Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விடுவிக்கக் கோரி பரவிபாஞ்சான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் மக்கள் தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை பத்து பரவிபாஞ்சான் பிரதான வீதியின் ஆரம்பத்தில் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாகவும், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்களது வாழ்க்கை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வதாக பரவிபாஞ்சான் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு தங்களுடைய உறுதிக்காணிகள் மீளவும் கிடைக்க வேண்டும்

அதுவரைக்கும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

மைத்திரி அரசே எங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள் பரவிப்பாஞ்சான் மக்கள்


இரரணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், என பலரிடமும் முறையிட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இறுதியாக காணிகளை பிடித்து வைத்திருக்கின்ற இராணுவத்திடமும் கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்திருந்தோம். ஆனால் எங்களுக்க எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவேதான் ஏற்கனவே தீர்மானித்ததன்படி உறுதியான நல்ல தீர்வு கிடைக்கும் வரை எங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்கள். இந்தப் போராட்டத்தை தாங்கள் இரவு பகலாக தொடர்ந்தும் மேற்கொள்ள இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரவிபாஞ்சான் காணிகளில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதும் இன்னும் ஜம்பதுக்கு மேற்பட்டவர்களின் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pravipaanchaan_people_demand_land_releas

Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas


Pravipaanchaan_people_demand_land_releas

 

 

http://www.tamilwin.com/politics/01/110409

  • தொடங்கியவர்

பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களுக்குக் கிடைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை: சிறீதரன்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்தார்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேறி தமது காணிகளைத் தம்மிடம் வழங்கி

தம்மை அங்கு வாழ்வதற்கு நல்லாட்சிக்கான மைத்திரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் வீதியின் முன்றலில் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இம்மக்களது போராட்டம் காணிகள் கையளிக்கப்படும் வரை இரவு பகலாகத் தொடரவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.00 மணியளவில் பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் மக்கள் தமது நிலையை எடுத்துக் கூறினார்கள்.

மக்களது கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களுக்குக் கிடைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை

பரவிப்பாஞ்சான் பகுதி மக்களது காணிகள் மக்களிடமே கையளிக்கப்படவேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் கடந்த 2010 இல் இருந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் பரவிப்பாஞ்சான் பகுதியின் சில காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் பல மக்களது காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இதற்காக நாம் தொடர்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்த எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் பரவிப்பாஞ்சானில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு மக்களை அழைத்துச்

சென்று சர்ச்சைக்குள்ளாகியிருந்தமையும் அப்பகுதி எமது மக்களின் சொந்தக் காணிகள் அப்பகுதிக்கு நாம் செல்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என அவர் உரியவர்களிடம் கூறியிருந்தார்.

நாம் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களுக்குக் கிடைப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதற்காக நாம் உங்களது காணிகள் நாளை கிடைக்கும் நாளை மறுநாள் கிடைக்கும் என்று பொய் சொல்லி உங்களை ஏமாற்றி விட்டுப் போக மாட்டோம்.

உங்களது போராட்டம் நியாயமானது. நீங்கள் இந்தக் குழந்தைகளுடன் இவ்விடத்தில் தனியே நின்று போராட்டம் நடத்த உங்களைத் தனியே விட்டு விடமாட்டோம். உங்களால் தெரிவுசெய்யப் பட்ட உங்கள் பிரதிநிதிகளாகிய நாம் உங்களுக்காகச் செயற்படுவோம்.

உங்களது காணிகள் கிடைக்கும் வரை என்றென்றும் உங்களுக்காகக் குரல்கொடுத்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.

பரவிப்பாஞ்சான் மக்களது காணிவிடுவிப்புக்காண போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் எஸ்.சுரேன் உட்பட்டவர்கள் பலர் அப்பகுதியில் தொடர்ச்சியாக மக்களுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

 

http://www.tamilwin.com/politics/01/110463

Edited by போல்
காணொளி இணைக்க

  • தொடங்கியவர்

பரவிபாஞ்சன் பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணியை தம்மிடம் மீள கையளிக்குமாறு கோரி மக்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரின் மேல் அதிகாரிகள் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்தக்கலந்துரையாடலை தொடர்ந்து ஆர்பாட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இராணுவத்தரப்பு மற்றும் ஜனாதிபதி போன்ற உயர் மட்ட குழுக்களிடம் கலந்துரையாட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலும், இது தொடர்பான மனுவினை எதிர்வரும் செவ்வாய் கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மக்கள் திருப்த்தியடையாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/110480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.