனியங்களால் வளர்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது என்பதை, யோக் பல்கலைக்கழத்தில் (York University) தெற்காசிய கற்கை பிரிவில் (South Asian Studies ) பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஹீரா சிங் (Prof Hira SIngh) அவர்களுடான உரையாடலின் பொழுது விபரமாக தான் அறிந்து கொண்டாதாக குறிப்பிடுகிறார். அத்தோடு கரிபியன் சமூகங்களில் நிலவும் தோல் நிற வேறுபாடுகளின் தன்மைகளை பற்றி Ryerson பல்கலைக்கழகத்தில் கரிபியன் கற்கை நெறியில் பணியாற்றும் Prof Camille Hernandez அவர்கள் மூலம் அறிந்துக் கொண்டதோடு, அச்சமூகத்தில் நிலவும் தோல் நிற வேறுபாட்டினை அங்குள்ள ஆய்வாளர்கள் Pigmentocracy என்ற சொல்லாடலை கொண்டு அழைப்பதையும் அவர் மூலம் தெரிந்துக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும் அப்படத்தில் அவர் கீழைத்தேய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் வழியாக அவ்வழகுசாதனமெ பொருட்களின் பாவனை ஊக்குப்படுத்தும் வகையில் பெரும் செலவில் விளம்பரங்கள் கட்டமைக்கப்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறார். அந்த விளம்பரங்கள் வெறுமனே அப்பொருட்களை சந்தைப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கும், அதேவேளை அவ்விளம்பரங்களின் வழியாக வெள்ளையாக இருப்பது மேன்மையானது என்ற கருத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் முயற்சிகளாவும் இருக்கின்றன என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்.

Nayani Thiyagarajah வின் shadeism யில் interracially மட்டத்தில் தோல் நிற அரசியல் செயற்படும் விதம் பற்றியும் முக்கியமாக பேசி இருக்கிறார். காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் (அதாவது வெள்ளையர்கள் என்றுச் சொல்லி கொண்டவர்கள்) பல நாடுகள் மீது படையெடுத்து, அவை தம்மை அடிமைப்படுத்திய நிலைமை மாறி, பின்காலனியச் சூழலில், வெள்ளூயர் அல்லாதவர்கள் என்ற சொல்லப்பட்ட கீழைத்தேய ஆப்பிரிக்க மற்றும் கரிபியன் தீவுகளின் சமூகத்தினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததன் மூலம் அவர்கள் தம் தோல் நிற வேறுபாடுகளால் பல்விதமான நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆளாகினர் என்பதையும் ; Nayani Thiyagarajah வின் ஆவணப்படம் பேசுகிறது. குறிப்பாக கனடாவுக்கு குடிபெயர்ந்த ஆசிய ஆப்பிரிக்க, மற்றும் கரிபியன்; சமூகத்தினர் தோல் நிற வேறுபாடுகளின் காரணமாக சமூக-உள நிலையில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை, நெருக்கடிகளை அவ்வாறான சமூகத்தினருடன் உரையாடி பதிவு செய்து உள்ளார்.

ஆனால் இவ்விரு குறும் ஆவணப்படங்கள் கீழைத்தேய ஆப்பிரிக்க மற்றும் கரிபியன்; சமூகங்களில் தோல் நிறத்தை மாற்றிக் கொள்வதில் குறிப்பாக பெண்கள் காட்டும் தீவிர செயற்பாடானது, தோல் நிற அரசியலுடன் மிக தொடர்புடைய நவீன வடிவிலான ஒரு பிரச்சினை என்ற வகையில் அப்பிரச்சினையை பிரதானமாகவும் ஆழமாகவும் பேசி இருக்கின்றன என்பது பாராட்டுக்குரிய முயற்சிகள் எனலாம்.

இதில் குறிப்பாக Nayani Thiyagarajah வின் shadeism நமது கவனத்தை ஈர்ப்பதற்கான காரணம், தமிழ்ச் சமூகச் சூழலில் இப்பிரச்சினையிட்ட பிரஸ்தாபிப்பு என்பது பரவலாகாத நிலையில், குறிப்பாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்ச்; சமூகத்தை சார்ந்த ஒரு பெண்மணியான Nayani Thiyagarajah இப்பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்பதே ஆகும்.

இப்படத்தை பற்றிய அளித்த பேட்டி ஒன்றில் அவர் கறுப்பு நிறத்தையிட்ட கருத்தை மாற்றி அமைப்பதற்காகவும், வெள்ளை நிறத்தைப் பற்றிய உயர் கருத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தவும், தோல் நிற வேறுபாடு சம்பந்தமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், ஒரு பெரும் இயக்கமாக போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது என்றுகிறார். அச்செயற்பாடுகளுக்கு பக்கத் துணையாக கறுப்பு நிறத்தின் மேன்மையை எடுத்து காட்டும் வகையிலான இயக்கச் செயல்பாடுகள் நிகழ்ச்சித் திட்டங்கள் உலகளாவிய ரீதியாக நடைபெறுவதை குறிப்பிட்டு அத்தகைய சில முயற்சிகளாக ஒன்றாக இந்தியாவில் பிரபல நடிகை நந்திதா தாஸின் ஆதரவுடன் நடைபெறுவதையும் குறிப்பிட்டு, கரிபியன்; நாடுகளில் அதையிட்ட விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் நடத்தப்படுவதை நினைவுப்படுத்துகிறார். நான் இக்கட்டுரை குறிப்பிட்டுள்ள Ng’endo Mukii இயக்கிய Yellow Fever ஆவணப்படத்தையும் அவ்வாறான ஒரு முயற்சிகளில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார்.

Nayani Thiyagarajah, தங்களது இப்படமானது பரந்த அளவான வரவேற்பினையும் கவன ஈர்ப்பையும் பெற்றுக் கொண்டாலும், தோல் நிற அரசியல் பற்றி இன்னும் பரந்த அளவில் பேச வேண்டிய தேவையும், அதற்கு எதிரான போராட்டத்தை விரிவாக நடத்த வேண்டிய தேவை ஒன்றும் இருக்கிறது என்பதை தாங்கள் இப்படத்தை யிட்டு பெற்ற அனுபவங்கள் வழியாக அறிந்து கொண்டாதகவும், பின்காலனிய உலகமயக்கமாக்கல் சூழலில் தோல் நிற அரசியலுக்கு எதிரானப் போராட்டம் என்பது வெறுமனே வரலாற்றுடனானப் போராட்டமாக மட்டுமல்லாமல் பெரும் தொழில்துறைவுடனான போராட்டமாகவும் அது அமைந்துகிறது என்பதையும் அறிந்து கொண்டதாக அப்பேட்டியில் குறிப்படுகிறார். அத்தோடு தாங்கள் தந்திருக்கும் Shadeism எனும் இந்த ஆவணபடத்தின் போதாமையையும் உணர்ந்து கொண்டதன் காரணமாக, Shadeism: Digging Deeper எனும் தலைப்பில் தோல்நிற அரசியலை விரிவாகப் பேசும் ஒரு முழுநீள ஆவணப்படத்தை 2015 ஆம் ஆண்டு அளவில் வெளியிடுவதிலான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதாக அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் யேலயni வுhலையபயசயதயா; இப்படத்;தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளின் சமூகங்களில்; வர்ணாசிரமம் மற்றும் சாதியம் ஊடாக, அன்று முதல் இன்றைய யுகம் வரை தோல் நிற அரசியல் மிக நுண்ணிய முறையில் செயற்பட்டு வந்துள்ளது வருகிறது என்பதை விரிவாக பேச தவறி விட்டார் என தோன்றுகிறது. அவரது இப்படத்திற்கான காலநீட்சி குறைவாக இருப்பதனால் அவ்விடயத்தை பற்றி பேச முடியாமல் போய் இருக்கிறது போல் தோன்றுகிறது. அக்குறையை அப்பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் 2015 ஆம் ஆண்டில் வெளியிடப் போகும் Shadeism: Digging Deeper எனும் முழுநீள படத்தில் மேற்குறித்த விடயத்தை பற்றியும் அவர் பேச வேண்டும் என்பது எமது அவா.

அதை போல் Ng’endo Mukii இயக்கிய Yellow Fever பின்காலனியச் சூழலில் ஆப்பிரிக்கச் சமூக அரசியலின் பல்வேறான தளங்களில் தோல் நிற வேறுபாடு செயற்படும் விதத்தைப் பற்றி பேசமால், இன்றைய நிலையில் தோல் நிற அரசியலானது ஆப்பிரிக்க சமூக பெண்கள் தங்கள் தோல் நிறத்தை மாற்றி கொள்வதற்கான தீவிரத்தை பற்றி மட்டுமே பேசுவதோடு நின்று விடுகிறார்.

Nayani Thiyagarajah பேசி இருக்கும் தோல் நிற அரசியல் என்பது, இந்தியா இலங்கை சூழலில் வர்ணாசிரம சாதிய கட்டமைப்பில் இருந்த பொழுதும், அவையிட்ட ஆய்வுகளில் அது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பேசப்படாத நிலையில், இவ்வரசியலை பற்றிய அறிதலானது, நிறவாதம் என்ற பேரில் ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பு இன மக்கள் அதனால் எதிர் கொண்ட துயர். மற்றும் அவர் தம் போராட்டம் என்பதாகவே தமிழ்ச் சூழலில் இருந்து வந்துள்ளது. அத்தோடு தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களின் போராட்டத்தின் வெற்றியோடு நிறவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் என்று கருதப்படுகிறது.

Shadeism போன்ற ஆவணப்படங்கள் தமிழ்ச் சூழலில் பார்க்கப்படாத நிலையில், Shadeism Shadeism, Colorism, Skin Color Politics, என்றெலாம் அடையாளப்படுத்தப்படும் இப்பிரச்சினை அதிக அளவில் பேசப்படாத சூழலில், காலனிய காலகட்டம் தொடக்கம் பின்காலனிய காலகட்டம் வரையிலான தோல் நிற அரசியலானது, உலகளாவிய ரீதியாக நுண்ணிய முறையில் பல்வேறு வழிகளிலும் செயற்பட்டு (கீழைத்தேய மக்கள் மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடடிக்கைகளையும் இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்) கொண்டிருப்பதையும், அதற்கு எதிரானப் போராட்டங்கள், விழிப்புணர்ச்சி, அதையிட்ட இயக்கச் செயற்பாடுகள் என்பதை பற்றியும் இவ்வாறான ஆவணப்படங்களால் அறியக்கூடியாதக இருக்கிறது.

இத்தகைய ஆவணப்படங்கள் இலங்கையிலிருந்து மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் முன்றாம் தலைதுறைச் சார்ந்தவர்களில் ஒருவரான Nayani Thiyagarajah மேற்குறித்த பேட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் இரண்டாம், முன்றாம் தலைமுறையினரிடையே தோல் நிற அரசியலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கணிசமான அளவில் ஆதரவு இருப்பதாக குறிப்பிடுகிறார் என்பதை இங்கு நினைவுப்படுத்த் வேண்டி இருக்கிறது.) படைப்பாளிகளாக தம்மை வெளிப்படுத்தி கொண்டவர்கள், தமிழிலும், அவர்தம் புலம்பெயர்ந்த நாடுகளின் மொழிகளிலும் படைத்தளிக்கும் பின்காலனிய இலங்கை தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வின் ஒர் அம்சமாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய ஆக்க இலக்கியப் படைப்புக்களில் நிறவாதம் சம்பந்தமாக பேசுகின்ற படைப்புக்களை தனியாக கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒரு தேவையையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த வகையில் (Nayani Thiyagarajah யின் Shadeism போன்ற ஆவணப்படங்கள் பரவலாகப் பார்க்கப்பட்டு பேசப்பட வேண்டியவை எனலாம்.

••••••••

http://malaigal.com/?p=8368

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.