Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை தலைமையிலான குழுவினர் இன்று ஓமந்தை விஜயம்

Featured Replies

மாவை தலைமையிலான குழுவினர் இன்று   ஓமந்தை  விஜயம்

 

 

வடமாகாணத்திற்கான  பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக கூட்டத்தில் ஓமந்தை பிரதேசம் உகந்ததென வலியுறுத்தப்பட்டுள்ளது. mavai-senathirah.jpg

இந்நிலையில் இலங்கை  தமிழகக் கட்சியின் தலைவரும்  தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை குறித்த பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.  

அதனைத் தொடர்ந்து மாவை சேனாதிராஜா  எம்.பி.வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனும்  இவ்விடயம் குறித்து கலந்தாலோசித்து இறுதி முடிவும் அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில்   தீர்மானிக்கப்படவுள்ள  வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய  நிலையத்தை  ஓமந்தையில்  அமைப்பதா, இல்ல தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களிடையே மாறுபட்ட   நிலைபாடுகள் காணப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தலைமையிலான விசேட  கூட்டமொன்று  கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்றிருந்தது.  பல்வேறு  வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் கூட்டமைப்பின் வடமாகாண பாராளுமன்ற  உறுப்பினர்களிடத்தில் ஒருவார காலத்தினுள் தனித்தனியாக கருத்துக்களைப் பெற்று பெரும்பான்மை   அடிப்படையில் முடிவு  எட்டப்படுமென தீர்மானிக்கப்பட்டது. எனினும் கடந்த நாட்களில் கருத்துக்கணிப்பு என்ற விடயம் தொடர்பாக  பல்வேறு  விமர்சனங்கள் மேலெழுந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற   உறுப்பினர்களுடன் குறித்த விடயம்  தொடர்பில் ஆராய்ந்து  முடிவொன்றை  எடுப்பதற்காக  விசேட  கூட்டம்  நடைபெறுவதாகவிருந்தது. எனினும் கூட்டமைப்பின்  தலைவரும்  எதிர்க்கட்சித்தலைவருமான  இரா.சம்பந்தன் மருத்துவ ஆலோசனைகளின் பிரகாரம்  ஓய்வெடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. அதேநேரம் மாவைசேனாதி ராஜாவும் பாராளுமன்றத்துக்கு தாமதமாக வருகை தந்திருந்தமையினால் அக்கூட்டம் நேற்று  காலையில்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றிருந்தது.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான, சித்தார்த்தன், சிறிதரன், சிவமோகன்,  சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இக் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி  ஆனந்தன் ஆகியோர் ஓமந்தையிலேயே குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென வலியுறுத்தினர். அத்தோடு குறித்த நிலையம் ஓமந்தையில் அமைவதற்காக  2010 ஆம் ஆண்டு  நடைபெற்ற வவுனியா   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மானம், அதன் பின்னர் நிலஅளவை உட்பட  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் குறித்த காணியின் வரைபடம் காணி ஆணையாளரின் கடிதம் உள்ளிட்ட  ஆவணங்களும் பாராளுமன்ற  உறுப்பினர்களால்  மாவை சேனாதி ராஜாவிடத்தில் கையளிக்கப்பட்டது.

 

இதனையடுத்து உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா  எம்.பி. நாம் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும்  வீண்முரண்பாடுகள் அவசியமில்லையெனவும் குறிப்பிட்டார்.  அதனையடுத்த  பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்காக ஓமந்தையில் அமையாளம் காணப்பட்ட காணியை  மாவை எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிடுவதென  தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நேரடி விஜயத்தை நிறைவு செய்து கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் மாவை.எம்.பி. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை  நேரில் சந்தித்து பொருளாதார மத்திய நிலையம்  தொடர்பான சர்ச்சை குறித்து கலந்துரையாடவுள்ளார்.  

அதன்பின்னர் இச்சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும்  தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டுமென வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம்  சரவணபவன், சாந்தி ஸ்ரீகந்தராஜா ஆகியோரும் கூட்டமைப்பின்  பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளிநாடு சென்றிருப்பதாலும் நேற்றைய கூட்டத்தில் பங்கு கொண்டிருக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/8710

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.