Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத்தில்பெ ரும் அமளிதுமளி

Featured Replies

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பு, மகிந்தானந்த எம்.பி.யின் சவால் ,
பிமல் நிஷாந்த எம்.பி.யின் கொலை மிரட்டல் தொடர்பான சிறப்புரிமை மீறல், பிரதமரின் பதிலடிகள் என சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சபை அல்லோலகல்லோலப்பட்டது.


பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. செவ்வாய்க்கிழமை சபை நடவடிக்கைகள் தமிழில் ஆரம்பிக்கப்பட்டது போன்றே சகல அறிவிப்புக்களையும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மொழியிலேயே முன்னெடுத்தார். இதனால் அரச தரப்பு பிரதம கொறடா மற்றும் அமைச்சர்கள், 


சிங்கள எம்.பி.க்களிடையே தடுமாற்ற நிலை ஏற்பட்டது. அமைச்சர்கள் உரைபெயர்ப்புக் கருவிகளை காதில் அணிந்தவாறே தமது நடவடிக்கைகளை முன்னெடுத்த அதேவேளை, சில உதவியாளர்கள், செல்வம் எம்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உதவிக் கொண்டிருந்தனர். 


சர்ச்சையை தொடக்கிய  அமைச்சரின் அறிவிப்பு


இந்நிலையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரின் அனுமதியோடு அறிவிப்பு ஒன்றை விடுத்தார். அதில் அவர், மகிந்த ஆதரவு அணி எம்.பி.யான மகிந்தானந்த அளுத்கமகேயால் தன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விமர்சித்தார். அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனக் கூறி அவற்றை நிராகரித்தார்.


பிரதமரை சீண்டிய மகிந்தானந்த


இதனையடுத்து எழுந்த மகிந்தானந்த எம்.பி., அமைச்சர் ரவியின் அறிவிப்புக்கு பதிலளிக்க முற்பட்டார். ஆனால் அது ஒழுங்குப் பிரச்சினையில்லையெனக் கூறிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மகிந்தானந்தவுக்கு அனுமதியளிக்க வேண்டாமென சபாபீடத்தைக் கோரினார். அப்போது மகிந்தானந்தவை பேச விடுமாறு நிதி அமைச்சர் ரவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். 


அப்போது மகிந்தானந்த அளுத்கமகே எம்.பி. இது விடயத்தில் பிரதமருக்கும் வலி உள்ளது எனக்குத் தெரியும் எனக் கூறினார். இதனையடுத்து எழுந்த பிரதமர் ரணில், நிதி அமைச்சர் தன் தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளார். மகிந்தானந்தவுக்கு அது தொடர்பில் பதிலளிக்க ஏதாவது இருப்பின் சிறப்புரிமைக் குழு முன் தெரிவிக்க முடியும் என்றார்.


பயப்படுகிறீர்களாரணில்எதற்கும் தயார்மகிந்தானந்த


ஆனால், மகிந்தானந்த பிரதமரையும் நிதி அமைச்சரையும் கடுமையாக விமர்சிக்க மீண்டும் எழுந்த ரணில், இந்த விடயத்தை சிறப்புரிமைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தலாம். அதேவேளை இச்சபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென இவருக்குத் தெரியவில்லை. நீங்கள் ஆட்டம்போட்ட காலம் முடிந்துவிட்டது. ஏன் சிறப்புரிமைக் குழுவுக்கு செல்ல பயப்படுகின்றீர்கள். முடிந்தால் செல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.


இதற்கு மகிந்தானந்த எம்.பி.பதிலளிக்கையில்;  ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை பிரதமரிடம் தருகின்றேன். சிறப்புரிமைக் குழு முன்பாக அல்ல அதற்கு அப்பால் செல்லவும் எதற்கும் முகங்கொடுக்கவும் நான் தயாராகவுள்ளேன் என்றார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் என்னிடம் தரவேண்டாம். சிறப்புரிமைக் குழுவிடம் கொடுங்கள் என்றார்.


இதன்போது சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., திடீரென இந்த விடயம் சிறப்புரிமைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றதென தமிழில் அறிவித்தார். எனினும், மகிந்தானந்த அளுத்கமகே தொடர்ந்தும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிக்கொண்டிருந்தார். ஆனால், இவ்விடயத்தை விவாதிக்க முடியாதென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.


தலைவர் அவர்களே காது கேட்கவில்லையா?


அப்போது தொடர்ந்தும் மகிந்தானந்த எம்.பி.ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியபோதும் செல்வம் எம்.பி. அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த மகிந்தானந்த எம்.பி.தமிழில் தலைவர் அவர்களே உங்களுக்கு காது கேட்கவில்லையா? தமிழ் தெரியும் தானே எனக் கேட்டபோதும் செல்வம் எம்.பி.ஒழுங்குப் பிரச்சினைக்கு நேரம் கொடுக்கவில்லை.


அடுத்த சர்ச்சை ஆரம்பம்


மகிந்த ஆதரவு அணியினரின் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியிலும் அதே அணியைச் சேர்ந்த இன்னொரு எம்.பி.யான விமல் நிஷாந்தவின் சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு செல்வம் எம்.பி. அனுமதி வழங்கினார்.

அவர் தனது சிறப்புரிமை மீறலில் தனது தொலைபேசிக்கு 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தராதுவிட்டால் தன்னையும் தனது 3 பிள்ளைகளையும் கொலை செய்யப்போவதாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதுதொடர்பில் மிரட்டல் வந்த தொலைபேசி இலக்கத்துடன் பொலிஸில் இரு முறைப்பாடுகளை செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும், எம்.பி.யான தன்னிடமே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டும் கப்பம் கேட்கப்பட்டும் உள்ளதுடன், பொலிஸார் நடவடிக்கை எடுக்காதுள்ள நிலையில் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்குமென கேள்வி எழுப்பியதுடன் அரசையும் விமர்சித்தார். பிமல் நிஷாந்த எம்.பி.க்கு ஆதரவாக தினேஸ் குணவர்தனவும் குரல் எழுப்பினார். 

இதனால் சர்ச்சை மீண்டும் வெடித்தது. இதற்கிடையில் மகிந்தானந்த தொடர்ந்தும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் எழுந்து நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.


பாராளுமன்றம்  சி.ஐ.டி.  அல்ல


பிமல் நிஷாந்தவின் பிரச்சினை சாதாரணமானதல்ல. அதற்கு பதில் கூற வேண்டுமென தினேஸ் குணவர்தன எம்.பி. வலியுறுத்திய போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல,  சி.ஐ.டி.யின் வேலையை பாராளுமன்றம் செய்ய முடியாது என்று கூறியபோது மகிந்த ஆதரவு அணி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.


முஸ்லிம்களைக் கொன்ற காலம் இதுவல்ல


இவ்வாறு கூச்சல், குழப்பம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது எழுந்த பிரதமர், களுத்துறை மாவட்ட எம்.பி.யான பிமல் நிஷாந்தவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து பொலிஸ் மா அதிபருக்கு அறிவிப்போம். என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் அவர் பார்த்துக் கொள்வார். பேருவளையில் முஸ்லிம்களைக் கொன்ற காலம் இதுவல்ல.


தற்போது அனைவரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதற்கு அரச தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்பளித்தனர். பதிலுக்கு மகிந்த ஆதரவு அணியினர் கூச்சலிட்டனர்.


கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் சட்டமூலத்தை சமர்ப்பித்த பிரதமர்


கூச்சல், குழப்பங்கள் தொடர்ந்து கொண்டிந்த நிலையில், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்த சட்டமூலத்தை சமர்ப்பித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து மக்கள் தீர்ப்பொன்றின் போது அல்லது தேர்தல் ஒன்றிற்கான காலக்கெடுவின் போது அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்றவேண்டிய ஒழுக்கநெறி தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.


அண்ணன்  தம்பி வாய்ச் சண்டை


பிரதமர் தன் உரையை முடிக்கும் வரை மகிந்த ஆதரவு அணி எம்.பி.க்கள் எழுந்து நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பிரதமரும் அவர்களை சீண்டியபடியே உரையைத் தொடர்ந்தார். பிரதமர் உரை முடிந்த பின்னர் மகிந்த ஆதரவு அணி எம்.பி.யான மகிந்தானந்த அளுத்கமகேயின் ஒழுங்குப் பிரச்சினைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து மகிந்த அணியினர் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.


மகிந்தானந்த எம்.பி. தன் ஒழுங்குப் பிரச்சினையில் மாதிவெலயிலுள்ள கறுப்பு டிபென்டர் வாகனம் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த வாகனம் என்னுடையதென ரஞ்சன் ராமநாயக்கவும் ஆனந்த அளுத்கமகேயும் மாதிவெலயில் நடத்திய ஊடகவியலாளர்கள் தரப்பில் தெரிவித்ததாகவும் கூறிக்கொண்டிருந்தபோது அவரின் சகோதரரான ஆனந்த அளுத்கமகே மகிந்தானந்தவுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினார்.

இதனால் இருவருக்குமிடையே கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டது.
எனினும் ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் ஊடக ஒழுக்கநெறி தொடர்பான உரையை ஆரம்பிக்கவே சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

http://www.thinakkural.lk/article.php?local/4sbiuefrvt3267073b00ab9917675nfgae487b74b63c9a6d2b962ddcozrpf#sthash.hu0Yc250.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.