Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வினுப்ரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் / சிபிச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வினுப்ரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் / சிபிச்செல்வன்

download (38)

இரவு சுமார் பத்து மணிக்கு நண்பர் ரவிக்குமாருடன் நானும் அவருடைய கட்சியின் சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் சேர்ந்து இளம்பிள்ளைக்குப் போயிருந்தோம்.அந்தத் தெருவில் பெரும்பாலான வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மெத்தை வீடுகள்.அப்படியொரு வீட்டில் அவர் இருக்கலாம் என நினைத்து போனவர்களுக்கு ஒரு பழைய காலத்து ஓட்டு வீட்டின் முன்னால் ஒரு சாமியானா போட்டு வினுப்ரியாவின் போட்டோவை வைத்து ஒரு மாலையைப் போட்டு வீட்டிற்கு வெளியில் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு வினுப்ரியாவின் பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இளம்பிள்ளையில் இடங்கணசாலை என்ற பகுதியில் இருக்கிறது வினுப்ரியாவின் வீடு. அது ஒன்றும் பெரிய நகரமோ அல்லது மிகச்சிறிய கிராமமோ அல்ல. இரண்டும் கெட்ட நடுத்திரமான ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் வசிப்பவர்களின் பெரும்பாலான தொழில் நெசவு. குறிப்பாக செயற்கை பட்டு சேலைகள் வேட்டிகள் எனத் தயாரிக்கிற தொழில் . அவை சார்ந்த உபதொழில்கள். 

வினுப்ரியாவின் அப்பாவிற்கும் ஒரு சிறிய விசைத்தறிக்கூடம் இருக்கிறது. இதை வைத்துதான் பத்திரிகைகளும் ஊடகங்களும் அவரைத் தொழில் அதிபர் என்ற வார்தையிலும் விசைத்தறி தொழிலாளி என்றும் அடைமொழிகள் இட்டு அறிமுகப்படுத்தியிருந்தன. ஆனால் அவரையோ அல்லது அவரது வீடிருந்த சூழலோ அவரை ஒரு பெரிய வசதியான பணக்காராகவோ அல்லது நடுத்தரமான வசதியிருக்கிறவராகவோ காட்டவில்லை.

ஏதோ தினசரி வாழ்விற்கு அந்த நெசவு தொழிலை வைத்து வருகிற வருமானம்தான் அவர்களின் குடும்பசெலவுகளுக்கு வினுப்ரியாவின் படிப்பிற்கும் உதவியிருக்கும்போல. வினுப்ரியா பி எஸ் சி வரை படித்திருக்கிறார் என்றும் அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார் என்றும் தெரிகிறது.
download (37)

இதுபோக அவருடைய ஓய்வு நேரத்தில் செயற்கை பட்டு சேலைகளுக்குப் பளபளப்பிற்காகக் கல் வைத்துக்கொடுக்கும் பணிகளையும் செய்து வந்ததாகத் தெரிகிறது. அப்படி வெளிஉலகில் போக வர இருந்தவருக்குதான் இந்த சுரேஷ் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த சுரேஷ் என்பவர் பற்றி இரண்டு விதமான தகவல்கள் சொல்கிறார்கள்.அவர் வினுப்ரியாவின் வீட்டில் விசைத்தறி தொழிலாளியாகப் பணிசெய்துகொண்டிருந்தபோது வினுப்ரியாவை ஒருதலையாகக் காதலித்தவர் என்று ஒரு தகவல்

இன்னொரு தகவல் அவர் இளம்பிள்ளையில் ஒரு டெய்லர் கடையில் பணிசெய்து கொண்டிருந்தபோது வினுப்ரியாவின் அறிமுகம் ஏற்பட்டு அவரை ஒருதலையாகக் காதலித்தவர் எனவும் ஒருதகவல்.

இவை எல்லாம் பூர்வ தகவல்கள்.

ஆனால் ஒரு பெண்ணுக்கு முகப்புத்தகத்தால் தற்கொலைக்கு போகிறளவிற்கு மனஉளைச்சலைக் கொடுக்க இயலுமா என்பதும்தான் மிகப்பெரிய கேள்வி.

மேலும் அதில் எத்தனை பேருக்குப் பங்கிருக்கிறது என்பது அடுத்தடுத்த கேள்விகள்.

வினுப்ரியாவின் பெற்றோர்கள் அவரை நம்பவில்லை என்றும் அதனால் அவர் மனஉளைச்சலால் ஏற்பட்ட கொதிநிலையில் தற்கொலை செய்துகொண்டதற்கு அவருடைய பெற்றோர்கள்தான் முதல் காரணம் என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலர் சுரேஷ் என்பவர் வினுப்ரியாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து முகப்புத்தகத்தில் வெளியிட்டதால்தான் அவர் மனஉளைச்சலால் த்ற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள்

மேலும் சிலர் காவல்துறையினர் வினுப்ரியாவின் பெற்றோரை அலைக்கழித்து தாமதம் செய்ததால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது என்போரும் உள்ளனர்.

ஆனால் உண்மையில் மொத்த சமூகமும் பெண்களுக்கு கொடுக்கிற மனஅழுத்தமும் அதனால் ஏற்படுகிற ஒரு நிராதரவான சூழலும்தான் காரணம் . அவற்றை எதிர்கொள்கிற தைரியத்தை சமூகம் குறிப்பாகப் பெண்களுக்கு வழங்குவதேயில்லை.

ஒரு ஆண்ட்ராய்டு போனை வாங்கிக்கொடுக்கிற பெற்றோர்கள் இருக்கிறார்கள் . அதை உபயோக்கிறளவிற்குப் பெரிய கல்வியின் பின்புலம் யாருக்கும் தேவைப்படாதளவிற்குத் தொழில் நுட்பம் எளிதானதாக எல்லாவற்றையும் மாற்றிக் கொடுத்திருக்கிறது என்பதெல்லாம் உண்மைகள்.

ஆனால் அந்தப் போனை எந்தளவிற்கு பயன்படுத்தினால் நமக்கு தொல்லைகள் வராது என்பதை யாரும் யாருக்கும் கற்றுக்கொடுப்பதில்லை

குழந்தைகள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு போனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்கிற அளவில்தான் இன்றைய சமூகத்தின் யதார்த்த சூழல்.அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என யாருக்கும் தெரிவதில்லை. குறிப்பாகப் பெற்றோருக்கும் தெரிவதில்லை.அதனால் தங்களது பிள்ளைகளுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதோ அல்லது அதனால் என்னென்ன வகைகளில் பிரச்சினைகள் வரும் என்பது குறித்தோ எதுவும் தெரிவதில்லை.

சரி கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுக்கிறதா என்றால் அவை தங்களது பள்ளி கல்வி வளாகங்களுக்குள் செல்போனை எடுத்து வரக்கூடாது என்றும் அவை கல்விக்கு பெரிய எதிரி என்பது போலவும்தான் சட்டங்களையும் விதிகளையும் குருட்டுத்தனமாகப் போடுகின்றன. செல்போனை ஏன் கல்வி வளாகங்களில் பயன்படுத்தக்கூடாது என்றோ அல்லது அதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்றோ எனக்குத் தெரிந்து எந்தக் கல்வி நிறுவனங்களும் சொல்லித் தருவதில்லை.இதுபோன்ற பொதுவான விஷயங்களில் அதாவது தினசரி பயன்பாட்டில் இருக்கிற எந்த நடைமுறை சார்ந்தும் கல்வி நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு மார்க் நிறைய எடுப்பது பற்றியும் தங்களது கல்வி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதிலும் மட்டும்தான் குறிக்கோள்.

ஆகையால் கல்வி நிறுவனங்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியையோ அதனை நல்லவிதமாக எப்படிப் பயன்படுத்தவேண்டும் அல்லது பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்த வோண்டும் என்பதையோ சொல்லிக்கொடுக்கிற நிலையில் இந்த சமூகம் இருப்பதில்லை

சரி பிள்ளைகளின் நிலைமையும் எந்தளவிற்கு விஞ்ஞான தொழில்நுட்ப பொருட்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. இணைய வசதி இருந்தததால்தான் வினுப்ரியா முகப்புத்தகத்தில் கணக்கு தொடங்கியிருக்க முடிந்திருக்கிறது. முகப்புத்தக விதிகளை வாசித்திருந்தாலோ அல்லது கூகுளில் முகப்புத்தகத்தைப் பற்றி தேடியிருந்தாலோ அல்லது மேலும் சில விஷயங்களை அறிந்துகொள்ள கேள்விகளை எழுப்பி தேடியிருந்தாலே வினுப்ரியாவே சில விஷயங்களை இணையத்தில் சுயமாக கற்றிருக்கலாம்.

images (38)
ஆனால் பெரும்பாலானவர்கள் முகப்புத்தக கணக்கு வைத்திருந்தால் அதை இயக்குபவர்களாகவும் வாட்ஸ்அப் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறளவில் மட்டுமே ஒரு சின்ன எல்லைக்குள் நின்றுகொண்டு இயங்க தொடங்கிவிடுகிறார்கள்.அவர்களுக்கு தேடல்களோ அது சார்ந்த சின்னச்சின்ன முயற்சிகளோ கிடையாது

இணையத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிற இரண்டு பெண் படைப்பாளிகளிடம் மலைகள் 100 ஆவது இதழுக்கு படைப்புகள் கேட்டதோடு அவர்களின் புகைப்படங்களையும் அனுப்ப சொல்லிக் கேட்டிருந்தேன். பொதுவாக 100 ஆவது இதழில் பங்கேற்ற எல்லாப் படைப்பாளிகளிடமும் புகைப்படங்களைக் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது புகைப்படங்களைக் கொடுக்க தயங்கினார்கள். அதைப் புரிந்துகொண்டு நானும் அவர்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் இருவரில் ஒருவர் ஒரு தொழில்நுட்ப நகரத்தில் வசிப்பவர்.( அவரும் ஒரு ஆசிரியையாகப் பள்ளியில் பணி செய்பவர்தான் ). 

இன்னொருவர் சிங்கப்பூரில் வசிப்பவர்.அந்த நாடும் தொழில்நுட்பங்களைச் சரளமாகக் கையாள கற்றுக்கொடுத்திருக்கிற நாடுதான். அந்தப் பெண் படைப்பாளிகள் இருவரும் தங்களது புகைப்படங்களைக் கொடுக்க ஏன் தயங்கினார்கள் என்றால் முகப்புத்தகத்தில் இயங்குகிறவர்களின் பொதுவான போக்குகளால்தான். குறிப்பாக ஆண்களால் ஏற்படுகிற மனஉளைச்சல் அனுபவங்களை அவர்கள் இணையத்தின்வழியாக வாசித்திருந்ததாலும் , கையிலிருக்கிற தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலையும் அவர்களுக்குக் கொடுத்திருப்பதும்தான். அப்படியானால் பிஎஸ்சி வரை படித்திருக்கும் வினுப்ரியாவிற்கு இந்தக் குறைந்தபட்ச அறிவை கற்றுக்கொடுக்காதது அவர் வசிக்கிற கிராம சூழலும் ஒரு காரணம்தானோ என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் இணையத்தில் கொட்டிக்கிடக்கிற ஏராளமான அறிவை நமக்கு நாமே கற்றுக்கொள்ள இருக்கிற வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்வதில்லை என்பதும் ஒரு மிகப்பெரிய மறுக்க இயலாத உண்மை.

மேலும் ஒரே மாதிரியான கல்வியைக் கிராமத்தில் படிக்கிற மாணவர்களுக்கும் ஒரு பெரிய மாநகரத்தில் படிக்கிற மாணவர்களுக்கும் இருக்கிற பொதுவான சமூகஅறிவு இடைவெளி என்பதும் பெரியளவில் மாறுபடுகிறது. நகரமே சில விஷயங்களைப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துவிடுகிறது. அந்த வாய்ப்பு கிராமத்தில் இருக்கிற மாணவர்களுக்குக் குறைவுதான். என்னதான் இணைய அறிவால் இடைவெளிகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் தற்போதைய தலைமுறைக்கு இருப்பினும் யதார்த்தம் என்பது வேறு ஒரு வகையானதாகதான் இருக்கிறது.

வினுப்ரியாவின் உலகம் ஒரு சிறியளவில்தான் இருந்திருக்கிறது.அவருக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் இரண்டு மூன்று கிராமங்களையோ அல்லது அதிகபட்சம் இரண்டு மூன்று மாவட்டங்களையோ சார்ந்தவர்கள்தான் இருப்பார்கள்.அவரைப் பற்றி ஒரு மார்பிங் படம் முகப்புத்தகத்தில் வெளியானதை உடனே மற்ற உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உடனே தெரிந்துவிடும்.

பெண்களைப் பெற்ற பெற்றோருக்கு அதுவும் குறிப்பாக கிராமத்தில் இருக்கிற பெற்றோருக்கு அவர்கள் சார்ந்திருக்கிற ஒரு சிறிய சமூக வட்டத்தில்தான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறதால் ஒரு பெண்ணைப் பற்றி ஒரு சிறு தகவல் என்றால் அவர்கள் சார்ந்த உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உடனே செய்தி பரவிவிடுகிறது . இது இணையத்தினாலோ அல்லது செல்பேசியாலேயோ பரவுவதில்லை. வாய்வழியாகவே வேகமாக பரப்பிவிடுகிறார்கள் . 

ஒழுக்கம் என்பது பெண்களின் உடல் சார்ந்து உருவாக்கப்பட்ட கற்பு என்ற கற்பிதங்களால் தன்னைத்தானே சுருக்கிட்டுக்கொண்டு மொத்த சமூகமும் சிக்கிக்கொண்டிருக்கிறது.ஆகையால் ஒரு பெண்ணைப் பற்றி சின்னதாக ஒரு விஷயம் பரவிவிட்டாலே அவருக்கு திருமணம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டு பெற்றோர்கள் தவித்து போய்விடுகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இந்த சமூகம் எந்த மோசமான அவப்பெயரையும் உருவாக்கிவிடாமல் திருமணம் வரை வந்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவிடுவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறதுஇந்த சூழல்தான் வினுப்ரியா போன்றவர்களுக்கு முகப்புத்தகத்தில் மார்பிங் செய்யப்பட்ட படம்தான் என்றாலும் அவருடைய வட்டத்தில் அவருக்கு எதிர்காலத்தில் உருவாகும் சிக்கல்களையும் அதை அவர்கள் எதிர்கொள்ள இயலாத மனநிலையையும் உருவாக்கியுள்ளது

அந்தப் படத்தில் இருப்பது தான் இல்லை என வினுப்ரியா தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதும் தன் பெற்றோரே தன்னை நம்பவில்லை என மனமுடைந்திருப்பது மேலே சுட்டப்பட்ட சமூக சூழல்களை கருதியேற்பட்ட அழுத்தங்களால்தான்.தன்னை முதலில் தன் பெற்றோர்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு எழுந்தது இதனால்தான். அதைத் தன் பெற்றோர்கள் நம்பவில்லை என்பதுதான் அவருக்கு ஏற்பட்ட முதல் அழுத்தம்.

இந்த சூழலில் அவருக்கோ அல்லது அவருடைய பெற்றோருக்கோ யாரவது கவுன்சிலிங் கொடுத்திருந்தால் வினுப்ரியாவைக் காப்பாற்றியிருக்கலாம். காவல் நிலையத்தில் அவருக்கு முதலில் இந்த கவுன்சிலிங் விஷயத்தைக் கொடுத்திருந்தாலே அவரைக் காப்பாற்றியிருக்கலாம்.

இருபது நாட்கள் முகப்புத்தகத்தை முடக்க வேண்டியிருக்கும் என சொன்ன காவல் துறை யாரவது ஒரு பெண் காவலரைவிட்டு அவருக்குக் குறைந்தபட்ச மனஆறுதலை இந்த மார்பிங்கை எதிர்கொள்ள ஒரு சின்ன ஆறுதலை கவுன்சிலிங் என்ற பெயரில்கூட இல்லாமல் வழங்கியிருக்க முடிந்திருந்தால் வினுப்ரியாவிற்கு இப்படி ஒரு தற்கொலை எண்ணம் வந்திருக்காது.

காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்ற வாசகங்களுக்கு உண்மையான அர்த்தம் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.குறைந்தபட்சம் ஒரு பெண்ணை பெற்ற ஆண் காவலரோ அல்லது பெண் காவலரோ அவரை தன் பிள்ளையாகக் கருதி அவருடைய விஷயங்களில் தங்களது தனிப்பட்ட அக்கறையைக் காட்டியிந்தால்கூட அவருக்கு சில எளிதான ஆறுதல்களைக் கொடுத்திருக்க இயலும்.( அப்படி ஒன்றிரண்டு காவலர்கள் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன் ) நான் இங்கே துறைரீதியான நடவடிக்கைகளைக்கூட குறிப்பிட வரவில்லை. மொத்தத்தில் இந்த சமூகமே குரூரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. அவரவர் தங்களது காரியங்கள் நடந்தால்போதும் என்கிற சுயநல மனநிலையை மொத்தமாக சமூககத்தில் விதைத்து அது ஒரு பிரம்மாண்டான விருட்சமாக மாறிவிட்டது.

வினுப்ரியாவின் பெற்றோர்கள் நாங்கள் சந்தித்தபோது இந்த தற்கொலைக்குப் பின்னால் சுரேஷ் என்பவரை கைது செய்திருக்கிறார்கள் ஆனால் உண்மையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரில் சில வாலிபர்கள் வினுப்ரியாவின் தற்கொலைக்குப் பிறகு தலைமறைவாகியிருக்கிறார்கள் என்றார்கள்.

இது உண்மையாகவும்கூட இருக்கலாம் .சுரேஷ் என்ற அந்த வாலிபரும் அவருடைய நண்பர்களும் இந்த விஷயத்தில் சேர்ந்து மார்பிங் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதுஅப்புறம் இன்னொரு விஷயமும் இங்கே குறிப்பிடலாம். முன்பெல்லாம் மார்பிங் என்பது போட்டோஷாப் போன்ற சில சாப்ட்வேர்களின் துணையோடுதான் செய்ய இயலும் என்ற நிலை இருந்தது.அதாவது அதை செய்ய தனியாக படித்து அதனால் அவருக்குப் பயன்பாட்டு அறிவும் இருந்தால்தான் மார்பிங் வேலைகளை செய்ய இயலும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படியொரு நிலையில்லை. 

ஒரு செல்போனில் சில அப்ளிகேஷன்களை நிறுவிவிட்டால் எளிதாக எந்தப்படத்தையும் வேறு ஒரு படத்தோடு இணைக்கிற தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதோடு அவற்றைப் பரவலாக எல்லோரும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் உபயோகங்களும் இணைய சமூகத்தில பரவியிருக்கிறது என்பதும் உண்மை.

இந்த எளிய உண்மை வினுப்ரியாவிற்குத் தெரியாமல் போய்விட்டது என்பதும் ஒரு வேதனையான விஷயம்தான், அவரைச் சார்ந்த உறவினர்களோ நண்பர்களோ காவல்துறையினரோ ஆசிரியர்களாக உடன் பணிபுரிந்தவர்களோ சொல்லியிருந்தால்கூட அவரைத் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டிருக்கலாம்.

வினுப்ரியாவின் தற்கொலை விஷயத்தைத் தொலைக்காட்சி பத்திரிகை ஊடங்கள் பெரியளவில் கவனப்படுத்தியதால்தான் அவரைப் பார்க்க அனைத்து தமிழக கட்சி தலைவர்கள் போன்றவர்கள் அந்த சின்ன கிராமத்திற்கு வந்துகொண்டிக்கிறார்கள். 

images (39)
வினுப்பிரியாவின் தற்கொலைக்கு இரண்டு நாட்கள் முன்பாக சென்னையில் நுங்கம்பாக்க ரயில்நிலையத்தில சுவாதி என்ற மென்பொறியாள பெண்ணைக் கொன்றதில் தலைநகரத்தில் இருக்கிற பெரிய பெரிய ஊடகங்கள் பத்திரிகைகள் காட்டிய கவனத்தில ஒரு சின்ன சதவிகிதளவில்தான் வினுப்ரியாவின் விஷயத்தில் அக்கறை காட்டுகிறார்கள். இந்த விஷயத்தை என் முகப்புத்தக பதிவில் நானும் பதிந்திருக்கிறேன்.

ஒரு தற்கொலை அதுவும் முகப்புத்தக மார்பிங்கால் ஏற்பட்ட மரணத்தை வரிந்துகட்டிக்கொண்டு காட்டுகிற தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் இதுபோன்ற தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என ஒரு சில நொடி காட்சிப்படுத்தல்களின் வழியாக பல கோடி மக்களை விழிப்புணர்வுக்குக் கொண்டு வர இயலும்.ஆனால் அதுபோன்ற சமூக அக்கறை ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அதன் முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் இருக்கிறதா?

அவர்களுக்கு அநத் நிகழ்ச்சிகள் ரேட்டிங்கை உயர்த்துகிற விஷயங்களாகதான் பார்க்கிறார்கள். சின்னச் சின்ன விளம்பரங்களை வெளியிடுவதன் வழியாகத் தங்களது சமூகத்திற்கு அவர்களும் சேவை புரியலாம். ஆனால் அந்த சின்ன விளம்பரம் இடம்பெறுகிற நேரத்தில் வணிக விளம்பரங்களைபோட்டால் அதன் வழியாகப் பணம் வரும் என்ற எளிதான கணக்குகள்தான் செயல்படுகின்றன.

வினுப்ரியாவின் தற்கொலைக்குப் பின்னால் இத்துணை பேர்கள் இருக்கிறார்கள். இந்த சமூகம் இருக்கிறது. ஆனால் நாம் வினுப்ரியாவின் பெற்றோர்களையும் அவரது மார்பிங் செய்து வெளியிட்ட சுரேஷ் என்ற வாலிபரையும் அவர் விஷயத்தில் செயல்பட்ட காவல்துறையையும் குற்றம்சாட்டிக்கொண்டிக்கிறோம். 

தினசரி நிகழ்கிற பெண்களின் கொலைகளில் அல்லது தற்கொலைகளில் தெரிந்தோ தெரியாமலோ நாம் சமூகம் என்ற பெயரில் இருக்கிறோம்.

முன்பெல்லாம் அதாவது 80களில் தமிழ் சினிமாக்களிலும் சரி யதார்த்தத்திலும் சரி காதல் தோல்வியுற்ற ஆண்களை தாடியுடன் காட்டினார்கள் . அல்லது நிஜ வாழ்விலும் பார்க்க முடிந்தது.ஆனால் தற்போது காதல் தோல்வியுற்றவர்கள்கூட அல்ல ஒருதலையாகக் காதலித்துவிட்டு அது கைகூடவில்லை என்றால் ஒன்று அரிவாள் எடுக்கிறார்கள் அல்லது தொழில்நுட்பத்தை கையில் எடுத்து மார்பிங் செய்து பெண்களைக் கொலை செய்கிற குரூரமானவர்களாக மாறிவிட்டார்கள்.இதன்பின் இருக்கும் சமூக உளவியலையும் விஞ்ஞானம் வளர்ந்த வேகத்தில் நாம் வளர்ச்சி என்ற பெயரில் நினைத்துக்கொண்டு சுயநலம்மிக்கவர்களாக மாறியிருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு அந்த தைரியத்தையோ அதை எதிர்கொள்கிற மனவலிமையையோ ஊட்ட தவறியிருக்கிறோம்.

இளைஞர்களும் தங்களுக்குக் கிடைக்காத ஒரு பெண் வேறு ஒருவருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது என்பதைதான் சமீபத்தில் ஏற்பட்ட விநோதினி , சுவாதி, வினுப்ரியாவின் ஒருதலைக்காதல்கள் அவர்களுக்கு மரண்த்தையும் அந்த சம்பவங்களில் ஈடுப்ட்ட ஆண்களுக்கும் உருவாக்கியிக்கிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு நாம் ஒவ்வொருவரும்தான் பொறுப்பு.இனியும் இதுபோன்ற விஷயங்களை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்கிற பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.கல்விநிறுவனங்கள் ஊடகங்கள் போன்றவற்றிற்கும் சமூக பொறுப்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டிய அக்கறை ஏற்பட வேண்டும்.இந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தால்தான் இதுபோன்ற மனஅழுத்தங்களால் நிகழ்கிற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.இல்லையெனில் இவை தொடர்ச்சியாக நிகழ்கிற விஷயங்களாகிவிடும். ••••

 

http://malaigal.com/?p=8649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.