Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிபியன் பிரிமியர் லீக் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

லூசியா ஸவுக்ஸ் அணி வெற்றி

 

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற லூசியா ஸவுக்ஸ் மற்றும் பெட்ரியோட்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் லூசியா ஸவுக்ஸ் அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா ஸவுக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பாக டெரன் சமி 35 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஒட்டங்கள் அடங்கலாக 59 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். 

13724078_1418749524807115_29348794275341

பெட்ரியோட்ஸ் அணி சார்பில் ஜோசப் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

175 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெட்ரியோட்ஸ் அணி  20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

13735782_1418749278140473_84416511086124

பெட்ரியோட்ஸ் அணி சார்பில் டு பிளசிஸ் 48 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் ஜோன்ஸன்; 3 விக்கட்டுகளை  கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக லூசியா ஸவுக்ஸ் அணியின் டெரன் சமி  தெரிவு செய்யப்பட்டார்.

13730847_1418749384807129_73056081889268

 

13698062_1418749451473789_2558370800223113680336_1418749218140479_3962131168986813668941_1418749314807136_54619908508959

http://www.virakesari.lk/article/9276

  • தொடங்கியவர்

#CPL16_22 டர்ன் சமியின் செயின்ட் லூசியா ஸ்வுக்ஸ் அணி டக்லஸ் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட்களால் வென்றது. 

 

received_862716507193521

#CPL16_22 டர்ன் சமியின் செயின்ட் லூசியா ஸ்வுக்ஸ் அணி டக்லஸ் லூயிஸ் முறைப்படி 7 விக்கெட்களால் வென்றது.

கரிபியன் பிரிமியர் லீக்கின் 22வது போட்டியில் கிரண் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியும் டர்ன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்வுக்ஸ் அணியும் போட்டியிட்டன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பார்படோஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணியின் ஆரம்ப வீரர் ஹோப் அதிக பட்சமாக 55 ஓட்டங்களை குவித்தார்.

பந்து வீச்சில் தலைவர் சமி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலளித்தாடிய செயின்ட் லூசியா டக்லஸ்-லுவிஸ் முறைப்படி 3 விக்கெட்களை இழந்த நிலையில் 131 ஓட்டங்களை பெற்று 15 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்களால் வென்றது.

ஆரம்ப வீரர்கள் சார்ள்ஸ் (41) மற்றும் பிளெட்சர் (45) நல்ல ஆரம்பத்தை லூசியாவுக்கு வழங்கியிருந்தனர்.

பந்து வீச்சில் பொல்லார்ட் 2 விக்கெட்களை சாய்த்தார்.

போட்டியின் நாயகனாக டர்ன் சமி தேர்வானார்.

http://vilaiyattu.com/16519-2/

  • தொடங்கியவர்

#CPL16_24 உமர் அக்மல் அதிரடியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 3 விக்கெட்களால் வெற்றி. 

 

received_864485650349940#CPL16_24 உமர் அக்மல் அதிரடியில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 3 விக்கெட்களால் வெற்றி. 

கரிபியன் பிரிமியர் லீக்கின் 24வது போட்டியில் டுவைன் பிராவோ தலைமையிலான ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் டரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்வுக்ஸ் அணியும் போட்டியிட்டன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி  முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செயின்ட் லூசியா அணி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக ஆரம்ப வீரர்கள் சார்ள்ஸ் (27), பிளெட்சர் (25) மற்றும் வற்சன் (32) ஓட்டங்களை பெற இறுதியில் தலைவர் சமி 18 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார். பந்து வீச்சில் பிராவோ இரு விக்கெட்களை வீழ்த்தினார். இரு ஆட்டமிழப்பு ரன்அவுட் முறையில் அமைந்தது.

பதிலளித்தாடிய நைட் ரைடர்ஸ்  அணி ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 168 ஓட்டங்களை பெற்று 6 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் வென்றது.

ஒரு கட்டத்தில் நைட் ரைடர்ஸ் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது.

அதிக பட்சமாக உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 73 ஓட்டங்களை 7 ஆறு ஓட்டம் அடங்கலாக விளாசினார். பந்து வீச்சில் ஜோன்சன் (Delorn Johnson) 3 விக்கெட்டை சாய்த்தார்.

ஆட்டநாயகனாக உமர் அக்மல் தேர்வானார்.

http://vilaiyattu.com/16555-2/

  • தொடங்கியவர்

அமேசன் வொரியர்ஸ் 6 விக்கட்டுகளால் வெற்றி (வீடியோ இணைப்பு)

 

சீ.பி.எல் தொடரின்  பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அமேசன் வொரியர்ஸ் அணி  வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாரபடோஸ் ட்ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

248431__1_.jpg

பார்படோஸ் ட்ரைடன்ஸ்  அணி சார்பில் சொயிப் மலிக் ஆட்டமிழக்காமல்  55 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அமேசன் வொரியர்ஸ் அணி சார்பில் தன்வீர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

248429.jpg

143 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அமேசன் வொரியர்ஸ் அணி  ஸ்மித் மற்றும் மெடின்சன் ஆகியோரின் அரைச்சத்தின் மூலம்  6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

248433.jpg

இதில் சுமித் மற்றும் மெடின்சன் தலா 50 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ரெய்பர் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸமித் தெரிவுசெய்யப்பட்டார்.

248427.jpg248425.jpg

http://www.virakesari.lk/article/9545

  • தொடங்கியவர்

பட்ரியோட்ஸ் அணி ஆறுதல் வெற்றி (வீடியோ இணைப்பு)

 

 

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற பட்ரியோட்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பட்ரியோட்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடியபட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

பட்ரியோட்ஸ் அணி சார்பாக லிவிஸ்  40 பந்துகளுக்கு 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

நைட் ரைடர்ஸ் அணி சர்பாக சுனில் நரைன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

248495.jpg

181 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

248493.jpg

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் முன்ரோ 46 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பட்ரியோட்ஸ் அணி சார்பில் கட்ரெல் மற்றும் சென்டொக்கி தலா விக்கட்டுகளை கைப்பற்றினர்.

 ஆட்டநாயகனாகபட்ரியோட்ஸ் அணியின் லிவிஸ் தெரிவு செய்யப்பட்டார்

248497.jpg

http://www.virakesari.lk/article/9583

  • தொடங்கியவர்

டலவாஸை வீழ்த்தியது லூசியா ஸவுக்ஸ்

 

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற லூசியா ஸவுக்ஸ் மற்றும் டலவாஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் லூசியா ஸவுக்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா ஸவுக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பாக பிளெட்சர்  70  ஓட்டங்களையும், சார்ளஸ் 64 ஒட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், வொட்சன் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 17 பந்துகளில் 42 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

248701.4.jpg

டலவாஸ் அணி சர்பாக  பவெல் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

195 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

248703.jpg

டலவாஸ் அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் சில்லிங்போர்ட் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்டநாயகனாக லூசியா ஸவுக்ஸ் அணியின் வொட்சன் தெரிவு செய்யப்பட்டார்

248691.jpg

 

 

http://www.virakesari.lk/article/9649

  • தொடங்கியவர்

டலவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுளைந்தது அமேசன் வொரியர்ஸ் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-08-04 16:02:40

 

சீ.பி.எல் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று வார்ன் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணியை எதிர்கொண்ட அமேசன் வொரியர்ஸ் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகதிப்பெற்றுள்ளது.

248927.3__1_.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

248925.3.jpg

டலவாஸ்  அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 30  ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அமேசன் வொரியர்ஸ் அணி சார்பில் எம்ரிட் 3 விக்கட்டுகளையும், தன்வீர்  2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

248923.3.jpg

147 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அமேசன் வொரியர்ஸ் அணி  கிரிஸ் லின்னின் சிறந்த துடுப்பாட்டத்தினால் 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

248921.3.jpg

கிரிஸ் லின் அசைச்சதத்தை தவறவிட்ட நிலையில் 49 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் வில்லியம்ஸ் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக தன்வீர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை நாளை  இடம்பெறும் லூசிய ஸவுக்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் வெற்றிபெரும் அணி டலவாஸ் அணியுடன் அரையிறுதிப் போட்டியில் விளைாடும் வாய்ப்பை பெறும்

http://www.virakesari.lk/article/9801

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு முன்னேறியது நைட் ரைடர்ஸ் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-08-05 16:51:15

 

சீ.பி.எல். தொடரின் லூசியா ஸவுக்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

249041.3.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா ஸவுக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பாக பிளெட்சர் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் சமி  40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பீட்டன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்ர்.

249039.3.jpg

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.

249035.3.jpg

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

லூசியா ஸவுக்ஸ்ஜோன்சன் மற்றும் டெய்லர் ஆகியொர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

249033.3.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக நைட் ரைடர்ஸ் அணியின் மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை நைட் ரைடர்ஸ் அணி  அரையிறுதிப்போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணியுடன்  மோதவுள்ளது.

http://www.virakesari.lk/article/9846

  • தொடங்கியவர்

ரொஸல் அதிரடி துடுப்பாட்டம் ; இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது டலவாஸ்

 

சீ.பி.எல். தொடரில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப்போட்டியில் டலவாஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் டலவாஸ் அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நைட் ரைடரடஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.

டலவாஸ் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரொஸல் 44 பந்துகளில் 11 ஆறு ஓட்டங்கள் 3 நான்கு ஒட்டங்கள் அடங்கலாக 100 ஒட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார். 

நைட் ரைடர்ஸ்  அணி சார்பில் கூப்பர் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் இடையில் மழைக்குறுக்கிட்டதால் நைட் ரைடர்ஸ் அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 12 ஓவர்களுக்கு 130 ஓட்டங்கள் வெற்றியிழக்காக தீர்மானிக்கப்பட்டது

130 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி  12 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் முன்ரோ 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

டலவாஸ் அணி சார்பில் சக்கிப் ஹல் ஹசன் 3 விக்கட்டுகளை  கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டலவாஸ் அணியின் ரொஸல் தெரிவு செய்யப்பட்டார்.

டலவாஸ் அணி இறுதிப்போட்டியில் அமேசன் வொரியர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

http://www.virakesari.lk/article/9876

  • தொடங்கியவர்

#CPL16_Final கரீபியன்களின் ரி20 சம்பியன் மகுடம் சூடியது கிறிஸ் கெய்லின் ஜமைக்கா டலவாஹ்ஸ் அணி. 

 

received_871742899624215

#CPL16_Final கரீபியன்களின் ரி20 சம்பியன் மகுடம் சூடியது கிறிஸ் கெய்லின் ஜமைக்கா டலவாஹ்ஸ் அணி.

இன்று நடந்த கரீபியன் பிரிமியன் லீக்கின் இறுதி ஆட்டத்தில் கிறிஸ் கெயில் தலைமையிலான ஜமைக்கா டலவாஹ்க்ஸ் அணியும் ரயாட் எமிரேட் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் போட்டியிட்டன. ( கயானா அமேசானின் தலைவர் மார்ட்டின் கப்தில் தான் நியூஸி-சிம்பாவே தொடரால் பின்னைய போட்டிகளில் பங்கெடுக்க வில்லை. )

இந்த இறுதிப் போட்டியில் ஜமைக்கா டலவாஹ்க்ஸ் அணி 9 விக்கெட்களால் இலகுவாக வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது ஜமைக்கா அணி.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 16.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சொகைல் தன்வீர் 42 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இமாட் வாஸிம் 3 விக்கெட்களையும் வில்லியம்ஸ் மற்றும் சகிப் அல் ஹசன் தலா இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலளித்தாடிய ஜமைக்கா டலவாஹ்ஸ் 12.5 பந்துப் பரிமாற்றங்களில் வெறுமனே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 95 ஓட்டங்களை பெற்று இறுதி பேட்டியில் வென்று சாம்பியனானது.

துடுப்பாட்டத்தில் 22 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்த கிறிஸ் கெய்ல் 54 ஓட்டங்களை விளாசிய  பின்  ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காமல் களத்தில் வால்டன்(25*) மற்றும் இலங்கையின் சங்கா(12*) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

பந்து வீச்சில் ரயாட் எமிரேட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் தன்வீர் 4 பந்துப் பரிமாற்றங்களில் வெறுமனே 17 ஓட்டங்களை மட்டும் வழங்கினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இமாட் வாஸிம் தேர்வு செய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக அன்ரே ரஸ்ஸல் தேர்வானார்.

2013 ஆண்டு சம்பியனான ஜமைக்கா டலவாஹ்ஸ் அணி மீண்டும் 2016 இல் சம்பியன் மகுடம் சூடியது.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, 3வது தடவையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோற்றுப்போனது. இவர்களின் துரதிர்ஷ்டம் தொடர்கிறது.

கடந்த 40 நாட்களாக நடந்த கரீபியன்களின் ரி20 திருவிழாவின் 34 போட்டிகளில் மொத்தமாக 10228 ஓட்டங்கள் (455 ஆறு ஓட்டம், 694 நான்கு ஓட்டம் அடங்கலாக) குவிக்கப்பட்டு 396 விக்கெட்கள் சாய்க்கப்பட்டது.

பாய்ந்து பாய்ந்து பந்துகளை பிடிக்கும் இவர்களிலிருந்து இந்த தொடரின் மிகச்சிறந்த பிடியெடுப்பை மேற்கொண்டவராக கேஸ்ரிக் வில்லியம்ஸ் தேர்வானார்.

கரீபியன்களின் T20 திருவிழாவின் சம்பியனான ஜமைக்கா டலவாஹ்ஸ் அணிக்கு எம் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

#சிவானுஜன் செல்வரத்தினம்

received_871742912957547received_871742906290881 received_871742922957546 received_871743739624131received_871743722957466 received_871743759624129
received_871743792957459received_871744702957368received_871744706290701

http://vilaiyattu.com/16973-2/

  • தொடங்கியவர்

சீ.பி.எல். செம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது டலவாஸ்

கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் 2016 ஆண்டிற்கான செம்பியன் கிண்ணத்தை கிரிஸ் கெயில் தலைமையிலான ஜமைக்கா டலவாஸ் அணி கைப்பற்றியுள்ளது.

கரிபியன் பிரிமியர் லீக்  தொடரின் இறுதிப்போட்டி இன்று வார்னர் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் ஜமைக்கா டலவாஸ் மற்றும் அமேசன் வொரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

13891992_1433597796655621_56337784617575

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமேசன் வொரியர்ஸ் அணி 16.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 93 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

249399.3.jpg

அமேசன் வொரியர்ஸ் அணி சார்பில் தன்வீர் 42 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஜமைக்கா டலவாஸ்  அணி சார்பில் வசிம் 21 ஒட்டங்களுக்கு  3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

249397.3.jpg

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டலவாஸ் அணி 12.5 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

டலவாஸ் அணி  சார்பில் கெயில் 54 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

249389.3.jpg

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக வசிம் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக ரொஸல் தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/9921

thumb_large_asdasdwawd-1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.