Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் .

Featured Replies

யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் . 

 

2யாழ்ப்பாணத்தில் GPL கிரிக்கெட் போட்டிகள் .

தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியின் விளையாட்டு தரத்தை மேம்படுத்தவும் பாடசாலையை விட்டு வெளியேற்றிய மகாஜனன்கள் நல்ல பண்புடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களையும் சமூகத்தில் சிறந்து விளங்கவும் என்ற உன்னத நோக்கத்துடன் 1960 இல் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம்.

கிறாஸ்கொப்பரஸ் பழைய, புதிய வீரர்களையும் மகாஜனன்களையும் ஒன்றிணைத்து சினேக பூர்வ துடுப்பாட்ட போட்டி யொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் பதிவு செய்த 19 விளையாட்டு கழகங்களிலிடமிருந்து 2 சகல துறை வீரர்களை தெரிவு
செய்து அத்துடன் எமது கிறாஸ்கொப்பர்ஸ் கழகத்தில் இருந்து போகும் 4 பேரை உள்ளடக்கி 42 வீரர்களை உள்வாங்கி 6 அணிகளாக வகுத்து இந்த துடுப்பாட்ட நிகழ்வை ஒரு நாளில் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகள் 6 பேர் கொண்ட 5 ஓவர் போட்டியாக இடம்பெறவுள்ளது.

1986ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று 6 பேர் கொண்ட 5 பேர் போட்டியில் கிறாஸ்கொப்பர்ஸ் வி.கழகம் மாவட்ட வெற்றி வீரர்களாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தனர்.

இந்த அணியிலே அமரர்களான றோகான்ரூபவ் சங்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எனவே அவர்களை நினைவுகூரும் போட்டியாக இது அமைவது சிறப்பம்சமாகும்.

6 அணிகளையும் 6 உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர், வீரர்களும் ஏலத்தில் பெறப்படடமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 4 1 g1facebook

http://vilaiyattu.com/யாழ்ப்பாணத்தில்-gpl-கிரிக்/

 

  • தொடங்கியவர்
ஜே.பி.எல்: சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் வெற்றி
 
 

article_1467029320-JPL-%281%29Firstwekksயாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக் (ஜே.பி.எல்) கடந்த வாரயிறுதியில் ஆரம்பித்திருந்த நிலையில், முதல் வாரப் போட்டிகளில், சென்றலைட்ஸ், கொக்குவில் மத்தி, சென்றல் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பற்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான முதலாவது போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், பற்றீசியன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக நோபேர்ட் 28, டானியல் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக கோகுலன் மூன்று விக்கெட்டுகளையும் வதூசனன், மயூரன், கிருபா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு 101 என்ற வெற்றி இலக்கோடு ஆடிய சென்றலைட்ஸ், 12.3 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜனோசன் 34, ஜூலியஸ் 24, வதூசனன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற்றீசியன்ஸ் சார்பாக, அஜித், மொறிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜனோசன் தெரிவானார்.

இரண்டாவது போட்டியில், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்தை எதிர்த்து ஸ்கந்தா ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியிருந்த நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் மத்தி, ஸ்கந்தா ஸ்டார்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அத்ந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்டார்ஸ், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, விஷ்ணு 29, சுயந்தன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கொக்குவில் மத்தி சார்பாக, உத்தமன் நான்கு விக்கெட்டுகளையும் இராகுலன், ஜெயரூபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு ஆடிய கொக்குவில் மத்தி, எதுவித விக்கெட் இழப்புமின்றி 9.3 ஓவர்களில் அதிரடியாக வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜெயரூபன் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும் சசிகரன் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ஜெயரூபன் தெரிவானார்.

சென்றல் விளையாட்டுக் கழகத்துக்கும் யூனியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாவது போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ், 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆகீஸன் 12, கனிஸ்ரன், மகதீரன் ஆகியோர் தலா 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக, காலஸ், திருக்குமரன், உல்ஹப், சலிஸ்ரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஜீவ்குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 103 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றல், 12.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ரஜீவ்குமார் ஆட்டமிழக்காமல் 40, கலிஸ்ரன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யூனியன்ஸ் சார்பாக அருண்ராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் சுஜந்தன், தயாளன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரஜீவ்குமார் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/175713/ஜ-ப-எல-ச-ன-றல-ட-ஸ-க-க-க-வ-ல-மத-த-ச-ன-றல-வ-ற-ற-#sthash.L8xs2UvD.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஜான்சனின் அதிரடியால் சென்றலைட்ஸ் வெற்றி
 
04-07-2016 09:09 AM
Comments - 0       Views - 2

யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றான யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற போட்டிகளில், ஜொலிஸ்டார், ஸ்ரீகாமாட்சி, சென்றலைட்ஸ், மானிப்பாய் பரிஷ்,, ஜொனியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

article_1467632682-InserjfjjdyhLEAD-%283

அந்தவகையில், பற்றீசியன்ஸ், ஜொலிஸ்டார் அணிகளுக்கிடையிலான குழு ஒன்று போட்டியொன்றில் எட்டு விக்கெட்டுகளால் ஜொலிஸ்டார் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன்ஸ், ரீயூடரின் 22, சதானந்தனின் 16 ஓட்டங்களோடு 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்துவீச்சில் ஜொலிஸ்டார் சார்பாக வாமணன் 3, கல்கோகன், மது, கஜானா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்டார், 14.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீகன் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் கல்கோகன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பற்றீசியன்ஸ் சார்பாக மொறிஸ், நோபேர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக சஜீகன் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகத்துக்குமிடையிலான போட்டியில் ஐந்து ஓட்டங்களால் ஸ்ரீகாமாட்சி வெற்றி பெற்றிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ் 43, ரஜீவராஜ் 31, துவாரகன் 23, சுஜன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் சார்பாக இராகுலன், தனுசன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் உத்தமன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 156 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக சசிகரன் 32, ஜெயரூபன் 22, ஆதித்தன் 20, இராகுலன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக சுஜன் 3, லிங்கநாதன், ராம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக சுஜன் தெரிவானார்.

இதேவேளை, சென்றலைட்ஸ், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 103 ஓட்டங்களால் கிறாஸ்கொப்பர்ஸை சென்றலைட்ஸ் தோற்கடித்தது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜேம்ஸ் ஜான்ஸன் 134, ஜூலியஸ் 44 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக, ஜனந்தன், சரண்ராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கபிலன், கோகுலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

240 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ், 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 103 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மதுஷன் 24, சாரங்கன் 22, டிலோஷன் 17, கபிலன், அஜித் ஆகியோர் தலா 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றலைட்ஸ் சார்பாக கிருபா நான்கு விக்கெட்டுகளையும் ஜெரிக், கோகுலன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜான்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஜான்சன் தெரிவானார்.

article_1467632712-InsenjajshfdhsaLEAD-%

தின்னைவேலி கிரிக்கெட் கழகம், மானிப்பாய் பரிஷ், ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆறு விக்கெட்டுகளினால் மானிப்பாய் பரிஸ் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தின்னைவேலி கிரிக்கெட் கழகம், 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சிவரதன் 42, றொஹான் 24, லவகாந் 23, கீர்த்திகன் 18, சசிந்தன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ் சார்பாக வினோத், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளையும் டிலக்ஷன் 2, கிஷோக்குமார் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 152 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு ஆடிய மானிப்பாய் பரிஷ், 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, வினோத் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் கோபிரஷாந் 35 ஓட்டங்களையும் கிஷோக்குமார் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், தின்னைவேலி கிரிக்கெட் கழகம் சார்பாக சுரேந்திரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் நாயகனாக  வினோத் தெரிவானார்.

ஸ்ரீகாமாட்சி, ஜொனியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆறு விக்கெட்டுகளினால் ஜொனியன்ஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  தீபன் 30, பபிதரன் 28, கஜீவன் 18, துவாரகன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக, அன்புஜன் 3, டக்சன் 2, லவேந்திரா, பிருந்தாபன், சஞ்சயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ், 18.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக கபில்ராஜ் ஆட்டமிழக்காமல் 67, அன்புஜன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக மோகன்ராஜ் 2, சுதர்சன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக கபில்ராஜ் தெரிவானார்.  

நாளை மறுதினம் புதன்கிழமை (06) காலை எட்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், மானிப்பாய் பரிஸை எதிர்த்து ஸ்‌கந்தாஸ்டார்ஸ் மோதவுள்ளதுடன், பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், சென்றலை எதிர்த்து கிறாஸ்கொப்பர்ஸ் மோதவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/176217/ஜ-ன-சன-ன-அத-ரட-ய-ல-ச-ன-றல-ட-ஸ-வ-ற-ற-#sthash.08UD6b7u.dpuf
  • தொடங்கியவர்
ஜே.பி.எல்: கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் வெற்றி
 
07-07-2016 06:22 AM
Comments - 0       Views - 2

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் புதன்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் கிறாஸ்கொப்பர்ஸ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மானிப்பாய் பரிஷ், ஸ்கந்தாஸ்டார்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பரிஷ் முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சஜீத் 82, ஜெயதீபன் 23, நிதர்ஷன் 18, கோபிரஷாந்த் 12  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார்ஸ் சார்பாக, துவிசன், சிந்துஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணுபிரகாஷ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 160 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார்ஸ்,  18.1 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கதியோன் 53, துவிசன் 22, நிரோஜன் 21, சயந்தன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பரிஷ் சார்பாக, சுபாஸ் மூன்று, யாழினியன், கிசோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சஜீத் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக கதியோன் தெரிவானார்.

article_1467881631-InpuiudmdJpl--%281%29

சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றல், கிறாஸ்கொப்பர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ்20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அஜித் ஆட்டமிழக்காமல் 107, கபிலன் 48, மதுஷன் 35, டிலோஜன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக சலிஸ்ரன் இரண்டு, மில்லர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பதிலுக்கு 247 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றல், 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 56 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சலிஸ்ரன் 79, காளஸ் 68, பாலேந்திரா 15 ஓட்டங்களைப் பெற்றனர்.  பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக ஜனந்தன், ஹட்ரிக் உள்ளடங்கலாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ராஜகாந்தன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அஜித் தெரிவானார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/176486/ஜ-ப-எல-க-ற-ஸ-க-ப-பர-ஸ-ஸ-கந-த-ஸ-ட-ர-ஸ-வ-ற-ற-#sthash.BYiKW465.dpuf
  • தொடங்கியவர்
JPL: ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், ஸ்கந்தா ஸ்டார் வெற்றி
 
11-07-2016 01:49 AM
Comments - 0       Views - 3

article_1468149277-JPL.jpgஇடம்பெற்றுவரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கில், கடந்த சனிக்கிழமை (09) இடம்பெற்ற போட்டிகளில் ஜொனியன்ஸ், ஸ்கந்தா ஸ்டார், சென்றலைட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

ஜொனியன்ஸ், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜொனியன்ஸ், 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிருந்தாபன் ஆட்டமிழக்காமல் 35, அகிலன் 34, ஜதுசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி சார்பாக, சாம்பவன் 3, தனுக்ஷன், உத்தமன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பதிலுக்கு, 193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம், 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே இழந்து 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆதித்தான் 34, ஜனுதாஸ் 31, பானுஜன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக பிருந்தாவன் 2, கபிலன், லவேந்திரா, ஜதூசனன், சன்சயன், அன்புஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக பிருந்தாபன் தெரிவானார். 

சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டாரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ஸ்டார், 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கல்கோவன் 50, சஜீகன் 41, வாமணன் 32  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக மயூரன் 3, மதூஷணன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 19 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஜேம்ஸ் 74, இம்முறை இடம்பெற்ற வடக்கின் மாபெரும் சமரில் சதம்பெற்ற கிருபா ஆட்டமிழக்காமல் 43, ஜெனோசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொலிஸ்ஸ்டார் சார்பாக வாமணன் 3, குவானந்த், தீபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் தெரிவானார். 

ஸ்ரீகாமாட்சி, ஸ்கந்தாஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தாஸ்டார், ஸ்ரீகாமாட்சியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 12.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ், கஜீவராஜ், சுதர்சன் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் சுஜன் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார் சார்பாக புருஜோத்தமன், சிந்துஜன், தரணிதரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணு பிரசாந், துவிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார், 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கஜீவன், கதியோன்‌ ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 36 ஓட்டங்களையும் மிதுஷாந் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, ராம் வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக கஜீவன் தெரிவானார்.

- See more at: http://www.tamilmirror.lk/176667/JPL-ஜ-ன-யன-ஸ-ச-ன-றல-ட-ஸ-ஸ-கந-த-ஸ-ட-ர-வ-ற-ற-#sthash.ve7Sha2z.dpuf
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜேம்ஸின் அதிரடியால் அரையிறுதிக்குள் சென்றலைட்ஸ்
 
26-07-2016 06:34 PM
Comments - 0       Views - 1

article_1469534721-LEADSisbgsfnsgera.jpg

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறிமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில் துரைராசா ஜேம்ஸ் ஜான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சென்றலைட்ஸ் அணி அரையிறுதிக்கு நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இதில் முதலாவது காலிறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) சென்றலைட்ஸ் அணிக்கும் ஸ்கந்தாஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 99 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்ரீ.ஸ்ரீகுமார் 38, ஜே.கதியோன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக எஸ்.வதூஸன் மற்றும் கே.கோகுலன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் என்.மயூரனன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

100 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, ஜேம்ஸ் ஜான்சனின் 45 ஓட்டங்களுடன் 12.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.டர்வின் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்கந்தா அணி சார்பாக எம்.புருசோத், எஸ்.சஞ்சயன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜேம்ஸ் ஜான்சன் தெரிவு செய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/177988/ஜ-ம-ஸ-ன-அத-ரட-ய-ல-அர-ய-ற-த-க-க-ள-ச-ன-றல-ட-ஸ-#sthash.GXIXiP7q.dpuf
  • தொடங்கியவர்
அரையிறுதியில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்
 
28-07-2016 07:06 PM
Comments - 0       Views - 5

article_1469868003-LEADThridcjdgsjindei.-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் காலிறுதி ஆட்டமொன்றில், அணித்தலைவர்  சிவலிங்கம் சிவராஜ்ஜின் பொறுப்பான ஆட்டத்தால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது – 20 கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழக்கங்கள் இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த நான்கு அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், சென்றலைட்ஸ், சென்ரல், ஸ்கந்தாஸ்ரார், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், ஜொனியன்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பார்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

இரண்டாவது காலிறுதியாட்டம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது. இதில் சென்ரல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சென்ரல் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கமலேந்திரன் கலிஸ்ரன் 32, விமலதாஸன் ரஜீவ்குமார், என்.பாலேந்திரா ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக எம்.ஜெசிந்தன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், நவரட்ணம் சுரேந்திரன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய திருநெல்வேலி அணி முதல் 5 விக்கெட்களையும் 62 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் சிவராஜ் மற்றும் கணேசலிங்கம் றோகான் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் சுரேந்திரனின் இறுதிநேர அதிரடி மூலம், 18.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சிவராஜ் 46, றோகான் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 26 மற்றும் 22 ஓட்டங்களைப் பெற்றுனர். பந்துவீச்சில் ஏ.சுபதீஸ் 3 விக்கெட்களையும், பெனடிக் சலிஸ்ரன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிவராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/178266/அர-ய-ற-த-ய-ல-த-ர-ந-ல-வ-ல-க-ர-க-க-ட-கழகம-#sthash.w5eVnKeh.dpuf
  • தொடங்கியவர்
மூன்றாவது தடவையாகவும் சம்பியனானது சென்றலைட்ஸ்
 
 

InJPL16Champion.jpg

யாழ்ப்பாண பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால், சென்றலைட்ஸ் அணி, 42 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் விளையாட்டுக் கழக அணியை வென்று, தொடர்ந்து 3ஆவது முறையாகச் சம்பியனாகியது.

article_1470051898-InIPL16Runner-Up-Team

இருபதுக்கு-20 தொடரான இத்தொடரின் 4ஆவது பருவகாலப் போட்டிகள், ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாணத்திலுள்ள 12 முன்னணிக் கழகங்கள், இத்தொடரில் பங்குபற்றின. அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முன்னணி வகித்த 4 அணிகள் வீதம் காலிறுதிக்கு 8 அணிகள் தெரிவாகின.

article_1470051939-InJPL16Winning-Team-C

ஞாயிற்றுக்கிழமை (31) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற சென்றலைட்ஸ் அணித் தலைவர் குலேந்திரன் செல்ரன், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதற்கிணங்கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணியினர், பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவ்வணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. பூபாலசிங்கம் டர்வின் 42, சுரேஸ் கார்த்தீபன் 33, நாகராசா ஜனோசன் 32, குலேந்திரன் செல்ரன் 26, ரவி வதூஸனன் 26, பத்திநாதன் நிரோஜன் 22, சின்னத்துரை ஜேம்ஸ் ஜான்சன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பி.பிறகோவன், 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

224 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி அணி சார்பில் விதுன் மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், மற்றைய வீரர்கள் கைகொடுக்காமையால் திருநெல்வேலி அணியின் போராட்டம் வீணாகியது. 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி பெற்றது. துடுப்பாட்டத்தில் முத்துக்குமார் விதுன் அதிரடியாக 83 ஓட்டங்களையும், அபயராஜா ஜசீந்தன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ரி.கோகுலன் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

article_1470051914-INJPL16Man-of-the-mat

போட்டியின் நாயகனாக, திருநெல்வேலி அணியின் விதுனும் தொடர்நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் ஜேம்ஸ் ஜான்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.article_1470051926-INJPL16Man-of-the-Ser

ஜே.பி.எல் 1ஆவது பருவகாலத்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சம்பியனாகியதுடன், மிகுதி 3 வருடங்களிலும் தொடர்ச்சியாக சென்றலைட்ஸ் அணி சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/178445/ம-ன-ற-வத-தடவ-ய-கவ-ம-சம-ப-யன-னத-ச-ன-றல-ட-ஸ-#sthash.r8OwNcX6.dpuf
- See more at: http://www.tamilmirror.lk/178445/ம-ன-ற-வத-தடவ-ய-கவ-ம-சம-ப-யன-னத-ச-ன-றல-ட-ஸ-#sthash.r8OwNcX6.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.