Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரபுரம் படுகொலை வழக்கு: 'கன்னத்தை கோடரியால் கொத்தினர்'

Featured Replies

article_1467774587-aa.jpg

iews - 27
பொன் ஆனந்தம்

கிராமத்தில் பல இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டவண்ணமிருந்தன. அச்சம் காரணமாக நாம் வீட்டினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது  திடீரென வீட்டிக்குள் புகுந்த இராணுவத்தினரில் ஒருவர், எனது  முகத்தின் கன்னப்பகுதியில் கோடரியால் கொத்தினர்;. என்னுடன் இருந்த என் சகோதரங்களையும் இவ்வாறு கொத்தினர் என திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் இடம்பெற்ற 26 பொதுமக்கள் படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் கணபதிப்பிள்ளை நிரோசன் சாட்சியமளித்தார்.

இந்த வழக்கு விசாரணை, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் ஏழாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது,

இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

ஜூரிகள் முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்படும் இவ்வழக்கில், நேற்றைய விசாரணையின் போது  ஐந்துபேர்  சாட்சியமளித்தனர்.

கணபதிப்பிள்ளை நிரோஷன் தொடர்ந்து சாட்சியளமளிக்கையில்,

சம்பவம் நடக்கின்றபோது எனக்கு ஆறுவயது. நானும் எனது குகதாஸ் (10) என்ற அண்ணனும், குமுதினி (16) என்ற அக்காவும் ரமேஸ் (04) என்ற தம்பியும் வீட்டில் இருந்தோம். அப்போது அங்கு வந்த இராணுவத்தினர். கோடரியால் கொத்தினர்.

எனக்கு கன்னத்தில் வெட்டு விழுந்தது. அண்ணனுக்கும் அக்காவுக்கும் அப்படிதான்  கோடரியால வெட்டினார்கள். நாங்கள் காயப்பட்டோம். எனது நான்கு வயதுத் தம்பிக்குக் கோடாரிப் பிடியால் அடித்தனர். இது விடயமாக முன்னரும் விசாரணைகளின் போது நாங்கள் சொல்லியிருக்கின்றோம். எனவும் இங்கு தெரிவித்தார்.

அழகுராசா சசிகுமார் சாட்சியம்

அழகுராசா சசிகுமார் (36) சாட்சியமளிக்கையில், எனக்குச் சம்பவம் நடக்கும் போது வயது பதினாறு. எனக்கும் கோடரியால் இரண்டு காலிலும் வெட்டி காயப்படுத்தினார்கள். கன்னத்திலும் அதேமாதிரி கோடரி வெட்டுப்பட்டது.

அதேநேரம் எனது சகோதரி அழகுராசா புவனேஸ்வரிக்கு  துவக்கால் சுட்டதனால் காயம் ஏற்பட்டது. இதனை இராணுவத்தினர்தான் செய்தனர் எனவும் தெரிவித்தார்.

கோணேஸ்வரன் கோணேஸ்வரி சாட்சியம்

கோணேஸ்வரன் கோணேஸ்வரி (35)  சாட்சியமளிக்கையில் எனது கையில் துவக்கால் சுட்டு காயப்படுத்தினர் எனக்குறிப்பிட்டார். மற்றைய சாட்சியான பவளராசா யோகராணி 29) சாட்சியமளிக்கையில், இச்சம்பவம் நடக்கும்போது எனக்கு ஒன்பது வயது  இராணுவம் சுட்டவெடி எனது வயிற்றில் பட்டதால் காயம் ஏற்பட்டது. இதனால் நான் விழுந்துவிட்டேன் என விவரித்தார்.

சின்னமணி (40) சாட்சியமளிக்கையில்,

ஐந்தாமவரான சிவநாயகம்  சின்னமணி (40) சாட்சியமளிக்கையில், இராணுவத்தினர், சரமாரியாகச் சுட்டார்கள் அதன்போது எனது கழுத்துப்பகுதியில் வெடிப்பட்டு காயம் ஏற்பட்டது. அதன் அடையாளங்கள் உள்ளன. எனவும் தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் சாட்சியமளித்த அனைவரும் இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளானவர்காளாக இருந்தனர்.

அதுமட்டுமன்றி ஒருவரைத்தவிர அனைவரும் சிறுபிள்ளைகளாக இருந்த சமயத்தில் இது நிகழ்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/176338/க-ம-ரப-ரம-பட-க-ல-வழக-க-கன-னத-த-க-டர-ய-ல-க-த-த-னர-#sthash.MkJQ2WgK.dpuf

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் குமாரபுரம் படுகொலைகளை திருகோணமலையில் விசாரிக்காமல், சாட்சிகளை அலைக்கழித்து இனப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன சிங்கள-பௌத்த தரம் கெட்ட நீதிபதிகளினால் அனுராதபுரத்தில் வைத்து விசாரிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தராது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.