Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ்

Featured Replies

பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ்

 

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ்  நம்பிக்கை தெரிவத்துள்ளார்.245887.jpg

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட்  தொடரையும் முழுமையாக இழந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மெத்தியூஸ்,

தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன்.

 

எங்கள் அணியில் எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நல்ல வீர்ரகள் உள்ளனர், நிச்சியமாக விரைவில் இந்த மோசமான நிலையிலிருந்து அணியை வெளிக் கொண்டு வருவேன்.

 

2013ம் ஆண்டு முதல் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் மெத்தியூஸிற்கு, இந்த ஆண்டு தொடக்கம் முதல் 20 ஒவர் அணித் தலைவர் பெறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

தொடரை இழந்த இலங்கையின் பரிதாபம்

இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது, முதல் 4 நாள் ஆட்டங்களின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகித்தது.

246531.jpg

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கார்டிப் நகரில் நேற்று நடைபெற்றது, இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

 

இங்கிலாந்து அணி சார்பில் நல்ல ஆரம்பத்தை ஜேசன் ரொய் (34) ஏற்படுத்திக்கொடுத்தார், ஜேம்ஸ் வின்ஸ்(51) அரைசதம் அடித்தார், அணித் தலைவர் இயன் மோர்கன்(20), ஜொஸ் பட்லர்(70), ஜோ ரூட்(93) ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

 

இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 324 ஓட்டங்கள் குவித்தது, இலங்கை சார்பில் குணதிலக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவர் மெத்யூஸ்(13) பெரிதாக சோபிக்கவில்லை, குசல் பெரேரா(6), குசல் மெண்டிஸ்(22), பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணதிலக (48) மற்றும் சந்திமால் (53) ஓட்டங்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இலங்கை அணி 42.2 ஓவரில் 202 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது, இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4, பிளங்கட் 3 விக்கெட்டை கைப்பற்றினர்.

 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 புள்ளிகள் கணக்கில் கிண்ணத்த கைப்பற்றியது, இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/8464

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.