Jump to content

பொங்கல் - தமிழர்களின் பார்வையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் திருநாள்....!

ஆல்பர்ட் பெர்னாண்டோ

சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றி விழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழிய விழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன்.

இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம் 'சோற்றில் ' கை வைக்க முடியும். யார் இவர்கள் ?

'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே 'என்றுரைத்த கம்பர், 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ' என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான் இவர்கள்!

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர்.

(இந்த வரில உழவர்கள் - தமிழர்கள் என்றது ரெம்பவே எம்பிரஸ் பண்ணுது..அப்ப மனித வரலாற்றில விவசாயப் புரட்சி பண்ணினது தமிழர்கள் என்றீங்கள். அதுசரி அவை வாயால எல்லாம் பண்ணி இருப்பினம். என்ன சான்றுகள் தான் இல்லாமல் அழிஞ்சிட்டுது. இவையிட தொண்மையை கண்டுபிடிச்சிடுவினம் என்று அந்நியர் தேடித் தேடி சுவடுகளைக் கூட அழிச்சுப்போட்டினம்.)

திருநாள்தான்... பொங்கல் திருநாள். பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும் விழாவா ? அல்லது மதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா ? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது.

மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய

நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல

எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப் பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும் ? எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. 'மேழிச் செல்வம் கோழைபடாது ' என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.

இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!

ஒளவைப்பிராட்டியார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! 'என்று வாழ்த்தவில்லை!

அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். ஏன் ?

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.

இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த செயல் அது!

( ஆக பொங்கலை வைச்சே தமிழர்கள் அறிவாளிகள் என்றும் நிறுவிட்டீங்கள். ரெம்ப ரெம்ப எம்பிரஸ் பண்ணிட்டுது. இதெல்லாம் மேற்குல சக்திகளால திட்டமிட்டு முறையடிக்கப்பட்டிருக்குது. அதிலும் ஆரியர் வருகை தான்..தமிழர்களின்ர அறிவை அரிச் சுவடிகளையே அழிச்சுப் போட்டுது. ஆனா என்ன இப்ப சிங்களவன் வர விட்டிட்டு ஓடாத இடமெல்லாம் ஓடிக் கொண்டு...ஐயோ தமிழர்கள் கல் மண் தோன்ற முதலே கனடாவிலும் வாழ்ந்த பழங்குடிகள் ஆரியரால இந்தியாவுக்கு விரட்டப்பட்டுள்ளனர் என்று கதையளக்க ஆரம்பிக்காத வரைக்கும் பொறுமையா இருக்கவே முடியல்ல. அப்படியும் எழுதி எம்பிரஸ் பண்ணுங்கோ..!.)

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமான செயல்!.

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

(இந்திரனா அவன் பார்ப்பர்ணியன் ஆச்சே. எப்படி தமிழரோட லிங் ஆவான். உஷ்ஷ்... இப்படி எல்லாம் எழுதினீர்கள். டிபிரஸன் ஆகிடும்.)

தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,

மண்ணகம் மருள வானகம் வியப்ப

விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி: '

காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிறைத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர் வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்ட மகளிர், ஊன் தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து, குரவைக் கூத்து போன்றவற்றை ஆடி வழிபடுகின்றனர்! என்று சிலம்பு சிலாகித்துச் சொல்கிறது.

( தமிழரின் காவிரியா?? அதுதான் இப்ப கர்நாடத்துக்கு சொந்தமாக்கிட்டாங்களே. காவிரி தண்ணிக்கே வடநாட்டில போய் ஆரியரிட்ட தவம் இருக்கிற வீரத்தமிழன் வரலாறு சொல்லுறீங்களோ. இது ரெம்பவே எம்பிரஸ் பண்ணிட்டுது. மனசு கொதிக்குது 100 பாகக சி சுடுதண்ணி போல..!)

சற்றொப்ப 2000ம் ஆண்டுகளுக்கு முந்தையது சிலம்பின் காலம்! அதற்கும் முந்தியது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.

அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன்! இந்தச் செய்தியைச் சற்று உள்வாங்கிப் பார்க்கும்போது, காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற மிகைப்படுத்தப்படா உண்மை புலர்கிறது!

( ஆதாரம் கேட்க யார் இருக்கினம் என்றிட்டு...இப்படி எல்லாம் எழுதக் கூடாது. உங்கின சிலது நெடுக்க குறுக்க போக நிற்குதுகள். இதென்ன நிறுவல் பிழைப்பைக் கெடுத்திடும் போல இருக்கே. இந்திரன் பார்ப்பர்ணியன். அவன் ஆரிய சொந்தம். எப்படி அவன் பெயரில வந்த விழா பொங்கல் ஆகிடும். இவற்றை எழுதக் கூடாது. எழுதினால் துரோகி ஆக்கிடுவம் ஆமா. எம்பிரஸ் பண்ணுறதோட நிறுத்திடனும். அளவுக்கு மிஞ்சி புளுக வெளிக்கிட்டு இப்படி காட்டிக் கொடுக்கக் கூடாது. ஓக்கே.)

இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போமேயானால்,

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்தகுடி. என்பது தமிழரின் வீரத்தை வலியுறுத்தும் புறப்பொருள் வெண்பாமாலை என்ற அரிய நூலில் இடம்பெற்றுள்ள பாடலிது. இத்தகைய தொன்மைக்கால வரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச் சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம். பொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடு கொண்டாடப்பட ஒரு பெருவிழாவாக நாம் பார்க்கலாம்.

ஆதிமனிதன் உருவானான் அகிலத்திலே. அவனுக்கு உணவேது ? காய்கனிகளைத் தின்றான்; போதவில்லை; பச்சப்பசேலென்ற பூமியைப் பார்த்தான். வேளாண்தொழிலில் வேகம் காட்டினான்; விவேகமாய் சாகுபடி செய்தான்; நெல் விளைந்தது; சோறாயிற்று. சுழன்றும் ஏர்பின்னது உலகம்! இதுதான் வேளாண்மையின் துவக்கம். வேளாண்மை மனித குமுகாயத்தின் உயிர்நாடி. எல்லா இனமும் பயன்பெற்றாலும் தமிழன் ஒருவனே பொங்கலை தனிச் சிறப்புடன் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டாட வேண்டுமென எண்ணினான்.

( ஒஸ்ரலோபித்திக்கஸ்..கோமா கபிலிஸ்.. கோமோ இரக்ரஸ்.. எல்லாமே தமிழர்கள் தான் போல. ரெம்ப ஆச்சரியமான முடிவா இருக்கே. ஒருவேளை உலகில தோன்றில முதல் உயிரினமே தமிழர்களாக இருக்கலாம் போல. எதற்கும் இந்த நிறுவலை ஒருக்கா நேச்சர் மகசீனில பப்பிளிஸ் பண்ண அனுப்பப் பாருங்கோ. ரெம்பவே எம்பிரஸ் பண்ணுறது மட்டுமில்லாம..சரி வெண்டரா இருக்குது.)

இயற்கைக்கும், இறைமைக்கும் நன்றி நவில்கின்ற பொன்னாளாக பொங்கல் நாளைத் தமிழர்கள் கொண்டாடத் தலைப்பட்டனர். பொங்கல் மத விழாவன்று. நிலம் பொது. நிலா பொது. கதிர் பொது. கதிரவன் பொது. நீரும் பொது. நெருப்பும் பொது. இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடப்படும் பொங்கலும் பொது. எவ்வகையான புராணச் சார்புமில்லாத மூடத்தனமற்ற விழா பொங்கல் விழா. தமிழர் கொண்டாடும் ஒப்பற்ற விழா பொங்கல் விழா மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

( 'ஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர். அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர். அதனால் தேவதைகள் மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர். இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களை துன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான். இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன் மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை.. ' என்று பொங்கல் வரலாறு துவங்கியதாக காஞ்சி செயேந்திரர் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார். )

(இஞ்ச பாருங்கோ தமிழர்களின் அறிவுக்கும் சுவட்டு ஆதாரங்களுக்கும் முன்னால காஞ்சி இந்திரன் கண்ணன் போன்ற பார்ப்பர்ணியர்களை கொண்டு வராதேங்கோ. அவைக்கும் பொங்கலுக்கும் முடிச்சுப் போட்டியள் அப்புறம் இஞ்ச கொஞ்சம் அதிகம் எம்பிரஸ் ஆகி சைவம் வைஸ்ணவம் என்று லிங் கொடுத்திடுங்கள். அப்புறம் எங்கள் இனத் தூய்மை கலங்கப்பட்டுப் போயிடும். பொங்கல் பொங்காது பொங்கல் பாணை உடைஞ்சிடும்)

தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப் பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கலாம்.

( ஓகே ஓகே ரெம்பவே எம்பிரஸ் பண்ணுறீங்க. சிலதுகள் ஆதாரம் கேட்க வெளிக்கிட்டுங்கள். அடக்கி வாசியுங்கோ. சனம் அறிவியல் கண்ணைத் திறக்காத மாதிரிக்கு பால் வார்த்து பூனைகளாக வைச்சிருக்கப் பாருங்க..)

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே

பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது.

இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தைப் போல மூன்று, நான்கு நாட்கள் என பொங்கல் திருவிழாவைக் கொண்டாடவில்லை என்றாலும் பிறந்த மண்ணின் பெருமையை நினைவில் கொள்கிறார் போல உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர். தாய்த் தமிழ் நாட்டையே பார்த்திராத உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தப் பொங்கல் கட்டுரை சமர்ப்பணம்.

(அப்பாடா..ஒருமாதிரி புளுகுப் பணியாரத்தை செய்து பொங்கலுக்குப் படைச்சு சமர்ப்பணமும் பணியாச்சு.)

தை பிறந்தால்...

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் 'தை 'யில்தான்!

உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா!

(டவுட் கேட்கிறது கூடாதுதான். அது தமிழர்களுக்கு எரிச்சல் தாறம் அம்சம். என்றாலும் மனசு கேட்குதில்ல..இல்ல இந்த நீர் காற்று சூரியன் கால்நடை எல்லாம் தமிழர்களின் சொத்துக்களா..?! ஏனென்றால் அவை மட்டும் தான் நன்றி சொல்லிக்கினம். அங்கால பல தேசங்களிலும் சூரிய வழிபாடுன்னு கொண்டாடினமே. ஓஓ..அவங்கள் கள்ளர் தமிழரை கொப்பி பண்ணிட்டாங்கள். ரெம்ப சரியில்லாத வேலை. பொறுங்கோ புலம்பெயர்ந்த இளையோர் அமைப்புக்களுக்கு ஒரு பனர் கொடுத்து ஐநா வாசலில பிடிக்கச் சொல்லும் சரியா. இந்த அநியாயத்தை சர்வதேசம் தட்டிக் கேட்கும் வரை பனர் பிடிக்கிறதை விடவே கூடாது என்று இளையோருக்கு நல்லா அழுத்திச் சொல்ல வேணும்.)

தைமாதம் கொண்டாடப்படுவதால் ' தைத் திருநாள் ' என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களைஎடுத்து, உரமிட்டு, நீர்பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக்கொள்வது வழக்கம். எல்லாத்துக்கும் 'தை பிறந்தால் வழி பிறக்கும் ' என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

போகிப் பொங்கல்...

போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். 'பழையனக் கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப் படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டில் வேண்டாத பொருட்களை குப்பை கூளங்களோடு தீயிட்டுப் பொசுக்குவார்கள். சுண்ணாம்பு தீற்றப்பட்ட (வெள்ளையடிக்கப்பட்ட) வீடுகள் புத்தாடை அணிந்தது போல 'ஜம் 'மென்றிருக்கும்.

போகி என்றால் இந்திரன் ' என்று ஒரு பொருள் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. ஆகையின் அவனை வணங்கும் நாளாகப் போகிப் பொங்கல் கருதப்படுகிறது.

(ஐயோ எத்தின தரம் சொல்லுறது. இந்த இந்திரனை லிங் பண்ணாதேங்கோ என்று. அவன் பார்ப்பர்ணியனப்பா..! சொன்னால் கேட்காயள். பாருங்கோ உங்கட லிங்கால நாங்கள் படப் போற அவஸ்தையை. சரி சரி கேள்வி கேட்கிறவையை முட்டாள் ஆக்க நாங்கள் கொஞ்சப் பேர் இருக்கிறம். என்றாலும் எங்களுக்கு வேலை அதிகம் வைக்கிற உந்த லிங்குகளை தவிருங்கோ)

வாயிற்படிகளின் நுழைவு நெற்றியில் மாவிலை, மஞ்சள், மரிகொளுந்து, பூளையிலை கோர்த்துக்கட்டுவார்கள்; தனைக் ' காப்புக் கட்டுதல் ' என்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை தத்தம்

அலுவல்களில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். மார்கழி மாதக் குளிரில் சிறுவர் முதல் பெரியோர் வரைசூரிய உதயத்திற்கு முன் நீராடி றைவனை வழிபடுவார்கள். பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான் போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.

போகித் திருநாள், மாரியம்மன் விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு பல ஊர்களில்.

மாரியைப் பொழிபவள் மாரியம்மன், என்ற வகையில் கொண்டாடுகிறார்கள்.

மேலும் ஐந்தினையில் ஒன்றான மருதநிலத்திற்கு (வயலும் வயல்சார்ந்த இடமும்) உரிய கருப்பொருள்களில் இந்திரன் என்ற தெய்வமும் ஒன்று. ஆகவே போகி என்பது இந்திரன் விழா என்று கொண்டாடுவோரும் உண்டு!

(என்ன முன்னுக்குப் பின் குழப்புறீங்கள். சரி சரி பெரிய கட்டுரை என்ற படியால மொக்குச் சனம் கண்டுக்காது. நீங்க ஜமாய்ங்க. )

மறுநாள் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது ? ராகு, சனி பார்த்து நல்ல நேரம் பஞ்சாங்கப்படி குறிப்பது

(உந்த ராகு சனி கேதுகளையும் உச்சரிக்காதேங்கோ. நாங்கள் இப்ப அதுகளை வைச்சுத்தான் மக்களை பெரியார் வழில சிந்திக்க வைச்சுக் கொண்டிருக்கிறம். செவ்வாய் என்பது குற்றமில்ல கோள் என்று இப்பதான் நிறுவி முடிச்சிருக்கிறம். அதுக்குப் பட்டப்பாட்டுக்குள்ள நீங்கள் சனி ராகு என்ற..கதை சிக்கலாகிடும்.)

பெரியவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம். போகியன்று, பாயாசம், பச்சடி, மரக்கறி, கூட்டு,பொரியல்,

கோசுமல்லி, மோர்குழம்பு, ரசம், பருப்பு வடை, அப்பளம், போளி எனப்படும் இனிப்பு அல்லது ஏதாவது ஒரு

இனிப்பு பலகாரம் போன்றவற்றைச் சமைத்து உண்டு மகிழ்வது வழக்கம்.

கொண்டாடப்படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறி, வரும் ஆண்டிற்கும், பொங்கல் விழாவிற்கும் ஆயத்தம் செய்யவே போகிக் கொண்டாடப்படுகிறது எனலாம்.

தமிழரிடம் என்ன வாழ்க்கைத்தரம் மற்றும் பாங்கு நிலவியிருக்கிறது. பொங்கல் விழாக் கொண்டாட ஆயத்தம் செய்யவே ஒருநாளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நம் மறத்தமிழர்கள்! சரி, பொங்கல் கொண்டாடும் விதம்தனைப் பார்ப்போம்.

( பொங்கல் கொண்டாடவும் மறம் வேண்டும்??. ம்ம்ம்...தமிழர்கள் மறம் மிக்கவர்கள் தான். அதுதான் ஆரியர்கள் வர ஓடினம் என்றும் இப்ப சிங்களவன் வர மேற்குலகெங்கும் ஓடி ஓடி திரவியம் தேடுறம் என்றும் காட்டிட்டு இருக்கமே.. தமிழர் எங்கள் மறத்தை சரியா ஆதாரத்தோட அடையாளம் காட்டினதுக்கு.. ஒரு ஓப் போட்டிருக்கு.)

சூரியப் பொங்கல்...

தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும்.

பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மிடுக்கோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள்தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( 'நான் 126 புள்ளி வச்சுல்ல கோலம் போட்டேன் போன்ற பறை சாற்றல்களும் கூட இருக்கும்... ') தேடிப்பிடித்து பசுஞ்சாணம்.

(எழுதிற அவசரத்தில ஒன்றை மறந்திட்டீங்கள். நாங்கள் இப்ப பெண் விடுதலை என்றதை வழங்கிக் கொண்டிருக்கிறம். பெண்கள் மட்டும் சுறுசுறுப்பா இயங்கினது என்றது அவர்களின் சமத்துவத்தைப் பாதிக்குது. ஆண்களும் என்று அடைப்புக்குறிக்குள் போடுவதே எமது புதிய பூலோகத்தில் பெண்கள் விடுதலை பெற்றுள்ளதை நிரூபிக்கும்.)

கொண்டு வந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள். பின்னே, இதெல்லாம் ஏனோதானோவென்று செய்ய முடியாதில்லையா ?

வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசணிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ்

விரிக்கலாமா வேண்டாமா எனத் தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்துமுத்தாக நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல் மென்மையாகப் பறித்துக்கொண்டு வந்து சாண உருண்டகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுதுபுலராத வேளையில்தான்!

பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியைக் கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக்கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம், உள் அறை, மாடிப்படி, மொட்டைமாடி, முற்றம் என வீட்டில் ஒரு டம் கூட பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளைக் காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் என்ன குதூகலம்!

(இதென்ன இப்ப போய் ஆபாசமா பாவாடை.. சேலை என்று கொண்டு.அதெல்லாம் இப்ப தகாத பதங்கள். ரைட் ஜீன்ஸின் ஒரு பகுதியில் கிழித்து ஓட்டை வைத்துக் கொண்டு.. துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டி ரஜனி ஸ்ரைலில்..இப்படி தமிழர்களின் கலாசாரப் புரட்சியை மறைக்காமல் எழுதவும் பழகிக் கொள்ளுங்கோ.)

மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால்

வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டுவரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.

(அப்ப இந்திரன் தான் நீர் வட்டத்தையே முதலில் விளக்கினவரோ. இவங்கள் வெள்ளைக்காரர் இப்ப அதையே விஞ்ஞானம் என்று எங்களுக்கே செப்படி வித்தை காட்டுறாங்கள். தமிழர்களின் மறம் என்ன அறிவென்ன. மூக்கு மேல விரல வைக்கிற அறிவிருந்தும் தமிழர்கள் உலகில் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடரக் கூடாது என்று நோர்வே மத்தியஸ்த்துடன் ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டும்.)

'பரிதியே பொருள் யாவிற்கும் முதலே ' என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன்

வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ண்டில் நல்ல விளைச்சலைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

கதிரவன் கணக்கு...

இன்றைக்கு அறிவியல் உலகம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அன்றைய தமிழன் சந்திர, சூரியப் போக்கை வைத்து காலத்தையே கணித்தவர்கள்; கதிரவன் உத்ராயணப் பயணம் மேற்கொண்டு தனுசிலிருந்து மகரராசியில் நுழையும் இயற்கை நிகழ்வினைத்தான் 'தை 'த் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

(தமிழர்கள் விஞ்ஞானத்தில விண்ணர்கள் என்றால் கணக்கில புலிகள். எப்படிக் கணக்கு விட்டிருக்கிறம் என்று பாருங்கள். ரெம்ப எம்பிரஸ் பண்ணினது மட்டுமில்லாமல் இதை வைச்சுத்தான் வெள்ளைக்காரன் விண்வெளிக்கே போயிருக்கிறான்.இது அடிப்ப்படை உரிமை மீறல் எனவே ஐநா நீதிமன்றத்தில ஒரு வழக்குப் போட்டால் என்ன நாசாவுக்கு எதிராக. எதுக்கும் யாழ் களத்து உறுப்பினர்களை பொங்கல் ஒன்று கூடல் ஒன்றுக்கு அழைச்சு இதைப் பற்றி ஆழமாப் பேச வேணும். நீங்களும் வாங்கோ.)

பொங்கலோ பொங்கல்...

சூரிய உதயத்திற்கு முன்பாகக் குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில்தான் பெரும்பாலும் இப்படி... நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் ஸ்டவ் அடுப்பு பெயருக்கு ஒரு பொங்கல், சாமிபடங்களுக்கு முன் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு போங்கல் சாப்பிட்டுவிட்டு ரெண்டு துண்டுக் கரும்பை கடிப்பதோடு பொங்கல் முடிந்து விடுகிறது...! ? ' ) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறிபோல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு கரும்புச் சாறில் செய்த வெல்லமிட்டு, பாலூற்றி, பசுநெய்விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின்

கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க...ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய ' பொங்கலோபொங்கல் ' என்ற உற்சாகக் குரலகள் பீறிட பொங்கல் தயார்!

குடும்பமே கூடி நிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம்

கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல் செய்து வணங்குவார்கள். எண்சாண் உடம்பும் பூமித் தரையில் பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!

கிராமங்களில்...

கிராமங்கள் வாசல், திண்ணை என்று செம்மண் பட்டை, சுண்ணாம்புப் பட்டை போட்டிருக்கும். வாசல் நிலைப்படிகளில் மாவிலைத் தோரணம் கட்டி, வேப்பிலை, பூளைப்பூ என்று கலந்த இந்தத் தோரணம்

வீட்டுக்குள் நுழையும் போதே ஒருவித நறுமணம் நாசியைத் தடவிச் செல்வதை உணரமுடியும்.

சூரியன் தெரியும்படியான வீட்டுத் திறந்த முற்றத்தில் பூஜை செய்வார்கள். முற்றம் இல்லாதவர்கள் வீட்டில் பூஜையறையில் பூஜை செய்வது வழக்கம். நன்கு மெழுகப்பட்ட தரையில், நான்கு மூலைச் சதுரமாகப் பெரிய கோலம் போட்டு, நடுவில் காவி இட்டு, அதில் அரிசி மாவினால் வடக்குப் பக்கம் சூரியன் உருவத்தையும், தெற்குப் பக்கம் சந்திரன் உருவத்தையும் வரைந்து அந்த இடத்தில் பூஜை செய்வார்கள். பூஜை செய்யுமிடத்தை பூசணி, பரங்கிப் பூக்கள்அலங்கரித்திருக்கும்.

பூஜைப் பொருட்களாக, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூக்கள், பசுமஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு,

சாம்பிராணி, கற்பூரம், அட்சதைப் பொருள், காய்ச்சாத பசுவின் பால், குங்குமம், சந்தனம், திருநீறு,

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.

பொங்கல் வைக்கும் வெண்கலப் பானையில் அல்லது மண் பானையில் சுண்ணாம்பைச் சுற்றி ஒரு விரலால் தடவிக் குங்குமப் பொட்டிட்டு ராகு காலம் இல்லாத வேளையில் பாலும் புதுத் தண்ணீரும் விட்டு கிழக்குப் பார்த்த அதாவது சூரியன் உதிக்கிற திசையில் அடுப்பு மூட்டி பொங்கல் பானையை வைப்பார்கள். ஒரு கொதி வந்ததும் தயாராக வைத்துள்ள பொங்கலரிசி மற்றும் பாசிப் பருப்பை போடுவார்கள். நன்கு வெந்தபின் வெல்லம் இட்டு ஏலம் உட்பட மற்ற பொருட்களையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். சிலர் வெண்பொங்கலும் உளுந்துவடையும் செய்வது உண்டு.

ஐந்தாறு மரக்கறி ஒன்றிரண்டு கூட்டு வகைகள் நவதானியங்கள் கலந்த குழம்பு வைத்து அப்பளம் பொரிப்பவர்களும் உண்டு. சிலர் பொங்கலன்று வெறும் வெண்பொங்கல் மட்டும் செய்பவர்களும் உண்டு. நான்கு வித காய்கறிகளைத் தனித்தனியாக வேக வைத்து, நான்குவித வெல்லக் கூட்டுகளைச் செய்து, சர்க்கரை வள்ளிக் கிழங்கு கறி, பரங்கிக் காய் குழம்பு, அப்பளம் பொறித்து பொங்கல் படைப்போரும் உண்டு. சங்கராந்திக்கு முக்கியமாக இடம்பெறும் காய்கறியில் பச்சை மொச்சை, பரங்கிக் காய், சர்க்கரை வள்ளிகிழங்கு, வாழைக்காய் முதலியனவாகும்.

பூஜை முடிந்தபின், நைவேத்தியம் செய்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து உப்பு தயிர் சேர்த்து சிறிது சுக்கைத் தட்டிப் போட்டுப் பிசைந்து பூஜை செய்த இடத்தில் வைப்பது வழக்கம். பூஜை முடிந்தபின் சைவச் சாப்பாடு விருந்துபோல நடக்கும். அன்று மிகுந்த கறி கூட்டு மற்றும் குழம்பினை அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி எரித்த கறி செய்து வைத்துக் கொள்வார்கள். எரித்த கறி மிகுதியாக இருந்தால் அது தீரும் வரை தினமும் கொதிக்க வைத்து பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் உபயோகிப்பவர்கள் உண்டு.

(இப்ப கிராமமோ நகரமோ நாங்கள் றெஸ்ரோரன்ரில தான் பொங்கல். மக்டொனால் கேஎப்சி சிக்கன் பியர் வைன் என்று நல்ல தூக்கலாத்தான் கொண்டாடுறது. பாப்பம் எனி ஊருக்குப் போனால் கிடா வெட்டிக் கொண்டாடுவம். அப்பதான் கலாசாரப் புரட்சி மலரும். ஒரே மாதிரிக் கொண்டாடுறது கலாசாரம் காலத்தோடு மாறுபடும் என்ற தமிழர்கள் நாம் விதித்த விதியை நாங்களே மீறிறதாகுது. பொங்கலைக் கூட சூரியனுக்கு வைக்கக் கூடாது சந்திரனுக்கு வைக்கனும். இப்ப சந்திரன் தான் பிரகாசமா இருக்குது இரவில சூரியனை விட. பகலிலும் சந்திரன் உதிக்குது. ஆக சந்திரன் தான் அதிகம் ஒளி கொடுக்குது. பண்டையதையே இப்பவும் கடைப்பிடிக்கனும் என்றது பிற்போக்கானது. வேணும் என்றால் ஒரு மின்விளக்குக்கு பொங்கல் பொங்கிறதும் புரட்சியாகக் காட்டலாம். ஓ சந்திரனை விட இரவும் பகலும் ஒளியூட்டும் பல்புக்குப் பொங்கிறதே தமிழர்களை அறிவாளிகளாகவும் கலாசாரப் புரட்சியாளர்களாகவும் காட்டும் 21 நூற்றாண்டில். இதை சில பிற்போக்குவாதிகள் மறுதலிக்கலாம். அதுகளைக் கணக்கில் எடுக்காமல் சூரியனை விட்டு வெளியே வாருங்கள் எங்கள் வழியில். புதிய உலகில் புதுப் பொங்கல் செய்வோம்.)

தந்தை இல்லாதவர்கள் வீட்டில் மட்டும் மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்வார்கள். சூரிய நாராயணனைக் குறித்து பூஜை செய்வது வழக்கம்.

கனுப் பொங்கல்...

(கனு என்பது தமிழே அல்ல ஆகவே இது தமிழர் பொங்கல் அல்ல. இது ஆரியரின் சூழ்ச்சித் திணிப்பு. பெரியார் சொன்னது போல தமிழைப் போல தமிழர்களையும் காட்டுமிராண்டிகளாகக் காட்டும் சூழ்ச்சி.)

பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், ' கனுப் பீடை ' நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கனுப் பொங்கல் நாளன்று வீட்டில் அனைவரும் குளித்துவிட்டுத்தான் காரியம் தொடங்குவார்கள். முதல் நாள் பொங்கல் பானையில் கட்டிய பசு மஞ்சளை எடுத்துக் கழுவி

வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் அந்த மஞ்சளைப் பூசிக்கொண்டு ஆறு, குளம், ஊரணிக்குப் போய் 'கனுப்பிடி ' வைத்துவிட்டு வந்து குளித்து புத்தாடை அணிந்து முதல் நாள் பிசைந்து வைத்துள்ள தயிர் சாதமும் எரித்த கறி சேர்த்துச் சாப்பிடுவார்கள். குளம், ஆறு இல்லாத ஊர்களில் தங்கள் வீட்டில் முற்றத்தில் அல்லது மொட்டை மாடியில் கனுப்பிடி வைத்துவிட்டு பின் குளித்து புதுசு உடுத்திய பின் தான் சாப்பிடுவது வழக்கம்.

கனுப் பிடி....

கனுப்பிடி வைப்பது பெண்களுடன் பிறந்த சகோதரர்களின் ஷேமத்தைக் குறிக்கவே செய்யப்படுகிறது. கனுப்பிடி வைப்பது என்றால் அந்த வீட்டில் எத்தனை சகோதரர்கள் ருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு மஞ்சள் இலையை வைத்து, அதில் முதல் நாள் பிசைந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் எடுத்து அதில் மஞ்சள் பொடியைச் சேர்த்து கலந்து கொள்வார்கள். கொஞ்சம் வெள்ளைச் சாதமும் எடுத்து வைத்திருப்பார்கள்.

சிலர் சர்க்கரைப் பொங்கலும் வைப்பார்கள். கொஞ்சம் சாதத்தில் குங்குமத்தைப் போட்டு கலந்து கொள்வார்கள். சிவப்பு, மஞ்சள்,வெள்ளை என்று சாதங்களோடு சர்க்கரைப் பொங்கல் என நான்கு வகை

சாதங்கள் இருக்கும். பெரும்பாலோர் வெண்பொங்கலையும், மஞ்சள் சாதத்தையும் மட்டும் படைப்பார்கள்.

ஒவ்வொரு சாத உருண்டையிலும் ஏழு அல்லது ஒன்பது சிறு உருண்டைகளாகப் பிடித்த சாதங்களை கனுப்பிடியாக மஞ்சள் இலையில் (அதாவது மஞ்சள் கிழங்குச் செடி சிறு வாழை இலை போன்று இருக்கும்) வைப்பார்கள்.

இலை நுனியில் நான்கு வெற்றிலை, ரெண்டு பாக்கு, ஒரு பழம், ரெண்டு கரும்புத் துண்டு என்று வைத்து

நைவேத்தியம் செய்வார்கள். ஆறு குளங்களில் வைக்கப்படும் கனுப்பிடி சாதத்தை காக்கை குருவி சாப்பிட்டு விடும். அதிலுள்ள பழம் பாக்கு வெற்றிலையை ஏழைகள் எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் தங்கள்

சகோதரர்கள் சேம நலனுக்காகச் செய்யப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பொங்கல் பண்டிகைக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் செனத்தி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சுமங்கலிகள்அல்லாதவர்களும் சகோதரர்கள் இருந்தால் அவர்களும் கனுப்பிடி வைக்க வேண்டும். அன்று பகலில் சர்க்கரை பொங்கல் மற்றும் தயிர் சாதம் வற்றோடு மற்றும் இரண்டு பிசைந்த சாதங்களோடு வற்றல், வடாம், வறுவல் போன்றவற்றோடு அப்பளம் பொரித்து பகல் சாப்பாடு நடக்கும்.

மாட்டுப்பொங்கல்...

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்!

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு ' என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள்/பண்ணைகள் உள்ளவர்கள் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை யற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம்தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. வண்டியிழுக்க, செய்வது மாடு; காளைமாடு. காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு; அவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும். கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; (அன்று மட்டும் மாடுகளுக்கு அடி விழாது) எருமைமாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூட கொம்புகளில் வண்ணம் பூசுவர். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக ருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போலச் செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம்,

நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது ' பொங்கலோபொங்கல் மாட்டுப் பொங்கல் ' என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை எனஅனைத்து கால்நடை களுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் 'மாட்டுப் பொங்கலாக ' கொண்டடுகின்றனர்.

சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்ப கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத் தெருவாக விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன ? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே!

காணும் பொங்கல்...

நான்காவது நாளைக் காணும் பொங்கலாக அனுசரிப்பார்கள். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள் காதைத் துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நலச் சங்கம், ரசிகர் மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் டம் பெறும். ரவில் சை கச்சேரிகள், நாடகம் என்று இன்றைக்கு ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.

ஜல்லிக் கட்டு...

கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால்

குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு

நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை

சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற

வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். லட்சக்

கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள். இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம்,காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டுவருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்றவேலைகளுக்கோ பயன் படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, அந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கிவிடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப்போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம்) 'ரேக்ளா ரேஸ் ' எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் ட பலடங்களில் நடைபெறும். தற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.

(இப்ப எல்லாம் நாங்கள் இந்த விளையாட்டுக்கள் விளையாடுறதில்ல. இப்ப ஆட்லறி.. மல்ரி பறல் அடிக்கிறதுதான் எங்கள் விளையாட்டு. கிளைமோர் வைக்கிறது பொழூதுபோக்கு)

சாவக்கட்டு ...

இது தவிர 'சாவக் கட்டு ' என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறும்.

(அதுதான் தமிழ் பெண்கள் அதிகம் கோழிச் சண்டை பிடிக்கின்றனர் போல. இது கோழிகளின் உரிமை மீறலாச்சே. ஒற்றுமையா உள்ள கோழிகளை சண்டை பிடிக்க விடுறது. ஓ...அதுதான் தமிழர்களின் வழமையாச்சே. அடுத்தவரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் மோதிக் கொள்வதும்.)

கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கி வருவார்கள்.

முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின் கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டிவிடுவார்கள். அவரவர் சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கிவிடுவார்கள்.

சேவல்கள் எகிறிஎகிறி சண்டைபோட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால்

இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால் ஆக்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்றசேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திகுத்து வரை போய் விடுவதும் உண்டு. இப்படி நடக்கும் இடங்களில் அடுத்ததடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு 'கடுக்காய் ' கொடுத்துவிட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டைநடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக்குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்பு மணமாகத்தானிருக்கும் என்றால் அது மிகை இல்லை.

பொங்கல் என்பதும் நான்கு எழுத்து! பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு!! தமிழகத்தின்

பாரம்பரியமான கலை, கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகளை பொங்கல் நாளில் புதுப்பித்து

மகிழ்கின்றனர். பழமையான கிராமிய கலைகள் அழியாமல் பாதுகாக்கும் விழாக்களில் 'பொங்கலுக்கும் '

பங்கு இருக்கிறது என்பது பெருமையான விசயம் தானே!

(நாங்களும் பாரம்பரியம் அழியக் கூடாது என்றுதான் கவலைப்படுறம். ஆனால் எல்லாம் காலத்தோட மாற வேண்டும் என்பது விதி. எனவே அடுத்த பொங்கல் ஒன்றில் சந்திரனுக்கு அல்லது கிச்சினில் பல்புக்கு..!)

சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு '

தமிழர்திருவிழா ' வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது

அதனினும் மகிழ்தன்றோ!!

( தமிழர்கள் இருந்தால் தானே பேதம் வர.. ஊரில உயிரால அழியுது புகலிடத்தில உருவத்தால அழியுது தமிழின அடையாளம். இதுக்கு மேல என்ன பேதம் எமக்குள்ள வரப் போகுது. அடுத்த பொங்கலுக்கு வேணும் என்றால் புரட்சிப் பொங்கல் பொங்குவமே பல்புக்கு. ஒரு மாதத்துக்கு முன்னரே இணையங்களில பனர் பிரச்சாரம் செய்தால் சிறீலங்காவின் பொருளாதாரத்தில் பல்ப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணலாம். என்ன பாணையோட சேர்த்து பல்பும் விற்பனையாகும்.. சூரியப் பொங்கல் வாழ்த்துக்களோடு அடுத்தமுறற பல்ப் பொங்கல் வாழ்த்தில் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்பம்.. )

கட்டுரை திண்ணை.கொம்

Link to comment
Share on other sites

இந்த வரில உழவர்கள் - தமிழர்கள் என்றது ரெம்பவே எம்பிரஸ் பண்ணுது..அப்ப மனித வரலாற்றில விவசாயப் புரட்சி பண்ணினது தமிழர்கள் என்றீங்கள். அதுசரி அவை வாயால எல்லாம் பண்ணி இருப்பினம். என்ன சான்றுகள் தான் இல்லாமல் அழிஞ்சிட்டுது. இவையிட தொண்மையை கண்டுபிடிச்சிடுவினம் என்று அந்நியர் தேடித் தேடி சுவடுகளைக் கூட அழிச்சுப்போட்டினம்

உமது அறிவு இவ்வளவுதானப்பு நெடுக்ஸ் விவசாயப்புரட்சி செய்தது தமிழன் அல்ல பொங்கல் உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து செய்யும் வழிபாடு.அது தமிழனுக்கு இருந்த நம்பிக்கை இது காலகாலமாக செய்யப்படுகிறது.உம்ம்மைபோன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் காலம் காலமா செய்யுறார்கள் தமிழர்கள். புளுகுப் பணியாரம் செய்தி கோலாட்டம் மயிலாட்டத்துக்குப் பதிலா தமிழர்களின் பாரம்பரியமா இருந்து காப்பிலியலட்ட போன ராப் ஆட்டம் ஆடி மகிழ்ந்து பொங்கல் பொங்கிக்கோங்கோ என்றுதான் வாழ்த்துக் கட்டுரை சமர்ப்பிச்சிருக்குது. நீங்கள் எண்ணைல விழுந்து எழும்பி புளுகுப் பணியாரம் செய்யுங்கோ உங்க கனபேர் பொங்கல் விருந்துக்கு பியர் பொங்க கானோட வருவினம்..! :lol::lol::lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.