Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு.. கோபா அமெரிக்கா தோல்வியால் மெஸ்சி அறிவிப்பு

Featured Replies

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு.. கோபா அமெரிக்கா தோல்வியால் மெஸ்சி அறிவிப்பு

 
 
 

பியுனோஸ் ஐரெஸ்: கால்பந்தாட்ட ஜாம்பவானான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் ஆடியுள்ள மெஸ்சி, 55 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற கோபா அமெரிக்கா கோப்பைக்கான இறுதி போட்டியில் சிலி அணியிடம் அர்ஜென்டினா தோற்ற நிலையில், மெஸ்சி இன்று ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

 

Lionel Messi retires from international football after Copa final loss

 

நேற்றைய போட்டியில் பெனால்டி ஷூட் வாய்ப்பை மெஸ்சி தவற விட்டது அர்ஜென்டினா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. இந்த விரக்தியில் இருந்த மெஸ்சி ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதனால் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

http://tamil.oneindia.com/news/sports/lionel-messi-retires-from-international-football-after-copa-final-loss-256912.html

  • தொடங்கியவர்

கால்பந்து மந்திரன் மெஸ்ஸி: கோலாகலனின் 10 தகவல்கள்!

 
மெஸ்ஸி | கோப்புப் படம்
மெஸ்ஸி | கோப்புப் படம்

2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்று தோல்வியைத் தழுவி கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது, 2015 கோப்பா அமெரிக்கா இறுதியில் இதே சிலி அணியிடம் பெனால்டியில் தோல்வி அடைந்து கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது மட்டுமல்ல... 2007 கோப்பா அமெரிக்காவின்போதும் மெஸ்ஸி இறுதிப் போட்டி தோல்வியைக் கண்டார்.

இதனால்தான் அவர் "நான் அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன், 4 இறுதிப் போட்டிகளில் இருந்தும் சாம்பியன் ஆக முடியவில்லை, இது எனக்கும் அணிக்கும் கடினமான தருணம். அர்ஜென்டினாவுக்கு ஆடுவது என்பது முடிந்துவிட்டது" என்று வெறுப்புடன்தான் விடைபெற்றுள்ளார்.

கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினாலும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ள அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் மகத்துவம் சொல்லும் 10 தகவல்கள் இதோ...

* 1986 உலகக் கோப்பையில் 'ஹேண்ட் ஆஃப் காட்' கோல் அடித்த சூப்பர் ஸ்டார் டீகோ மரடோனா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்தவர் லயோனல் மெஸ்ஸி. சில வேளைகளில் மரடோனாவை விடவுமே மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் என்று நிபுணர்களால் விதந்தோதப்பட்டது.

* ரொசாரியோவில் 1987 ஆம் ஆண்டு பிறந்த லயோனல் மெஸ்ஸியின் ஆரம்ப காலக்கட்டம் அவருக்கு ஏற்பட்ட ஹார்மோன் பிரச்சினையால் சிக்கலுக்குள்ளானது. அவருக்கு அப்போது வயது 13. அதிக செலவுபிடிக்கும் இந்த மருத்துவத்துக்காக மெஸ்ஸியின் பெற்றோர்கள் ஸ்பெயினில் குடிபுகுந்தனர். அப்போதுதான் பார்சிலோனா கிளப் மெஸ்ஸிக்கு உதவ முன் வந்தது. மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்து அவரது மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டது. அவரது உடல் நலம் நன்கு தேற பார்சிலோனா கிளப் இவரிடம் அரிய கால்பந்து திறமையை கண்டது.

* தனது 17-வது வயதில் 2004-ம் ஆண்டு முதல் டிவிஷன் போட்டியில் இஸ்பான்யாலுக்கு எதிராக முதல் போட்டியில் அறிமுகமானார் மெஸ்ஸி. அன்று முதல் பார்சிலோனாவின் வளர்ப்புப் பிள்ளையாகவே மெஸ்ஸி பார்க்கப்படுகிறார்.

* 2008-09 ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார். 5 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது பெற்றார் மெஸ்ஸி.

* 3 சாம்பியன்ஸ் லீக் இறுதிகளில் 2-ல் கோல் அடித்து வெற்றி பெறச் செய்ததையடுத்து, 'அனைத்துக் கால சிறந்த வீரர்' மெஸ்ஸி என்ற பெயர் பெற்றார்.

* மார்ச் 2012-ல் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரரானார் மெஸ்ஸி. சீசர் ரோட்ரிக்ஸ் சாதனையான 231 கோல்களைக் கடந்து மெஸ்ஸி 232 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தினார்.

* அர்ஜென்டினா அணிக்காக இவர் முதலில் களமிறங்கியது ஹங்கேரிக்கு எதிராக. இடைவேளைக்கு பிறகு 18 நிமிடங்கள் கழித்து இறங்கிய மெஸ்ஸி 47 வினாடிகள் ஆடிய பிறகு வெளியே அனுப்பப்பட்டார்.

* அர்ஜென்டினா அணிக்காக 55 கோல்களை 112 போட்டிகளில் அடித்து அதிக கோல்களுக்கான சாதனையை தன் வசம் வைத்துள்ளார். லா லீகாவில் ஒரே சீசனில் 50 கோல்கள் அடித்த சாதனையையும், ஒரு ஆண்டில் 91 கோல்கள் அடித்த சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார் மெஸ்ஸி.

* இளைஞர் கால்பந்தாட்டத்தில் 2005 ஃபிபா இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியை அர்ஜெண்டினாவுக்காக வென்று கொடுத்தார். இந்தத் தொடரில் சிறந்த வீரர் விருதையும் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் நிகழ்த்தினார் மெஸ்ஸி.

* 2008 சம்மர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல காரணமானார். இடது காலில் மந்திரச் சக்தியை வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால் மாரடனாவின் வாரிசாக உருவகிக்கப்பட்டார்.

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகன் மெஸ்ஸி ஓய்வு அறிவித்திருப்பது, சர்வதேச கால்பந்துக்கு ஒரு பேரிழப்பு என்றே கூற வேண்டும்!

http://tamil.thehindu.com/sports/கால்பந்து-மந்திரன்-மெஸ்ஸி-கோலாகலனின்-10-தகவல்கள்/article8779543.ece?homepage=true

  • தொடங்கியவர்

மிஸ் யூ மெஸ்ஸி! டாப் 10 வீடியோக்கள்!

கால்பந்து ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத பெயர் 'மெஸ்ஸி'. கோல் அடிப்பது மட்டும் மெஸ்ஸியின் திறமை அல்ல. மற்றவர்களை கோல் அடிக்க வைப்பதும் மெஸ்ஸியின் திறமைகளில் ஒன்று. கிரிக்கெட்டில் எப்படி தோனியின் தலைமை பெரிதாக பேசப்படுகிறதோ.. அதேபோல் கால்பந்தில் மெஸ்ஸி. கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதும் தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார் மெஸ்ஸி. இனி 'பாஸ் கிக்' பார்ப்பது கடினம். கால்பந்து, ஒருவர் சொன்ன பேச்சையெல்லாம் கேட்கும் என்ற அளவுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரை காண்பது அரிது... இனி மைதானத்தில் மெஸ்ஸி! மெஸ்ஸி! என்ற ஹை டெசிபல் ஆர்ப்பரிப்பு இருக்காது...மிஸ் யூ மெஸ்ஸி!

 

                                                               மெஸ்ஸியின் டாப் 50 கோல்கள்!

 

ரொனால்டோ / மெஸ்ஸி


மெஸ்ஸி டாப் ஸ்கில்ஸ்

 

மெஸ்ஸி பெனால்டி பாஸ்

 

ஆங்க்ரி பேர்டு மெஸ்ஸி

 

மாஸ்டர் ஆஃப் ''ஃப்ரீ கிக்ஸ்''

 

மெஸ்ஸியின் கால் சொல்வதை பால் கேட்கும்

 

PASS 'BOSS' மெஸ்ஸி

 

மெஸ்ஸி 500

 

எமோஷனல் மெஸ்ஸி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோபா தோல்வி : கண்ணீர் விடும் மெஸ்சி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி கண்ணீர் விட்டு அழுதார். அவரை அர்ஜென்டினாவின் சக வீரர்களும் சிலி அணி வீரர்களும் கூட தேற்றினர்.

மைதானத்தில் மட்டுமல்ல வீரர்களின் டிரெஸ்சிங் அறையிலும் கூட மெஸ்சி  அழுது கொண்டிருந்துள்ளார். மெஸ்சியை டிரெஸ்சிங் அறையில் என்னால் பார்க்க கூட முடியவில்லை என்று அர்ஜென்டினாவின் மற்றொரு முன்கள வீரரான செர்ஜியோ அகுரா கூறியுள்ளார்.

இதற்கிடையே மெஸ்சி ஓய்வு அறிவித்திருப்பது அர்ஜென்டினா மக்களை மட்டுமல்ல உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. அவரது சொந்த ஊரான ரோசாரியோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டுள்ளனர். உலகக் கோப்பையை வெல்லாமல் மெஸ்சி  ஓய்வு பெறக் கூடாது என அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/65577-breaks-down-as-lionel-messi-quits-the-argentina.art

  • தொடங்கியவர்

மெஸ்சியை வீழ்த்திய மரடோனா!

ர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன்  மெஸ்சி மிகச்சிறந்த முன்கள ஆட்டக்காரர். ரைட் விங்கராக பயிற்சியாளர்களின் துருப்புச் சீட்டு.  நான்கு தடுப்பாட்ட வீரர்கள் சுற்றினாலும் மந்திர கால்கள் தந்திரமாக சுழழும். டிரிபிளிங் திறமையிலும் மெஸ்சியை மிஞ்ச முடியாது. எத்தகைய நெருக்கடியிலும் பந்தை எதிரணியின் கோல் கம்பத்தை நோக்கி மின்னல் வேகத்தில் கடத்துவார். கவுன்ட்டர் அட்டாக்கில் மெஸ்சியை பிடிப்பது இன்னும் கஷ்டம்.

med.jpg

அதுவும் பார்சிலோனா அணிக்காக ஆடும் போது மெஸ்சிக்கு இரட்டை பலம் . அந்த அணியில்  ஜோவி, இனியஸ்டா, ஜோர்டி ஆல்பா. செர்ஜியோ பஸ்கியூட், ரக்டிக் என அட்டகாசமான மத்திய கள ஆட்டக்காரர்கள் இருந்தனர்... இப்பவும் இருக்கின்றனர். முன்களத்தில் உருகுவேயின் சுவாரசும் பிரேசிலின்   நெய்மரும் மெஸ்சியின் கூட்டாளிகள். கூட்டணி பலம் மெஸ்சிக்கு யானை பலமாக இருந்தது.

ஆனால் சர்வதேச ஆட்டம் என்று வரும் போது பார்சிலோனாவின் பலத்துடன் ஒப்பிட முடியாத அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி கடுமையாக களத்தில் போராட வேண்டியது இருக்கிறது. கடந்த 1986ம் ஆண்டு உலகக் கோப்பையை மரடோனா தலைமையில் அர்ஜென்டினா வென்ற பிறகு , உலகின் பாதி கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா சப்போர்ட்டர்களாக  மாறி விட்டார்கள். 

மரடோனாவின் 'ஹேண்ட் ஆப் காட்' கோலும் இங்கிலாந்து வீரர்கள் 8 பேரை இழுத்து அடித்த  கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோலும் அவர்களை அர்ஜென்டினாவின்  அர்ஜென்டினா அணியின் பரமவிசிறிகளாக்கி விட்டது..மரடோனா அணியில் இடம் பெற்ற அத்தனை பேர்களுமே ஜாம்பவான்கள். 1978ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் டேனியல் பசரல்லாவும் 1986ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அர்ஜென்டினா அணியில் இருந்தார்.
 

அந்த ஜாம்பவானிடம் எதிர்பார்த்த அதே திறமையை மெஸ்சியிடமும் கால்பந்து ரசிகர்கள் எதிபார்த்ததுதான் தவறாக முடிந்து விட்டது. முக்கியமான சர்வதேச போட்டிகளில் மெஸ்சிக்கு இது கடும் நெருக்கடியை அளித்து விட்டது.  கோல் அடிப்பது மட்டுமல்ல அதற்கான வாய்ப்புகளை மெஸ்சி  திறம்படவே ஏற்படுத்திக் கொடுக்கிறார்.   சக வீரர்கள் ஏரியாவுக்குள் பந்து கிடைத்தால் அதனை கோலாக மாற்றுவதில் வல்லவர்களாக இருக்க வேண்டுமல்லவா? கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில்  ஜெர்மனிக்கு எதிராக அற்புதமான இரு கோல் வாய்ப்புகளை மெஸ்சி உருவாக்கிக் கொடுக்க அதனை ஹீகுவான் வீணடித்தார்.இது ஒரு சேம்பிளுக்குதான்.

கடந்த சில ஆண்டு காலமாகவே அர்ஜென்டினா தேசிய அணி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 1993ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்காவில் கூட அர்ஜென்டினா கோப்பையை வென்றதில்லை.   தற்போதையை அணியில் மெஸ்சியை தவிர முன்களத்தில் குறிப்பிடத்தக்க யாரையும் கூற முடியது.  சிலிக்கு எதிரான கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் கூட ஹீகுவான் தனக்கு கிடைத்த  அற்புதமான ஓபன் நெட் வாய்ப்பை  வீணடித்தார்.ஏஞ்சல் டி மரியா பார்மில் இல்லை. ஆனால் இவர்களை கட்டிக் கொண்டுதான் முன்களத்தில் மெஸ்சி அழ வேண்டியது இருக்கிறது. 

mari.jpg

குழு விளையாட்டான கால்பந்தில் 11 பேரும் ஒரே திறமையாளர்களாக இருந்து விடுவார்கள் என்று கூறி விட முடியாது. தற்போதைய அர்ஜென்டினா அணியுடன் ஒப்பிட்டால், அதனைவிட பார்சிலோனா அணி பல மடங்கு பலம் வாய்ந்ததாக இருக்கும். பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது மிரள வைக்கும் மெஸ்சி,அதனை விட பலம் குன்றிய அணியுடம் இணையும் போது சோர்வடைவது இயல்புதானே.

கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடிய சிலி  அணியையும்  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  விடால்,அலெக்சிஸ் சான்ஞஸ், எடுவாரா, கிளாடியோ பிரேவோ என தலைசிறந்த ஆட்டக்காரர்களை கொண்ட அணியும் கூட ,தனிநபரை சாராமல் குழுவாக விளையாடி  சிலி வெற்றி பெற்று விட்டது.

ஆனால் அர்ஜென்டினாவோ பல ஆண்டு காலமாகவே  மெஸ்சி என்ற ஒரு வீரரை நம்பியே களம் இறங்குகிறது. இதுதான் மெஸ்சியின் தோல்விக்கும் முக்கிய காரணம். மெஸ்சியை போலவே ரொனால்டோவும் மிகச்சிறந்த வீரர்தான். ஆனால் அவர் சார்ந்த போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை அரையிறுதி வரை கூட முன்னேறியது இல்லை. ஐரோப்பிய கோப்பையில் கூட சாம்பியன் ஆனது இல்லை. அதனால் ரொனால்டோவுக்கு மெஸ்சிக்கு உள்ளது போல நெருக்கடி இல்லை. ரொனால்டோவும் தனி ஆளாக போர்ச்சுகல் அணியை பல நேரங்களில் வெற்றி பெற வைத்தாலும் அவரை யாரும் கண்டு கொள்வதில்லை.

அர்ஜென்டினா என்றதும் மெஸ்சி, மெஸ்சி என்கிறார்கள்.  டீகோ மரடோனா போல அர்ஜென்டினா அணிக்கு லயனல் மெஸ்சி கோப்பையை வாங்கித் தருவார் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு உலகக் கோப்பை, 3 கோபா அமெரிக்காத் தொடர் இறுதி ஆட்டத்துக்கு அர்ஜென்டினாவை கொண்டு சென்றது மெஸ்சிதான். அந்த நான்கிலுமே தோல்வி. மனசு எவ்வளவு வலிக்கும்?

http://www.vikatan.com/news/sports/65592-messi-retires-from-international-football.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'கம்பேக் மெஸ்சி' ஹேஸ்டேக் : அர்ஜென்டினா பிரதமர்,மரடோனா வேண்டுகோள்!

ர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அடைந்த தோல்வியையடுத்து சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கால்பந்து அரங்கில் மெஸ்சியின் இந்த முடிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டினா அணி நேற்று இரவு தாயகம் திரும்பியது. பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் அர்ஜென்டினா அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தானர். மெஸ்சி ''போக வேண்டாம் '' என்று ஏராளமான ரசிகர்கள் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.இணையத்தில்  #ComeBackMessi என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.
 

eye.jpg

இதற்கிடையே கோப்பையை வெல்லாமல் அர்ஜென்டினாவுக்குள் வரக் கூடாது என கூறியிருந்த  மரடோனா''  மெஸ்சி இன்னும் விளையாட வேண்டியது நாட்கள் நிறைய இருக்கிறது. மெஸ்சி ரஷ்யா செல்ல வேண்டும் உலகச் சாம்பியாகி திரும்ப வேண்டும் ''என தெரிவித்துள்ளார். 

அதேபோல் அர்ஜென்டினா பிரதமர் மவுரிசியோ மாக்ரியும், மெஸ்சி ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' மெஸ்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர்,  ''கோபா அமெரிக்காவில் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணியின் திறமை என்னை பெருமைக்குள்ளாக்கியுள்ளது. மெஸ்சி அடுத்தவர்களின் விமர்சனங்களுக்கு காது கொடுக்க கூடாது ''  என  அறிவுரை வழங்கியுள்ளார்.

mass1.jpg

பொதுவாகவே மெஸ்சி ரிசர்வ் டைப் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட மரடோனா' மெஸ்சிக்கு கேப்டனுக்குரிய தகுதி கிடையாது 'என்று கருத்து தெரிவித்திருந்தார். அது போன்ற விமர்சனங்களை மெஸ்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.  கடந்த 11 ஆண்டுகளாக தேசிய அணிக்காக பூட் அணிகிறேன். ஆனால் ஒரு டிராபி கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை அணியும் போது தனக்கு குற்றவுணர்வு ஏற்படுவதாக மெஸ்சி கருதுவதாக  சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/sports/65610-argentina-president-fans-urge-leo-to-play-on.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.